30/11/2019 பேராசிரியர் கொடகார இலங்கை யின் வெளிநாட்டுக் கொள்கை வகுத்தல் பற்றி குறிப்பிடும்போது இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கையின் அத்திபாரம் இந்தியாவுடனான உறவுகளே எனக் குறிப்பிட்டார். (Corner stone of Sri Lankan Foreign Policy is its relations with India ) இலங்கை இந்தியாவுக்கு மிக அண்மையிலமைந்துள்ள மிகப் பெரிய இடப்பரப்பு, சனத்தொகை கொண்ட நாடென்பது மட்டுமல்ல வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து இலங்கை இந்திய தொடர்புகள் உறவுகள் மிக நெருக்கமாக தொடர்ந்தமையும் பிரதான காரணமாகும்.

இந்த அடிப்படையில் ஆராயும் போது இலங்கையின் இருப்புக்கு அச்சுறுத்தல் தென்னிந்திய அரசுகளிடமிருந்து வந்தன. என்பது வரலாற்றாசிரியர்களின் சாட்சியமாகும். இக்காரணங்களினாலேயே பேராசிரியர் கொடகார பிரபலமான வாசகத்தை ெதரிவித்திருந்தார். என்பது கண்கூடு. 1980களில் இலங்கையில் இந்தியாவின் தூதுவராக பதவி வகித்த ேஜ.என். டிக்சிற் இலங்கை அனுபவத்தையும் தொகுத்து பிரபலமான நூல் ஒன்றினை எழுதினார்.
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்கள் (Makers of Indian Foreign Policy) என்ற நூலில் இந்திய அரசாங்கம் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்திய சமாதானப்படையை (IPKF) அனுப்பியமையை வெகுவாக ஆதரிக்கவில்லை. அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான கொள்கையை ஏற்கவில்லை. இலங்கையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பிரிவினை கோரி போராடிய அமைப்புக்கு இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்தாசை வழங்கியமை தவறு என வாதிட்டார். எனினும் இந்தியாவின் ெவளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்க நாடு என்ற அடிப்படையிலேயே இருதரப்பு, பல்தரப்பு உறவுகளை கையாள வேண்டும் என்றே கருதுகிறார்கள்.
இலங்கையில் 2019ம் ஆண்டு கார்த்திகை 16ஆம் திகதி இடம்பெற்ற ஐனாதிபதி ேதர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ ஐனாதிபதியாக வெற்றி பெற்று சூடு ஆறமுதலே இந்தியாவின் ெவளிநாட்டமைச்சர் ெஐயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துமடலுடன் ஐனாதிபதியை சந்தித்து கார்த்திகை 29ம் திகதி இந்தியாவுக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினையும் கையளித்தார்.
2015ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில் 2015 மாசி மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்தமையும் நிைனவிலிருக்கத்தக்கது. மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாக விஜயம் செய்த முதல் நாடு இந்தியாவாகும். இலங்கை ஜனாதிபதிகள் புதிதாக பதவியேற்றபின் முதலாவதாக விஜயம் செய்யும் நாடு இந்தியா என்பது எழுதாத விதியாகும். ஏனைய பிராந்திய நாடுகள் இந்தியாவுக்குத்தான் இலங்கை முக்கியத்துவம் என்பதை நடைமுறையில் ஏற்றுக் கொண்டுள்ளன.
மீண்டும் பேராசிரியர் கொடிகாரவின் கூற்று முக்கியத்துவமடைகிறது. ஜனாதிபதி ேதர்தல் கார்த்திகை 16 இல் நடைபெறுவதற்கு முன்னர் சில இந்திய அச்சு ஊடகங்கள் ேதர்தல் பற்றிய விவரணக்கட்டுரைகளில் ராஜபக் ஷ குடும்பம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் என்ன நிகழும் என்ற அடிப்படையில் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டன. சில கட்டுரைகள் நியாயப்படுத்த முடியாத விடயங்களை முன்னிலைப்படுத்தின. ராஜபக் ஷ குடும்பம் ஆட்சியமைத்தால் சீனா என்கின்ற பூதம் இலங்கையை ஆட்டிப்படைக்கும் என்கின்ற தோரணையில் சீன விரோத குணாம்சத்தை ெவளிப்படுத்தின.
ஐ.நா. சபையின் பட்டயம் நாடுகள் பற்றிய பெருங்கொள்கைகளை வகுத்துள்ளது. நாடுகளின் சுதந்திரம், இறைமை, சுயாதிபத்தியம், உள் விவகாரங்களில் தலையிடாமை, சச்சரவுகளை ஆயுத மோதலின்றி தீர்த்தல், நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு பற்றியெல்லாம் கூறுகிறது. உலகின் ஏக வல்லரசான அெமரிக்காவும் சனத்தொகையில் பெரிய நாடான சீனாவும் கரிபியன் தீவில் உள்ள மிகச்சிறிய தீவுகள் (நாடுகள்) யாவும் ஐ.நா. சாசன அடிப்படையில் சமனானவை. அவ்வாறெனில் நடைமுறையில் நாடுகள் சுதந்திர நாடுகளாகவில்லையே என்ற கேள்வி எழுகிறது.
நடைமுறையில் யதார்த்தத்தில் பெரிய நாடு, சிறிய நாடு, வலிமையான நாடு, பலவீனமான நாடு, செல்வந்த நாடு, அபிவிருத்தியடைந்து வரும் நாடு, தரையால் சூழப்பட்ட நாடு (land locked countries) என நாடுகள் காணப்படுகின்றன. இந்நாடுகள் பெயரளவில் இறைமையுள்ள நாடுகளாயினும் உண்மையில் தத்தம் இறைமைகளை சுயாதிபத்தியத்தை இழந்த நாடுகளாகவே காணப்படுகின்றன. ஆகையால் ஐ.நா.வின் கொள்கைகளுக்கு அப்பால் நடைமுறையில் நாடுகளின் இரு தரப்பு உறவுகளில் ஆதிக்கம் செலுத்தும் காரணி புவிசார் அரசியலாகும். (Geopolitic) புவிசார் அரசியல் என்பது ஒரு அறிவு சார் சொற்றொடராகவிருந்தாலும் சாதாரண வாசகர்கள் புரிந்து கொள்வது கடினமானதொன்றன்று.
புவியின் பூமிசாஸ்திரம் அதாவது மானிடமும் பௌதீக அமைப்புக்களும் எவ்வாறு அரசியலிலும் சர்வதேச உறவுகளிலும் செல்வாக்கு செலுத்துவதென்பது பற்றிய ஆராய்வினையே புவிசார் அரசியல் எனக் கூறப்படுகிறது. பிராந்திய ஆய்வுகள், சுவாத்தியம் அல்லது காலநிலை, சனத்தொகை பரம்பல் நாடுகளின் பருமன், அமைவு, இயற்கை வளங்கள், பிரயோக விஞ்ஞானம் போன்ற பல காரணிகள் புவிசார் அரசியலை தீர்மானிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால் பிரயோக விஞ்ஞானத்தால் விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தியடைந்த நாடுகள் விண்ெவளி ஆராய்ச்சியில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ளன. அவை அணு ஆயுதங்களை தயாரித்து பரிசோதித்து வெற்றி கண்டுள்ளன.
பெரிய சனத்தொகையுள்ள நாடுகள் பாரிய இராணுவங்களை கொண்டுள்ளன. இயற்கை வளங்களை, எண்ணெய் வளத்தை கொண்டுள்ள நாடுகள் செல்வம் செழிக்கும் நாடுகளாகவுள்ளன. நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் துறைமுகவசதிகள் இல்லாதபடியால் அயல்நாடுகளின் தயவிலே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அபிவிருத்தியடையும் நாடுகள் தத்தம் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் நீதியற்ற ஆலோசனைகளை செவிமடுக்க வேண்டியுள்ளன. நடைமுறையில் சர்வதேச உறவுகள் சமனற்றமுறையில் காணப்படுகின்றன என்பதே உண்மையாகும்.
பக் ஷ கார்த்திகை 29ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் இலங்கை இந்திய தரப்பு எந்த விடயங்களை மேசை முன் பேசப்போகிறார்கள் என இரு அரசாங்கங்களும் ெவளிப்படையாக தெரிவிக்காவிடினும் என்ன விவகாரங்களை பேசப்போகிறார்கள் என்பது விணவெளி ஆராய்ச்சி விஞ்ஞானம் போன்று இரகசியமானதல்ல. நாடுகளுக்கு நாடுகள் புதிய ஜனாதிபதி, பிரதமர்கள் ெதரிவாகும்போது வாழ்த்துச்செய்திகள் அனுப்புவது மிகச் சர்வசாதாரணமான நடவடிக்கையாகும். சில ஊடகங்கள் புதிய ஜனாதிபதியாக அமெரிக்கா வாழ்த்தியது சீனா வாழ்த்தியது இந்தியா வாழ்த்தியது செய்திகள் ெவளியாகும் போது வாசகர்கள் குழப்பமடைவது இயல்பானதாகும்.
ஏனெனில் இந்த நாடுகள் வாழ்த்தியது ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு என்ற மாயையை பத்திரிகை செய்திகள் வழங்குகின்றன. பிரதமர் மோடி அரசாங்கத்தின் தலைவராகவும் இந்திய ஐனாதிபதி அரசின் தலைவராகவும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் படி விளங்குகின்றனர். இலங்கையின் அரச தலைவருக்கு இந்தியாவின் அரச தலைவரும் இலங்கையின் அரசாங்க தலைவருக்கு இந்திய அரசாங்க தலைவரும் வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனனர். அதேபோன்று இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்தியாவின் பிரதமர் வாழ்த்து செய்தி அனுப்புதலும் சாதாரண நடைமுறைகளாகும். அந்த வகையில் பிரதமர் மோடி ஐனாதிபதிக்கு அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி சமாதானத்துக்காக கூட்டாக இயங்குவது அபிவிருத்தி, செழிப்பு, பாதுகாப்பு ஆகிய பொதுவான விடயங்கள் உள்ளடக்கிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாழ்த்து செய்திக்கும் ஏனைய நாடொன்றுக்கு அனுப்பும் வாழ்த்து செய்திக்குமிடையில் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது.
இலங்கை இந்திய உறவுகளில் உரசலான விடயங்கள் எவை என நுணுகி ஆராய்ந்தால் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தல் தொடர்கின்ற ஒரு பிரச்சினையாகும். தமிழ் நாட்டில் அரசியல்கட்சிகள், அமைப்புக்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு ெதரிவித்து மத்திய அரசாங்கததிற்கு அழுத்தம் கொடுத்தல் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கங்களுடன் சில முரண்பாடு நிலமைகள் உருவாக்கியமை ஆகிய இரு விவகாரங்களும் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தமையாகும். சர்வதேச உறவுகள் மற்றும் இந்து சமுத்திர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களான விவகாரங்களை நோக்குகையில் இலங்கை சீன இரு தரப்பு உறவுகள் இந்தியாவுக்கு எதிரானவை என்ற பரப்புரையும் இந்தியாவின் சில ஊடகங்களில் தொனிக்கிறது.
1970களின் பின்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ேஜ.ஆர் ஐயவர்த்தன அெமரிக்காவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை தாபித்தார். Voice of America வானொலியை இலங்கையில் அனுமதிக்க முடிவு செய்தார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் அெமரிக்காவுக்கு அனுமதிகொடுக்கப் போகிறார் என பீதியான செய்திகளை சில இந்திய ஊடகங்கள் ெவளிவிட்டன. இப்போது சீனப் புரளி முன்னர் அனுமதிக்க புரளி கிளப்பி விடப்பட்டன. ஆனால் இந்திய சீன உறவுகள் மிக நெருக்கமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளின் போது முன்னர் இலங்கை இந்திய தரப்புடன் பேசி முடிக்காத விடயங்கள் முதலில் ஆராயப்படும். சித்திரை 2017 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டார். சக்திவளம் பெட்ரோலியம், துறைமுகங்கள், விமானநிலையங்கள், புகையிரதநிலையங்கள், பெருந்தெருக்கள், வீடமைப்பு மற்றும் விவசாயம் ஆகிய விடயங்களை புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியிருந்தது. இவ்விடயங்களில் பிரதமர் நரேந்திரமோடி இரண்டு திட்டங்களில் அதிக அக்கறை செலுத்தினார். 500 மெகாவால்ட் வாயுவினால் இயக்கப்படும் சக்தி ஆலை, திருகோணமலையில் அமைந்துள்ள முன்னைய பிரித்தானிய எண்ணெய் தாங்கி ஆகியவையே பிரதமர் மோடி அக்கறை காட்டிய விடயங்களாகும்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொடர்பான ஆரம்ப ஒப்பந்தம் 2003இல் கைச்சாத்திடப்பட்டது. திரவ இயற்கை வாயுவால் இயக்கப்படும் சக்திதிட்டம் இலங்கை அரசாங்க தரப்பினால் இன்னும் பெரிதாக ஆராயப்படவில்லை 500 மெகாவால்ட் சக்தி இந்தியா முன்வந்த வேளை ஜப்பானும் 500 மெகாவால்ட் ஆலையொன்றை தர முன்வந்தது. முன்னைய பேச்சுவார்த்தையின் போது ஜப்பானிய அரசாங்கம் நிலக்கரியால் இயக்கப்படும் ஆலை ஒன்றை இலங்கைக்கு வழங்க முன்வந்தது. நிலக்கரியால் ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்கின்ற சுற்றாடல் அக்கறைகளால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
நிலக்கரிக்கு பதிலாக திரவ வாயுவால் இயங்கும் ஆலையை வழங்க ஜப்பான் முன்வந்தது. இதனால் இலங்கை தொடர்பில் இந்தியா ஜப்பான் அரசாங்கங்கள் ஆலைகளை வழங்க முன்வந்த படியால் இத்திட்டம் முத்தரப்புத் திட்டமாகியது. இந்த முற்தரப்பு திட்டங்களை இலங்கை அமைச்சரவை 27.02.18 திகதி அங்கீகரித்தது. இத்திட்டத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் 15% உரிமைகளையும் இந்தியா 47.5% உரிமைகளையும் ஜப்பான் 37.5% உரிமைகளையும் பெறுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் 27.02.18 இல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட போதும் இற்றை வரை எந்த நகர்வும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐப்பசி 2018இல் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். சக்தி ஆலைத்திட்டங்கள் இலங்கைத் தரப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளமையால் பிரதமர் மோடி அதிருப்தியை வெளியிட்டார். 29 கார்த்திகை மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் திரவ வாயுவால் இயக்கப்படும் ஆலைத்திட்டங்கள் இடம்பெறலாம். அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு திருகோணமலை எண்ணெய் தாங்கியை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகவும் இந்திய தரப்பு பிரஸ்தாபிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.
இந்தியாவிலே திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை வழங்குவதற்கு முன்னர் எதிர்க் கட்சிகளும் பெற்றோலியம் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களும் எதிர்ப்பைக் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது முன்னைய மஹிந்த ராஐபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்ட எற்கா (Economy and Technical cooperation agreement ) ஒப்பந்தம் தொடர்பான விடயங்களும் 29ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. IS பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாகவும் பிராந்தியத்தில் எவ்வாறு கூட்டாக பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எனவும் நிச்சயமாக உரையாடப்படும்.
2009 க்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கைக்கு வீடமைப்பு, காங்கேசன்துறைமுக அபிவிருத்தி, பலாலி விமானநிலைய அபிவிருத்தி, கலாசாரநிலையம், புகையிரதபாதை திட்டம் என பல திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி பெரிய வரப்பிரசாதங்களாகும். ஜனாதிபதியாக கோத்தாபய பதவி ஏற்ற பின்னர் இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் இலங்கை எந்த நாட்டுடனும் இராணுவ விடயங்கள் இராணுவ சிக்கல்கள், முரண்பாடுகளில் சம்பந்தப்படாமல் சுதந்திரமான போக்கை கடைபிடிக்கும் எனவும் அணிசேரா கொள்கையை கடைப்பிடிக்க போவதாகவும் ெதரிவித்தார்.
அத்துடன் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் முன்னைய ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகையில் சீனாவுக்கு கொடுத்தமையை தமது கட்சி ஏற்கவில்லை என்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சீனாவுடன் மீளாய்வு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக ெதரிவித்தார். இலங்கை இந்திய இருதரப்பு வர்த்தகம் இலங்கைக்கு மிகப் பாதகமான வர்த்தக மீதி காணப்படுவதால் இலங்கை தரப்பில் இவ்விடயமும் முன்வைக்கப்படலாம் என ெதரிகிறது.
அமெரிக்கா மிலேனியம் (Millenium challenge cooperation agreement) ஒப்பந்தத்தை இலங்கையுடன் கைச்சாத்திடுவதற்கு பெரும் பிரயத்தனத்தில் இறங்கியுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் மிலேனியம் ஒப்பந்தத்தை மீளவும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என விரும்புகிறது. இவ்வாறு அமெரிக்க சீனா இந்திய நலன்களுக்கான தளமாக இலங்கை பயன்படுத்தப்படுமா என்பது பற்றி இலங்கையில் புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதி கோத்தாபயவுடன் உரையாடும் போது இலங்கை தமிழ் சிறுபான்மையினரின் அபிலாசைகள் முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற செய்தியையும் கொடுத்தார் என்பதை சில ஊடகங்கள் ெதரிவித்தன.
2020ஆம் ஆண்டு மாசி பங்குனியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் தற்போதைய கோத்தபாய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தால் அெமரிக்காவுடன் இணைந்து கூட்டாக சமர்ப்பித்த பிரேரணையை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் யோசனைகளை முன்வைப்பதற்கு இந்தியாவில் அனுசரணையை ஜனாதிபதி கோத்தாபய கோருவார் என எதிர்பார்க்கலாம்.
பிரதமர் மோடி தமிழகத்திலோ கேரளத்திலோ ஆந்திராவிலோ எந்தவிதமான ஆதரவினையும் பொதுத் தேர்தலில் பெறவில்லை என்பதும் தி.மு.க., அ.தி.மு. கட்சிகளின் தயவில் மத்திய அரசாங்கம் ஆட்சி நடத்தவில்லை என்கின்ற நிலையில் அக்கட்சிகளால் எந்த அழுத்தத்தையும் பிரதமர் மோடிக்கு பிரயோகிக்க முடியாது என்ற சூழ்நிலையில் பிரதமர் மோடி ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என இலங்கை வட்டாரங்களில் நம்பிக்கை காணப்படுகிறது. ஜனாதிபதி கோத்தாபயவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இலங்கை இந்திய உறவுகளில் அதிகரித்த கூட்டுறவை ஏற்படுத்தும் என கூற முடியும். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment