ஈழத்து
மல்லிகை ஜீவாவின் வாழ்வும் பணிகளும் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம் - கவிஞர் அம்பியின் கவிதை உலகம் பற்றியும் உரைகள் நிகழ்த்தப்படும்
கன்பராவில் வதியும் கலை - இலக்கிய அன்பர்களின் ஏற்பாட்டில்
எதிர்வரும் 23 ஆம் திகதி ( 23-06-2019) ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு - 2019 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் சமீபத்தில் சாகித்திய அகடமி விருது பெற்ற
பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புலகம் பற்றியும், ஈழத்தின் மூத்த எழுத்தாளரும்
இதழ் ஆசிரியருமான மல்லிகைஜீவாவின் வாழ்வும் பணியும் , மற்றும் அவுஸ்திரேலியா சிட்னியில்
வதியும் மூத்த கவிஞர் அம்பியின் கவிதை உலகம் பற்றியும் உரைகள் நிகழ்த்தப்படும்.
திருமதி பாலம் லக்ஷ்மணன், தனது கணவர் அமரர் கி. லக்ஷ்மணன் அவர்களின் வாழ்வையும்
பணிகளையும் பற்றியும் அவர் எழுதிய சிப்பிக்குள்
முத்து கட்டுரைத் தொகுதி, தொகுக்கப்பட்டதன் பின்னணி பற்றியும் உரையாற்றுவார்.


நூலாசிரியர்களின் ஏற்புரையும் இடம்பெறும்.
நிகழ்ச்சியின் இறுதியில் சுபா தயாரித்து இயக்கியிருக்கும்
தெருத்தேங்காய் என்னும் குறும்படமும் காண்பிக்கப்படும்.
இந்நிகழ்ச்சிகளை திரு. நித்தி துரைராஜா ஒருங்கிணைத்துள்ளார்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment