அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
முல்லைத்தீவு: குருந்தூர் மலையில் தமிழர் வழிபாட்டுத் தலம் அகற்றம்- பெளத்த விகாரைகள் வைத்து வழிபாடு
முல்லைத்தீவு: இலங்கை முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்கள் வழிபாடு நடத்தி வந்த ஆதி ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு பெளத்த விகாரை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழரின் தாயகப் பிரதேசத்தில் உள்ள குருந்தூர் மலை பகுதியை ஆக்கிரமித்தில் பெளத்த பிக்குகள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இதனை தமிழர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் முறியடித்து வந்தனர். தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் அப்பகுதியை ஆக்கிரமித்து பெளத்த விகாரை அமைப்பதற்கு பிக்குகளும் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தமிழர்கள் ஆதி முறையில் சூலம் வைத்து வழிபாடு செய்த வழிபாட்டு இடம் திடீரென அகற்றப்பட்டது.
அப்பகுதியில் இலங்கை ராணுவத்தின் உதவியுடன் புத்தர் சிலை கொண்டு வரப்பட்டு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் வழிபாடு நடத்தப்பட்டு தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தமிழர் தாயகப் பிரதேசத்தில் பெளத்தமயமாக்கலை திட்டமிட்டு திணிக்கும் முயற்சி என தமிழ்த் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment