.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
5ம் திருவிழா சிட்னி துர்க்கா திருக்கோவில்
.
சிட்னி துர்க்கை அம்மன் ஆலய மாசி மக வருடாந்த திருவிழா - ஐந்தாம் நாள் 22.02.2021 திருவிழா, துர்க்கை அம்மன் அன்னபூரனியாய் வீற்றிருந்து அருள்பாளித்தார்
படப்பிடிப்பு நிரஞ்சன் நிரோஷன்
4 ம் திருவிழா - சிட்னி துர்க்கா திருக்கோவில்
.
சிட்னி துர்க்கை அம்மன் ஆலய மாசி மக வருடாந்த திருவிழா - நான்காம் நாள் 21.02.2021 திருவிழா, முப்பெரும் தேவியரின் வீதியுலா
படப்பிடிப்பு நிரஞ்சன் நிரோஷன்
கொடியேற்றம் - சிட்னி துர்க்கா திருக்கோவில்
படப்பிடிப்பு நிரஞ்சன் நிரோஷன்
நன்றி Dr. ஸ்ரீரவிந்திரராஜா (Raviglory Recording)
நாம்படிப்போம் வள்ளுவத்தை !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... அவுஸ்திரேலியா
படைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே
அவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு முருகபூபதி

2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திய இவ்வியக்கம், பின்னர் சிட்னி, கன்பரா முதலான மாநிலத்தலைநகரங்களிலும் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாக்களை நடத்தியது.
அத்துடன், காலத்துக்குக்காலம் கலை – இலக்கிய
சந்திப்புகளையும் மேற்கொண்டுவந்தது.
இவ்வாறு அத்திவாரமிட்டு வளர்க்கப்பட்ட இவ்வியக்கமே 2005 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கமாக உருவெடுத்து, விக்ரோரியா மாநில அரசிலும் பதிவுபெற்றது. அதனால் விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் மானியத்தையும் பெறத்தொடங்கியது.
மெல்பன், சிட்னி, கன்பரா, பிரிஸ்பேர்ண் முதலான மாநிலத் தலைநகரங்களிலிருந்து கலை, இலக்கிய வாதிகள் இச்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றதனால், இங்கெல்லாம் சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களும், கலை – இலக்கிய
சந்திப்புகள், மறைந்த எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சிகள், கவிதா மண்டலங்கள், கருத்தரங்குகள், குறும்படக்காட்சிகள், இதழ்கள் – புத்தகங்களின் கண்காட்சிகள் என்பனவும் நடந்தன.
பத்தாவது எழுத்தாளர் விழாவின்போது அனைத்துலக சிறுகதை, கவிதைப்போட்டிகளும் இடம்பெற்றன.
பல கலை, இலக்கிய ஆளுமைகளின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்தன.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பாளிகளின் சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய உயிர்ப்பு – வானவில் முதலான தொகுப்புகளும் பூமராங் என்ற மலரும் வெளியாகின.
பின்னாளில் பூமராங் என்ற பெயரிலேயே சங்கத்தின்
அமரர் கலாநிதி கந்தையா வாழ்வும் பணிகளும் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தை ஆவணப்படுத்திய எழுத்தாளர் ! நடேசன் - அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் 13 வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு நிறுத்திய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும்.
உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த
கலாநிதி ஆ.கந்தையா.
அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்கச் சொன்னபோது மறுத்துவிட்டேன். அந்த விடயம் இந்தியாவில் நடந்தது. இங்கே அது முக்கியமானது அல்ல என்று மறுத்த போது அடுத்த முறை வேறு நிகழ்ச்சி பற்றிய படத்தை அனுப்புவார்.
அவுஸ்திரேலியாவில் உதயம் அவர் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளை பிரசுரித்தது அவரைப் பொறுத்தமட்டில் சிறந்த களம் என்று கூடச் சொல்லலாம். சிட்னியில் அவருடைய ஏதாவது நூல்களின் வெளியீட்டு விழாக்கள் நடந்தால் அல்லது அவர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சமூக நிகழ்வு நடந்தால் நிச்சயமாக அவரிடமிருந்து செய்திக்குறிப்புகளுடன் ஒளிப்படங்களும் தாமதமின்றி உதயம் அலுவலகத்திற்கு வந்துவிடும்.
அனுப்பிவிட்டு மௌனமாக இருக்கமாட்டார். தபாலில் சேர்த்த மறுகணமோ அல்லது மின்னஞ்சல் அனுப்பி அடுத்த நிமிடமோ தொலைபேசி எடுத்து “ அனுப்பியிருக்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பவ்வியமாக சொல்வார்.
கலாநிதி கந்தையா தொடர்ச்சியாக அயராமல் இயங்கியவர். இலங்கையில் களனி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக 1978- 1980 காலப்பகுதியில் பணியாற்றியவர்.
மல்லிகை ஜீவாவின் ( 1927 – 2021 ) வாழ்வில் சுவரசியமான பக்கங்கள் - அங்கம் - 04 இலக்கியவாதிகளின் இன்ப – துன்பங்களில்…..! வெற்றிலையும் புகையிலையும் !! சுஜாதாவின் இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன்….!!! முருகபூபதி
கொழும்பு சாகிறாக்கல்லூரியின் அதிபராகவும் செனட் சபை உறுப்பினராகவும் இருந்தவரான அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்கள் தினகரன் முன்னாள் ஆசிரியர் இ. சிவகுருநாதன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, எழுத்தாளர் எச்.எம்.பி. மொகிதீன் ஆகியோரின் பேராசானுமாவார்.
அஸீஸ் அவர்கள் மறைந்தவுடன் நடந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட எச். எம்.பி. மொகிதீனிடம், எமது ஆசான் பற்றிய நினைவுகளை தினகரனில் தொடர்ந்து எழுதித்தருமாறு சிவகுருநாதன் கேட்டதற்கு இணங்க ஒரு தொடர் கட்டுரையை
மொகிதீன் எழுதினார்.
பலராலும் விரும்பிப்படிக்கப்பட்ட அந்தத் தொடர் பின்னர் நூலாக வெளிவந்தது, அந்த நூலுக்கு எதிர்வினையாக மூன்றுபேர் இணைந்து ஒரு விமர்சன நூலை எழுதியிருந்தனர். அதனை எழுதியவர்கள் மூன்று முஸ்லிம் எழுத்தாளர்கள்.
ஏ. இக்பால், எம். எஸ். எம். இக்பால், எம். எச். எம். ஷம்ஸ் ஆகிய அம்மூன்று எழுத்தாளர்களும் இலக்கிய விமர்சனங்களிலும் ஈடுபடுபவர்கள்.
அந்த எதிர்வினை நூலின் முன்னுரை மாத்திரம் சுமார் 60 பக்கங்கள். அதில் பல எழுத்தாளர்களையும் கைலாசபதி, மற்றும் நூலகர் கமால்தீன் முதலான இலக்கிய விமர்சகர்களையும் கர்ணகடூர வார்த்தைப்பிரயோகங்களில் அம்மூவரும் சாடியுமிருந்தனர். எழுத்தாளர்களில் பிரேம்ஜி, இளங்கீரன், இளம்பிறை ரஹ்மான் , டொமினிக்ஜீவா மற்றும் எஸ்.பொ. ஆகியோர் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தனர்.
மானுடக் கொடுமைகளால் தோற்கடிக்கப்பட முடியாமல் போன இலக்கிய பிதாமகன்
தனது 94 ஆம் வயதில் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் மரணத்தோடு ஈழத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு சகாப்தம் நிறைவுறுகிறது எனலாம்.
மற்றைய எழுத்தாளர்களின் பங்களிப்பிற்கும் ஜீவாவின் பங்களிப்பிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அவர் படைப்பாளியாக மட்டுமன்றி, தன்னுடைய படைப்புகளை வெளியிடுவது, அவற்றைச் சமகால சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது என்பதற்கு உரிய முக்கியத்துவம் அளித்தார். படைப்பிலக்கியம் என்கின்ற வகையில் அவர் 1950 -60களில்தான் தீவிரமாகச் செயல்பட்டார். பின்னாளில் சுமார் நாற்பத்தேழு ஆண்டு காலம் அவர் அனைத்து அம்சங்களிலும், தனது சக்திக்கு மீறிய முயற்சிகளின் ஊடாக, அவரது கால கட்டத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்த இலக்கிய வெளிப்பாடுகளுக்குக் களம் அமைத்துத் தருவதற்கே முக்கியத்துவம் அளித்தார்.
புகலிடத்தில் தமிழ்க்கல்வி - சாதனைகளும் சவால்களும் முருகபூபதி
“ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமது இனத்தின் அடையாளம் பேண – தமது பிள்ளைகளுக்கு தமிழைப்பேசவும் பயிலவும் கற்பிக்கவேண்டும் “ என்று நான் வதியும் அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இருக்கும் மூத்த கவிஞரும் இலங்கையில் முன்னர் ஆசிரியராக பணியாற்றியவருமான அம்பி – என்ற அம்பிகைபாகர் சொல்லிவருகிறார்.
