மேலும் சில பக்கங்கள்

ஆருயிர்த்தோழி தோழி - செ,பாஸ்கரன்

.

Image result for small girl walking
உன் வருகை கண்டு
காற்றும் விலகி வளிவிட்டது
உன் பெயர் கேட்டு
வசந்தம் மாறி மறைந்து கொண்டது
உன் வண்ண முகம் பார்த்து
நிலவுகூட கருமேகத்தைப் போர்த்திக்கொண்டது
எனக்கு மட்டும் எதிர் பார்ப்பு
உன் முகம் காணும் ஆவல்
வசந்தத்தின் வருகையை வரவேற்கிறேன்
வண்ண மலர் தூவியல்ல
உனைக் காணும் விழி மலர் திறந்துவைத்து
வீசும் காற்று விலகிக் கொள்ள
உன் சுவாசக் காற்று விரிகிறது
கூவும் குயில் கூட உனக்காய்
ஒருகணம் குரல் நிறுத்தி பார்த்திருக்கும்
அழகுத் தேவதையின் அசைவுகண்டு
மரத்தின் இலையசைவு நின்றிருக்கும்
தத்தி நடை போட்டு தாவிவரும் சின்னவளே
பிஞ்சுக் கரம் பற்ரி கொஞ்சம் நடக்கவைத்து
பார்த்து ரசிக்கின்றேன்
கண்மூடி தூங்கையிலே மூடாத விழியோடு
பார்த்திருந்த ஞாபகங்கள் நெஞ்சினிலே
தத்தி நடக்கையிலே தடுக்கி விளுவதுபோல்
ஏங்கி விடுகின்றேன்
காலச் சக்கரத்தின் நகர்வுகள்
எனக்கு மட்டுமல்ல உனக்கும்தான்
நீ இன்று சின்னவளல்ல
விளங்காத புதிருக்கு
விடை சொல்லும் என் மந்திரி
தோளின் மேல் வளர்ந்துவிட்ட
என் தோழி நீ .   

2 comments:

  1. கால சக்கரத்தின் வேகம் கரம் பற்றி நடை பயின்றவள் தோழியாய் நிமிர்ந்து நிற்கிறாள் .நம் குழந்தைகளின் இனிய நினைவுகளை மீட்டும் நல்ல கவிதை

    ReplyDelete
  2. கால சக்கரத்தின் வேகம் கரம் பற்றி நடை பயின்றவள் தோழியாய் நிமிர்ந்து நிற்கிறாள் .நம் குழந்தைகளின் இனிய நினைவுகளை மீட்டும் நல்ல கவிதை

    ReplyDelete