.

விஜய் டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது மகாபாரதம். அதே எபிசோட் இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் தொடரை 128 எபிசோட்கள் மட்டுமே தமிழில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இன்னும் 100 எபிசோட்கள் நீடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து மகாபாரத்தின் தமிழாக்கம் செய்து வரும் செவன்த் சேனல் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிபு தலைவர் மகேஷ் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில்தான் இந்தி மகாபாரத்தை தமிழாக்கம் செய்து வருகிறோம். வசனகர்த்தா பாலகிருஷ்ணன் தலைமையில் 50 டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். முதன் முறையாக டப்பிங் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து டப்பிங் பேச வைத்து வருகிறோம். டப்பிங் கலைஞர்கள் பேச எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி நீட்டி குறுக்கி பேச வேண்டும் என்பதை டம்மியாக நாங்களே பேசி ரிக்கார்ட் செய்து அதனை டப்பிங் கலைஞர்களிடம் கொடுத்து விடுகிறோம்.
128 எபிசோட்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. மகாபாரதத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து மேலும் 100 எபிசோட்களை நீடிக்க சேனல் முடிவு செய்திருக்கிறது. நாங்கள் அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்றார்.
No comments:
Post a Comment