மேலும் சில பக்கங்கள்

மரண அறிவித்தல்


Funeral arrangements of
Mr Pakkianathan Alagaratnam

Viewing

Saturday, 27th July 2013
2.30 pm to 5 pm

at Merrylands Baptist Church
9/15 Newman street
[cnr. of Memorial Ave, near Railway Station]
Merrylands

Service & Burial

Monday, 29th July 2013
at 10.30 am

Mary, Mother of Mercy Chapel
Rookwood Cemetery

Please see Maps and Street Views below


            Mrs P Alagaratnam
            6/95 Dartbrook Rd.
            Auburn NSW 2144
            Tel: (02) 9648 4915

பாட்டன் காலத்து பழைய மரம்

.

பாட்டன் காலத்து
பழைய மரம் அது !

குருவிகள் ஆயிரம்
கூடுகட்டி வாழ்ந்திட்ட
குடியிருப்பு அது!

ஆடுகள்,மாடுகள்
இளைப்பாற கிடைத்திட்ட
இலவச விடுதி அது !

ஓணான்களும், அணில்களும்
ஓடிப்பழகும்
மைதானம் அது!

உடும்புகளும் , ஆந்தைகளும்
ஒய்யாரம் காணும்
உயர்ந்த மாடி அது!


பாம்பும்,பச்சோந்தியும்
பச்சை பூசி படுத்திருக்கும்
கலைக்கூடம் அது!

மெல்பனில் ஆடிப்பிறப்பு விழா


தமிழைத்துளிர்க்கவைக்கும்  இளந்தலைமுறையினரின் கருத்தைக்கவர்ந்த  பல்சுவை  நிகழ்ச்சிகள்

ரஸஞானி

எனது மின்னஞ்சலுக்கு  சமீபத்தில் யூரியூபில் வந்த தமிழக தொலைக்காட்சி  ஒன்றின் நீயும் நானும் என்ற   நிகழ்ச்சியை பார்த்துவிட்டு  அதிர்ச்சியடைந்தேன்.  செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது  காதினிலே என்று பாடிய பாவலன் நல்லவேளை தற்பொழுது இவ்வுலகில் இல்லை.
தேமதுரத்தமிழோசை உலகமெலாம் வளர்ப்போம், தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்வோம்  என்றெல்லாம்  கனவுகண்ட அந்த மகாகவி பிறந்த நாட்டில்,  குறிப்பாக  சிங்காரச்சென்னையில்  பாடசாலை செல்லும்  தமிழ்க்குழந்தைகள்  தமிழில் பேசுவதற்கு தயங்குகிறார்களாம் -   கூச்சப்படுகிறார்களாம்  என்று  அந்தத்  தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு   பேசிய   பெற்றோரும்  அவர்களின்   குழந்தைகளும்  கருத்துச்சொன்னார்கள்;.
  நாம்  தற்போது  எந்த உலகத்தில்  இருக்கிறோம்  என்ற   யோசனைதான்  முதலில்  வந்தது.

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடாத்தும் தமிழ் அறிவுப் போட்டிகள்



உலகத்தமிழ் இலக்கிய மாநாடு, சிட்னி அவுஸ்திரேலியா
தமிழ் அறிவுப் போட்டி – 04-08-2013


இப் போட்டிகள் August மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் காலை 10  மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

திருக்குறள் ஓவியப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும்.

ஒவியப் போட்டி (2 மணித்தியாலங்கள்) 10 மணியிலிருந்து நடைபெறும். இதே நேரத்தில் மற்றய போட்டிகளிற் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு அப்போட்டிகளுக்கென 30 நிமிடங்கள் மேலதிகமாகக் கொடுக்கப்படும்.

 மற்றய போட்டிகள் பாலர் பிரிவு காலை 10 மணிக்கும், கீழ்ப்பிரிவு காலை 10.30 மணிக்கும், மத்திய பிரிவு காலை 11 மணிக்கும் மேற்பிரிவு காலை 11.30 மணிக்கும் அதிமேற்பிரிவு மதியம் 12 மணிக்கும் நடைபெறும். 

திருக்குறள் ஓவியப் போட்டி பற்றிய விளக்கம்
அன்புடைமை என்னும் அதிகாரத்திற் காணப்படும் பத்துக் குறள்களையும் படித்து அவற்றின் பொருளை விளங்கி இந்த அதிகாரத்திலுள்ள குறள்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவியம் ஒன்றை வரைய வேண்டும்.

பேச்சுப்போட்டிற்கான பேச்சுக்களையும் திருக்குறள் மனனப் போட்டிற்கான திருக்குறள்களையும் கீழே தரப்பட்டுள்ளது.

உங்களுக்கு தேவையான பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம். பிரதி எடுப்பதில் ஏதாவது சிக்கல் இருந்தால் கு. கருணாசலதேவா 0418442674 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் 3 - 8 - 2013ற்கு முன்னபாக கிடைக்க கூடியதாக அனுப்பப்பட வேண்டிய முகவரி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி
21 Rose Crescent, Regents Park NSW 2143.
அல்லது  utimsydney@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சி

.
சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற ஸ்ரீ அஸ்வின் ஸ்ரீகாந்தின் இசை நிகழ்ச்சி யின் சில படங்களை காணலாம்


படபிடிப்பு ஞானி




அருணாசல அற்புதம் 1: செம்மலைக்கு நிகர் எம்மலை!


அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம் 
அது பூமியின் இதயம்

என்பது அருணாசல மகாத்மியத்தில் நந்தி வாக்காக வருவது. இந்த அழகிய செய்யுளை எழுதியவரோ அருணாசலம் என்று கூறியவுடனே நம் நினைவுக்கு வருகின்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். எல்லாத் தலங்களையும் விட மகிமையில் உயர்ந்தது என்பதனாலே இது ‘தலம் யாவினும் அதிகம்’ என்று சொல்லப்படுகிறது.

வணிகமும் செல்வமும் செழிக்கும் இடங்களையே தேடித்தேடிப் போய்க் குடியேறிக் கொண்டிருக்கிற காலம் இது. ஆனால் திருவண்ணாமலைத் தலமோ அருளாலே நிறைந்தது. ‘என்றுமே அறவோர் அன்பர்க்கு இருப்பிடம்’. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான சித்தர்கள் வசிக்குமிடம். “ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அருணாசலம்” அல்லவோ அது. தபோதனர் என்றால் தவத்தையே செல்வமாக, தவத்தால் பெற்ற ஞானத்தையே பெருஞ்செல்வமாகக் கொண்டவர்களைக் குறிக்கும். ஞானிகளை மட்டுமல்லாமல் ஆன்மீகத் தேடல் கொண்ட அனைவரையும் இந்த மலை வா என்று அழைத்தபடியே இருக்கும்.

அவுஸ்திரேலியா புதிய பிரதமரின் புகலிடக் கொள்கைகள் உச்ச நீதி மன்றக் கதவுகளை தட்டுமா?

.
டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன்
வழக்கறிஞர் மற்றும் பாரிஸ்டர் உச்ச நீதிமன்றம் (ஆஸ்திரேலியா)
இந்த மாதம் அவுஸ்திரேலியா பிரதம மந்திரி கெவின் ரட் அறிமுகம் செய்துள்ள அகதிகள் தொடர்பான புதிய கொள்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
படகு மூலம் வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இனிமேல் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து கிட்டும்  வாய்ப்பைப் பெற மாட்டார்களென பிரதம மந்திரி கெவின் ரட் தெரிவித்துள்ளார். படகுகள் மூலம் ஆட்கடத்தும் வியாபாரிகளை ஒழிப்பதற்கே தான் இந்தப்   புதிய கொள்கையைக் கொண்டுவந்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

ஒரு வீடு , இருவேறு உலகம் - சிறுகதை

.                                        
                          எஸ். கிருஸ்ணமூர்த்தி



நாதனது கன நாள் ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அவுஸ்திNலியாவில் காணி வாங்கி பெரிய மாடி வீடு கட்டு வேண்டும் என்பது அவனது இலட்சியம். அவனும் மனைவியும் மாறி மாறி  உறக்கமின்றி கடுமையாக உழைத்து  காசு சேமித்து  நிலம் வாங்கி அதில் ஒரு அழகிய பெரிய மாடி வீடொன்று கட்டிவித்தான். வீட்டைக் கட்டிப் போட்டு சும்மா இருந்தால் அதில் என்ன சுகம் இருக்கிறது. நாலு சனம் வந்து வீட்டைப் பார்த்தால் தானே கஸ்டப்பட்டதன் பலன் கிடைக்கும். பார்த்த நாலு சனம் பார்க்காத நாலு சனத்திற்க்கு சொல்ல  அந்த பார்க்காத நாலு சனம் இன்னும் பத்துப் பேருக்கு சொல்ல நாதனது வீட்டைப் பற்றிய நியூஸ் கொஞ்ச நாளாவது மெல்பேண் தமிழ் சனத்துக்குள்ளே பரபரப்பாக உலாவும். வீடுகுடிபூர்வை என்று யாழ்பாணத்து பாசையில் சொல்லப்படும்ää கிரஹப்பிரவேசத்திற்கு நண்பர்களை அழைத்து விருந்துவைப்பதில் நாதனுக்கு உடன்பாடு இல்லை. ஊரிலை சிம்பிளாக பால் காச்சி வீட்டைச் சுற்றி பாலைத் தெளித்தால் விசயம் முடிந்துவிடும். இங்கை அப்படியில்லை. ஐயர் தனது வித்தையைக் காட்டுவதற்காக ஊரிலை கேள்விப்படாத புது புது நடைமுறைகளை கொண்டு வருவார். அதனால் ஐயருடைய கைக்கை எப்பவும் நிற்கவேணும். வருகிற நண்பர்களுக்கு வீட்டைச் சுற்றிக்காட்டி பெருமையடிக்கமுடியாது. வேறு ஒருநாளில் ஹோம் வெல்கம் என்றோ கெற்றுக் கெதர் என்றோ அழைத்து விருந்து வைக்கலாம். இதிலும் ஒரு சூட்சுமம் இருக்குது. எல்லாரையும் ஒரே தடவை அழைக்கக் கூடாது. இரண்டு மூன்று குடும்பங்களாக கூப்பிடலாம். அப்பதான் வீட்டு விற்பனை முகவரைப் போல ஒவ்வொரு அறை அறையாக காட்டி விளக்கம் கொடுக்கலாம். இப்படியே  நாலைத்து கிழமை இழுத்தடித்தால் நாதனது புதுவீட்டு நியூஸ் கொஞ்சக்காலம் கூட ஓடும்.

மறைந்துவரும் தபால் கடிதக்கலை - முருகபூபதி

.


மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம்.  எஸ். அறிமுகமானதன்   பின்னர்  கடிதம்  எழுதுவதே   அரிதாகிவிட்டது.  தற்காலத்தில்  படிவங்களையும்  ஒன்லைனில்  பூர்த்திசெய்து    அனுப்பமுடிந்திருப்பதனால்  அதிலும்  பேனைக்கு    வேலையில்லாமல் போய்விட்டது.
காசோலைக்கு   ஒப்பமிடுவதற்கு    மாத்திரம்    பேனை    உதவும்  காலத்தில் வசதிபடைத்தவர்கள்     மாறிவிட்டார்கள்.
எழுத்தாணியும்    பனையோலை   ஏடுகளும்  வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச்;சென்றுவிட்டதுபோன்று     தபால்    முத்திரைகளும்    வருங்காலத்தில்  ஆவணக்காப்பகத்தில்    இடம்பெறலாம்.    அவுஸ்திரேலியாவில்    தபால் நிலையங்களை   (போஸ்ட்  ஷொப்)   Pழளவ ளூழி    என அழைக்கிறார்கள்.  அந்தப்பெயரில்தான்    தபால்    நிலையம்    காட்சிப்பலகையில்   துலங்குகிறது.
அங்கே  முத்திரை    மட்டுமல்ல    இனிப்புää    சொக்கலெட்ää    தண்ணீர்ப்போத்தல்  காகிதாதிகள்    உட்பட   வேறு   பொருட்களும்   விற்பனையாகின்றன.    மக்கள்  முத்திரை    வாங்குவதும்  குறைகிறது.    காரணம்    கணினிதான்.


இலங்கைச் செய்திகள்


13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் விவாதிப்பதற்கு தீர்மானம்

கறுப்பு ஜூலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

மலையகத்தில் தொடர்ந்து மழை: மவுசாக்கலையில் கீழ் இறங்கியது வீதி

இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மன்மோகன் சிங்

13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் விவாதிப்பதற்கு தீர்மானம்

(அதிரன்)
23/07/2013  கிழக்கு மாகாண சபையில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.துரைரட்ணம் மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோரால் கொண்டுவரப்படவிருந்த பிரேரணைகள் பாராளுமன்றத்தில் குறித்த திருத்தச்சட்ட விவகாரம் மீளவும் கொண்டுவரப்படும் பட்சத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர்.

புகலிடகோரிக்கையாளர்கள் படகு விபத்தில் நால்வர் பலி


புகலிட  கோரிக்கையாளர்களை அஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்குபேர் பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகில் குறித்த படகு கடலில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. என்றும், தத்தளித்தவர்களில் 150 க்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் இருவர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை, ஈராக், ஈரான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படகில் பயணித்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தேனீ 


காகிதக் கப்பல் - சுரேந்திரகுமார்

.


மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை, இரண்டு நாளில்லை ஒரு வாரமாய் கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு…!
எனது சின்னப் பொண்ணு நித்யா வீட்டுக்கு முன்னே வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
இந்த மழையையும் அவளையும் பார்க்கும்போது என் எட்டாவது வயதில், நான் வாழ்ந்த ஊரில் பெய்த மழையும், அதன் பின்னர் வெள்ளக்காடாகிய எங்கள் வீடும் ஞாபகத்திற்கு வருகிறது.
“உங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்டா பள்ளிக்கூடமும் இல்லை படிப்பும் இல்லை, நல்லா மழையில கூத்தடிச்சுக் கொண்டு திரியுங்கோ…”
அம்மாவின் பேச்சை கேட்கும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை. நானும் என் தங்கையும் போட்டிக்கு காகிதக் கப்பல் செய்து விளையாடிக் கொண்டிருந்தோம்., அவளுக்கு என்னை விட இரண்டு வயசு குறைவு. என்னை விடக் கெட்டிக்காரி. பெரும்பாலும் என்னைக் கேள்வி கேட்டே படுத்தி எடுப்பாள். முடிந்தவரை பதில் சொல்லுவேன் சொல்லாவிட்டால் அன்று முழுவதும் வருவோர் போவோரிடம் எல்லாம் என் மானத்தைக் கப்பலேற்றுவாள்.

குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர்: வீடென்பது பேறு - நூல் அறிமுகம்

.

: சோபாசக்தி –



 இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்திஇ அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில்இ இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்களில்இ அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில்இ இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாகஇ யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்ண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.  சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம்இ  தலித்தியம்இ பெண்ணியம்இ பெரியாரியம்இ பின்நவீனத்துவம்இ உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு - எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.

சத்தான தமிழில் முக்காலும் முத்தான கவிதை பாடிய கவிஞனை தமிழ் அன்னை இழந்துவிட்டாள் -நக்கீரன்




Published by News on July 19, 2013 | Comments Off
விஞர் வாலி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்து விட்டார்.  அகவை 81 ஆண்டுகள் வாழ்ந்த அவர் படுக்கையில் வீழ்ந்த 4 நாள்களில் இவ்வுலக வாழ்வை நீக்கி எங்கோ பறந்து விட்டார்.  தனது மரச் சுரங்கத்தில் பூட்டி வைத்திருந்த  பல்லாயிரம்  பாடல்களோடு சென்றுவிட்டார்.
கவிஞர் வாலி இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்  என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய சாதனை. அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அவரது தோற்றத்தில் முதுமை காணப்படவில்லை. அவரது நகைச் சுவைப் பேச்சில் தடுமாற்றம் இல்லை. குரல் முன்னர் போல்  கணீரென்று இருந்தது.
மகாகவி பாரதி தனது 39 ஆவது அகவையில்  இயற்கை எய்தினார். இருந்தும் மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி வான் புகழ் கவிதைகள்  படைத்தார். அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை. புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழி லேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை அவராற் கழிந்தது என்று அவரே சொன்னார். பாரதியாரின்  பாஞ்சாலி சபதம்   தாகூரின் கீதாஞ்சலியைக் காட்டிலும் உயர்ந்தது.  தனக்குப் பின் தமிழ்க் கவிதைத் தளத்தில்  ஒரு நீண்ட பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.

நான் உன்னைக் காதலிக்கிறேன்..

.



வானில் நஷ்சத்திரங்கள் 
ஒவ்வொன்றும் காதலைச்
சொல்ல ஏற்றுக் கொல்லாத
பௌர்ணமி நிலவு ....
சூரியன் காதலைச் சொல்ல
வருவதைக் கண்டதும்
ஓடி ஒளிவதேன்....
இதன் பெயர் தான் காதல் வெக்கமோ ?   

 உன் கவிதை எல்லாம் பொய் என்றாய் ....
ஆமாம் ...நீ சொல்வது உண்மைதான் என்றேன் ...
எப்படி சொல்லுகிறாய்  என்று  கேட்டாய்....

காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம்  .....
நிழல் பொய் தானே என்றேன் .....

 நீ மல்லிகை  பூக்களை
தொட்டு பறிக்கும் போது ஒவ்வொன்றும் 
 "நான் உன்னைக் காதலிக்கிறேன் "
என்று சொல்லத் துடிக்கிறது ....
நீயோ அதன் உயிரைக்  கிள்ளி
சரமாக்கி கூந்தலில்  சூடிக் கொள்கிறாய் ....
நீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்
நினைத்து இருந்தேன்...
இப்படிக்  கல்நெஞ்சக்காரியாய்
இருக்கிறாயே  ?!

உலகச் செய்திகள்


இங்கிலாந்து அரச குடும்ப வாரிசை பிரசவித்தார் கேட்!

பிரிட்ரிஷ் வாரிசின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர்

ஸ்பெய்னில் ரயில் தடம் புரண்டது: 77 பேர் பலி


========================================================================

இங்கிலாந்து அரச குடும்ப வாரிசை பிரசவித்தார் கேட்!

23/07/2013     இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் நேற்று இரவு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
பக்கிங்கம் அரண்மனை இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நண்பகல் 4.24 மணியளவில் சென். மேரிஸ் வைத்தியசாலையில் வைத்தே கேட்  குழந்தையை பிரசவித்துள்ளார்.
இதே வைத்தியசாலையிலேயே இளவரசி டயனா வில்லியம்ஸ் மற்றும் ஹெரியை பிரசவித்திருந்தார்.
பிறக்கும் போது குழந்தையின் நிறை 3.8 கிலோ எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் நூல்களை ஆடியோ புத்தகமாக்கும் அமெரிக்க தமிழர்

.


கல்கி.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களைமுதியோரும்,மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம்அமெரிக்க வாழ் தமிழர்ஸ்ரீகாந்த்,ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன்அமெரிக்காவில்குடியேறினார்அங்குமென்பொருள் துறையில்திட்ட மேலாளராக வேலை பார்த்தபடிதமிழ்மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த்அதன் மூலம்தமிழ் தொடர்பானபணிகளில் ஈடுபட்டுவருகிறார்குறிப்பாககுழந்தைகளுக்கான இசைகவிதைபேச்சுநாடகங்கள்போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார்.தற்போதுசான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ்மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார்அங்கு உள்ளஸ்டான் போர்டு பல்கலைகழக வானொலியில்மூன்று மணி நேரம்தமிழ் சேவைக்காக ஒதுக்கப்படுகிறதுஅதில்,பாடல்நேர்காணல்நாடகம் எனபலவற்றை ஒலிபரப்பி வருகிறார்அவருடைய பணிகளில்முக்கியமானதுநாவல்களைஆடியோ புத்தகமாக தயாரிப்பது.கல்கியின்

தமிழ் சினிமா


சிங்கம்-2

நாயகன் சூர்யா, நாயகி அனுஷ்கா, இயக்குனர் ஹரி உள்ளிட்ட சிங்கம் பட வெற்றிக் கூட்டணி இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது.
சிங்கம்-1 ன் க்ளைமாக்ஸில் வில்லன் பிரகாஷ்ராஜை ஆந்திராவில் வைத்து ஒழித்து கட்டியதும், இனி பொலிஸ் உத்தியோகமே வேணாம், காதலி அனுஷ்காவை கல்யாணம் கட்டிக்கொண்டு சொந்தமான பலசரக்கு கடையில் பொட்டலம்‌ போட்டு பொழைச்சுக்குறேன் என்று காதலியுடன் காரில் ஏறி பறக்கிறார் சூர்யா.
இவரை வழிமறித்த மாநில உள்துறை அமைச்சர் விஜயகுமார், தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் ஆயுத கடத்தல் நடப்பதாக தகவல் வந்துள்ளது, அதை கண்டுபிடிக்க வேண்டும் என சூர்யாவிடம் கூறுகிறார்.
அந்த கும்பலை எப்படி ஒழிக்க போகிறார் என்பதை கூறும் படம் தான் சிங்கம்-2.
இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் என்.சி.சி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே ரகசியமாக கண்காணித்து வருகிறார் சூர்யா.
இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஹன்சிகா மோத்வானி, பள்ளியில் வினாத்தாள் திருடி சூர்யாவிடம் மாட்டிக்கொள்கிறார்.
இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் சூர்யாக மறைத்துவிட, அவர் மேல் காதல் வயப்படுகிறார் ஹன்சிகா.
ஆனால் இந்தக்காதல் விளையாட்டுத் தனமானது என சூர்யா அவருக்கு புரிய வைக்கிறார்.
இதற்கிடையே தூத்துக்குடி துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கும் சூர்யா, இதற்கு காரணம் ரகுமான் மற்றும் இண்டர்நேசனல் கிரிமினல் டேனி என்பதையும் அறிகிறார்.
ஒரு கட்டத்தில் தூத்துக்குடியில் ஜாதி பிரச்சினையால் கலவரம் ஏற்படுகிறது.
அப்போதுதான் சூர்யா பொலிஸ் அதிகாரி என்பது தெரிகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை கமிஷனராக பொறுப்பேற்கிறார்.
இதுஒருபுறம் இருக்க சூர்யாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அவரது தந்தை அனுஷ்காவை திருமணம் செய்து வைக்கவும் சம்மதிக்கிறார்.
இந்நிலையில் போதைக் கடத்தல் செய்துவரும் பாய், ரகுமான் மற்றும் டேனி ஆகியோரை கைது செய்ய முழு மூச்சாக செயல்படுகிறார் சூர்யா.
இதில் அவர் வெற்றி பெற்றாரா? ஹன்சிகா மோத்வானியின் காதல் என்ன ஆனது? அனுஷ்காவை திருமணம் செய்தாரா? என்பது மீதிக்கதை.
சூர்யா காக்கி உடையில் மிடுக்காய் வலம் வருகிறார். இவர் பேசும் வசனங்கள் திரையில் பளிச்சிடுகிறது.
குறிப்பாக எதிரிகளின் முன்னின்று அவர்களுக்கு சவால் விடும்போது தீப்பொறி கிளம்பும் வசனங்கள், சண்டைக்காட்சியில் திரையே அதிர்கிறது.
ஹன்சிகா மோத்வானி பள்ளி சீருடையிலும் பளிச்சினு இருக்கிறார். இவரின் கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்.
படத்தில் சுடிதாருடன் காட்சி அளிக்கும் அனுஷ்கா, பாடல் காட்சிகளில் ரகிகர்களை கிறங்கடித்திருக்கிறார்.
விவேக், சந்தானம், நாசர், மன்சூர்அலிகான், ராதாரவி, ரகுமான், டேனி, மனோரமா ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.
நன்றி விடுப்பு





சிங்கம் 2 - விமர்சனம்

 

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - ஹரி
நட்சத்திரங்கள் - சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம்
இசை - தேவி ஸ்ரீ ப்ரசாத்
ஒளிப்பதிவு - பிரியன்
எடிட்டிங் - வி.டி. 

சிங்கம் படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணியில் பலத்த எதிபார்ப்புகளுக்கு மத்தியில் தனியாக திரையரங்குகளை வேட்டையாட வந்திருக்கிறது இந்த சிங்கம் 2. 
தூத்துக்குடி துறைமுகத்தைப் பயன்படுத்தி ஹெரோயின் கடத்துகின்ற ஒரு கும்பலை துரைசிங்கம் என்ற பொலிஸினால் தடுத்து நிறுத்தப்படுவதே படத்தின் கதை.
 இதற்காக தென்னாபிரிக்கா வில்லன், ஹன்சிகாவின் பாடசாலைக் காதல், துரைசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, விவேக், சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை என்பவற்றையும் சரியான கலவையில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் ஹரி.
 மிகச் சிறிய கதைக்கு மிகப்பெரிய பலமான திரைக்கதையில் வழக்கம் போலவே இயக்குனர் ஹரி அசத்தியிருக்கிறார். சிங்கம் 1 இனை எழுத்தோட்டமாக காண்பித்துவிட்டு அதன் முடிவிலிருந்து சிங்கம் 2 படம் ஆரம்பமாகிறது.  என்னவொன்று பாகம் ஒன்றில் ஒன்றரை டொன்னில் ஓங்கி அடித்த சூர்யா இதில் 10 டொன்னில் பாய்ந்தடிக்கிறார்.
அஞ்சலியின் குத்தாட்டத்துடன் ஆரம்பமாகும் போது அலுப்படையச் செய்யும் வழக்கமாக மசாலா திரைப்படம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது படம். ஆனால் இதனையடுத்து இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்கு பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது.
 சிங்கம் 1இல் மக்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்யும் துரைசிங்கம், மறைமுகமாக தனது டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சம்பளமின்றிய பொலிஸ் வேலையை என்.சி ஆசிரியராக தூத்துக்குடியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து தொடர்கிறார்.
 இங்கிருந்து கடத்தல் காரர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கிறார் துரைசிங்கம். கடத்தல்காரர்களின் அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்டு டி.எஸ்.பியாக பதவியேற்க நினைக்கும் துரைசிங்கம் எதிர்பாராதவிதமாக திடீரென பதவியேற்க வேண்டி ஏற்படுகிறது.
 இதன் பின்னர் எவ்வாறு எதிரிகளை எதிர்கொண்டு அடித்துநொறுக்குகிறார். ஹன்சிகாவின் காதலுக்கு என்னவாகின்றது? அப்பாவின் சம்மதத்துடன் எவ்வாறு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் என்பதை படு வேகமான பரபரப்பான திரைக்கதையில் துப்பாக்கி, அருவாள் என சத்தமிட்டுக்கொண்டே சூர்யாவை வைத்து கர்ஜிக்கிறார் இயக்குனர் ஹரி.
 படம் முழுவதும் மிடுக்கான பொலிஸாகவே வாழ்ந்துமொத்தப்படத்தையும் ஆக்கிரமிக்கிறார்  சூர்யா. காதல், பாசம், அதிரடி சண்டை, நடனம் என அனைத்து இடங்களில் ரசிகர்களைக்கொள்ளை கொள்கிறார். வழக்கம் போல குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் விதமாகவே கர்ஜிக்கிறார். அடிக்கடி மூக்கு வீங்க, கழுத்து நரம்பு புடைக்க கத்துமிடங்களுக்கு ஆங்காங்கே கத்தரி போட்டிருக்கலாம். ஒரு முழுமையாக வணிக ரீதியான படத்தை எவ்வாறு கையாள்வது என்ற யுக்தியை ஹரியிடமிருந்து பல இயக்குனர்கள் அறிந்துகொள்ளலாம். 
 முதன் முறையாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை மேற்கொண்டிருக்கும் ஹரி தயாரிப்பாளருக்கு மொட்டை போடாமல், தேவையானதை செய்துகாட்டியிருக்கிறார். படத்திலுள்ள ஓட்டைகளை அவதானிப்பதற்கு கூட இடமளிக்காமல் திரைக்கதையை நகர்த்தி இருப்பதே ஹரியின் வெற்றி. மேலும் இயல்பான வசனங்களாலும் ரசிக்க வைக்கிறார்.
 ஆனால் 3ஆம் பாகத்தினை மனதில் வைத்து படத்தினை நகர்த்தியிருப்பதால் இறுதிக் காட்சி, படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் வழக்கமாக வில்லன்களுக்கு முடிவு கட்டும் ஹரி இப்படத்தில் வில்லன்களுக்கு என்னவாகின்றது என பாகம் 3இல் பாருங்கள் என்றவாறு அமைத்துள்ளார்.
 அதிரடிக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவ்வப்போது விவேக்கும் சந்தானமும் திரையரங்கை சிரிப்பலைகளால் அதிரச் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தவாறு நகைச்சுவை காட்சிகள் இல்லை. குறிப்பாக பாடசாலை ஆசியர்களை கேலி செய்து விட்டு பிதாவின் பெயரால் மன்னிப்புக் கேட்பது, விஸ்வரூபம் சண்டையை ஞாபமூட்டும் நகைச்சுவைக் காட்சிகள் போன்றன அட்டகாசமாய் அமைந்திருக்கிறது.
 நாயகி அனுஷ்கா சில காட்சிகளுக்கு வந்து போவதுடன் கவர்ச்சியாக பாடல்களுக்கு நடனமும் ஆடுவதோடு அவரது பங்கு முடிந்தது. பாடசாலை மாணவியாக வரும் ஹன்சிகாவுக்கு ரசிகர்களின் மனதை நெருடும் வகையிலான ஓரளவு முக்கியத்துமிக்க காட்சிகள் உண்டு. 
 வில்லன்களாக வரும் டேனி, ரஹ்மான், முகேஷ் ரிஷி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மிரட்டும் பாணியில் அறிமுகமாகி சாதாரணமாக அடங்கிப் போகிறது இவர்களது சத்தம்.  இவர்கள் தவிர நாசர், ராதாரவி, மனோரமா, நிழல்கள் ரவி போன்றோரும் வந்து போகிறார்கள். ஹரியின் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியன். தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் பின்னணி இசையில் படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.
 நீண்ட படத்தின் வேகத்திற்கு திரைக்கதைக்கு அடுத்தபடியாக வீ.டி. விஜயனின் எடிட்டிங்  காரணம் என்றால் தகும். தேவையான இடங்களில் கத்தரி போட்டு குறைகளை மறைக்க வழி செய்திருக்கிறார். 
 சாதாரண மாசாலா திரைப்படத்தை படு விறுவிறுப்பாக கூறி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுக்கொள்ளும் இந்த சிங்கம், பரபரப்பை மிஞ்சும்!
 அமானுல்லா எம். றிஷாத்  நன்றி வீரகேசரி