சிங்கம்-2 |
![]() |
சிங்கம்-1 ன் க்ளைமாக்ஸில் வில்லன்
பிரகாஷ்ராஜை ஆந்திராவில் வைத்து ஒழித்து கட்டியதும், இனி பொலிஸ் உத்தியோகமே
வேணாம், காதலி அனுஷ்காவை கல்யாணம் கட்டிக்கொண்டு சொந்தமான பலசரக்கு
கடையில் பொட்டலம் போட்டு பொழைச்சுக்குறேன் என்று காதலியுடன் காரில் ஏறி
பறக்கிறார் சூர்யா.![]() அந்த கும்பலை எப்படி ஒழிக்க போகிறார் என்பதை கூறும் படம் தான் சிங்கம்-2. இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் என்.சி.சி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே ரகசியமாக கண்காணித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஹன்சிகா மோத்வானி, பள்ளியில் வினாத்தாள் திருடி சூர்யாவிடம் மாட்டிக்கொள்கிறார். இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் சூர்யாக மறைத்துவிட, அவர் மேல் காதல் வயப்படுகிறார் ஹன்சிகா. ஆனால் இந்தக்காதல் விளையாட்டுத் தனமானது என சூர்யா அவருக்கு புரிய வைக்கிறார். ![]() ஒரு கட்டத்தில் தூத்துக்குடியில் ஜாதி பிரச்சினையால் கலவரம் ஏற்படுகிறது. அப்போதுதான் சூர்யா பொலிஸ் அதிகாரி என்பது தெரிகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை கமிஷனராக பொறுப்பேற்கிறார். இதுஒருபுறம் இருக்க சூர்யாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அவரது தந்தை அனுஷ்காவை திருமணம் செய்து வைக்கவும் சம்மதிக்கிறார். இந்நிலையில் போதைக் கடத்தல் செய்துவரும் பாய், ரகுமான் மற்றும் டேனி ஆகியோரை கைது செய்ய முழு மூச்சாக செயல்படுகிறார் சூர்யா. இதில் அவர் வெற்றி பெற்றாரா? ஹன்சிகா மோத்வானியின் காதல் என்ன ஆனது? அனுஷ்காவை திருமணம் செய்தாரா? என்பது மீதிக்கதை. ![]() குறிப்பாக எதிரிகளின் முன்னின்று அவர்களுக்கு சவால் விடும்போது தீப்பொறி கிளம்பும் வசனங்கள், சண்டைக்காட்சியில் திரையே அதிர்கிறது. ஹன்சிகா மோத்வானி பள்ளி சீருடையிலும் பளிச்சினு இருக்கிறார். இவரின் கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். படத்தில் சுடிதாருடன் காட்சி அளிக்கும் அனுஷ்கா, பாடல் காட்சிகளில் ரகிகர்களை கிறங்கடித்திருக்கிறார். விவேக், சந்தானம், நாசர், மன்சூர்அலிகான், ராதாரவி, ரகுமான், டேனி, மனோரமா ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள். |
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
No comments:
Post a Comment