.
உன் வருகை கண்டு
காற்றும் விலகி வளிவிட்டது
உன் பெயர் கேட்டு
வசந்தம் மாறி மறைந்து கொண்டது
உன் வண்ண முகம் பார்த்து
நிலவுகூட கருமேகத்தைப் போர்த்திக்கொண்டது
எனக்கு மட்டும் எதிர் பார்ப்பு
உன் முகம் காணும் ஆவல்
வசந்தத்தின் வருகையை வரவேற்கிறேன்
வண்ண மலர் தூவியல்ல
உனைக் காணும் விழி மலர் திறந்துவைத்து
வீசும் காற்று விலகிக் கொள்ள
உன் சுவாசக் காற்று விரிகிறது
கூவும் குயில் கூட உனக்காய்
ஒருகணம் குரல் நிறுத்தி பார்த்திருக்கும்
அழகுத் தேவதையின் அசைவுகண்டு
மரத்தின் இலையசைவு நின்றிருக்கும்
தத்தி நடை போட்டு தாவிவரும் சின்னவளே
பிஞ்சுக் கரம் பற்ரி கொஞ்சம் நடக்கவைத்து
பார்த்து ரசிக்கின்றேன்
கண்மூடி தூங்கையிலே மூடாத விழியோடு
பார்த்திருந்த ஞாபகங்கள் நெஞ்சினிலே
தத்தி நடக்கையிலே தடுக்கி விளுவதுபோல்
ஏங்கி விடுகின்றேன்
காலச் சக்கரத்தின் நகர்வுகள்
எனக்கு மட்டுமல்ல உனக்கும்தான்
நீ இன்று சின்னவளல்ல
விளங்காத புதிருக்கு
விடை சொல்லும் என் மந்திரி
தோளின் மேல் வளர்ந்துவிட்ட
என் தோழி நீ .
கால சக்கரத்தின் வேகம் கரம் பற்றி நடை பயின்றவள் தோழியாய் நிமிர்ந்து நிற்கிறாள் .நம் குழந்தைகளின் இனிய நினைவுகளை மீட்டும் நல்ல கவிதை
ReplyDeleteகால சக்கரத்தின் வேகம் கரம் பற்றி நடை பயின்றவள் தோழியாய் நிமிர்ந்து நிற்கிறாள் .நம் குழந்தைகளின் இனிய நினைவுகளை மீட்டும் நல்ல கவிதை
ReplyDelete