இப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 10.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்
பிரிவுகள்
|
பிறந்த திகதி விபரம்
|
பாலர் ஆரம்ப பிரிவு
|
01.08.2018 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்
|
பாலர் பிரிவு
|
01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள்
|
கீழ்ப்பிரிவு
|
01.08.2014 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்
|
மத்தியபிரிவு
|
01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்
|
மேற்பிரிவு
|
01.08.2008 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்
|
அதிமேற்பிரிவு
|
01.08.2004 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்
|
போட்டிகளுக்கான விபரங்கள்
போட்டிகளுக்கான விண்ணப்படிவம்,
மனனம் செய்யவேண்டிய குறள்களின் விவரங்களை தமிழ்முரசு அவுஸ்திரேலியா (www.tamilmurasuaustralia.com)
இணையத்தளப் பத்திரிகையிலிருந்தும் அல்லது tikmsydney@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் விபரங்களை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 29 April 2023 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.;. ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். ஒரு நபருக்கு போட்டிக்கான நுளைவுக்கட்டணமாக $10 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகி;றது. போட்டிக்கான விதிமுறைகள்,
புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை கீழே பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு திரு கு கருணாசலதேவா வுடன் (0418 442 674) தொடர்பு கொள்ளவும்.
போட்டிகளுக்கான விண்ணப்படிவம்
புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்
1. மனனம் செய்யும் திறமை (40 புள்ளிகள்)
தடங்கலின்றி திருக்குறளை ஒப்புவிக்கவேண்டும். சரியாக மாணவர்கள் மனனம் செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒப்புவிக்கும்போது கருத்துப் பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்
2. உச்சரிப்பு: (40 புள்ளிகள்)
மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும். அதாவது சொற்களையும் எழுத்துக்களையும் கேட்பவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் தெளிவாக உச்சரிக்க வேண்டும்.
3. சபை மரபு: (20 புள்ளிகள்)
சபைக்கு வருதல்இ சபையில் உள்ளவர்களை விளித்தல்இ சபைக்கு முன் நிற்றல்இ சபையை விட்டகலல் என்பவற்றிக்கு வயதிற்கேற்ற பக்குவமும் தமிழர் மரபிற்கேற்ற செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும். ஒப்புவித்து முடித்தவுடன் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்துஇ தனது இருப்பிடம் சென்று அமர்தல் வேண்டும்.
விதிமுறைகள்
1. போட்டிகளை இரண்டு அல்லது மூன்று நடுவர்கள் நடத்துவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாகும். போட்டி முடிவுகள் போட்டி முடிந்து 2 வாரங்களில் மின்னஞ்சல்வழி தெரிவிக்கப்படும். பரிசளிப்பு பற்றிய விவரங்களும் மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.
2. போட்டியின்போது பெற்றோர் சற்று தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
3. போட்டிகள் தொடர்பாக முறையீடு செய்ய விரும்புவோர், எங்களுக்கு எழுத்து வடிவில் கொடுக்கவேண்டும்.
4. முதலாவது வந்த மாணவரின் புள்ளிகள் 100க்கு உயர்த்தப்பட்டு மற்றைய மாணவர்களுக்கும் அதே விகிதாசாரப்படி புள்ளிகள் வழங்கப்படும்.
5. 90 புள்ளியும் அதற்கு மேலாகவும் பெற்ற மாணவர்கள் BAND A ஆகவும், 75 - 89 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் BAND B ஆகவும், 60-74 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் BAND C ஆகவும் கணிக்கப்படுவர். 60 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment