.
வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்பு
நியமனக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து பெற்றார் விக்கினேஸ்வரன்
ஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலியத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
இலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு
டமாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள்.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா, அஸ்வர் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தன், அ.விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஐ.தே.க. பிரமுகர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், பிரபா கணேசன் உட்பட அரசியல் பிரமுகர்கள், மற்றும் விக்னேஸ்வரனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

- See more at:
நியமனக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து பெற்றார் விக்கினேஸ்வரன்
ஒரே காலப்பகுதியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்காக
செலவிடப்படும் நிதியில் இந்தளவு பெரிய வித்தியாசம் காணப்பட
முடியுமா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
பல்கலைக்கழக
கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள்
தாக்கப்படுதல், மற்றும் கைது செய்யப்படுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச
கல்வியைப்

01/10/2013 முன்னாள் நீதியரசரும் வடமாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு
வாக்குகளை பெற்றுக்கொண்டவருமான சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.
சந்திரசிறியிடமிருந்து வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை இன்று
பெற்றுக் கொண்டதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன்
வீரகேசரி இணையத்திற்கு தெரிவித்தார்.

அதன்படி நியமனக் கடிதம் இன்று வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் வைத்து விக்கினேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் யார் முன்னிலையில், எங்கு, எப்போது முதலமைச்சர் பதவியேற்பது
குறித்து கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி
ஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலியத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி
01/10/2013 ஓமந்தை முதல் பலாலி வரையான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றர் வரையான பாதையை அமைக்க 270 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மாத்தறை முதல் பெலியத்தை வரையான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றரை அமைப்பதற்கு 1,412 மில்லின் ரூபா செலவிடப்படுகின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஒரே காலப்பகுதியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்காக
செலவிடப்படும் நிதியில் இந்தளவு பெரிய வித்தியாசம் காணப்பட
முடியுமா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
நாட்டின் பொருளாதாரத்தின் கேந்திர நிலையங்களை சீனாவுக்கு அடகு
வைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக
ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை குறிப்பிட முடியும்.
ஓமந்தை முதல் பலாலி வரையில் அமைக்கப்படவுள்ள ரயில் பாதையானது 91
கிலோ மீற்றர் நீளமாகும். அதில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதையை அமைக்க 270
மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.
அதேபோன்று பலாலி முதல் காங்கேசன்துறை வரையில் ரயில் பாதை
அமைக்கப்படவுள்ளது. அதில் ஒரு கிலோ மீற்றருக்கு 343 மில்லியன் ரூபா
செலவிடப்படவுள்ளது.
ஆனால் மாத்தறை முதல் பெலியத்தை வரையில் 27 கிலோ மீற்றர் நீளமான ரயில்
பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றரை
அமைப்பதற்கு 1412 மில்லின் ரூபா செலவிடப்படுகின்றது. இந்நிலையில்
ஒரே காலப்பகுதியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்காக
செலவிடப்படும் நிதியில் இந்தளவு பெரிய வித்தியாசம் காணப்பட
முடியுமா? இது அசாதாரணமாக காணப்படுகின்றதே?
இது தொடர்பில் நாட்டுக்கு அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும். சீன
நிறுவனம் ஒன்றுக்கே இது தொடர்பான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக
தெரிகின்றது. இந்நிலையில் இவ்வளவு அதிகரிப்பு இடம்பெறுவதற்கான காரணம் என்ன?
இந்தக் கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்துவது? என்றார்.
நன்றி வீரகேசரி
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
02/10/2013 பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக
கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள்
தாக்கப்படுதல், மற்றும் கைது செய்யப்படுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச
கல்வியைப்

பாதுகாக்குமாறும்
கோறிக்கை விடுத்தும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை நான்கு
மணியளவில் கண்டி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் சத்தியாகிரகம்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி
இலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை
தொடர்பாக கடந்த 25ஆம் திகதி, ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை
சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும், கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment