மேலும் சில பக்கங்கள்

சிட்னி முருகன் கோவில் திருவிழா 14.03.2016 to 25.03.2016 Sydney Murugan kovil

.

அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 14 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து 25 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 23 ம் திகதியும்  பூங்காவனம் 24 ம் திகதியும் இடம்பெற உள்ளது.



சிட்னி முருகன் தீர்த்த திருவிழா 23/03/2016




கர்ணனுக்காக ஒரு கேள்வி ! - பிச்சினிக்காடு இளங்கோ - (சிங்கப்பூர்)

.

pichi_ilango

பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு
துரோணர்

ஏகலைவனிடம்
கட்டைவிரல்வாங்கிய
காரியவாதி

நிழலைவணங்கி
நேர்மையாய் வளர்ந்த
ஏகலைவனுக்குத்
துரோகம்செய்த
துரோகி

வேடம்போடத்தெரியாத
வேடனுக்கு
துரோணர் குரு துரோகி
துரோகி குரு

அவரிடம் கற்ற
அரசகுமாரர்களில்
தனித்தும்
தினித்துவத்தோடும்
விளங்கினான் அர்ச்சுனன்

தவில் மேதை தெட்சணாமூர்த்தி குறித்த ஆவணப் படம் மற்றும் புத்தக வெளியீடு

.
தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி குறித்த ஆவணப் படம் மற்றும் புத்தக வெளியீடு 

பிரபல ஆவணப்பட இயக்குநர் திரு அம்சன்குமார் இயக்கத்தில் உருவான ஆவணப்பட வெளியீடும் தவில் மேதை தெட்சணாமூர்த்தி அறக்கட்டளை பதிப்பித்த தவில் மேதை லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி புத்தக  வெளியீடும் இணைந்த நிகழ்வு சிட்னி 
Toongabbie community centre மண்பத்தில் நடைபெறுகிறது. 

25 மார்ச் 2016 (பெரிய வெள்ளி)
காலை  9:00 மணி முதல் 11:00 மணி வரை 

தவில் இசையில் உலகின் பேராற்றல் என்று புகழ்பெற்ற அமரர் தட்சிணாமூர்த்தியின் நினைவுகூரலில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினர் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். 

படித்தோம் சொல்கின்றோம் :செங்கைஆழியானின் யாழ்ப்பாணம் பாரீர் - முருகபூபதி

.  
ஊர்சுற்றி  சேகரித்த  அரிய தகவல்களை  வரலாற்று ஆதாரங்களுடன்  ஆவணப்பதிவுசெய்து விட்டுச்சென்ற எங்கள்   சீதக்காதி
நூலகம்  நிறுவனத்தின்  டிஜிட்டல்  பதிவுகளுக்கு உதவுவோம்
  

இளம் வயதில்  பாடசாலை  விடுமுறைநாட்களில்  நண்பர்களுடன் ஊர்சுற்றுவது   எம்மவர்களின்  வாழ்வில்  மறக்கமுடியாத  வசந்தகாலங்கள்.   அந்நாட்களில்  நண்பர்களிடம்  துவிச்சக்கரவண்டியிருப்பின்  ஊர்சுற்றலுக்கு  வசதியாக  இருக்கும். இல்iலையென்றால்,  துவிச்சக்கரவண்டி  திருத்துநரிடம்  வாடகைக்கும் பெற்றுக்கொள்ளமுடியும்.

அதற்காக  காப்புறுதி  ஆவணங்கள்,  வாகன  அனுமதிப்பத்திரங்கள்  அவசியம் இல்லை.
யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரையில்  அக்கால  மாணவர்களிடம்  ஊர் சுற்றல்  என்றால்  கீரிமலை,  கசூர்னா  கடற்கரை  கோட்டை  முனியப்பர் கோயிலடி  முதலான  பல  இடங்கள்தான்  முதலில்  பயண  நிகழ்ச்சி நிரலில்  இடம்பெறும்.
திருட்டுத்தனமாக  மாதகல்  வரையில்  சென்று  கூவில்  பனங்கள்ளை ருசித்து  ஏப்பமிட்டு  வந்தவர்களிடம்  அந்த  சுகானுபவத்தையும்  கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

அருள் மிகு சிட்னி முருகன் கோயில் திருவிழா 2016

.
அருள் மிகு சிட்னி முருகன் கோயில்  திருவிழா  மார்ச் மாதம் 13ம்  திகதி ஆரம்பம்.

கொடியேற்றம்  14 03 2016 திங்கட்கிழமை
தேர்                         22 03 2016 செவ்வாய்க்கிழமை


இலங்கைச் செய்திகள்


யோசித்தவுக்கு பிணை : வெளிநாடு செல்ல மறுப்பு

சி.எஸ்.என் தொலைகாட்சி விவகாரம் : நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு

தெஹி­வளை ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்­குதல் ; இரு­வ­ருக்கு சிறைத்­தண்­டனை

 பிணையில் விடுதலையான தம்பியுடன் செல்பி

நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கைது

நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை

பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ஆஜர்அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு



செங்கை ஆழியான் பயணம் போகிறார்




ஈழத்து எழுத்துலக ஆளுமை செங்கை ஆழியான் அவர்கள் கடந்த பெப்ரவரி 28, 2016 காலமானதும் என் போன்ற அவரின் தீவிர வாசகர்களிடமிருந்தும், அவரின் காலத்தில் வாழும் இலக்கியவாதிகளிடமிருந்தும் பரவலாக வெளிப்பட்ட துயர் பகிர்வுகளால் மீளவும் நினைவூட்டப்பட்டார் ஈழத்து வாசகப் பரப்பு கடல் கடந்தும் செங்கை ஆழியானின் எழுத்துகளை மறவாது போற்றும் என்று.

செங்கை ஆழியானை வாசித்து வளர்ந்த சமூகம் அவரின் பன்முகப்பட்ட எழுத்தை ஈடு செய்யக் கூடியவரைத் தேடிக் கொண்டேயிருக்கும். அவரின் அடியொற்றி இலக்கியம் படைப்போருக்கு அவரே பிதாமகன்.

அழைத்தாலே போதும்…………. ஆறிரு கரம்நீளும் திருமலை மூர்த்தி

.


 ஆறுபடை வீடுகண்டும் அகிலமெங்கும் கோயில் கொண்டும்
அருள்பொழிய முருகனிங்கு சிட்னிவந்தான்
மாறுபடு  சூரர்குலம் வேரறுத்த ஆறுமுகன்
வைகாசிக் குன்றினிலே கோயில் கொண்டான்


அழைத்தாலே  போதும்
ஆறிரு கரம்நீளும்


அப்பனே முருகா என்று
அழைத்தாலே  போதும்
அபயம் நானென்றே
ஆறிரு கரம்நீளும்


எப்பொழுதும் நினைந்தே இருகரம் கூப்பும்
எண்ணிய  யாவும்  இனிதாய் நிறைவேறும்



நீர்த்திரை  விழிகளை  நிறைத்திடும் போதும்
நெஞ்சினைக்  கவலைகள்  அரித்திடும் போதும்
யார்துணை  என்று  தவித்திடும்  போதும்
சீர்தரும் வள்ளலைச் சிட்னியின் முருகனை

அழைத்தாலே  போதும்
ஆறிரு கரம்நீளும்

கிரகங்கள் நிலைமாறிப்  பகைத்திடும்  காலம்
கெடுவலி  நோய்பிணி  வதைத்திடும் நேரம்
அரவொடு  பிறையணி  பரமனின்  பாலனை
திருவருள் பொழிந்திடும்  சிட்னியின் வேலனை

அப்பனே முருகாவென்று அழைத்தாலே போதும்
அபயம் நானென்றே ஆறிரு கரம்நீளும்



                                                                                                                               

நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!' பற்றி..முனைவர் நா. சுப்பிரமணியன் -

.

அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக  என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள   ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும்  தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட  விழைகிறேன். இது   இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான  சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது..

ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது  பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

அடுத்தபுதன்கிழமை உன்னுடையமுறை - சிறுகதை - அ .முத்துலிங்கம்

.
வாரத்தில்ஏங்கம்ழுநாட்கள்இருப்பதில்தான்முதல்பிரச்சினைஆரம்பமானது. இதைமாற்றுவதுஅவனுடையஆற்றலுக்குஅப்பால்பட்டது. வாரத்தில்ஆறுநாட்கள்இருந்திருக்கலாம்; எட்டுநாட்கள்கூடபரவாயில்லை. ஒற்றைப்படையாகஏழுநாட்கள்வந்ததில்தான்விவகாரம். 1700 வருடங்களுக்குமுன்புரோமாபுரிபெரும்சக்கரவர்த்திகொன்ஸ்டன்ரைன்வாரத்தில்ஏழுநாட்கள்என்றுதீர்மானித்ததைஅவன்எப்படிமாற்றமுடியும்.

இதனால்மணமுடித்தஆரம்பத்தில்சிலதொந்திரவுகள்ஏற்பட்டுதீர்க்கப்பட்டன. அவன்மனைவிகருவுற்றபோதுஅவைஇன்னும்தீவிரமடைந்தன. லவங்கிபிறந்தபோதுகனவிலும்அவன்நினைத்திராதபலபிரச்சனைகள்உருவாயின.

ஆனால்அவன்மனைவிபட்டியல்போடுவதில்திறமைசாலி. எந்தப்பிரச்சனையையும்பட்டியல்போட்டுதீர்த்துவிடுவாள். லவங்கிபிறந்தபோதுஏற்பட்டமேலதிகவேலைகளுக்கும்பட்டியல்தயாரித்துஅவற்றைசமமாகப்பங்கிட்டுக்கொண்டார்கள். குழந்தைக்குஉடைமாற்றுவது, குளிக்கவார்ப்பது, மழலைக்கீதம்பாடுவது, நித்திரையாக்குவது, உணவு/ பால்கொடுப்பது, விளையாட்டுக்காட்டுவது, நாப்பிமாற்றுவதுஎல்லாம்பட்டியலில்இருந்தன. எவ்வளவுஎளியவேலைஎன்றாலும்அதுபட்டியலின்பிரகாரம்சரிசமமாகபிரிக்கப்பட்டது.

பத்மபூஷண் பி. சுசீலா ‘கம்பன்புகழ் விருது’ பெறுகிறார்.

.
கொழும்புக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா எதிர்வரும் மார்ச் 24, 25, 26, 27ஆம் திகதிகளில் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன்கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல்நாளான மார்ச் 24 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண தோட்டம், இல.11 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும் சீதா இராம விக்கிரகங்களும் இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையுடனும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையுடனும், மங்கையர்களின் நிறைகுட பவனியுடனும், ஊர்வலமாக விழாமண்டபம் நோக்கி எடுத்து வரப்படவுள்ளன. இவ் ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகைதரும் பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைதரவுள்ள அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

  ஊர்வலத்தைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணி அறங்காவலர் சபையைச் சார்ந்த வி. கயிலாசபிள்ளை தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ. விஸ்வநாதன் தலைமையில் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழா வரவேற்புரையைக் கழகத் தலைவர் தெ. ஈஸ்வரன் நிகழ்த்தவுள்ளார்.

விழாவில் கலந்துகொள்ளும் மலேசிய அமைச்சர்

உலகச் செய்திகள்


துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டுவெடிப்பு (வீடியோ இணைப்பு )

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 25 பேர் பலி
துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டுவெடிப்பு 

14/03/2016 துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாகவும்  கிட்டதட்ட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


2015 மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது "மீட்சி"கதைத் தொகுப்புக்கு

.

2015 மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது "மீட்சி" என்ற கௌரி கிருபாநந்தனின் மொழி பெயர்ப்பு கதைத் தொகுப்புக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் மூல நூல் "விமுக்தா"விற்காக இதே ஆண்டு திருமதி ஓல்கா அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. பிப்ரவரி 15th டில்லியில் பரிசளிப்பு விழா நடந்திருக்கிறது.


மூல நூலுக்கும், அதன் மொழிபெயர்பிற்கும் ஒரே ஆண்டில் விருதுகள் கிடைத்திருப்பது ஆச்சரியமான, சந்தோஷம் நிறைந்த நிகழ்வு.