உருகொடுத்த அப்பாவும்
கருசுமந்த அம்மாவும்
பெருவிருப்பத் தோடென்னை
பேராசனிடம் சேர்த்தார்
அவரருகில் நானிருந்தேன்
அறிவென்னும் பெருவொளியை
ஆசையுடன் காட்டினரே !
முதல்நாளில் அவர்பார்வை
முன்பயனே எனநினைத்தேன்
எனையளக்கும் கோலாக
என்னாசான் திகழ்ந்தனரே
கருணையொடு கைபிடித்து
கசடகற்ற வழிசொல்லி
அரியயுப தேசமெல்லாம்
அளித்தனரே என்னாசான் !
கற்பதனால் ஆயபயன்
என்னவென உணர்ந்ததனால்
கற்பதற்கு உரியவற்றை
கற்பித்தார் என்னாசான்
கண்திறக்க கருத்துக்களை
கற்பித்தார் என்னாசான்
காலமெலாம் அவரெனக்கு
கடவுளராய் தெரிகின்றார் !
நல்லவற்றை எனக்குரைத்து
தீயவற்றை மறக்கடித்தார்
வாய்மைதனை காட்டியவர்
பொய்மைதனை போக்கிநின்றார்
அறமுரைத்தார் அன்புரைத்தார்
ஆணவத்தை விலக்கவைத்தார்
தினமுமெனை நற்றிசையில்
திருப்பிவிட்டார் என்னாசான் !
அப்பாவும் அம்மாவும்
அன்பாக இருந்தார்கள்
ஆசானோ எனக்கென்றும்
அறிவுலகை காட்டிநின்றார்
உலகியலை நானறிய
உரமாக அவரிருந்தார்
உள்ளமதில் ஆசானை
உவந்தேற்றி வைத்துள்ளேன் !
Oh my goodness! Incredible article dude! Thank you so much,
ReplyDeleteHowever I am having troubles with your RSS. I don't understand why
I cannot join it. Is there anybody else having identical RSS problems?
Anybody who knows the answer can you kindly respond?
Thanks!!