எம்மதமும் மதுகுடிக்கச் சொல்லியதே இல்லை
என்னூலும் மதுநன்று எனச்சொன்ன துண்டோ
புததரொடு வள்ளுவரும் புறக்கணிக்கச் சொன்னார்
சித்தமதில் ஏற்றாமல் திரிகிறார் பலரும் !
நாடிருக்கும் நிலையினிலே தேடுவதா மதுவை
கேடுதரும் மதுநாட யாருக்குமச் சொன்னார்
வீடுவிட்டு வீதிவந்து மதுதேவை என்று
விளக்கிவிடும் வீணர்களைக் கழுவேற்ற வேண்டும் !
நோயுற்றார் மனைகளிலே நொந்து மடிகின்றார்
தாயாக சேவைசெய்வார் தம்மை இழக்கின்றார்
மதுவில்லை என்பதனால் மனமுடைந்து போச்சு
எனவுரைக்கும் மனிதரைநாம் என்னவென்று சொல்ல !
மதுவாலே வருமானம் வருகிறதாய் நினைக்கும்
மதியுரைஞர் தனயெண்ண தலைகுனிவாய் இருக்கு
காந்திமகான் நடந்தவிந்த கண்ணியமாம் நிலத்தில்
கள்ளுண்டால் தீமையென காட்டுகின்ற வள்ளுவம்
எல்லோர்க்கும் தெரியும்படி இருக்கிறதே இன்று
குடிகுடித்தால் குடியழியும் எனவுரைக்கும் நூல்கள்
குடியொழிக்க முடியாமல் குற்றுயிராய் கிடக்கு !
கொரனோவைக் கண்டாலும் குடியைவிட மாட்டார்
மதுகையில் கிடைத்துவிட மணிக்கணக்கில் திரிவார்
குடியொன்றே வாழ்க்கையென நினைத்துவிடும் அவர்கள்
கொன்றொழிக்கும் கொரனோவை கொண்டுவிடார் சிந்தை !
|
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
No comments:
Post a Comment