மேலும் சில பக்கங்கள்

தமிழ் சினிமா


நானும் ரௌடி தான்


‘யோவ் எங்க அம்மா சத்தியமா நானும் ரவுடி தான்யா’ என்ற வடிவேலுவசனம் இல்லாத மொபைல் போன் தமிழகத்தில் இருக்காது. அந்த அளவிற்கு அந்த வசனம் பட்டி தொட்டியெல்லாம் ரீச் ஆனது. இதையே வசனமாக வைத்து போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன்இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் நானும் ரவுடி தான்.
படம் எப்படின்னு கேட்காதப்பா, இவர் நடிச்சாலே சூப்பர் படம்னா கண்டிப்பா பார்க்கலாம் என்ற அந்தஸ்த்தை கொண்டவர் விஜய் சேதுபதி, இதுநாள், வரை சின்ன பட்ஜெட்டில் நடித்து வந்த இவரை, புதுப்பேட்டை நண்பர் தனுஷ், ‘ஏன் சீரியஸாவே நடிக்கிறே கொஞ்ச நாள் சும்மா ஜாலியா நடிப்பா’ என்று அவரே தயாரித்திருக்கும் படம் தான் நானும் ரவுடி தான். படத்திற்கு இன்னும் பலமாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி நயன்தாரா படத்தில் இணைய அதிரி புதிரி எதிர்ப்பார்ப்புடன் படம் வெளிவந்துள்ளது.
கதைக்களம்
ஒரு பொண்ணு எனக்காக இத செய்வீயா? என்று கேட்டால், சாதாரண மனிதன் கூட அசாதாரண பையனாக மாறிவிடுவான். அப்படியிருக்கநயன்தாராவே வந்து எனக்காக இதை செய் என்றால் விடுவோமா? போலிஸாக அழகம்பெருமாள் அந்த ஊரில் ரவுடிசம் செய்து வரும் கிள்ளிவளவன் பார்த்திபனை எதிர்க்கிறார்.
இதற்காக பார்த்திபன் அவர் வீட்டில் வெடிகுண்டு வைக்க, அதில் அழகம்பெருமாளின் மனைவி இறக்கிறார். அவருடைய குழந்தைக்கு (நயன்தாரா) காது கேட்காமல் போகிறது. விஜய் சேதுபதிக்கு பார்த்தவுடன் காதல், திடிரென்று ஒரு நாள் அழகம்பெருமாள் காணமால் போக, நடுரோட்டில் நயன்தாரா பயந்து நிற்க விஜய் சேதுபதி உதவுகிறார்.
பின் ஒரு கட்டத்தில் அழகம்பெருமாளை கொன்று விட்டார்கள் என செய்தி வர, அதை நயன்தாராவிடம் இருந்து விஜய் சேதுபதி மறைத்து அவரை சந்தோஷமாக இருக்க வைக்கிறார். எப்படியோ உண்மை நயன்தாராவிற்கு தெரிய, ’நீ அவனை(பார்த்திபன்) கொன்றால் தான் நமக்குள் எல்லாம்’ என விஜய் சேதுபதியை முறுக்கேற்ற, அந்த வில்லனை எப்படி எப்படி கொல்கிறார்? என்பதை செம்ம ஜாலியாக கூறியிருக்கும் படம் தான் நானும் ரவுடி தான்.
படத்தை பற்றிய அலசல்
விஜய் சேதுபதி சார் இப்படியே 4 படம் நடிங்க என்று கேட்கத்தோன்றுகின்றது, எப்போதும் மிகவும் சீரியசான படத்தில் நடித்து வரும் இவருக்கு இந்த படம் புதிய திருப்பம். அதிலும் அவரின் டயலாக் டெலிவரி ப்பாஆஆஆ... விஜய் சேதுபதி is Back என்று சொல்ல வைக்கின்றது. தன் அம்மா(ராதிகா) தன்னை போலிஸாக்க முயற்சிக்க, ஆனால், நான் பெரிய ரவுடி ஆக வேண்டும் என சிறு வயதிலிருந்தே கொள்கையில் இருக்கும் விஜய் சேதுபதி எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சிரிப்பு சரவெடி. சர்ப்ரைஸாக ஜூனியர் விஜய் சேதுபதியும் வருகிறார்.
நயன்தாரா காது கேளாதவராக ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் உதடை மட்டும் பார்த்து பேசுகிறார், வெறும் டூயட், கவர்ச்சியில் மட்டும் இதுநாள் வரை பார்த்த நயன்தாராவிற்கு இந்த படத்தில் நடிக்க செம்ம ஸ்கோப். நயன்தாராவின் திரைப்பயணத்தில் ராஜா ராணிக்கு பிறகு மற்றொரு கலக்கல் கதாபாத்திரம்.
RJ பாலாஜி சந்தானம், சூரி இடத்திற்கு வந்து விடுவார் போல, தெறிக்க விடலாமா? இது அட்டாக் பன்ற புலி என இன்றைய ட்ரண்டிற்கு ஏற்ற டயலாக் காமெடியில் கலக்கியுள்ளார். பார்த்திபன் ஹீரோவாக நடித்தாலே கொஞ்சம் நெகட்டிவ் இருக்கும், இதில் நெகட்டிவாகவே நடிக்கிறார் என்றால், சொல்லவா வேண்டும், தன் வழக்கமான நக்கல் வசனத்தில் அதிரி புதிரி செய்கிறார்.
ராதிகா, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மேலும் விஜய் சேதுபதி நண்பர்கள் என அனைவரும் கலகலப்பிற்கு பஞ்சமில்லை. படத்தின் மற்றொரு கதாநாயகன் அனிருத் தான், பாடல்கள், பின்னணி இசை என அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். படத்தின் காதல் காட்சிகள் மிகவும் இளமையாக, அதிலும் விஜய் சேதுபதி இப்படியெல்லாம் நடிப்பாரா? என்று கேட்க வைக்கின்றது. இயக்கியது விக்னேஷ் சிவன் அல்லவா? இருக்காதா பின்ன!!
க்ளாப்ஸ்
சாதாரண பழிவாங்கும் கதை தான், ஆனால், அதை இத்தனை கலகலப்பாக எடுத்ததற்காகவே பாராட்டலாம், அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் பார்த்திபனுக்கு ஸ்கெட்ஸ் போட்டு அவரை கொலை செய்ய முயற்சிக்கும் 15 நிமிடம் சிரித்து சிரித்து வயிறு வலியே வரலாம்.
பாடல்கள், ஒளிப்பதிவும் என அனைத்தும் இன்றைய இளைஞர்களை குறிவைத்து, அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தியுள்ளது.
பல்ப்ஸ்
ஜாலியான கதை, அதில் நகைச்சுவை, காதல் என்பதால் வழக்கமான சினிமா தான் என்று தோன்ற வைக்கின்றது. மற்றப்படி ஏதும் இல்லை
மொத்தத்தில் நானும் ரவுடி தான், விஜய் சேதுபதி+நயன்தாராவின் காதல் ஆக்‌ஷன் காமெடி கலாட்டா...சூப்பர் ஜி சூப்பர் ஜி.
ரேட்டிங்- 3/5

நன்றி  cineulagam

No comments:

Post a Comment