ஹிக்கடுவை பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்துக்குள் பெளத்த தேரர்கள் அத்துமீறல்
தேவாலயங்கள் மீதான தாக்குதல் : பிக்குமார் உட்பட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்
மன்னார் மனித புதை குழி நாளையும் தோண்டுதவதற்கு தீர்மானம்
கண்டியில் தைப்பொங்கல் நிகழ்வு
=========================================================================
ஹிக்கடுவை பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்துக்குள் பெளத்த தேரர்கள் அத்துமீறல்
13/01/2014 ஹிக்கடுவை,
தலாகஸ் சந்தியை அண்மித்த பத்தேகம வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ
பிரார்த்தனைக் கூடம் ஒன்றின் பின்பக்க வாயிலை உடைத்துக்கொண்டு பெளத்த
தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் பலாத்காரமாக உள் நுழைந்துள்ளதுடன்
பிரதேசத்தில் உள்ள அவ்வாறான இரு பிரார்த்தனைக் கூடங்களை உடன்
அகற்றுமாறு ஆர்ப்பாட்டதினையும் மேற்கொண்டனர்.
ஹெல
பொது பௌர' எனும் பெளத்த அமைப்பினால் நேற்றைய தினம்
முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக முற்பகல்
வேளையில் கொழும்பு - காலி பிரதான வீதியில் ஹிக்கடுவை பிரதேசத்தில்
பரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரதான வீதியை மறித்து ஆரப்பாட்டக் காரர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது. ஹிக்கடுவை, தலாகஸ் சந்தியில் உள்ள ரயில் நிலையத்துக்கு பின்புறமாக உள்ள இரண்டு கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்த கூடங்களை உடன் அகற்றுமாறு தேரர்கள் கோஷமெழுப்பினர். இதனை அடுத்து பிரதேசத்தில் பதற்ற நிலை ஒன்று காணப்பட்டது.
எவ்வாறாயினும் குறித்த பிரார்த்தனை கூடம் அமைந்துள்ள பிரதேசத்துக்கு காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் வழிகாட்டலின் பேரில் விஷேட பொலிஸ் குழு அனுப்பப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படா வன்னம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது சில பிக்குகள் குறித்த பிரார்த்தனைக் கூடத்தினுள் அத்து மீறி நுழைந்துள்ளனர். இதன் போது நேற்று ஞாயிறு தினம் என்பதால் அந்த பிரார்த்தனை கூடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பிரார்த்தனை நடவ்டிக்கையில் ஈடுபட்ட வண்னம் இருந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் குறிப்பிட்டன.
எவ்வாறாயினும் இதன் போது விரைந்து செயற்பட்டுள்ள் பொலிஸார் தேரர்களை உடனடியாக அந்த பிரார்த்தனை கூட வளாகத்திலிருந்து வெளியேற்றி பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து கொழும்பு காலி பிரதான வீதியை மறித்து சுமார் 45 நிமிடங்கள் வரை பெளத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதனால் பிரதேசத்தின் போக்கு வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
சுமார் 16 வருடங்களாக நடத்தப்பட்டுவரும் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் ஒன்றுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரார்த்தனை கூடத்துக்கு மேலதிகமாக மேலுமொரு பிரார்த்தனை கூடத்தையும் அங்கிருந்து உடன் அகற்றுமாறேஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.குறித்த பிரார்த்தனைக் கூடம் சட்டவிரோதமாக செயற்படுவதாகவும் பலவந்தமாக மதமாற்று செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பெளத்த தேரர்களால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை குறித்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நடத்திச் சென்ற பாஸ்டர் ஜீ.எல்.டப்ளியூ.சிந்தக பிரசன்ன முற்றாக மறுத்துள்ளார். அத்துடன் இலங்கை அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மத சுதந்திரத்துக்கு அமைவாகவே தாம் குறித்த பிராத்தனைக் கூடத்தை நடத்திச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்றிருந்த காலி மாவட்டதுக்கு பொறுப்ப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுடனும் பிரார்த்தனை கூட பிரதி நிதிகளுடனும்கலந்துரையாடினார்.
இதனை அடுத்து குறித்த பிராத்தனை கூடங்கள் தொடர்பில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்தனர்.
