
தமது
அவுஸ்திரேலிய
வாழ்வில்
பொன்னுத்துரையினால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கலாநிதி ஆ. கந்தையா எழுதியிருக்கும் சில நூல்களில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்ற ஈழத்தமிழர்களின் கலை, இலக்கியம், கல்வி, ஆன்மீகம், சமூகம் சார்ந்த குறிப்புகள் அடங்கிய ஆவண நூல்களில் பல செய்திகளை காணலாம்.
மெல்பனிலும்
சிட்னியிலும்
பல
இதழ்கள்
வெளியாகின.
சில காலப்போக்கில் நின்றுவிட்டன. கணினியின் தீவிரமான பாய்ச்சல் இணைய
இதழ்களுக்கும்
இங்கு
வழிகோலியதனால்
பல
அச்சு ஊடகங்கள் நின்று விட்டன. எனினும் தமிழ் ஓசை, தமிழ் அவுஸ்திரேலியன்
முதலான
மாத
இதழ்கள்
அச்சிடப்பட்டு வண்ணப்பொலிவுடன் வெளிவந்தன. தற்போது மாத்தளை சோமு ஆசிரியராக இருக்கும் சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ்
ஓசையும் மெல்பனிலிருந்து எதிரொலி மாதப்பத்திரிகையும் வெளிவருகின்றன.
அத்துடன் சிட்னியிலிருந்து
செ. பாஸ்கரன் மற்றும் கருணாசலதேவா ஆகியோர் இணைந்து நடத்தும் தமிழ்முரசு அவுஸ்திரேலியா
இணைய இதழும் மெல்பனில் யாழ். பாஸ்கர் நடத்தும்
அக்கினிக்குஞ்சு இணைய இதழும் வெளிவருகின்றன.
தவிர சில கலை இலக்கியவாதிகள்
தங்கள் தரப்பில் வலைப்பூக்களை (Blogs)
நடத்திவருகின்றனர்.
அவுஸ்திரேலியா
மெல்பனில்
வதியும்
முருகபூபதி
1972 இல் எழுதத்தொடங்கி
1997 இல் தனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை தனது பாட்டி சொன்ன கதைகள் நூலினதும் ஏற்கனவே வெளியான தனது நூல்கள் பற்றிய விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட முருகபூபதியின் படைப்புகள் என்ற நூலையும் மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் 15-11-1997
ஆம்
திகதி நடத்தியபொழுது - குறிப்பிட்ட நிகழ்வை வித்தியாசமாகவும்
அவுஸ்திரேலியாவில்
வதியும்
முக்கியமான
கலை இலக்கிய ஆளுமைகள்
நால்வரை
பாராட்டி
கௌரவித்து
விருது வழங்குவதற்கும் தீர்மானித்து - அந்த நிகழ்வில் நம்மவர் மலரையும்
வெளியிட்டபொழுது, சிட்னியிலிருந்து கவிஞர் அம்பி, எஸ்.பொ. - மெல்பனிலிருந்து மூத்த ஓவியர் செல்லத்துரை, கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஆகியோரை அழைத்தார்.
நம்மவர்
மலரில்
மேற்குறித்த
ஆளுமைகள்
பற்றிய
விரிவான பதிவுகளும் முருகபூபதியின் படைப்புகள் நூலில் எஸ்.பொ. எழுதிய முருகபூபதியின் சமாந்தரங்கள் கதைக்கோவையின் விமர்சனமும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு
சிட்னியிலிருந்து
வருகை
தந்த
பேரசிரியர்
ஆ.சி. கந்தராஜா
தலைமை வகித்தார்.
மெல்பன்
அன்பர்கள்
இந்த
விழாவுக்கு
முருகபூபதிக்கு
பூரண ஒத்துழைப்பு வழங்கியமையினால் அது சாத்தியமானது. ஆளுமைகளை வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கவேண்டும் என்ற மரபு அவுஸ்திரேலியா மண்ணிலே தமிழ் சமூகத்திடம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதன் தேவையும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில்
கலந்துகொண்டு
கௌரவம்
பெற்ற
எஸ்.பொ. அவர்களைப்பற்றிய
சிறப்புரையை
மெல்பனில்
தமிழ்
ஆசிரியராக பணியாற்றும் இலக்கிய ஆர்வலர் திரு. சிவசம்பு
நிகழ்த்தினார்.
மறுநாள்
நவம்பர்
16 ஆம் திகதி மெல்பனில் கிளேய்ட்டன் என்னும் இடத்தில்
நடந்த
உதயம் மாத இதழ் நடத்திய கருத்தரங்கில் பொன்னுத்துரையும்
உரையாற்றினார்.
பொன்னுத்துரைக்கு
உதயம் இதழின் கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடுகள் இல்லாதிருந்தமைக்கு
காரணங்கள்
பல
இருந்தாலும், உதயம் ஆசிரியர் மருத்துவர் நடேசனிடத்தில் அன்பு பாராட்டினார். நடேசனின் சில நூல்களையும் அவர் செம்மைப்படுத்தி தமது மித்ர பதிப்பக வெளியீடாக வெளியிட்டார்.
அவற்றுள்
ஒரு
சிலவற்றுக்கு
பொன்னுத்துரையே
பெயரும்
இட்டார்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.
வாழும்
சுவடுகள்
(இரண்டு பாகங்கள்) வண்ணாத்திக்குளம், உனையே மயல்கொண்டு (நாவல்கள்)

இதில்
ஒரு
முக்கியமான
தகவலையும்
இங்கு பதிவுசெய்யவேண்டியிருக்கிறது.
பொன்னுத்துரை
இலங்கையிலிருந்தபொழுதும்
அவுஸ்திரேலியா - தமிழகம் என்று வாழ்ந்தபொழுதும் பல நூல்களை எழுதினார். ஆனால், அவரது எந்தவொரு நூலுக்கும் இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைக்கவில்லை.
ஆனால், அவரால் படித்துப்பார்த்து தெரிவுசெய்யப்பட்டு
செம்மைப்படுத்தப்பட்டு
அவரது
மித்ரவினால்
வெளியிடப்பட்ட
கந்தராஜாவின்
பாவனை
பேசலன்றி
சிறுகதைத்தொகுதிக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.
எஸ்.பொ. மேற்சொன்ன இருவரதும் நூல்கள் தவிர சிட்னியில் வதியும்
தேவகி
கருணாகரன், (அமரர்) காவலூர் ராஜதுரை ( சிறுகதைகளின்
ஆங்கில மொழிபெயர்ப்பு) , மெல்பனில் வதியும் கே. எஸ். சுதாகரன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுதிகளையும்
மித்ர பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பொன்னுத்துரை
நாடக
இலக்கியத்திலும்
பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டவர். அவருடை பிரதிகள் இலங்கையிலும்
தமிழ்நாடு
சென்னையிலும்
மெல்பனிலும் நாடகமாக அரங்கேறியிருக்கின்றன.
சென்னையில்
மேடையேற்றப்பட்ட
எஸ்.பொ.வின்
நாடகத்தில் அதன் இயக்குநர் யுகமாயினி சித்தன் , தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் உட்பட பலர் நடித்தனர். மெல்பனில் பொன்னுத்துரையின் வலை
நாடகத்தை
எழுத்தாளர்
'பாடும்மீன்' சு. ஸ்ரீகந்தராசா
இயக்கி
மேடையேற்றினார்.
இதில்
அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். பாஸ்கர் -
சாணக்கியன்
வேடத்தில்
திறம்பட நடித்திருந்தார். மேடை அரங்கம் , ஒலி , ஒளி அமைப்புகளில் இந்நாடகம் குறிப்பிடத்தகுந்தது.
எஸ்.பொ.வின்
தமிழக
நண்பர்
இயக்குநர்
முள்ளும்
மலரும் மகேந்திரன். அவர் முன்னாள் பத்திரிகையாளர். துக்ளக் உட்பட வேறும் சில இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். மகேந்திரனின் திரையுலக அனுபவங்கள் பற்றிய சினிமாவும் நானும் என்ற நூலையும் எஸ்.பொ.
மித்ரவில்
வெளியிட்டார்.
மகேந்திரன்
- நடேசனின் மித்ர வெளியீடான வண்ணாத்திக்குளம் நாவலை படித்துவிட்டு அதனை திரைப்படமாகவும் எடுப்பதற்கு திட்டமிட்டார். ஏற்கனவே புதுமைப்பித்தனின் சிற்றன்னை (உதிரிப்பூக்கள்) பொன்னீலனின் உறவுகள் (பூட்டாத பூட்டுக்கள்) உமாசந்திரனின் முள்ளும் மலரும் ( திரைப்படத்திற்கும்
அதே பெயர்) கந்தர்வனின் சாசனம் ( திரைப்படத்திற்கும் அதே பெயர்) முதலான நாவல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர். இலங்கையில் வன்னி பேரவலத்திற்கு சில வருடங்களுக்கு முன்னர் வன்னி சென்றும் ஒரு குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இதில் கவிஞர் கருணாகரனின் மகனும் நடித்திருக்கிறார்.
மகேந்திரனுக்கு நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலும் நன்கு பிடித்திருந்தமையினால், அதனை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கி, திரைக்கதை - வசனம் எழுதி திரைப்படச்சுவடியையும் தயாரித்தார்.
இலங்கையில்
நீடித்த
அரசியல்
நெருக்கடிகளினால் இந்த முயற்சி சாதகமாகவில்லை.
பொன்னுத்துரைக்கு
மகேந்திரன் -
பாலு மகேந்திரா - மணிவண்ணன்- பாரதி ராஜா முதலான இயக்குநர்களுடனும் நட்புறவு நீடித்திருக்கிறது. அவர்களின் தொடர்பினால் அவுஸ்திரேலியா அன்பர் ஒருவர் ஊடாக ஒரு தமிழ்த்திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு உதயமாகியது. ஆனால், அந்த எண்ணமும் சாத்தியமாகவில்லை.
இந்தத் தகவல்களை இங்கு நினைவூட்டுவதற்கு அடிப்படைக்காரணம் பொன்னுத்துரையின் தொடர்பாடல்தான். அவரது தொடர்பாடல் பல ஆக்கபூர்வமான விடயங்களை சாத்தியமாக்கியிருக்கிறது.
அதனால்
பலர்
பயனடைந்துள்ளனர். அவரை மதிப்பீடு செய்பவர்கள் அவரிடமிருந்த Positive அம்சங்களையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். Negative
அம்சங்களை
மாத்திரம்
தேடிக்கொண்டிருப்போமேயானால்
நாமும் Negative ஆகிப்போவோம்.
நான்
அறிந்தவரையில்
இலங்கையில்
பொன்னுத்துரையை
மதிப்பீடு
செய்தவர்களில்
மு. தளையசிங்கம், ஏ.ஜே. கனகரட்னா, கவிஞர்
ஏ. இக்பால், பேராசிரியர் எம். ஏ. நுஃமான் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இவர்கள்
அனைவருக்கும்
பொன்னுத்துரையின்
படைப்பு
இலக்கிய முயற்சிகள் மட்டுமல்ல, அவரது பல்வேறு இயல்புகளும் நன்கு தெரியும்.
ஆனால்,
தமிழ்நாட்டில்
பொன்னுத்துரையின்
நூல்களுக்கு
முன்னுரை
எழுதியிருக்கும்
தமிழக
இலக்கிய ஆளுமைகள் வெங்கட் சாமிநாதன்,
அசோகமித்திரன்,
நாடகத்துறை பேராசிரியர் ராமானுஜம், சுஜாதா, கோவை ஞானி ஆகியோரும் ஈழ இலக்கியம்
நூலில்
யாழ்ப்பாணத்துப்பாணன்
என்று
எஸ்.பொ. வை விளித்து, விரிவாக எழுதியிருக்கும் ஜெயமோகனுக்கும் பொன்னுத்துரையின் இதர பக்கங்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
பொன்னுத்துரையின்
இலக்கிய
வாழ்வையும்
பணிகளையும் மெல்பனில் 1997 இல் முருகபூபதியின் இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவில் பாராட்டி கௌரவித்து விருது வழங்கிய பின்னர்
2007 ஆம் ஆண்டு மெல்பனில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்
ஏழாவது
எழுத்தாளர்
விழாவிலும்
அவர்
விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார். குறிப்பிட்ட பாராட்டுரையை அன்றைய விழாவில் நிகழ்த்தியவர் திருமதி சந்திரலேகா வாமதேவன்.
யார்
இந்த
சந்திரலேகா...?
ஈழத்து
நவீன
தமிழ்
இலக்கிய
வளர்ச்சியில்
மூத்த தலைமுறைப்படைப்பாளியாக இன்றளவும் கொண்டாடப்படும் இலங்கையர்கோனின் மகள்தான் சந்திரலேகா. அக்காலத்தில் இலங்கையின் வடபுலத்தில் பிரதேச காரியாதிகாரியாக D.R.O
( District Revenue Officer) பணியாற்றியவர்தான் மூத்த படைப்பாளி இலங்கையர்கோன். வெள்ளிப்பாதசரம் முதலான நூல்களை எழுதியிருப்பவர்.
அக்காலத்தில்
அவர்
தமக்குக்கீழே
பணியாற்றிய கிராமசேவையாளர்களிடமும் தமது சிறுகதைகளை படிக்கக்கொடுத்தமையினால் அந்தக்காட்சியையும்தான் பொன்னுத்துரை விட்டு வைக்கவில்iலை. "விதானைமாரினால் இலக்கியப்புகழ் தேடும் இலங்கையர்கோன்" என்றும் வர்ணித்தார்.
மட்டக்களப்பு
பண்டிதர்
வி.சீ. கந்தையா
சுமார்
500 பக்கங்களில் மட்டக்களப்பு தமிழகம்
என்ற
அரிய
ஆவணநூலை
வெளியிட்ட 1964 காலத்தில் அதன் கனதியை எடை பார்த்து, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் இரவு நேர
தபால் ரயிலில் பயணம் செய்பவர்கள் உறக்கம் வரும்பொழுது தலைக்கு வைத்துக்கொண்டு
உறங்கலாம்
என்றவரும்
இதே
எஸ்.பொ.தான்.
பலவருடங்களின்
பின்னர்
எஸ்.பொ., 2003 இல் தமது வரலாற்றில் வாழ்தல் நூலை இரண்டு பாகங்களாக 1924 பக்கங்களில் வெளியிட்டபொழுது முன்னர் பண்டிதர் வி. சீ . கந்தையாவின் நூலை ஒரு தலையணைக்கு ஒப்பிட்டு கேலி செய்தீர்களே! - தற்பொழுது நீங்கள் இரண்டு பாகங்களில் அவரது நூலையும்விட மும்மடங்கு பெரிய நூலை இரண்டு பாகங்களில் வெளியிட்டிருக்கிறீர்களே? என்று நேரடியாகவே நான் அவரிடம் கேட்டபொழுது - "ஆம்! அதற்கென்ன பண்டிதர் தலைக்குமாத்திரம் வைத்துக்கொள்ள நூல் தந்தார். ஆனால், நான் தலைக்கும் காலுக்கும் வைத்துக்கொள்ள இரண்டு பெரிய நூல்கள் தந்துள்ளேன்."
- என்றார்.
எஸ்.பொ.வின்
இதுபோன்ற
கூற்றுக்கள்
சகிக்கமுடியாதவைதான். எனினும் அவரது இதுபோன்ற மேலோட்டமான கருத்துக்களை அவரது
இயல்பான
அங்கதம் என்று மாத்திரம் எடுத்துக்கொண்டு நகரவேண்டியதுதான்.
பண்டிதர் வி.சீ.கந்தையாவின் மட்டக்களப்பு தமிழகம் மிகவும் தரமான ஆய்வேடு. அதன் பெறுமதி கருதி அதன் இரண்டாவது பதிப்பினை
நேர்த்தியாக
அச்சிட்டு
2002 இல் வெளியிட்டனர் பிரான்ஸ்
எக்ஸில்
அமைப்பினர்.
எஸ்.பொ. வின்
மூத்த
புதல்வர்
டொக்டர் அநுரா, எஸ்.பொ.வின் வாழ்விலும் பணிகளிலும் இரண்டறக்கலந்திருந்தவர்.
இவர் எழுத்தாளர் இல்லை. ஆனால் , எழுத்தாளர்களின் நண்பர். தனது தந்தைக்கு தக்க ஆலோசனைகளை வழங்கியவர்.
"எஸ்.பொ.வின்
அனைத்துப்படைப்புகளிலும் மிகவும் சிறந்த உன்னதமான படைப்பு அவரது மூத்த புதல்வன் அநுரா அவர்கள்தான்" என்று எஸ்.பொ.வுடன் கருத்தியல் ரீதியில் முரண்படும்
மல்லிகை
ஜீவா
அடிக்கடி
சொல்வார்.
(இந்தப்பதிவுகளை எஸ்.பொ. மறைந்த வேளையில் எழுதிக்கொண்டிருந்தபோது, கொழும்பில் வதியும் மல்லிகை ஜீவாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கும் எஸ்.பொ. வின் மறைவுச்செய்தி சொன்னேன். அவர் உடனே நினைவுபடுத்தியது அநுரவைத்தான்.)
(தொடரும்)
No comments:
Post a Comment