யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 10ம் திகதி இலங்கையிலும், உலகளவிலும் இத்திரைப்படம் உலகளவில் திரையிடப்பட்டுள்ளது. ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ம் ஆண்டு கூறிய பின்னர், கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம். இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
ஊழி திரைப்படம் பற்றிய பின்னோட்டம்
இந்த படத்தின் இயக்குனரான ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளியான " சினம் கொள்" திரைப்படம் மக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படமும் தமிழர் வரலாற்றில் இடம்பிடிக்க கூடிய கலைப்படைப்பாக இருக்கும். இந்த படத்தில் காதல் இருக்கும் காமம் இருக்காது. முள்ளிவாய்க்காலுக் குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் 3 சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது. இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை 4வது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. தமிழர்கள் அனைவரும் இப்படத்திற்கு பெருவரவேற்பு அளித்து படத்தினை வெற்றியடைக்க வைக்கவேண்டும்.
இந்த திரைப்படம் முற்று முழுதான ஈழ சினிமாவாக இருக்கும். 2009ம் ஆண்டிற்கு முன்னர் போர்க்கால காதல்களை, வீரங்களை, தியாகங்களை கொண்ட படத்தை உலகத்திற்கு தந்தது எமது ஈழ சினிமா இந்த நிலையில் போருக்கு பின்னர் அப்படியொரு கதை களத்தோட இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படம் தமிழர் தாயக பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைய படங்கள் வெளிவருகிறது. தொழினுட்ப ரீதியில் எமது கலைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள். எமது கலைஞர்களை அடையாளம் காண இப்படியான படைப்புகள் உந்து சக்தியாக அமையும். இதொரு காத்திரமான திரைப்படமாக வெளிவரும் என்பதிலும் நம்பிக்கை உண்டு. தரமான படங்களை வரவேற்கும் பாங்கு, தமிழ் மக்களுக்கு உண்டு, ஈழ சினிமா புதிய பரிமாணத்தில் புதிய அடையாளங்களோடு பயணிக்கும் என நம்பிக்கை உண்டு இதனை வெற்றியடைய வைக்க வேண்டும். இதொரு நீதி கோரிய எமது பயணத்தின் வெற்றியாக அமைய வேண்டும். எனவே இந்த திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்.
No comments:
Post a Comment