அவருக்கே இப்போது 90 வயதும் கடந்துவிட்டது. அவரே மற்றும்
ஒரு சந்தர்ப்பத்தில், “ஓடிடும் தமிழா நில் நீ… ஒரு கணம் மனதைத்தட்டு, வீடு நின் னூருன் சொந்தம் விளைநிலம் நாடு விட்டாய், தேடிய தெல்லாம் விட்டுத் திசை பல செல்லும் வேளை, பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே…! “ எனவும் கவிதை பாடிவைத்துள்ளார்.
“தமிழர் இல்லாத தேசமும் இல்லை, தமிழருக்கென்று ஒரு தேசமும் இல்லை “ என்பார்கள் தமிழ்த்தேசிய நேசர்கள் !
எனினும், தமிழர் புகலிடம்பெற்று வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்திலும், சிங்கப்பூர், மலேசியாவிலும் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
தமிழ்ப்பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக கற்கும் வகையில் கற்கை நெறிகள் – பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவில் குடியேறிய ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் நாவில் தமிழும் தவழவேண்டும் என்பதற்காக பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
பெப்ரவரி மாத முந்து தமிழில், 🌺
சேக்கிழார் சுவாமிகளின்,
இயற்கை ...4
…………… பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
இயற்கை அழிவு - சுனாமி
இயற்கைநீ சீற்றங்கொண் டெழுந்திட்டால் இப்படியா?
தயக்கமேதும் இன்றிநீயும் தந்தபேரழி வும்என்னே!
(இயற்கை)
மயக்கவைக்கும் அழகிலென்றும் மனதைப்பறி கொடுத்துநின்று
நயப்பிலின்பம் கொண்டவரை நடுநடுங்கச் செய்ததேனோ?
(இயற்கை)
இறைவனை உன்னிற்கண்டு இன்புற்றோர் எத்தனையோ?
நிறைவோடுன் எழில்தன்னை வரைந்தவர்கள் தான்குறைவோ?
குறையென்று ஏதுவைத்தோம் முறையின்றி நடந்திட்டாயே!
கறைபட்டு நின்றிடவா கடிதினிலே சுனாமியானாய்?
(இயற்கை)
சித்தத்தைச் சிவமாக்கும் திருமறையும் பாடலையா?
புத்தரவர் போதனையைக் கற்றபின்பு மறந்ததற்கா?
கர்த்தருக்குச் செபஞ்சொலிக் கனஞ்செய்யா திருந்தோமா?
மொத்தமாகக் குறான்தன்னை முறையாக ஓதலையா?
(இயற்கை)
எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 29 தரையும் தாரகையும் முதல் கங்கை மகள் வரையில் ! “ யூ. என்.பி வந்தாலும் ஶ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே ! “ – 1977 இல் மேடைகளில் பாடிய பாடல் ! இதயமுள்ளவன் இடதுசாரி ! முருகபூபதி
சந்தர்ப்பங்கள் மனிதர்களை உருவாக்கும் . மனித வாழ்வையும் சந்தர்ப்பங்கள் திசை திருப்பிவிடும். என்று இந்தத் தொடரில், கடந்த 28 ஆம் அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் எனக்கு கிட்டிய சந்தர்ப்பங்களைப்போலவே அரசியலிலும் சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டஎனது வாழ்க்கையில் திருப்பங்களை சந்திக்கநேர்ந்தது.
1970 இல் ஶ்ரீமாவோ தலைமையில் கூட்டரசாங்கம் அமைந்தபின்னர், எங்கள் ஊரில் அவரது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியினால் அவரது மகன் அநுரா பண்டாரநாயக்காவுக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
அநுரா இரண்டு பிரதமர்களின் மகன் என்ற வாரிசு அந்தஸ்தை மாத்திரம் மூலதனமாக வைத்துக்கொண்டு அரசியல் பிரவேசம் செய்தவர். அவருக்கு அச்சமயம் 23 வயது. எங்கள் ஊரின் நகர மத்தியிலிருந்து கடற்கரைக்கு சமீபமாகவிருக்கும் முற்றவெளிவரையில் அநுரா ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.
