ஓநாயும் ஆட்டுக்குட்டியும் |
![]() |
தனக்கென்று தனிபானி, தனி பாதை என்று
பயணிக்கும் இயக்குனர்களில், தான் முக்கியமானவன் என்று தனது ஒவ்வொரு
படங்களிலும் நிரூபிக்கும் மிஷ்கின் இந்த படத்தையும் அவ்வாரே
இயக்கியுள்ளார். ![]() அவரை காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்க முயல்கிறார். ஆனால் அந்த உயிர் மீது அனைவரும் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் தன் வீட்டிலேயே கொண்டு போய் அவருக்கு ஆபரேஷன் செய்கிறார். இதற்கு உதவியாக இவருடைய பேராசிரியரும் துணைபுரிகிறார். ஆபரேஷன் செய்த மறுநாள் மிஷ்கின் அங்கிருந்து தப்பித்து போய்விடுகிறார். அதன்பிறகு சிபிசிஐடி பொலிசார் ஸ்ரீயின் வீட்டிற்கு வந்து மிஷ்கின் ஒரு பயங்கர ரவுடி என்று சொல்கின்றனர். ஒரு கொலையாளிக்கு உதவி செய்தற்காக அவரது குடும்பத்தையே கைது செய்கிறது. பொலிஸ் காவலில் இருக்கும் ஸ்ரீயின் மொபைலுக்கு அழைப்பு வருகிறது. அதில் மிஷ்கின் பேசுகிறார். ![]() அதற்கு ஸ்ரீயிடம் துப்பாக்கியைக் கொடுத்து மிஷ்கினை நீயே சுட்டுவிடு என்று கூறுகின்றனர். ஸ்ரீ தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இந்த அசைன்ட்மென்டுக்கு ஒத்துக் கொள்கிறார். ஸ்ரீயை சந்திக்கும் மிஷ்கின் மிகவும் சாதுர்யமாக ஸ்ரீயை எலெக்ட்ரிக் ரெயிலில் கடத்திச் செல்கிறார். இறுதியில் பொலிஸ் ஸ்ரீயை மீட்டு மிஷ்கினை கொன்றதா? அல்லது மிஷ்கினை ஸ்ரீ கொன்றாரா? என்ற மீதிக்கதையுடன் படம் நகர்கிறது. முகமூடி படத்திற்கு பின்பு மிஷ்கின் எழுதி இயக்கி, நடித்திருக்கும் படம் இது. தனது இயல்பான கதை, எதார்த்தம் குறையாத காட்சிகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் பாடல் இல்லாமல், கொமடி, நடிகர் கூட்டம் இல்லாமல் ஒரு ஆங்கில படத்திற்கு இணையான கதையையும், காட்சிகளையும் ரசிக்கும் படியாகவும், பிரமிக்கும்படியாகவும் அமைத்திருப்பது இவருக்கு உரிய பாணி. ![]() அதில் பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்திருப்பது காட்சியின் உச்சக்கட்டம். படத்தில் இதுபோன்ற காட்சிகள் எண்ணில் அடங்காமல் இடம்பெற்றுள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் மிஷ்கின் மின்னலென சுழல்கிறார். வழக்கு எண் 18/9 படத்திற்கு பின்பு ஸ்ரீ நடிக்கும் படம் இது. அப்படத்தில் இருந்து இதில் ஒரு மாறுபட்ட நடிகராக தெரிகிறார். இந்த படத்தின் விறுவிறுப்பை சுமக்கிற பொறுப்பு இவருக்கு. அதை சிறப்பாக செய்திருக்கிறார். இசைஞானியின் பின்னணி இசை தென்றல் போல் மனதை தொடுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய பின்னணி இசைதான். இதற்கு மிஷ்கின் டைட்டிலிலேயே முன்னணி இசை என்று இசைஞானிக்கு கௌரவம் சேர்க்கிறார். ![]() தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக கோடிகளை சம்பாதிக்க மிஷ்கின் தவறியிருந்தாலும், அவ்வபோது வழி தவறி பயணிக்கும் தமிழ் சினிமாவை சரியான பாதையில் பயணிக்க வைக்க தவறியதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். மொத்தத்தில் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் காத்திருந்த ரசிகர்களுக்கு த்ரில்லர் வேட்டை. நடிகர்: ஸ்ரீ, மிஷ்கின், ஆதித்யா நடிகை: நீலிமா ராணி இயக்குனர்: மிஷ்கின் இசை: இளையராஜா ஓளிப்பதிவு: பாலாஜி வி ரங்கா நன்றி விடுப்பு வெள்ளைவேன் கதைகள் விரைவில் வெளியாகும்
திரைப்பட வரலாற்றில் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியதன் மூலம் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும்
பிரபல இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மணிமேகலையினால்,
மக்கள் இதுவரையில் என்றுமே பார்த்திருக்காத வகையில் இலங்கையில்
ஆட்கள் பலவந்தமான முறையில் காணாமற் போகும் சம்பவங்களை தத்ரூபமாக
சித்திரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளை வான் கதைகள்
எனும் தலைப்பிலான ஆவணத் திரைப்படமொன்று சர்வதேச ரீதியில்
வெளியிடப்படவுள்ளது.
![]()
ஏழு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய இரண்டு மணி நேர
ஆவணத்திரைப்படம் யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் அவர்களின்
அன்புக்குரியவர்கள் தெளிவுபடுத்தப்படாத வகையில் காணாமற்
போயிருந்த அந்தக் கொடூர சம்பவங்களை தத்ரூபமாக சித்திரித்துக்
காட்டுகின்றது. இது குறித்து எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தகவல்
தருகையில், இந்தத் திரைப்படத்தில் தோன்றும் பாத்திரங்கள் நீதிக்காக
தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டத்தின் அங்கமாகவே காணாமற்
போனோரைக் கண்டு கொள்வதான முழுமையான கடிதரிசனமொன்றையும்
பார்வையாளர்களுக்கு அளிக்கவுள்ளன.
தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் கொழும்பில் இம் மாத
நடுப்பகுதியில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள அதே
தருணத்திலேயே இந்த ஆவணத் திரைப்படம் உலகளாவிய ரீதியில்
ஒளிபரப்பப்படவுள்ளது.
இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவிக்கையில்,
இத்திரைப்படத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த
காணாமற் போயிருந்தோரின் குடும்பங்களின் கண்ணீர் வாழ்க்கை
சித்தரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். பலவந்தமான முறையில்
காணாமற் போகும் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக
யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அண்மையில் பலவந்தமான முறையில்
காணாமற் போனோர் குறித்த சர்வதேச தினத்தன்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர்
ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்த போதும் நடத்தப்பட்டிருந்த
பேரணிகள் இந்த ஆவணத்திரைப்படத்தில் மையப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பி
டத்தக்கது.
நன்றி வீரகேசரி
|
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
No comments:
Post a Comment