ஷிரந்தி ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
சி.எஸ்.என்.பணிப்பாளரை கைது செய்ய நடவடிக்கை
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு எதிரான பிடியாணை, ரெட் நோட்டீஸ் இரத்து
25 வருடங்களின் பின்னர் பஸ் சேவை
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
பிரித்தானிய, தாய்லாந்து போர்க்கப்பல்கள் இலங்கையில்
3 கோடி பெறுமதியான தங்கம் மீட்பு : பெண் ஒருவர் கைது
ஐ.தே.க.வுடன் இணைகிறார் பொன்சேகா..!
பஷில் ராஜபக்ஷ ஆஜர்
ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்
தமிழ் மொழியில் தேசிய கீதம்
கொத்தலாவலவின் மனைவி கைது
வடக்கு முதல்வரை சந்தித்தார் ஹுஸைன்
சீன வெளிவிவகார அமைச்சர் திடீர் விஜயம்; கட்டுநாயக்கவில் மங்களவுடன் சந்திப்பு
இந்தியாவுக்கு புதிய தலைமை மீது நம்பிக்கை உள்ளது: ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுஷ்மா
சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை: சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு
ஷிரந்தி ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
சி.எஸ்.என்.பணிப்பாளரை கைது செய்ய நடவடிக்கை
01/02/2016 லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட சி.எஸ்.என். விவகாரத்தில் தொடர்புடைய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆரம்ப பங்கு உரிமையாளரும் பணிப்பாளர்களில் ஒருவருமான பெண் பணிப்பாளரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு எதிரான பிடியாணை, ரெட் நோட்டீஸ் இரத்து
01/02/2016 முன்னாள் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர் என கூறப்படும் எமில் காந்தனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன இன்று மேல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
25 வருடங்களின் பின்னர் பஸ் சேவை
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
3 கோடி பெறுமதியான தங்கம் மீட்பு : பெண் ஒருவர் கைது
ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்
தமிழ் மொழியில் தேசிய கீதம்
கொத்தலாவலவின் மனைவி கைது
வடக்கு முதல்வரை சந்தித்தார் ஹுஸைன்
சீன வெளிவிவகார அமைச்சர் திடீர் விஜயம்; கட்டுநாயக்கவில் மங்களவுடன் சந்திப்பு
இந்தியாவுக்கு புதிய தலைமை மீது நம்பிக்கை உள்ளது: ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுஷ்மா
சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை: சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு

சி.எஸ்.என்.பணிப்பாளரை கைது செய்ய நடவடிக்கை
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு எதிரான பிடியாணை, ரெட் நோட்டீஸ் இரத்து
25 வருடங்களின் பின்னர் பஸ் சேவை
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
பிரித்தானிய, தாய்லாந்து போர்க்கப்பல்கள் இலங்கையில்
3 கோடி பெறுமதியான தங்கம் மீட்பு : பெண் ஒருவர் கைது
ஐ.தே.க.வுடன் இணைகிறார் பொன்சேகா..!
பஷில் ராஜபக்ஷ ஆஜர்
ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்
தமிழ் மொழியில் தேசிய கீதம்
கொத்தலாவலவின் மனைவி கைது
வடக்கு முதல்வரை சந்தித்தார் ஹுஸைன்
சீன வெளிவிவகார அமைச்சர் திடீர் விஜயம்; கட்டுநாயக்கவில் மங்களவுடன் சந்திப்பு
இந்தியாவுக்கு புதிய தலைமை மீது நம்பிக்கை உள்ளது: ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுஷ்மா
சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை: சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு
ஷிரந்தி ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
01/02/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது ஊடக ஆலோசகராக செயற்பட்ட ஒருவருக்கு குறைந்த மதிப்பீட்டில் வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்தே ஷிரந்தி ராஜபக் ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
கஹதுடுவ பிரதேசத்திலுள்ள குறித்த வீடு 5 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அந்த வீட்டின் உண்மை பெறுமதி 55 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சி.எஸ்.என்.பணிப்பாளரை கைது செய்ய நடவடிக்கை
01/02/2016 லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட சி.எஸ்.என். விவகாரத்தில் தொடர்புடைய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆரம்ப பங்கு உரிமையாளரும் பணிப்பாளர்களில் ஒருவருமான பெண் பணிப்பாளரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் தற்போது நாட்டில் இருந்து தற்காலிகமாக வெளியேறி அவுஸ்திரேலியாவில் உள்ள நிலையில் விரைவில் அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் அதன் போது அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். நன்றி வீரகேசரி
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு எதிரான பிடியாணை, ரெட் நோட்டீஸ் இரத்து
01/02/2016 முன்னாள் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர் என கூறப்படும் எமில் காந்தனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன இன்று மேல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
அவர் சரணடைவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்ததை அடுத்தே கொழும்பு சிறப்பு நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
25 வருடங்களின் பின்னர் பஸ் சேவை
01/02/2016 யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்பட்ட, மீள்குடியேற்ற கிராமமான நெல்லூரிலிருந்து - மட்டக்களப்பிற்கு, சுமார் 25 வருடங்களின் பின்னர், இன்று காலை பஸ் சேவை ஆரம்பமானது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் துரை.மனோகரன் தலைமையில் நெல்லூர் கிராமத்திலிருந்து இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
காலை 06.15க்கு நெல்லூரிலிருந்து ஆரம்பமாகும் இச்சேவை, நரிப்புல் தோட்டம், கரடியனாறு, மகிழவெட்டுவான் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்செல்லும். அதன் பின்னர் அவ்வழியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொது மக்களை ஏற்றிச் செல்லும், இவ் பஸ் வண்டி பகல் 1.00 மணிக்கு செங்கலடியிலிருந்து மீண்டும் நெல்லூர் சென்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்.
பிற்பகல் 04.00 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிவரும் குறித்த பஸ்வண்டி மட்டக்களப்பிலிருந்து நெல்லூர் சென்று இரவில் அங்கு தரித்திருந்து காலையில் மீண்டும் பாடசாலை சேவையில் ஈடுபடும். நன்றி வீரகேசரி
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
01/02/2016 வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
பிரித்தானிய, தாய்லாந்து போர்க்கப்பல்கள் இலங்கையில்
01/02/2016 பிரித்தானியா மற்றும் தாய்லாந்து போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்த போர்க் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.
“எச்.எம்.எஸ் டிபென்டர்” எனும் பிரித்தானிய கடற்படையின் போர்க்கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்த போர்க்கப்பலை இலங்கையின் கடற்படை கலாசாரத்தின் அடிபடியில் வரவேற்கப்பட்டது.
அதேபோல் நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்த இந்த போர்க்கப்பலின் கட்டளைத்தளபதி கப்டன் ஸ்டீபன் ஹக்மனை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் பிரித்தானிய போர்க்கப்பல் இலங்கையில் அடுத்த வாரம் முழுவதும் தரித்து வைக்கப்படவுள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் இலங்கையின் கடற்படையுடன் பிரித்தானிய கடற்படையினரின் கூட்டு பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை “எச்.டி.எம்.எஸ் பட்டனி” எனும் தாய்லாந்து கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்தில் இருந்து தமது பயிற்சி நடவைக்கைகளுக்காக இலங்கை வந்த இந்த போர்க்கப்பலை இலங்கையின் கடற்படை சம்பிரதாயத்தின் அடிப்படியில் வரவேற்று இலங்கையின் கடற்படை மரியாதை வழங்கப்பட்டது.
மேலும் இந்த கப்பலும் இலங்கை கடற்படையுடன் இணைந்து தமது கூட்டு பயிற்ச்சிகளை மேற்கொள்வதுடன் எதிர்வரும் . பெப்ரவரி 3ஆம் திகதி வரையில் இலங்கையில் இந்த கப்பல் தரித்திருக்கும்.
மேலும் கடந்த ஆண்டின் ஆறுமாத காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 25 போர்க்கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன. இதில் ரஷ்யா, அவுஸ்திரேலிய, ஜப்பான், பங்களாதேஷ், ஓமன், இந்தியா,பாகிஸ்தான்,கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளன. அதேபோல் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு சர்வதேச போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. பிரித்தானியா,தென்னாபிரிக்கா, ஓமன், நைஜீரியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இலங்கைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
3 கோடி பெறுமதியான தங்கம் மீட்பு : பெண் ஒருவர் கைது
02/02/2016 யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் கடவையில் 3 கோடி பெறுமதியான 70 தங்கக் கட்டிகளுடன் பெண் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ். பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் 7 கிலோ தங்கக்கட்டிகளுடன் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
குறித்த தங்கக்கட்டிகள் யாழ். ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்துவதற்காக கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.
மாதகல் பகுதியைச் சேர்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவியே இவ்வாறு தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
ஐ.தே.க.வுடன் இணைகிறார் பொன்சேகா..!
02/02/2016 பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது இரு கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைசாசத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெறவுள்ள அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
பஷில் ராஜபக்ஷ ஆஜர்
03/02/2016 முன்னால் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு முன் வாக்குமூலம் வழங்க ஆஜர். நன்றி வீரகேசரி
ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்
03/02/2016 ஸிகா வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்ற போதிலும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.
ஈட்ஸ் என்ற ஒரு வகை நுளம்புகளினாலேயே இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் தொடர்ச்சியாக காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாட வேண்டும் எனவும் அந்த பிரிவு அறிவித்துள்ளது.
சிகா வைரஸ் தொற்று பரவும் நாடுகளுக்கு பயணிக்கும் இலங்கை சுற்றுலா பிரயாணிகளை அவதானத்துடன் செயற்படுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் .
ஸிகா' வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இருந்தபோதிலும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது. ஈட்ஸ் வகை நுளம்புகளால் இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாட வேண்டும். என மக்களிடம் கோருகின்றோம்.
குறித்த வைரஸ் தொற்று இலங்கையில் இது வரையில் கண்டறியப்படவில்லை. இருந்த போதிலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு உட்பட தொற்று நோய் பிரிவானது மிகவும் அவதானத்துடன் செயற்படுவதோடு தகவல்களை சேகரித்து வருகின்றது.
ஸிகா என இணங்காணப்படும் இந்த வகை வைரஸ் தொற்றானது தற்போது லத்தீன் அமெரிக்கா வலயத்தின் பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 28 நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இதுவரை இலங்கையில் எவரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை. நன்றி வீரகேசரி
தமிழ் மொழியில் தேசிய கீதம்
04/02/2016 தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் தமிழிலும், பாடலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தூய்மையான ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்பன்பில ஆகியோர் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இன்றைய சுதந்திர நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கொத்தலாவலவின் மனைவி கைது
04/02/2016 செலின்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனிலிருந்து டுபாய் ஊடாக இலங்கைக்கு விமானத்தில் வந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
கோல்டன் கீ நிறுவனம் நட்டத்தில் வீழ்ந்ததைத் தொடர்ந்து அதன் வைப்பாளர்கள் நிலையான வைப்பொன்றைக் கோரினர். இந் நிலையிலேயே 2009 ஆம் ஆண்டு சிசிலியா கொத்தலாவல நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து இன்று அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி
வடக்கு முதல்வரை சந்தித்தார் ஹுஸைன்
07/02/2016 யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெயிட் ராட் அல் ஹுஸைன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் நின்றிருந்த நிலையில் அவர்களை ஆணையாளர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சீன வெளிவிவகார அமைச்சர் திடீர் விஜயம்; கட்டுநாயக்கவில் மங்களவுடன் சந்திப்பு
07/02/2016 சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்றுக் காலை இலங்கைக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பீஜிங் திரும்பும் வழியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர், வாங்யி நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். குறுகிய நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சீன வெளிவிவகார அமைச்சரின் விமானம் தரித்து நின்ற போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், அவரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர். சீன வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுக்கள் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கு முன்னர், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்
தொடர்பாகவும், இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஆகியோர் இலங்கையில் தங்கியுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் குறுகிய நேர விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
இந்தியாவுக்கு புதிய தலைமை மீது நம்பிக்கை உள்ளது: ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுஷ்மா
06/02/2016 ஜனாதிபதி மைத்திரிபாலவின் சிறந்த தலைமைத்துவத்தில் எமதுக்கு நம்பிக்கை உள்ளது. அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவளிப்பதுடன் ஒத்துழைப்புக்களை நல்கும். அயல் நாடுகளில் இலங்கைக்கே முக்கியத்தவத்தை வழங்குகின்றோமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த சுஷ்மா சுவராஜ் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபாலவை அவருடை இல்லத்தில் சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவில் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். நன்றி வீரகேசரி
சமத்துவமான தீர்வுக்கு இந்தியா துணை: சுஷ்மா வாக்குறுதி : சம்பந்தன் தெரிவிப்பு

06/02/2016 இந்தியா எப்போதும் சரியான விடயத்தின் பக்கமே நிற்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமூகமான சமத்துவமான நிரந்த தீர்வை ஏற்படுத்துவதற்கு தமது முயற்சிகள் தொடரும் என்ற வாக்குறுதியை வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எமக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது உடன் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டுமெனக் கோரியுள்ளதாக தெரிவித்தவர் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று நண்பகல் 12மணிக்கு கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. நன்றி வீரகேசரி