அந்தச்செய்தியை எழுதுவதற்காக முற்றவெளிக்குச்சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிருபர்கள் வரிசையில் அமர்ந்தேன்.
எனது பாடசாலையில் ஓவியப்பாடம் கற்பித்த ரஸாக் மாஸ்டர் தமது வீட்டில் டொலர் ஸ்ரூடியோ நடத்திக்கொண்டு, ஒளிப்படம் எடுப்பதையும் பகுதி நேரத்தொழிலாக மேற்கொண்டிருந்தார்.
ஊர்வலத்தில் வந்த அநுராவை அவர் மாலைகள் சகிதம் படம் எடுத்துக்கொண்டு தாமதிக்காமல் வீட்டுக்குச்சென்று, அதன் நெகடிவ்வை கழுவி, பெரிதாக பிரிண்ட் எடுத்துக்கொண்டு, முற்றவெளி மேடைக்கு வந்தார்.
அநுராவிடத்தில் அந்தப்படத்தில் கையொப்பம் வாங்குவதுதான் அவரது நோக்கம். மேடையைச்சுற்றி அநுராவின் ஆதரவாளர்கள் மொய்த்துக்கொண்டு நின்றனர்.
அந்தப்படத்தை வாங்கி, அநுராவிடம் நீட்டியபோது, அவர் ரஸாக் மாஸ்டரை அருகில் அழைத்து, தனக்கும் ஒரு பிரதிவேண்டும் என்றார்.
அந்தப்படத்தில் அநுரா அழகிய தோற்றத்திலிருந்தார். அரசியலுக்கு புதியவரான அவரது பேச்சில் அனுபவம் தொனிக்கவில்லை. .
திரையிசைப் பாடலாசிரியர் ஆகவும் ஆன எழுத்தாளர் ஜெயகாந்தன்
“பார்த்தீங்களாங்கோ.....
நெஞ்சார இறைவேண்டி வாழ்த்திடுவோம் வாரீர் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
மாத்தளை சோமு அவர்களின் இரண்டு நாவல்களுக்கு கிடைத்த பரிசு
அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களின் இரண்டு நாவல்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் . தமிழக அரசின் கீழ் இயங்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த அயலக நாவலுக்கான பரிசு மாத்தளை சோமு அவர்களின் கண்டிச்சீமை நாவலுக்கு கிடைத்திருக்கின்றது . அடுத்ததாக அவர் எழுதிய பாலி முதல் மியன்மார்வரை என்ற பயணக் கட்டுரை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த பயண நூல் என்பதற்கான பரிசிலை பெற்றிருக்கின்றது. நூல்களை பதிப்பித்து வெளியிட்ட தமிழ்க்குரல் பதிப்பகம் இதனால் பெருமை கொள்கின்றது. அதுமட்டுமல்ல அவுஸ்ரேலிய தமிழர்களாகிய நாங்களும் நிச்சயமாக பெருமை கொள்ளலாம். மாத்தளை சோமு அவர்களை தமிழ்முரசு அவுஸ்திரேலியா வாழ்த்துகின்றது
இலங்கைச் செய்திகள்
தனது விருப்பத்தையே பிரதமர் முன்வைத்தார்
சுகாதார அமைச்சால் வடக்கிற்கு 50 மருத்துவர்கள் புதிதாக நியமனம்
தனது விருப்பத்தையே பிரதமர் முன்வைத்தார்
உலகச் செய்திகள்
ஹரி - மேகனுக்கு 2ஆவது குழந்தை
சிரிய தலைநகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்
ஹரி - மேகனுக்கு 2ஆவது குழந்தை
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு 2ஆவது குழந்தை பிறக்கவுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் பிரிட்டன் இளவரசர் ஹரி–மேகன் தம்பதிக்கு கடந்த 2019இல் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், காதலர் தினத்தை ஒட்டி ஹரி மடியில் மேகன் படுத்திருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
அந்தப் புகைப்படம் மூலம் மேகன் 2ஆவதாக கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்து இங்கிலாந்து ராணி உட்பட அரச குடும்பம் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. ‘ஹரி தம்பதிக்கு வாழ்த்துகள்’ என்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துக்கள்..!
- எங்கே செல்கின்றோம் நாம்..?
'கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்', 'ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய்', 'திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது' இவையெல்லாம் திருமணம் பற்றி நம்மவர்களிடையே உலாவிவரும் பழமொழிகளாகும்.
இவ்வாறான சிறப்புக்கள் திருமணத்திற்கு இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் விவாகரத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.