மேலும் சில பக்கங்கள்

ஓர் அறிவிப்பாளரின் குரல் அடங்கி விட்டது

.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன்  நேற்று (04 .05 . 2017)  நீர்கொழும்பில் காலமானார். காலமானார். 

1937 ம் ஆண்டு பிறந்த அவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இவர் அறியப்படுகிறார். 

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.  அறிவியல் பட்டதாரியானஇவர் . பின்னர் விஞ்ஞான ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார். 

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ள அவர், 1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். 

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் சற்சொரூபவதி நாதன், ஜவகர்லால் நேரு விருது (1958), சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது, வானொலி பவள விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

இலங்கை அரசாங்கத்தின் வானொலித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.
இவரது இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளதாக அவரது சகோதரர் தயாபரநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment