பிரியாணி |
![]() |
என்னதான் கார்த்திக்கு ஹன்சிகா மாதிரி ஒரு செம லவ்வர் இருந்தாலும், தன் நண்பன் பிரேம்ஜி உஷார் செய்ய விரும்பும் பெண்களையும் விட்டுவைப்பதில்லை. எப்படியோ மடக்கி விடுகிறார்.![]() கொஞ்ச நேரத்தில் இவங்க வலையில் சிக்கிய மேன்டி டக்கர் மாயமாகி விட, இன்னொரு பக்கம் போலீஸ் கார்த்தி, பிரேம்ஜியை வலை வீசி தேடி வருகிறது. அப்புறம் என்ன, இந்த சிக்கலுக்கு காரணமான அந்த டேஸ்டி தம் பிரியாணியை சுடசுட இவங்களுக்கு பரிமாறிய மேன்டி டக்கர இவங்க கண்டுபிடிச்சு தங்கள காப்பாத்திக்கிட்டாங்களா என்பது காரசாரமான க்ளைமாக்ஸ். கார்த்தி தொடர் சரிவுக்கு பின்பு, இப்படத்தில் வித்யாசமான தோற்றத்தில் கவருகிறார். ஹன்சிகா பாட்டுக்கும், இடையில் கார்த்தியுடன் மோதி கொள்வதுக்கும் மட்டும் பயன்பட்டிருக்கிறார். ![]() மேலும் ராம்கி, நாசர், பிரேம், ஜெயப்ரகாஷ், மதுமிதா, நிதின் சத்யா, சுப்பு பஞ்சு, உமா ரியாஸ், சம்பத், ஷண்முகசுந்தரம், விஜயலக்ஷ்மி ஆகியோரின் நடிப்பு கதையின் தேவைகேற்ப தூவப்பட்டுள்ளது. யுவனின் இசையில் இது 100வது படம் என்று டைட்டில் கார்டில் போடும்போது மட்டும் தான் தெரிகிறது. ஆனால், படத்தில் 'பே ஆப் பெங்கால், எதிர்த்து நில்' பாடல் மட்டுமே ஓரளவுக்கு ஈர்க்கிறது. பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், பிரவீன்-ஸ்ரீகாந்தின் கட்டிங்க்ஸும் செம சார்ப். ![]() மொத்தத்தில் ஆம்பூர் பிரியாணியை தருவதாகக் கூறி, கடைசியில் அம்பத்தூர் பிரியாணியை பார்சல் செய்து கொடுத்து போங்காட்டம் ஆடியுள்ளனர். நடிகர்கள்: கார்த்தி, பிரேம்ஜி, ராம்கி, சம்பத், சுப்பு பஞ்சு, பிரேம், ஜெயப்ரகாஷ் நடிகைகள்: ஹன்சிகா, மேன்டி டக்கர், மதுமிதா, உமா ரியாஸ், விஜயலக்ஷ்மி இசை: யுவன் ஷங்கர் ராஜா இயக்கம்: வெங்கட் பிரபு தயாரிப்பு: கே.ஈ.ஞானவேல்ராஜா நன்றி விடுப்பு |
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
No comments:
Post a Comment