கண்விழித் தாமரை
கனிந்து நோக்கிடும்
என்னுயிர் தாரகை நீ
விண்ணதில் மின்னிடும்
பொன்னொளி காட்டும்
தண்மதி போன்றவள் நீ
வாளெனக் கண் மடல்
வெட்டி மறைத்துதிடும்
விழியினால் கொன்றவள் நீ
பேசிடும் மொழியிலும்
வீசிடும் இலக்கணம்
பொழிப்புரை சொல்பவள் நீ
மானுட வாழ்வில் வென்று நிலைத்திட
வாய்மொழி கொண்டவள் நீ
அடங்கிப் கிடந்தவள்
விழித்து எழுந்திடின்
அகிலம் அதிரும் என்று
செருக்கிடை மேவிய
நிமிர்நடை கொண்டவள்
நேரில் வருகை கண்டேன்
ஆண்மகன் என்றிட்ட
ஆணவம் அழிந்தது
சக்தி என்றே வியந்தேன் .
-
No comments:
Post a Comment