இதனை அடுத்து விசாரணைகளுக்கு ஏதுவாக அந்த பிரார்த்தனைக் கூடங்கள் இரு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன. இந்த இரு வாரங்களில் விசாரணை செய்து உரிய தீர்வு எட்டப்படும் வரையிலேயே இந்த இவ்விரு பிரார்த்தனைக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனை அடுத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கலைந்து சென்றதுடன் காலி வீதியின் போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியது. நன்றி வீரகேசரி

13/01/2014 ஹிக்கடுவையிலுள்ள தேவாலயங்கள் மீது
தாக்குதல் நடத்தியவர்களில் 8 பிக்குகள் உள்ளிட்ட 24 பேர் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்
ரோகண தெரிவித்தார்.

ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள
இரண்டு தேவாலயங்கள் மீது 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல்
நடத்தினர். இத்தாக்குதலின் போது பிக்குகளும் உடனிருந்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று காலி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், அடையாளம் காணப்பட்டுள்ள எவரும் கைது செய்யப்படவில்லை எனத்
தெரிவித்த அவர், நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்
14/01/2014 தலைமன்னார் பியர் மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற் கிணங்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வன்செயல் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை - இந்திய
ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர்
வரைக்கும் தண்டவாளங்களை, புகையிரத நிலையம் மற்றும் அதன் பாலங்கள்
ஆகியவற்றின் கட்டுமானப் பணியை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கிணங்க மடுறோட் தலைமன்னார் பியர் வரைக்கான தண்டவாளங்கள் புகையிரத
நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் வேலைகள் தற்பொழுது துரிதமாக
இடம்பெற்று வருகின்றன.
மேலும் மடுறோட் தலைமன்னார் தண்டவாளத்தில் அமைந்திருக்கும் 68 சிறிய
பாலங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. கட்டையடம்பன் மற்றும்
மன்னார் கடலேரியில் உள்ள முக்கிய மூன்று பெரிய பாலங்கள் இன்னும் பூர்த்தி
அடையாத நிலையில் தற்பொழுது வேலைகள் நடைபெற்று வருகின்றன.
முருங்கன் மாதோட்டம் திருகேதீஸ்வரம், மன்னார் தோட்டவெளி, பேசாலை,
தலைமன்னார் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய இடங்களில் புகையிரத
நிலையங்களும், புகையிரத மேடைகளும் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று
வருகின்றன.
அதாவது மடுறோட்டிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்குமுள்ள 63 கிலோ மீற்றர்
தூர புகையிரத கட்டுமானப் பணிகள் ஏப்பிரல் மாதத்துக்குள் முடிய கூடிய
சாத்தியக் கூறுகள் இருப்பதால் விரைவில் கொழும்பு தலைமன்னார் புகையிரத
சேவைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
மன்னார் மனித புதை குழி நாளையும் தோண்டுதவதற்கு தீர்மானம்
15/01/2014 மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில்
இதுவரை 32 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்
மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் நாளை வியாழக்கிழமை காலை முதல்
குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்படவுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்
டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் 6 ஆவது தடவையாக கடந்த 7
ஆம் திகதி காலை 8 மணிமுதல் மாலை 2.30 மணிவரை குறித்த மனித புதைகுழி
தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள்; மீட்கப்பட்டன.
இதன்போது மீட்கப்பட்டிருந்த 6 மனித எழும்புக்கூடுகளில் ஒரு
எழும்புக்கூட்டில் உள்ள கைப்பகுதியில் 'தாயத்து' ஒன்று கட்டப்பட்ட நிலையில்
கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை மீட்கப்பட்டுள்ள 32 மனித எழும்புக்கூடுகள்; முழுமையாகவும்,சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் உள்ளன.
அப்பகுதியில் மேலும் மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என்ற
எதிர்பார்ப்புடன் அருகில் உள்ள காட்டு மரங்களும் தற்போது வெட்டப்பட்டு
வருகின்றன. மீண்டும் நாளை மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி
தோண்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கண்டியில் தைப்பொங்கல் நிகழ்வு
கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜனாதிபதி உட்பட பல முக்கிய அதிதிகள் கலந்து கொண்டனர். அத்தோடு கண்டி வயலத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இத் தை பொங்கல் நிகழ்வில் பொங்கல் விசேட பூஜை வழிபாடும் ஜனாதிபதியின் விசேட உரையும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment