கண்விழித் தாமரை
கனிந்து நோக்கிடும்
என்னுயிர் தாரகை நீ
விண்ணதில் மின்னிடும்
பொன்னொளி காட்டும்
தண்மதி போன்றவள் நீ
வாளெனக் கண் மடல்
வெட்டி மறைத்துதிடும்
விழியினால் கொன்றவள் நீ
பேசிடும் மொழியிலும்
வீசிடும் இலக்கணம்
பொழிப்புரை சொல்பவள் நீ
மானுட வாழ்வில் வென்று நிலைத்திட
வாய்மொழி கொண்டவள் நீ
அடங்கிப் கிடந்தவள்
விழித்து எழுந்திடின்
அகிலம் அதிரும் என்று
செருக்கிடை மேவிய
நிமிர்நடை கொண்டவள்
நேரில் வருகை கண்டேன்
ஆண்மகன் என்றிட்ட
ஆணவம் அழிந்தது
சக்தி என்றே வியந்தேன் .
-
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
சக்தியாய் நின்றாய் - Chelliah Paskaran
மனித நேயம்
ஹாலோவீன் சொக்கிளேற்று
மேல்மாடிப் படுக்கை அறையின் சன்னலின் இடுக்குகள் வழியே எட்டிப் பார்க்கிறேன். கீழே பரந்து விரிந்த முன் பக்க வீடுகளில் ஒன்றின் முன் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் அந்த நான்கு சிறுவர்களும். பேய், பிசாசு உடுப்பில் முகத்தில் ஒப்பனை வேறு செய்து கொண்டு, அவர்கள் கைகளில் ஆளுக்கொரு பை, அது நிறைய சொக்கிளேற் இனிப்புகளின் குவியல் என்று ரெலெஸ்கோப் வைக்காமலேயே ஊகிக்க முடிந்தது. ஒவ்வொரு வீடாகத் தட்டி இனிப்புப் பண்டங்களை வாங்கித் தம் பையில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடப்பது தான்.
எங்கள் வீட்டில் இருந்து ஒரு ஐந்து நிமிட நடை தொலைவில் வீதியின் முடக்கில் அடுக்கடுக்காக இருக்கும் மூன்று வீடுகளில் இருக்கும் பையன்கள் தான் அவர்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் வீட்டுக்கு வெளியே வந்து பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த அகண்ட பெரிய அந்த வீதியின் ஒரு பாதி அவர்களுக்குச் சில சமயம் உதைபந்தாட்ட மைதானம் போல. வாகனப் போக்குவரத்தும் அதிகம் இல்லாததால் அவர்களின் விளையாட்டுக்கு அது கை கொடுத்தது.
அரை மனதுடன் வீட்டுக்குள் வந்து விட்டேன். ஊரில் என்றால் இப்படி வீதியை மறித்து யார்ட், கிளித்தட்டு என்று எத்தனை விளையாட்டெல்லாம் விளையாடியிருக்கிறம். போன வாரம் கூட ஒரு காணொளியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தான் எங்காவது பயணித்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது கிராமப்புறத்தில் வழியோரத்தில் கிறிக்கெட் விளையாடும் பையன்களைக் கண்டால் அப்படியே காரை நிறுத்தி விட்டுப் பார்த்துக் கொண்டிருப்பாராம். மனைவி கூடக் கிண்டலடிப்பாராம் "போய் அம்பயர் வேலை பார்க்கலாமே?" என்று. எனக்கும் இந்தச் சிறுவர்களைக் கண்டால் அப்படியொரு ஆசையும் தொற்றிக் கொள்ளும், ஆனால் வயது விடாது. இந்த நாட்டுச் சூழலில் அந்நியர் கிட்ட வந்து பேசுவது கூட வேறு அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விடும்.
திரு. ஷர்தார் ஜமீல் அவர்களோடு ஒரு பேட்டி.
நேற்று நவம்பர் 01 ஆம் திகதி - மிஸ்டர் தர்மிஸ்டரின் நினைவு தினம் ! அவச்சாவுகளைக்கண்ட அரசியல் சாணக்கியர் இயற்கை எய்திய தினம் !! - முருகபூபதி
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37.
இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
அவர் பிறந்த இல்லம் எது...? என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம்.
ஆனால், அதுதான் உண்மை! அந்த இல்லம் கொழும்பு வடக்கில், களனி கங்கைக்கும் ஆமர் வீதிக்கும் நடுவில் வரும் கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது. இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம். அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த காலத்தில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட்
ஜெயவர்தனா.
இலங்கை அரசியல் வரலாற்றின் ஏடுகளில் இவரது ஆளுமை குறிப்பிடத்தகுந்தது. எத்தனையோ சவால்களை முறியடித்து, தான் நினைத்தவற்றை பல்வேறு தந்திரோபாயங்களுடன் சாதித்தவர்.
இவரை ஜே.ஆர். எனவும் ஜே.ஆர். ஜெயவர்தனா எனவும் அழைப்பர். 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, தார்மீக சமுதாயம் அமைப்பதுதான் தனது நோக்கம் என்றும் சொல்லி, அதனை தமது தாய் மொழியில் தர்மிஷ்ட சமாஜய என வர்ணித்தார்.
ஆனால், அந்த தார்மீக ஆட்சியில் 1977 – 1981 -1983 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதியில் நடந்த பல சம்பவங்களை பார்க்கும்போதும் அகில இலங்கை எங்கும் நிகழ்ந்த வன்முறைகள், தீவைப்புகள், படுகொலைகள் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும்போதும், அதுதான் அவர் கனவு கண்ட தார்மீக சமுதாயமா..? எனவும் கேட்கத்தோன்றும்.
இவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் பொதுநூலகமும் கயவர்கள் ஏவிவிட்ட தீ அரக்கனுக்கும் பலியாகியது. அவரது அரசியல் எதிரிகள் அவரை "மிஸ்டர் தர்மிஸ்டர்" எனவும் அழைத்தனர். பதினொரு பிள்ளைகளில் மூத்த புதல்வனாக அவர் பிறந்த இல்லம்தான் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்பிருந்து வீரகேசரி நாளிதழ் வெளியாகும் கட்டிடம்! இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியில் பிறந்திருக்கும் ஜே.ஆர்., ஒரு கத்தோலிக்க குடும்பப்பின்னணியை கொண்டிருந்தவர்.
அறிவுத்தாகம் - - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்
Sea Trade in Ancient India - Prof. K A Narasaiah (Tamil) - Amudasurabhi
.
<iframe width="1127" height="634" src="https://www.youtube.com/embed/Qem1s9PAnsw" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
<iframe width="1127" height="634" src="https://www.youtube.com/embed/Qem1s9PAnsw" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
<iframe width="1680" height="993" src="https://www.youtube.com/embed/Qem1s9PAnsw" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
நன்றி Amudasurabhi
என்றுமே வாழ்வு இன்பமாய் மிளிரும் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா
அதிகமாய் பேசினால் அகன்றிடும் அர்த்தமே
அதிகமாய் உண்டால் ஆபத்தே நெருங்கிடும்
அறியாமை நிறையின் அகமிருள் ஆகும்
அளவுடன் நின்றால் அனைத்துமே அமைந்திடும்
ஆசையை வளர்த்தால் அவதியே நிறையும்
ஆணவம் மிகுந்தால் அழிவுதான் கிடைக்கும்
அலைந்திடும் மனத்தால் அனைத்துமே தொலையும்
அனைவரும் குருவை நாடினால் விடியும்
தெளிந்த நன்னீராய் இருந்திடல் நலமே
தேர்ந்துமே கருத்தை கேட்டிடல் நலமே
வலிந்துமே நோன்பை நோற்றிடல் நலமே
வாழ்வினில் சுமையைக் குறைப்பது சுகமே
அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 38 –நாழிமணி, பாரிமணி, கைமணி, கொத்துமணி – சரவண பிரபு ராமமூர்த்தி
நாழிமணி, பாரிமணி, கைமணி, கொத்துமணி – கஞ்சக்கருவிகள் நாழிமணி: வென்கலத்தால் ஆனது நாழிமணி. ஒரு நாழி நெல் பிடிக்கும் அளவுடையது. கனமாக இருக்கும்.
வீரசைவ மரபைச் சார்ந்த தெலுங்கு பேசும் கண்ட ஜங்கம் என்கிற சமூக மக்கள் இதை இசைப்பார்கள். நாழிமணிக்காரர் ,நாழிக்காரர், சித்தேச பண்டாரம், மணியாட்டிக்காரர், சித்தூசி பண்டாரம் ஆகிய பெயர்களும் இவர்களுக்கு உண்டு.
இச்சமூகத்தினர் திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் சைவ பாடல்கள், நெல் பாடல் ஆகிவற்றைப் பாடி நெல்லை யாசகமாக பெறுவர்.
அறுவடை மாதங்களில் இவர்கள் ஊர்களுக்கு யாசகம் பெற வருவர்(பட்டிக்கு போதல்). வெள்ளையான நீள அங்கியை அணிந்திருப்பார்கள். தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளை சூரிய/சந்திர பிறை இருக்கும்.
பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய
பையை வைத்து இருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள்.
வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என அவர்கள் வேண்டுவது கேட்பவர்களுக்கு மன நிறைவு தரும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள்.
நெல்லுக்கு பதில் பணமும் பெறுவர். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் அந்த வருடத்தைக் குறிக்கும் அடையாளக் குறியை கிறுக்கி விட்டுப் போவார்கள். இதை காணும் அடுத்து வரும் நாழிமணிக்காரர் திரும்பவும் அவ்வீட்டில் யாசகம் வாங்க மாட்டார்.
எழுத்தும் வாழ்க்கையும் -- அங்கம் 15 இலக்கியத்திற்காக தெருவெங்கும் அலைந்த காலமும் பொற்காலம்தான் ! “ பிச்சை எடுக்குமாம் பெருமாள் , அதை பிடுங்கித்தின்னுமாம் அநுமார் “ முருகபூபதி
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1974 ஆம் ஆண்டு கொழும்பில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்திமுடித்த பின்னர் தீவிரமாக இயங்கியது. அவ்வேளையில் பதவியிலிருந்த கூட்டரசாங்கம் பல முற்போக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியதுடன் உள்நாட்டு உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியது.
அக்காலத்தை மரவள்ளிக்கிழங்கு காலம் என்றும் எதிரணியினர் எள்ளிநகையாடினர். வடக்கில் மிளகாய், வெங்காயம் பயிர்ச்செய்கையில் விவசாயிகளுடைய பொற்காலம்.
உள்நாட்டில் திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றியது. எமது சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அயராத பணியாளர். தன்னை முன்னிலைப்படுத்தாமல் பல ஆக்கபூர்வமான பணிகளுக்கு பின்னின்று உழைத்தவர்.
அத்துடன் மும்மொழியிலும் சரளமாகப் பேசுவார். எந்தப்பெரிய அரசியல் தலைவர்களையும் பெயர் சொல்லி அழைப்பார். அவர் ஶ்ரீமாவை மாத்திரம் பி. எம். என்பார். இடதுசாரித்தலைவர்களை தோழர்
என்றோ, Comrade என்றோ அழைப்பார்.
சங்கம் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை மீண்டும் இயங்கவைக்கப்போவதாகவும் அதன் பணிகளுக்கு ஒரு முழுநேர ஊழியர் தேவை என்று சொன்ன அவர், என்னை அதற்கு எவ்வாறு தெரிவுசெய்தார் என்பது தெரியாது.
வேலை இல்லாமல் நான் சிரமப்படலாகாது என்ற நல்லெண்ணம் மாத்திரம் அவரிடமிருந்ததை அறிந்தேன். சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் நண்பர் காவலூர் இராஜதுரை அச்சமயத்தில் இலங்கை வானொலியில் பணியாற்றினார்.
அவரும் சிறுகதை எழுத்தாளர்தான். அவரது இல்லம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்தது. அதன் முகவரி: 51/9 ஹட்சன் வீதி, கொள்ளுப்பிட்டி. சங்கத்தின் முகவரியாக அதனையே பயன்படுத்தினார்கள்.
அந்த இல்லத்திலும் சங்கத்தின் கூட்டங்கள் அடிக்கடி நடக்கும். காவலூர் இராஜதுரையின் மைத்துனர் இராஜசிங்கம் ஆரம்ப முதலீட்டை வழங்க , திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் மானிய உதவியுடன் தனது கதையான பொன்மணியை திரைப்படமாக்குவதற்கு நண்பர் தயாரானார்.
சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகம் தோன்றிய கதையை பிரேம்ஜி என்னிடம் விஸ்தாரமாக எடுத்துச்சொன்னார். கேரளா எழுத்தாளர்களும் அத்தகைய அமைப்பினை நடத்தி சிறந்த நூல்களை வெளியிட்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
இலங்கைச் செய்திகள்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...
நிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ் தீவிரம் மேலும் மூவர் நேற்று மரணம்
சபாநாயகர் கையொப்பம்; 20ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்
பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உலருணவு
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்
முஹம்மது நபி மனித குலத்திற்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம்
மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி
இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார்
20க்கு ஆதரவளித்த 09 எம்.பிக்களும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...
உலகச் செய்திகள்
பெண்கள் மீது சோதனை; மன்னிப்பு கேட்டது கட்டார்
பொலிஸ் சூட்டில் மற்றொரு கறுப்பின இளைஞன் பலி
தாய்வானுக்கு ஏவுகணை விற்க அமெரிக்கா முடிவு
இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல்: பலஸ்தீன இளைஞர் உயிரிழப்பு
சிரியாவில் ரஷ்ய வான் தாக்குதலில் பலர் பலி
ஹொங்கொங்கில் மூன்று ஜனநாயக ஆர்வலர் கைது
அமெரிக்காவின் பாலியல் வழிபாட்டு குழு தலைவருக்கு 120 ஆண்டு சிறை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரம்
கொவிட்–19: ஐரோப்பாவெங்கும் தினசரி உயிரிழப்பு அதிகரிப்பு
கருணைக்கொலைக்கு நியூசிலாந்தில் ஆதரவு
பெண்கள் மீது சோதனை; மன்னிப்பு கேட்டது கட்டார்
விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டறிய அவுஸ்திரேலியா செல்லவிருந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாயப் பரிசோதனை நடத்திய விவகாரத்தில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.
பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை நடத்திய விவகாரத்துக்கு அவுஸ்திரேலிய அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்ததன் பின்னணியில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.
இதன்போது பெண்களின் ஆடையை கழற்றி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இப்பெண்கள் ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களது உள்ளாடையை நீக்கிய பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், அவுஸ்திரேலிய அரசிடம் மருத்துவ ரீதியான உதவிகளைப் பெற்றதாக அதனை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரவித்தார்.
ஒக்டோபர் 2ஆம் திகதி கட்டார் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து யாருக்கேனும் குழந்தை பிரசவித்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை கண்டறிய முனைந்துள்ளனர்.
இதுபோன்றதொரு பரிசோதனை பாலியல் வன்கொடுமைக்கு இணையானது என்று மனித உரிமை காப்பாளர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.
கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்
எங்கள் சமயம் - தத்துவங்கள் பலவற்றைக் கொண்டு விளங்குகிறது. தத்துவங்களை நேரடியாகச் சொன்னால் பலருக்கும் விளங்கமாட்டாது என்ற காரணத்தால் அவற்றை யாவரும் உள்ளத்தில் இருக்கும் வகையில் கதை வடிவத்தில் தந்து நிற்கிறது. எங்கள் சமயத்தில் பல புராணங்கள் இருக்கின்றன. புராணங்கள் தத்துவங்களை விளக்கும் கதை வடிவங்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். புராணக் கதைகள் பலவும் தெய்வீகம் சம்பந்தட்டே ஆக்கப்பட்டன.
ஆரம்பகாலத்தில் மக்கள் மனதில் நல்லொழுக்கத்தை , நல்ல சிந்தனையை ஏற்படுத்த பெரிதும் கைகொடுத்து நின்றன கதைகளேயாகும். கதைகள் என்பது பழைய காலந்தொட்டு பாரம்பரியச் சொத்தாகவே அமைந்து வருகிறது எனலாம். அந்தக்கதைகளில் இடம் பெறும் சம்பவங்கள் உண்மையையா பொய்யா என்று ஆராய்வது உகந்து அல்ல. ஏனென்றால் கதைகள் கற்பனையின் பெறுபேறு எனலாம். ஆனால் அந்தக் கற்பனைக்குள் பொதிந்திருக்கும் கருதான் எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டியாக வாழ்வினை எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஆணிவேராக அமைகிறது என்பதையும் கவனத்தில் இருத்தல் அவசியமாகும்.
மழைக்காற்று - ( தொடர்கதை ) அங்கம் 59 முருகபூபதி
தமயந்தி, மகன் உதயசங்கரை அழைத்துச்செல்ல வந்தபோது, அவன் தன்னிடத்தில் சொன்ன கனவுபற்றி சொல்லுவோமா..? என்றும் அபிதா ஒரு கணம் யோசித்தாள்.
தாயிடம் அதுபற்றி சொல்லவேண்டாம் என்று அவன் கெஞ்சியிருக்கையில், சொல்வது தவறு, பிஞ்சுமனதில் வாக்கை மீறும் எண்ணங்களை விதைப்பது மகா தவறு என்ற தீர்மானத்துடன், களைத்து திரும்பியிருந்த தமயந்திக்கு தண்ணீரும் அருந்தக்கொடுத்துவிட்டு, “ ரீயா…? கோப்பியா..? ஏதும் குளிர்பானமா..? “ என்று அபிதா கேட்டாள்.
“ தண்ணீரே போதும் அபிதா. டேய் வாரியா போவோம். இனிப்போய்த்தான் சமைக்கவும் வேணும். “ தொலைக்காட்சியில் கார்டுன் பார்த்துக்கொண்டிருந்த மகனை தமயந்தி தட்டி எழுப்பினாள்.
“ பிளீஸ் அம்மா.. கொஞ்சம் பொறுங்களேன். உங்களுக்கு அவசரம் என்றால் போங்கோ… நான் பிறகு வாரன். “ “ இல்லை… இல்லை… வீட்டுப்பாடம் எல்லாம் இருக்கு. ஸ்கூல் இல்லை என்பது உனக்கு
ஒரு சாட்டாகிப்போச்சுது… எழும்பு… எழும்பு… “ தமயந்தி அவனை துரிதப்படுத்தினாள்.
“ சரி… சரி… விடுங்க. இன்னும் சில நிமிடங்களில் அந்த கார்டுன் முடிந்துவிடும். நீங்க வாங்க , வந்து இருங்க…. “ அபிதா, தமயந்தியை அழைத்துச்சென்று சமையலறை மேசைக்கு அருகில் ஆசனத்தை இழுத்துப்போட்டு அமரச்செய்துவிட்டு, கேத்திலில் தண்ணீர் கொதிக்கவைத்தாள்.
“ தமயந்தி… எனக்கு ஒரு உதவி.. உங்களுக்கு ஒரு அண்ணன் அவுஸ்திரேலியாவிலிருக்கிறார் என்று சொன்னீங்கதானே…? அவர் இங்குள்ள பேப்பர்களிலெல்லாம் கதை, கட்டுரை எழுதுபவர் என்றும் முன்பு ஒரு தடவை சொல்லியிருந்தீங்க… நானும் படித்திருக்கிறேன். ஜீவிகாவும் சொல்லியிருக்கிறா… அவை வெளியான பழைய பேப்பர்களை கொடுத்துவிட்டோம்.
எனக்கு அவருடைய போன் நம்பரும், அவருடைய மின்னஞ்சலும் தெரிந்தால் அதனையும் தரமுடியுமா..? “ அபிதா கேட்டதும், “ வெரி சொறி அபிதா, அவருடைய டெலிபோன் இலக்கம்தான் இருக்கிறது. வேண்டுமென்றால் தாரன்.
அவர்தான் இடைக்கிடை வைபர், வாட்ஸ் அப்பில் எடுக்கிறவர். நானும் ஏதும் அவசரம் என்றால் மாத்திரம் அவருக்கு எடுப்பேன். நேரங்களும் வித்தியாசம்தானே… ஒரு நாள் அங்கத்தைய நேரம் நடுச்சாமத்தில் எடுத்துப்போட்டு நல்லா ஏச்சும் வாங்கிக்கட்டியிருக்கிறன்.