மேலும் சில பக்கங்கள்

மரணஅறிவித்தல்

.
   திரு .  தியாகராஜா கிருஷ்ணசாமி(வீரர்) 


பிறப்பு 01.09.1934,  இறப்பு 17.06.2019 


யாழ்ப்பாணம் நீராவியடிைய பிறப்பிடமாகவும், சிட்னிைய வதிவிடமாகவும் கொ ண்ட கட்டட பட வைரஞரும், யாழ் இந்துக்கல்லூரி பைழய மாணவனும், 1955ம் ஆண்டு கிரிக்கட் அணியின் தைலவருமான தியாகராஜா கிருஷ்ணசாமி(வீரர்) அவர்கள் 17.06.2019 அன்று சிட்னியில் காலமானார். அன்னார் மனோன்மணியின் அன்புக் கணவரும், கோபிநாத் (Sydney), பிேரம்நாத் (Canada), விஸ்வநாத் (UK) ஆகி யோரின் அருைமத் தந்தையும், மதிமளா (Australia), கீதா (Canada), பானுரேகா (UK) ஆகிேயாரின் அன்பு மாமனாரும், அரிநாத், ரூபீந்திரநாத், சகீத்நாத், பிரநாத் (Canada), பவுநாத், கிருஷ்நாத் ஆகிேயாரின் ஆசைப் பேரனும், காலம் சென்ற மனோன்மணி, காலம் சென்ற பாலசிங்கம், மயில்வாகனம் (Colombo)காலம் சென்ற  செல்வராஜா, புனிதா (Colombo), கந்தசாமி (Australia) ஆகிேயாரின் அன்புச் சேகாதரரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 23.06.2019 ஞாயிற்றுக்கிழைம அன்று Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113இல் அைமந்துள்ள Magnolia Chapelஇல் காைல 10 மணிமுதல் மாைல 1 மணி வரை பார்வைக்கு    வைக்கப்பட்டு, கிரிைககைளத் தொடர்ந்து தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தைல உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்ைமயுடன் கேட்டுக்ெகாள்ளப்படுகின்றனர். தகவல்  
கோபிநாத் 0400 591 902
பிரேம்நாத் +1416 707 1390 
விஸ்வநாத் +442036 439 418 
மனோன்மணி 0469 248 901

தந்தையர் தினத்தை பேணுவோம் வாழ்த்தினைப் பெறுவோம் அவர்வாழ்த்தை வேண்டுகிறேன் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                              விருதமெலாம் தானிருந்து 
image1.JPG                                    விரும்பியெனை இறைவனிடம் 
                              வரமாகப் பெற்றவரே 
                                      வாய்மைநிறை என்னபா 
                              விரல்பிடித்து அரிசியிலே
                                       எழுதவைத்த என்னப்பா 
                              உரமாக என்னுள்ளே
                                       உணர்வோடு கலந்துவிட்டார் ! 

                            தோழ்மீது எனைத்தூக்கி
                                  தான்மகிழ்ந்து நின்றிடுவார் 
                            வாழ்நாளில் வீழாமல்
                                    வளரவெண்ணி பலசெய்தார் 
                             மெய்வருத்தம் பாராமல்
                                     எனையெண்ணி தானுழைத்தார்
                             கண்ணெனவே காத்துநின்றார்
                                     கருணைநிறை என்னப்பா ! 

                            பொட்டுவைத்த  என்முகத்தை
                                 கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
                            பட்டுச்சட்டை  வாங்கிவந்து 
                                    பரவசத்தில் மூழ்கிடுவார்
                            இஷ்டமுடன்  தன்மார்பில்
                                      எனையுறங்க வைத்திடுவார்
                            அஷ்ட   ஐஸ்வரியமென்று 
                                 அனைவர்க்கும் சொல்லிடுவார் ! 

தமிழ் அறிஞர் பேராசிரியர் இரா. மோகனுக்கு கண்ணீர் அஞ்சலி - புன்சிரிப்பு மோகன் புறப்பட்டு போய்விட்டார் !




                                  

image1.jpg                        தமிழ்த்தேனீ  பறந்தது  தமிழறிஞர்  கலங்குகிறார் 
                        அறிவுநிறை  தமிழறிஞர்  அழவிட்டே  அகன்றுவிட்டார் 
                        அறிஞராம் முவவின் அருமைமிகு செல்லப்பிள்ளை
                        அனைவரையும் அழவிட்டே அவ்வுலகு போனதேனோ  !

                        மோகனென்று நினைத்தவுடன் புன்னகைதான் வந்துநிற்கும் 
                        காதலுடன் தமிழ்படித்து காத்திரமாய் எழுதிநின்றார்
                        நோதலுடன் பேசாதா  நுண்ணறிவும் பெட்டகமாய்
                        பூதலத்தில் இருந்தமோகன் புறப்பட்டு போனதேனோ ! 

                         பட்டம்பல பெற்றாலும்  பதவிபல  வகித்தாலும்
                         மற்றவரை நோகடிக்கும் வகையிலவர் இருந்ததில்லை 
                         கற்றபடி ஒழுகிநின்றார் கண்ணியத்தைக் காத்துநின்றார்
                         கண்ணீரில் மிதக்கவிட்டு காணாமல் போய்விட்டார் ! 

                          அவர்படைத்த  நூல்களெலாம் அழுதபடி இருக்கிறது 
                          அவர்பெற்ற விருதுகளோ அலமந்தே நிற்கிறது 
                          பட்டிமன்றம் கவியரங்கம் பரிதவித்தே நிற்கிறதே 
                          கட்டழகு சிரிப்பழகர் கலங்கவிட்டுப் போனதேனோ ! 

                    இலக்கியத்தில் இரட்டையராய் இருந்தார்கள் இணைபிரியா 
                    இப்போது இராமோகன் இணையைவிட்டு ஏகிவிட்டார்
                    பிரிந்தஇணை நிர்மலாவோ  புரண்டேங்கி அழுகின்றார் 
                    சிரித்தமுகம் காணாமல்  சென்றவிடம்  தேடுகிறார் !

                    புன்சிரிப்பு  மோகன்  புறப்பட்டு  போய்விட்டார் 
                    என்கின்ற செய்தி இடியெனவே இருந்ததுவே
                    அவர்நட்பை எண்ணியெண்ணி அழுதபடி நிற்கின்றேன்
                    அறிவுநிறை இராமோகன் அழவிட்டுப் போனதேனோ !


        மகாதேவஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
                     










ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் - 04 ( பகுதி - 01) மலையக இலக்கியத்தில் தெளிவத்தை ஜோசப்பின் வகிபாகம் மலையக அரசியல் தலைவர்கள் கவனிக்கவேண்டிய கண்ணிமைகள் முருகபூபதி


இலங்கை பொருளாதாரத்திற்கு ஒரு காலத்தில்  அறுபது சதவீதமான அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த   மலையகத்தின் தேயிலைத்  தோட்டத் தொழிலாளர்களின் அந்தக்குடியிருப்புக்குப்பெயர் லயன் காம்பரா.
அந்தகுடும்பத்தின் தலைவன் இரவில் வெளியே சென்றுவிட்டு அந்த ஒரு அறை வீட்டுக்கு திரும்புகின்றான். ( ஒரு அறை என்றால் அதற்குள்தான் சமையல், படுக்கை, பிள்ளைகளின் படிப்பு) திடீரென்று அந்த அறைக்குள்ளிருந்து அவன் அலறிக்கொண்டு வெளியே வருகின்றான்.
அப்படி அங்கு என்னதான் நடந்தது?  கும்மிருட்டில், மனைவி என நினைத்துக்கொண்டு தெரியாத்தனமாக தனது பருவமகளின் பக்கத்தில் போய் படுத்திருக்கின்றான். 
மறுநாள் தோட்டத்தின் துறையிடம் தங்களின் அவல வாழ்வுபற்றி முறையிடச்செல்கின்றான்.
இப்படிப்பட்ட அவலமான  காட்சிகள் மலையகத் தோட்டங்களில் நடந்திருக்கலாம்.  1975 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த்திரைப்படத்தில் இக்காட்சி வருகிறது! அந்தப்படம்தான் புதிய காற்று. இதற்கு திரைக்கதை வசனம் எழுதியவர்தான் இந்தப்பதிவில் நான் எழுதப்போகும் தெளிவத்தை ஜோசப்.
இந்தத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் இருவர்.  இன்று இலங்கையில் பிரபல அரசியல் தலைவர்கள். அவர்கள்தான் மனோ கணேசன் - பிரபா கணேசன்.  இவர்களின் தந்தையார் வி.பி. கணேசன் இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.
எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை வி.பி.கணேசன்தான் தயாரித்து கதாநாயகனாகவும் தோன்றினார்.
மலையக தோட்டத் தொழிலாளர்களின்  அவல வாழ்க்கையை சித்திரிப்பதற்காக அந்தப்படத்திற்கு  திரைக்கதை வசனம் எழுதுவதற்கு  அவர் தேடிச்சென்றது அக்காலப்பகுதியில் கொழும்பில் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில்  கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் ஸெயின்ஸ்தான்  திரையரங்கின் வேலிச்சுவர் எல்லையில் அமைந்திருந்த மொடர்ன் கொன்பெஃக்‌ஷனரி ( ஸ்டார் இனிப்பு தயாரிப்பு நிறுவனம்) வேர்க்ஸ் ஸ்தாபனத்தில் கணக்காளராக பணியிலிருந்த தெளிவத்தை ஜோசப் அவர்களைத்தான்!
காரணம் இல்லாமல் காரியம் இல்லை.
இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். மலையகத்தில் பதுளையில் ஊவாகட்டவளை என்ற ஊரில் தெளிவத்தை என்ற இடத்தில் 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், சிறிது காலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் வசித்துவிட்டு தாயகம் திரும்பியவர். தொடர்ந்தும் இவர் கும்பகோணம் வாசியாக இருந்திருப்பின் இன்று இவருக்கு கிடைத்திருக்கும் பிரபல்யத்திற்கு  வாய்ப்பில்லை.
கும்பகோணத்தில் ஆயிரத்தில் ஒரு மனிதராக சந்தனசாமி ஜோசப் இருந்திருப்பார். தான் பிறந்த இலங்கை மலையகத்தை இவர் நேசித்தார். மலையகமும் இவரை நேசித்து வளர்த்தது. மலையக இலக்கியத்திற்கும் வளம் சேர்த்தார். மலையக எழுத்தாளர் மன்றமும் இவரைத்  தலைவராக ஏற்றுக்கொண்டது.

பயணியின் பார்வையில் - அங்கம் 11 - முருகபூபதி


சீதையின் கண்ணீரும் ஈழப்பெண்களின் கண்ணீரும் சொல்லும் கதைகளும் சாப விமோசனமும்
    " அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

                      ஆலயம் பதினாயிரம் நாட்டல்
   அன்ன வாயினும் புண்ணியங்கோடி
                    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

                                                                  --  மகாகவி பாரதியார்

காட்பாடி - வேலூரிலிருந்து அதிகாலையே புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரும்போதே, அந்த ஒரு மணிநேரப்பயணத்தில், தாயகத்தில்  என்ன செய்யவேண்டும்?  எங்கெங்கே செல்லவேண்டும்?  யார் யாரைப் பார்க்கவேண்டும்?  என்று மனதில் பதிவுசெய்துகொண்டேன்.
இலங்கையில் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல், மார்ச் 12 ஆம் திகதிவரையில்தான் நிற்கமுடியும். என்னைப் பொறுத்தவரையில் வருடங்களில் வரும் பெப்ரவரி மாதம் உவப்பானதில்லை. இந்த மாதத்தில் நாட்கள் குறைவு. இம்மாதத்தில் தாயகம் சென்றால், மேலும் மூன்று நாட்களுக்காக நேரத்தை சேமித்து இயங்கவேண்டும்.
அவ்வாறு இயங்குவதாயின் அதிகாலை மூன்று மணிக்கே துயில் எழ வேண்டும். நாட்டுக்கு நாடு நேர வித்தியாசம் இருப்பதனால், அவ்வாறு எழுதல் சாத்தியமானது.
நீர்கொழும்பில் அக்காவின் வீட்டிலிருந்து, ஒரு நாள் அதிகாலை எழுந்து கணினியில்,  இலங்கைப்பயண ஒழுங்குகளை தீர்மானித்து எழுதிக்கொண்டேன். அதனை பிரதி எடுத்துவைத்துக்கொண்டு பணிகளை தொடங்கினேன்.
அந்த நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தலைநகரம் கொழும்பு வரவேயில்லை என்பது   ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு கொழும்பிலிருக்கும் ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகளை சந்திக்காமல் திரும்பினால், அவர்கள் கோபிக்கப்போகிறார்களே? என்ற எண்ணமும் வந்தது.
நீடித்த போருக்குப்பின்னர்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் - முன்னேற்றம்  வந்ததோ இல்லையோ, ஆனால்,  நாட்டின் போக்குவரத்துச்சேவையில் துரிதமான மாற்றமும் முன்னேற்றமும் வந்திருக்கிறது.

விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் - ரஸஞானி


படைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் " தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து " என்றுதான் சொல்லிவருகிறார்கள்.  முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள்.
தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள்.

இந்தப்பின்னணியில்தான்,  அவுஸ்திரேலியா  மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் அவர்கள்,  இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி சுமார் இருபது வருட காலத்துள் கவிதை தவிர்ந்த இலக்கியத்தின் இதர துறைகளிலும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இவர் இங்கு தொடங்கிய உதயம் (இருமொழிப்பத்திரிகை) மாத இதழில் தனது தொழில் சார்ந்த அனுபவமாக முதலில் எழுதிய பத்தி: நடுக்காட்டில் பிரேத பரிசோதனை. நடேசன் விலங்கு மருத்துவராக மதவாச்சி தொகுதிக்கு அருகில் பதவியா பிரதேசத்தில் பணியாற்றியபோது, தந்தங்களுக்காக ஒரு யானையை சிலர் வேட்டையாடிக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களை தேடிக்கைது செய்த பொலிஸார், அந்த யானையின் சடலத்தை பரிசோதனை செய்து மரணச்சான்றிதழ் பெறுவதற்காக நடேசனை  அழைத்துக்கொண்டு அந்த நடுக்காட்டிற்குச்சென்றார்கள்.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான்

அசராது ஆடி முடித்த இங்கிலாந்து!

பிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை 

திமுத் - குசல் நல்ல ஆரம்பம் ; சொதப்பிய ஏனைய வீரர்கள்!

தென்னாபிரிக்காவின் முதல் வெற்றி

ரோகித் அபாரம் ; 336 ஓட்டங்களை விளாசிய இந்தியா!



41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான்

12/06/2019 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைச் செய்திகள்

'பகைமைக்கு எதிரான மணித்தியாலம்' மக்கள் மத்தியில் அன்பைப் பரப்பும் நிகழ்வு ஆரம்பம்

 மக்களுக்காக வீதிக்கு இறங்கிய மஸ்தான்

மாநாயக்க தேரர்களை சந்தித்த முஸ்லிம் உறுப்பினர்கள் வலியுறுத்தியது என்ன? 

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை ; சுருக்கமுறையற்ற விசாரணை நிறைவு – இறுதிக் கட்டளை மாத இறுதியில்

சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார் ; சாட்சியத்தில் ஹிஹ்புல்லாஹ் - முழு விபரம்

பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சிங்கள மக்களும் பிக்குகளும் இணைந்து ஆர்ப்பாட்டம்



'பகைமைக்கு எதிரான மணித்தியாலம்' மக்கள் மத்தியில் அன்பைப் பரப்பும் நிகழ்வு ஆரம்பம்


11/06/2019 நாட்டின் அனைத்து இன மக்கள் மத்தியிலும் அன்பைப் பரப்பி புதிய இலங்கையை நோக்கிச் செல்லும் பயணம் மாத்தறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அடிப்படைவாதிகள், இனவாதிகள், சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக மாத்தறை மக்கள் ஏற்பாடு செய்த 'பகைமைக்கு எதிரான மணித்தியாலம்' என்ற தலைப்பிலான நிகழ்வு நேற்று மாத்தறை பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதில் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் கலந்துக்கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.




உலகச் செய்திகள்


இராணுவ தளபதியை பிரானவுக்கு இரையாக்கிய கிம்யொங் 

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி கைது

தீவிரவாத தாக்குதலில் 100 பேர் பலி ; மாலியில் சம்பவம்

இந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லலாம் : பாக்கிஸ்தான் பிரதமர்

பிரித்தானிய பிரதமர் தேர்தலுக்கு 10 பேர் போட்டி

ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்!

ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்கள்- எண்ணெய் விலை உடனடியாக அதிகரித்தது

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்- பரபரப்பு வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா

அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் கண்டேன் - மோடி வேதனை

மோடி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் என்கிறார் இம்ரான் கான்

குற்றத்தை ஏற்க மறுத்தார் நியூசிலாந்து மசூதி கொலையாளி

எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்- குற்றச்சாட்டை மறுத்தது ஈரான்

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது?- புதிய தகவல்

இந்திய பிரதமரை நலம் விசாரித்த பாகிஸ்தான் பிரதமர்



இராணுவ தளபதியை பிரானவுக்கு இரையாக்கிய கிம்யொங் 

11/06/2019 வடகொரிய நாட்டு ஜனாதிபதி கிம் யொங் உன்னை ஆட்சி கவிழ்க்க திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில்  தனது இராணுவ தளபதியை பிரானா மீன்களுக்கு  உணவாக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியா - கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019


ஈழத்து மல்லிகை ஜீவாவின் வாழ்வும் பணிகளும் -   எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம்  - கவிஞர் அம்பியின் கவிதை உலகம்  பற்றியும் உரைகள்  நிகழ்த்தப்படும்
கன்பராவில் வதியும் கலை - இலக்கிய அன்பர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23 ஆம் திகதி ( 23-06-2019) ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு - 2019 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கலை, இலக்கிய ஆர்வலர் திரு. சிவசபேசன் தலைமையில் கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் ( Canberra Tamil Senior Citizens' Meeting Hall, 11, Bromby Street , Isaacs , ACT-2607) மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகும் இலக்கிய சந்திப்பில், அமரர் கி. இலக்‌ஷ்மணன் அவர்கள் எழுதிய சிப்பிக்குள் முத்து (கட்டுரை) , இந்திய தத்துவஞானம் ( ஆய்வு) ,  நடேசன் எழுதிய கானல் தேசம் ( நாவல்) , எக்ஸைல்                            ( தன்வரலாறு) , முருகபூபதி எழுதிய சொல்லத்தவறிய கதைகள்                          ( புனைவு சாரத இலக்கியம்) ஆகிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில்,  இந்தியாவில் சமீபத்தில் சாகித்திய அகடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புலகம் பற்றியும், ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இதழ் ஆசிரியருமான மல்லிகைஜீவாவின் வாழ்வும் பணியும் , மற்றும் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் மூத்த கவிஞர் அம்பியின் கவிதை உலகம் பற்றியும் உரைகள் நிகழ்த்தப்படும்.
திருமதி பாலம் லக்‌ஷ்மணன்,  தனது கணவர் அமரர் கி. லக்ஷ்மணன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றியும் அவர் எழுதிய சிப்பிக்குள் முத்து கட்டுரைத் தொகுதி, தொகுக்கப்பட்டதன் பின்னணி பற்றியும்  உரையாற்றுவார்.
இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களுமான  திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம், மருத்துவர் கார்த்திக், திருவாளர்கள் யோகானந்தன், முருகபூபதி,  மயூரன் சின்னத்துரை ஆகியோர் நூல் விமர்சன உரைகளை நிகழ்த்துவர்.
நூலாசிரியர்களின் ஏற்புரையும் இடம்பெறும்.
நிகழ்ச்சியின் இறுதியில் சுபா தயாரித்து இயக்கியிருக்கும் தெருத்தேங்காய் என்னும் குறும்படமும் காண்பிக்கப்படும். இந்நிகழ்ச்சிகளை திரு. நித்தி துரைராஜா ஒருங்கிணைத்துள்ளார்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

-->












தமிழ் சினிமா - சுட்டு பிடிக்க உத்தரவு திரை விமர்சனம்


தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சுட்டு பிடிக்க உத்தரவு. அந்த படத்தை போலவே இதுவும் வெற்றி பெற்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

ஒரு தனியார் வாங்கியில் படத்தின் ஆரம்பத்திலேயே விக்ராந்த், சுசீந்திரன் ஒரு வங்கியில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கின்றனர். இவர்களை மிஷ்கின் தன் போலீஸ் படையுடன் துரத்துகின்றார்.
அவர்கள் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் செல்கின்றனர். எப்படியாவது விக்ராந்த், சுசீந்திரவை பிடித்துவிட வேண்டும் என மிஷ்கின் அவர்களை நெருங்க, நெருங்க, கடைசியில் அவர்களை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ராம்பிரகாஷ் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர், இரண்டு, மூன்று கதைகளை ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து அனைவரையும் கவர்ந்தார், அதேபோல் இந்த படத்தின் முதல் காட்சியிலேயே தீ பற்றிக்கொள்கின்றது.
அதற்கு அடுத்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு தான், அதிலும் மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரனை பிடிக்க நெருங்கும் போது நமக்கே பதட்டம் வந்துவிடுகின்றது.
படத்தின் சேஸிங் காட்சிகள் நன்றாக இருந்தாலும், அங்கு நடக்கும் விஷயங்களை லைவ் கவரேஜ் செய்யும் மீடியாக்காரர்கள் என்று காட்டுவது இன்னும் எத்தனை படத்தில் இதையே பார்ப்பது என்பது போல் தோன்ற வைக்கின்றது.
படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவும், அதுவும் வேகவேகமாக ஓடும் காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளரும் ஓடியது மட்டுமில்லாமல், நம்மையும் கூட்டி ஓடுகின்றார். சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை செம்ம விறுவிறுப்பாக செல்கின்றது.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

ஒரு சில காட்சிகள் நாடகத்தன்மையுடன் இருப்பது.
மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் விக்ராந்த், சுசீந்திரன், மிஷ்கின் பரபரப்பான ஓட்டத்தில் நாமும் பங்கேற்கலாம். 
நன்றி CineUlagam