நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம் 12/08/2013
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி - மு.கா.கவலை
பதில் பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் நியமனம்
பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியளிக்கின்றன: ஹக்கீம்
வெலிவேரிய சம்பவம் : ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மாணவர் கொலை: விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்க மறியலில்
வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிராண்ட்பாஸ் விவகாரம்: அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களின் நிலையும்
"வடக்குத் தேர்தலுக்கு பின் மூன்றாம் கட்ட போராட்டம்"
பரக்காஹதெனியா பிரதேசத்தின் ஏ-10 நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் “அமைதி - பள்ளிவாசல் முன்னால்” என எழுதப்பட்டுள்ள விளம்பரப் பலகையை அகற்றவேண்டும் என பொது பலசேனா விரும்புகிறது
மடு அன்னையின் ஆவணித் திருவிழா
===================================================================
நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம்
12/08/2013 வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.
அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டின்
பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து
கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில் அன்னதான நிகழ்வுகளும்
இடம்பெற்றன.
ஆலய பாதுகாப்புக் கடமையில் பொலிசார், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், சாரணர்கள் மற்றும் யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல எண்ணிக்கையான முருக பக்தர்கள் கொடி ஏற்ற நிகழ்வையடுத்து அங்கப்பிரதட்சணையில் ஈடுபட்டனர்.
நல்லூர்க் கந்தனின் உற்சவத்தில் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி
சப்பறத்திருவிழாவும் மறுநாள் தேர்த்திருவிழாவும் செப்டெம்பர் மாதம்
5ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.

12/08/2013 வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.
அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆலய பாதுகாப்புக் கடமையில் பொலிசார், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், சாரணர்கள் மற்றும் யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நன்றி வீரகேசரி
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி - மு.கா.கவலை
12/08/2013 நாடு முழுவதிலும்
பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும்
தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் மாற்று சக்தியொன்றின்
ஆட்சியே செயற்பட்டுவருகின்றது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற
முஸ்லிகளின் ஒன்றியம் மெளனித்து கிடக்கின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தனது அதிருப்தியையும் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.
ஜனநாயகம் என்பது பெயரளவில் மாத்திரமே இருந்துவருகின்றது. தெற்கில்
இடம்பெற்றுவருகின்ற முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள்
வெளிப்படையாக இருக்கின்ற அதேவேளை, வடக்கில் எவ்வாறு இடம்பெற்றிருக்கும்
என்பதை முஸ்லிம்களால் ஊகித்துக்கொள்ள முடிகின்றது என்றும் காங்கிரஸ்
தெரிவித்துள்ளது.
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் எம்.பி.யுமான எம்.ரி.ஹஸன் அலி
தெரிவித்தார்.
ஹஸன் அலி எம்.பி. மேலும் கூறுகையில்,
கிராண்ட்பாஸ் சுவர்ணசயித்திய வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதான
தாக்குதலானது இதுவரையில் நாடு முழுவதிலும் இடம்பெற்றுள்ள பள்ளிவாசல்கள்
மீதான 23ஆவது தாக்குதலாகும். இது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்கின்ற
அதேவேளை, எமது காங்கிரஸின் சார்பில் கவலையையும் கண்டனத்தையும்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
இத்தகைய தாக்குதகளானது நாட்டில் கூறப்படுகின்ற இன ஐக்கியத்துக்கு
பங்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெளிவாக தெரிந்திருக்கின்றபோதிலும் அது
குறித்து கவனம் செலுத்த வேண்டியவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலும்
பாராளுமன்றத்தை சார்ந்து இயங்குகின்ற பாராளுமன்ற முஸ்லிம்கள் ஒன்றியம் வாய்
திறக்காது மெளனித்திருக்கின்றது. இந்த நிலைமைகள் தொடர்பில் ஒன்றியம்
இறுக்கமான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் நடத்தப்படுகின்ற தாக்குதல்கள்
வெளிப்படையானவைகளாக இருக்கின்ற நிலையில்தான் இந்நாட்டில் ஜனநாயகமும்
இருப்பதாக கூறப்படுகின்றது. ஜனநாயகம் இருப்பதாக கூறப்படுவதில் எமக்கு
சிறிதளவும் நம்பிக்கைகிடையாது. தெற்கிலே இவ்வாறு தாக்குதல்கள்
நடத்தப்படுகின்றதை பார்க்கையில் வடக்கில் நடத்தப்படட தாக்குதல்கள் எவ்வாறு
மூடிமறைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு எந்தளவில் தாக்குதல்கள்
நடத்தப்பட்டிருக்கின்ற என்பதை இப்போது முஸ்லிம்களால் உணரக்ககூடியதாக
இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் தாக்குதல்கள் பின்னணியில் பாரியதொரு
மாற்று சக்தி செயற்பட்டு வருகின்றது என்பது மட்டும் திண்ணமாகின்து
என்றார்.
அஸ்வர் எம்.பி.
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் கருத்து ெவளியிட்ட ஆளும்கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் கூறுகையில்,
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம்
கிடையாது. அதேபோன்று அதற்கான அதிகாரத்தை எவராலும் வழங்கவும் முடியாது.
எனினும் கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் நாம் கவலையையும் கண்டத்தையும்
தெரிவிக்கின்றோம். மேலும் கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு
தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்காவிட்டால் அங்கு விபரீத
நிலையொன்றுக்கு வழிவகுத்திருக்கும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறித்த பள்ளிவாசலானது நோன்பு பெருநாள் நிறைவு பெற்றதன் பின்னர்
மூடப்படும் என்றே முதலில் கூறப்பட்டிருந்தது. எனினும் இவ்விடயம் தொடர்பில்
இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பள்ளிவாசலை மூடுவதற்கான தேவை இல்லையென
தெரிவிக்கப்பட்டதையடுத்து குழப்பம் எழுந்துள்ளது. பள்ளிவால்களை பாதுகாக்க
வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். அதனை நாம் செய்துவருகின்றோம்.
அதேவேளை, பாதுகாப்பு தரப்பினரும் இதில் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
இஃதிகாப் என்ற வழிபாட்டு முறையானது பள்ளிவாசலில் மட்டுமே சாத்தியமாகும்.
அதனை வெளியில் செய்ய முடியாது. இதன்மூலம் பள்ளிவாசலில் முக்கியத்துவம்
விளங்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை
நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என்பது போல் அதற்கான அதிகாரத்தை
வழங்குவதற்கும் யாருக்கும் உரிமைகிடையாது.
எனவே, இவ்விடயங்களில் அரசாங்கம் இறுதியானதோ முடிவினை எடுக்க வேண்டிய
கட்டத்தில் இருக்கின்றது. கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து ஜனாதிபதி நேரடி
தலையீடுகளை மேற்கொண்டிருந்தமை வரவேற்றக் கூடியதாகும். இது இவ்வாறிருக்க
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் முஸ்லிம் நாடுகள்
பங்கேற்பதை தடுப்பதற்காகவே சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
இதனையும் ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
நன்றி வீரகேசரி
பதில் பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் நியமனம்
13/08/2013 உயர் நீதிமன்ற நீதியரசர் கே. ஸ்ரீபவன் பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனம் இன்று அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டார்.நன்றி வீரகேசரி
பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியளிக்கின்றன: ஹக்கீம்

கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள
முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று அக்கட்சி
உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. இதன்போதே அமைச்சர் ஹக்கீம்
இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
முஸ்லிம்
சமூகத்தினை நோக்கிய மதம் சார்ந்த குரோதமான செயல்களை தடுத்த நிறுத்த
வேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் எமக்கு திருப்தியளிக்கின்றன.
இதேவேளை எமது கட்சியும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என்றார். நன்றி வீரகேசரி
வெலிவேரிய சம்பவம் : ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
14/08/2013 வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை
புகையிரத நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணியினரின் சார்பில்
தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
இவ்வார்ப்பாட்டத்தில்
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முனனணியின்
தலைவர் மனோ கணசேன், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரபாகு கருணாரட்ன,
புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய சோஷலிசக் கட்சியின்
தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி,
ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களான சஜித் பிரேமதாச, திஸ்ஸ அத்தநாயக்க,
கிரான் விக்கிரமரட்ன, ஹரின் பெர்னாண்டோ, மங்கள சமரவீர உட்பட
எதிர்க்கட்சிகளின் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிவில் அமைப்புக்களின்
பிரதிநிதிகள் மற்றும் சுதந்திரத்துக்கான அரங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர்
சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், ஊடக அமைப்புக்களின் ஒன்றியம் உட்பட ஏனைய பல
அமைப்புக்களின் சார்பிலும் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொது மக்கள்
கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை
எழுப்பியதுடன் அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக
அட்டைகளையும் தாங்கியிருந்தனர். 'வடக்கிலும் சுட்டுக் கொன்றனர் தெற்கிலும்
சுடுகின்றனர்". 'இந்த அரசாங்கத்துக்கு இடமளிக்கக் கூடாது" , 'அரச
பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவோம்" , 'அரச தலைவர்களே கொலைகாரர்கள்"
'தண்ணீர் கேட்ட மக்களை சுட்டுக் கொல்வதா ஜனநாயகம்" என்று கோஷங்களை
எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வெலிவேரிய
பகுதி மக்களும் கலந்துகொண்டனர். வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தில்
கொல்லப்பட்ட மூவரது புகைப்படங்களும் ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே வைக்கப்பட்டு
பலியானவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட
அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த பௌத்த
பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர். நன்றி வீரகேசரி
திருகோணமலை மாணவர் கொலை: விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்க மறியலில்
14/08/2013 திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்ட 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல்
உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள்
திருகோணமலை கடற்பரப்பில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பன்னிரெண்டு
விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக
நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடாத்துமாறு
திருகோணமலை நீதவான் ஏ.எல். அஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த ஒரு மாணவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி
பயின்று வந்ததுடன் ஏனைய மாணவர்கள் சில பல்கலைக்கழகங்களில் கல்வித்
தொடர்வதற்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி

வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
14/08/2013 பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர்
சியாமின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான முன்னாள் பிரதிப்
பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு மீண்டும் விளக்கமறியல்
நீடிக்கப்பட்டுள்ளது.
வாஸ் குணவர்த்தனவை எதிர்வரும் ஆகஸ்ட்
மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
வாஸ் குணவர்த்தனவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் தென் பகுதி தோற்றங்கள்
![]() |
- |
புனரமைக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் தென் பகுதி தோற்றங்கள் |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |
![]() |
- |
![]() |

நன்றி வீரகேசரி
கிராண்ட்பாஸ் விவகாரம்: அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களின் நிலையும்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஆகஸ்ட், 2013 - 17:31 ஜிஎம்டி

காவல்துறையினர்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது கிராண்ட்பாஸ் பள்ளிவாசல்
தாக்கப்பட்டதாக ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும்
குற்றஞ்சாட்டுகின்றனர்
இலங்கையில், தலைநகர் கொழும்பில்
கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து
ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையால் இரண்டு இரவுகளாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு
உத்தரவு இன்று திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டது.
ஆனால் இன்றும் அப்பகுதியில் சிறப்பு அதிரடிப்
படையினரும் கலகத்தடுப்பு பொலிசாரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். பழைய
பள்ளிவாசலை புனரமைக்கும் நோக்கோடு, அதன் அருகில் இருந்த அரச மரத்தை
வெட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
அமைச்சர் தினேஸ் குணவர்தன பேட்டி
‘காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் பார்த்துக்கொண்டிருக்கும் படியாக தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யாவிட்டால் இதேமாதிரியான தாக்குதல் இன்னொரு இடத்தில் தொடரக்கூடும் என்றும்’ ஹரின் பெர்ணான்டோ கூறினார்.
'முஸ்லிம் தலைவர்கள் அரசின் பங்காளிகள்'- அமைச்சர் தினேஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் அரசின் பங்காளிகளாக உள்ளன
அமைச்சர் ரிசாத் பதில்
'கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கிய காரணத்தால் தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இன்று இருக்கிறார்கள்' என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருப்போரே தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து தமது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்று வருவதாகவும் கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம், சிங்கள அமைச்சர்கள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறினார்.
'வெளியேறுவதால் எதுவும் நடக்காது'- அமைச்சர் ரிசாத்

'நாங்கள்
அமைச்சர்களாக இருக்கும்போதே இப்படியான தாக்குதல்கள் நடக்கின்றதென்றால்
வெளியேறினால் பிரச்சனை தீரும் என்பது தவறு' என்கிறார் அமைச்சர் ரிசாத்
இனவாத கும்பல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்காதுள்ளமையைக் கண்டித்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்று சிலர் கூறுகின்ற கருத்துக்களை ஏற்க முடியாது என்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடக்கும் போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அதனைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியும் சக முஸ்லிம் அமைச்சர்களுடன் சேர்ந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"வடக்குத் தேர்தலுக்கு பின் மூன்றாம் கட்ட போராட்டம்"
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஆகஸ்ட், 2013 - 18:10 ஜிஎம்டி

'மாவை' சேனாதிராஜா
இலங்கையில் மாகாண சபை என்பது
அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த்தேசிய
கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியடுவதற்கான காரணத்தை ஞாயிறன்னு
தெளிவுபடுத்தியது.
வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே
போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண
சபைத்தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது.இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்க்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைபபின் நாடாளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராஜா, தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தவில்லை என்று கூறினார்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இது ஒரு களமாக அமையும் என்ற காரணத்தினாலேயே இந்தத் தேர்தலில் பங்கு பெறுவதாகவும் தெரிவித்தார்.
அடுத்த போராட்டம்

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன்
ஆயுதப் போராட்டத்தின்போது, அது ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்று கூறி, சர்வதேசம் அதனை ஏற்கவில்லை என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேர்தலின் மூலம், மக்களின் ஆதரவைப் பெற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டிருக்கின்றோம் என்பதை சர்வசேத்திற்கு எடுத்துக் காட்டி அதன் ஊடாக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதற்காகவே இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.நன்றி BBC தமிழ்
பரக்காஹதெனியா
பிரதேசத்தின் ஏ-10 நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் “அமைதி -
பள்ளிவாசல் முன்னால்” என எழுதப்பட்டுள்ள விளம்பரப் பலகையை அகற்றவேண்டும் என
பொது பலசேனா விரும்புகிறது
- டி.பி.எஸ்.ஜெயராஜ்

குருநாகல
ஸ்ரீலங்காவிலுள்ள
சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக இன மத பாசிச வாதிகளான பொது
பல சேனா அமைப்பினர் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரத்தில்
சமீபத்தைய இந்த அரங்கம் ஆகஸ்ட் 11ந் திகதி ஞ}யிறன்று ஆரம்பமானது. அன்றைய
தினம் பொது பல சேனா வயம்ப பிரதேசம் என்றழைக்கப்படும் வட மேல் மாகாணத்தின்
தலைநகரமாகிய குருநாகலவில் ஒரு பேரணியை நடத்தியது. அன்று பொது பல சேனாவின்
பொதுச் செயலாளரான கலகொடாத்த ஞ}னசார தேரர் அந்தப் பேரணியில் கலந்து
கொண்டிருந்த சுமார் 500 பேர்கள் மத்தியில் உரையாற்றினார். எதிர்பார்த்தபடி
ஞ}னசார தேரர், ஏராளமான முஸ்லிம் எதிர்ப்பு வசைமாரிகளை தனது பேச்சில்
பொழிந்து தள்ளியிருந்தார்.
அவரால்
எழுப்பப் பட்ட பிரச்சினைகளில் ஒன்று, கண்டி - குருநாகல வீதியான ஏ - 10
நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு விளம்பரப்பலகைகள் பற்றியது. வீதி அபிவிருத்தி
அதிகாரசபையிரால்; பரக்காஹதெனியா பகுதியில் நெடுஞ்சாலையருகில்
அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப்பலகைகளில் “அமைதி பள்ளிவாசல் முன்னால்
உள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் சிங்களம், தமிழ், மற்றும்
ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பள்ளிவாசல்
முன்னாலுள்ளது என்கிற வாசகங்களுக்கு மேல் பெரிய எழுத்துக்களில் தயவு
செய்து அமைதி காக்கவும் என்று எழுதப்பட்டுள்ளது. அந்தச் சுற்றாடலில்
வெளிப்படையாக இரண்டு மசூதிகள் உள்ளன, மற்றும் விளம்பரப்பலகைகள் வீதியின்
இரு மருங்கிலும் நிறுவப்பட்டுள்ளன.
விளம்பரப்பலகைகள்
கூசாமல்
பழி கூறுவதற்கும் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு விஷத்தை கக்குவதிலும்
பெயர்பெற்ற ஞ}னசார தேரர், ஸ்ரீலங்காவிலுள்ள பெரும்பான்மையினரான சிங்கள
பௌத்தர்களை இந்த விளம்பரப்பலகைகள் அவமதிப்பதாகவும் மற்றும்
புண்படுத்துவதாகவும் உள்ளது என்று அறிவித்தார். அந்த விளம்பர பலகைகளை 24
மணி நேரத்துக்குள் அப்புறப் படுத்தாவிட்டால் பொது பல சேனா அதில் நேரடியாகத்
தலையிட்டு அவற்றை அழித்துவிடும் என்று அச்சுறுத்தவும் செய்தார்.
அந்த
விளம்பரப்பலகைகள் குறிப்பிட்ட அந்த இடத்தில் வைக்கப்பட்டிருப்பது
எதனாலென்றால் அதற்கு மிகவும் அருகாமையில் இரண்டு மசூதிகள்
அமைந்துள்ளபடியினாலேயே. ஒன்று பரக்காஹதெனியா பெரியா ஜூம்மா பள்ளிவாசல்
மற்றது தௌகீட் ஜமாத்தினது புதிய ஜமியத் தௌகீட் ஜூம்மா பள்ளிவாசல் என்பனவே
அவைகள். அந்த விளம்பரப்பலகைகள் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் அமைக்கப்பட்டவை
அல்ல. அவை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் தமது சொந்தச் வரவு செலவு
திட்டத்தின்கீழ் 22,000 ரூபா செலவில் அமைக்கப்பட்டவை. நாட்டிலுள்ள சகல
நெடுஞ்சாலைகளுக்கும் பொறுப்பாகவுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை,
பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் பிரார்த்தனை நடத்தும் மத உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும் விதமாக அவ்வாறு செய்திருந்தது. அப்படிச் செய்தது
எதற்காகவென்றால் அந்த வழி செல்லும் வாகனங்கள் தேவையில்லாமல் சப்தம்
எழுப்புவதை தவிர்ப்பதற்காகவே. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் அந்த இடத்தை
கடக்கும்போது அமைதியை கடைப்பிடித்து வருகிறார்கள். இதுதான் காவியுடை
பாசிசவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போலத் தெரிகிறது.
பரக்காஹதெனியா
விளம்பரப்பலகைகள் அகற்றப்பட வேண்டும் என்கிற ஞ}னசார தேரரின்
ஆத்திரமூட்டும் கோரிக்கையை கேட்கும், புத்தியுள்ள எந்த மனிதனும் ஒரு
மூர்க்கமான பைத்தியம் ஆத்திரத்துடன் பேசுகிறது என்று அதை ஒதுக்கித்
தள்ளியிருப்பார்கள். ஆனால் ஸ்ரீலங்காவில் சட்டத்தினதும் ஒழுங்கினதும்
பாதுகாவலர்களான காக்கியுடை தரித்தவர்கள் அப்படிச் செய்யவில்லை. சமீபத்தில்
நடந்துள்ள சம்பவங்கள் யாவும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் பொது பல சேனா - சிஹல
ராவய - ராவண பலகாய போன்ற சக்திகள் பொதுவாக மத சிறுபான்மையினரை , அதிலும்
குறிப்பாக இஸ்லாமிய விசுவாசிகளை இலக்கு வைத்து தாக்கும்போது அந்த
சக்திகளின் கூட்டாளிகள் போல செயற்பட்டு வருகிறதையே தெரிவிக்கின்றன.
காவல்துறையினரின் இப்படியான வெறுப்பூட்டும் நடவடிக்கைகள் தெரிவிக்கும் ஒரு
காரணம் இந்த பாசிச இனத்துவேஷ மதவாதிகள் பாதுகாப்பு நிறுவனத்தின் உயர்
மட்டத்தினரது முழு ஆதரவையும் அனுபவித்து வருகிறார்கள் என்கிற கருத்தையே
பிரதிபலிக்கிறது.
மாவத்தகம
ஞ}னசார
தேரர் விடுத்த 24 மணிநேர காலக்கெடு முடிவதற்குள்ளேயே காவல்துறையினர் அவரது
கோரிக்கையை உடனடியாகச் செயல்படுத்த எடுத்த நடவடிக்கையின் பின்னணியில்
என்ன காரணமோ அல்லது நோக்கமோ இருந்ததோ தெரியவில்லை. மாவத்தகம காவல் நிலைய
தலைமை கண்காணிப்பாளரது தலைமையின் கீழ் காவல்துறை ஊழியர்களைக் கொண்ட ஒரு
காவல்துறைப் பட்டாளம்,ஆகஸ்ட் 12 ந்திகதி திங்களன்று காலை சுமார் 10
மணியளவில் விளம்பரப்பலகைகள் நிறுவப்பட்டிருந்த இடத்தில் வந்திறங்கியது.
அவர்களது நோக்கம் பொது பல சேனா கேட்டுக் கொண்டபடி அந்த விளம்பரப்பலகைகளை
அப்புறப்படுத்துவது அல்லது அழிப்பது என்பதாக இருந்தது.எந்த
அதிகாரத்தின்கீழ் காவல்துறையினர் அப்படி செய்யத் தயாரானார்கள் மற்றும்
அவர்கள் ஏதாவது உயர்மட்ட அதிகாரிகளின் பணிப்புரைகளின் கீழ் இயங்கினார்களா
என்பது தெரியவில்லை.
மிகப்
பெரிய முஸ்லிம் சனத்தொகையை கொண்ட ஒரு இடம் பரக்காஹதெனியா ஆகும்.
காவல்துறையினர் அந்த இடத்துக்கு வந்திறங்கிய உடனேயே செய்தி விரைவாக எல்லா
இடத்துக்கும் பரவியது. சில நிமிடங்களுக்குள்ளேயே முஸ்லிம்களைக் கொண்ட பெரிய
கூட்டம் அங்கு கூடிவிட்டது. காவல்துறையினர் செயற்படவிருந்த செயலுக்கு
எதிராக அவர்கள் தீவிரமாக எதிர்ப்புக் காட்டியதுடன் பொது பல சேனாவின்
கட்டளையை நிறைவேற்ற காவல்துறையினரை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும்
தெரிவித்தார்கள். உள்ளுர் அதிகார அரசியல்வாதிகள் பலரும் அங்குவந்து
மக்களின் எதிர்ப்புக்கு தங்கள் ஆதரவையும் சேர்த்துக் கொண்டார்கள்.
அந்த
விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்குரிய அனுமதியை காண்பிக்கும்படி
காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.செம்மறியாடுகள் தலையசைப்பதைப்போல
தங்களிடம் அனுமதிப் பத்திரம் எதுவுமில்லை என்று ஏற்றுக்கொண்ட
காவல்துறையினர், ஆனால் சமாதானத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய சாத்தியங்களை
தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதாகத்
தெரிவித்தார்கள். உடனே கூட்டத்திலிருந்த இளைஞர்கள் சிலர், காவல்துறையினர்
விளம்பரப்பலகைகளை தொட்டால் உடனடியாகவே சமாதானத்துக்கு பங்கம்
ஏற்பட்டுவிடும் என்று கோபத்துடன் கூக்குரலிட்டார்கள். அவர்கள் அந்தக்கணமே
முஸ்லிம் பெரியவர்களால் எச்சரிக்கப்பட்டு மௌனமாக்கப் பட்டார்கள். ஏராளமான
முஸ்லிம்கள் பாதுகாப்பாக விளம்பரப்பலகைகளை சூழ்ந்து நின்று
கொண்டதால்,தங்களையும் விஞ்சி நிற்கும் அந்தக் கூட்டத்தைக் கண்டு
காவல்துறையினர் நம்பிக்கையற்றவர்களானார்கள்.
அதிகாரமளித்தல்
அத்துடன்
காவல்துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே வார்த்தை
பரிமாற்றங்களும் இடம் பெற்றன, மசூதி நிருவாகத்துக்கு பொறுப்பானவர்கள்தான்
முறையான அனுமதியில்லாமல் சட்டத்தைமீறி தன்னிச்சையாக அந்த விளம்பரப்பலகைகளை
வைத்திருக்கிறார்கள் என்கிற தப்பான எண்ணத்தையே காவல்துறையினர்
கொண்டிருந்தனர். மசூதி நிருவாகம் அதற்குப் பொறுப்பில்லை வீதி அபிவிருத்தி
அதிகாரசபை முறையான சட்ட விதிகளின்படி அதை அமைத்துள்ளார்கள் என்று
காவல்துறையினருக்கு உணர்த்தப்பட்டது. அனுமதியில்லாமல் விளம்பரப்பலகைகளை
அகற்றுவது சட்டவிரோதம் என பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
காவல்துறையினர், மசூதி நிருவாகத்தினரது சம்மதத்துடன்,வீதி அபிவிருத்தி
அதிகாரசபையினரின் முறையான அனுமதியைப் பெற்றால் பரக்காஹதெனியா பொதுமக்கள்
அந்த விளம்பரப்பலகைகளை அகற்றுவதை தடுக்கமாட்டார்கள் என்று முஸ்லிம்
பெரியவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தார்கள்.
அந்தக்
குறிப்பை கேட்ட காவல்துறையினர், ஒருவேளை தாங்கள் சட்டத்துக்கு அதிகமாக
நடக்கிறோம் என்பதையும் மற்றும் தங்களுக்கு அங்கு வேலை எதுவுமில்லை
என்பதையும் உணர்ந்து அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள். மக்களும்கூட
அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள், ஆனாலும் சில இளைஞர்கள் ஒருவேளை
காவல்துறையினர் திரும்பி வந்தாலும் என்று ஐயுற்று முக்கியமான இடங்களில்
கண்காணிப்புக்காக நின்று கொண்டார்கள்.
விக்கிரமசிங்க
பின்னர்
திங்கள் இரவு 8 மணியளவில் மாவத்தகம பிரதேசசபை அங்கத்தவர் தசீம் அவர்களின்
இல்ல வளாகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பின ;(யு.பி.எப்.ஏ) தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,
மாவத்தகம தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(எஸ்.எல்.எப்.பி)
அமைப்பாளருமான நிரஞ்சன் விக்கிரமசிங்காவும் கலந்து கொண்டிருந்தார்.
குருநாகல எஸ்.எல்.எப்.பி அமைப்பாளரான அப்துல் சத்தாரும் அங்கு பிரசன்னமாகி
இருந்தார்.
தேவையில்லாமல்
ஏற்பட்ட அசௌகரியத்துக்காக நிரஞ்சன் விக்கிரமசிங்கா மக்களிடம் தனது
வருத்தத்தை தெரிவித்ததோடு, அந்த விளம்பரப்பலகைகள் அகற்றப்பட மாட்டா என்கிற
உத்தரவாதத்தையும் வழங்கினார். தான் காவல்துறையினரை இந்த விடயம் சம்பந்தமாக
தொடர்பு கொண்டு அந்த விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்கான மேற்கொண்டு
நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார். ஒருவேளை பொது பல சேனா பரக்காஹதெனியாவுக்குள் ஆக்கிரமிப்புச்
செய்து விளம்பரப்பலகைகளை சேதப்படுத்த முயற்சிக்கலாம் என்று
சுட்டிக்காட்டப்பட்டதுக்கு,விக்கிரமசிங்க பதிலளிக்கையில் அந்தப் பலகைகளை
பாதுகாப்பதற்காக காவல்துறையினர் அந்த இடத்தில் நிறுத்தப்படுவார்கள் என
உறுதியளித்தார். உண்மையில் இது மிகவும் வஞ்சiயானது,ஏனென்றால் ஞ}னசார
தேரரின் உத்தரவுப்படி விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்கு முயன்ற அதே
காவல்துறையினரே இப்போது அந்த விளம்பரப்பலகைகளுக்கு பொது பல சேனாவினால்
ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பார்கள் என்று சொல்லுவதுதான்.
இப்படியாக
பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தின் நவீன அத்தியாயம்
ஒருவாறு நிறைவடைந்தது. ஆனால் இதன் பின்னால் மற்றொரு கதை உருவாகிறது, ஒரு
காலத்தில் தம்மதீப என விபரிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நாட்டில்,
சமாதானத்தையும் மற்றும் இன நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்காக யுத்தம்
நடத்தும் பாசிச மதவாத இனவாதிகளுக்கு அமைதி காக்கும்படி கோரிய
விளம்பரப்பலகைகள்கூட இப்போது எதிரியாகத் தோன்றுவதுதான் அந்தப் புதிய கதை.
தேனீ மொழிபெயர்ப்பு:; எஸ்.குமார் நன்றி தேனீ மடு அன்னையின் ஆவணித் திருவிழா
15/08/2013 மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று வியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மடு
திருவிழா திருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு
ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
இதில்
திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி அதிவணக்கத்திற்குரிய ஜோசப்
ஸ்பிற்ரேரி ஆண்டகை,கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் இளைப்பாறிய பேராயர்
ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை, யாழ் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய தோமஸ்
சௌந்திரநாயகம் ஆண்டகை, கண்டி மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய வியான்னி
பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுர மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோபட்
அன்றாடி ஆண்டகை மற்றும் நுற்றிற்கும் மேற்பட்ட குருக்களும் இணைந்து
திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து மடு
அனனையின் திருச்சொரூப பவனியும் இடம் பெற்றது. இதன் போது சுமார் 5
இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின்
ஆசிரைப்பெற்றனர்.

மடு திருவிழா திருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
இதில் திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பிற்ரேரி ஆண்டகை,கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் இளைப்பாறிய பேராயர் ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை, யாழ் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகை, கண்டி மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய வியான்னி பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுர மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோபட் அன்றாடி ஆண்டகை மற்றும் நுற்றிற்கும் மேற்பட்ட குருக்களும் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து மடு அனனையின் திருச்சொரூப பவனியும் இடம் பெற்றது. இதன் போது சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசிரைப்பெற்றனர்.
தேர்தல் வன்முறைகள்
2013-08-18 09:20:16 | General
யாழ்ப்பாண மாவட்டத்தில்
நெடுந்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக தேர்தல் பரப்புரைகளில்
ஈடுபட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்கள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபைத் தேர்தலுக்காக
அமைதியாக ஆரம்பமாகிய பிரசார நடவடிக்கைகள் வன்முறையை நோக்கிச் செல் கின்றதா
என்ற கேள்வியை இச்சம்பவம் எழுப்பியிருக்கின்றது. இதனைத் தடுத்து நிறுத்தி
நியாயமானதும், சுயாதீனமானதுமான ஒரு தேர்தலை உறுதிப்படுத்துவதற்கான
செயற்பாடுகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் இச்சம்பவம்
உணர்த்தியிருக்கின்றது. வடபகுதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் நேரில்
சென்று மக்களைச் சந்திப்பதற்கும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
ஆரம்பத்திலேயே கோரிக்கை விடுத்திருந்தார்கள். குறிப்பாக, நெடுந்தீவுப்
பகுதியில் சுயாதீனமாகப் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை
அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். இந்த நிலையில் நெடுந்தீவில்
நடத்தப்பட்டுள்ள தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதலாகவே இருக்க
வேண்டும் எனச் சந்தேகிப்பதற்கு இடமுள்ளது.
வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இத்தேர்தல் எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதையிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருந்தது. போரால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி என்ற முறையில் மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் மாகாண சபையின் முக்கியத்துவம் உணரப்பட்டேயிருந்தது. மாகாண சபை தமிழர்களின் பிரச்சினைகளுக்கான இறுதித்தீர்வாக அமையாது என்பது உணரப்பட்டிருந்தாலும், இந்தத் தேர்தலை மக்கள் எதிர்பார்த்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. அதேவேளையில், இத்தேர்தலை உடனடியாக நடத்தாமல் பல்வேறு காரணங்களைக் கூறி பிற்போடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளின் பின்னணியிலுள்ள அரசியலும் வெளிப்படையானது தான். போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில்தான் இத்தேர்தல் நடத்தப்படுகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் நேர்மையானதாகவும், சுயாதீனமானதாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அதிகளவுக்குக் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையிலேயே நெடுந்தீவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல் என்பது எப்போதும் வன்முறைகளுடன் இணைந்ததாகவே இருந்துள்ளது. மக்களின் வாக்குகளில் நம்பிக்கை வைக்காதவர்கள், வன்முறைகளை நோக்கிச் செல்கின்றார்கள். இதனால்தான், தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. கண்காணிப்புக் குழுக்களைப் பொறுத்தவரையில் உள்நாட்டுக் கண்காணிப்புக் குழுக்களைவிட, சர்வதேசக் கண்காணிப்புக் குழுக்கள் வடபகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்திருக்கின்றது. தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான உடனடியாகவே இந்தக் கண்காணிப்புக் குழுக்கள் வடபகுதியில் நிலை கொள்ள வேண்டும் என்பதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்துள்ளது. வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகளவுக்கு இருப்பதும், தேர்தல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும் சுயாதீனமான தேர்தலைப் பாதிப்பதாக அமையும் என்பதையும் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. இருந்த போதிலும் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் கண்காணிப்பாளர்கள் வடபகுதிக்குச் செல்வார்கள் எனத் தெரிகின்றது.
வடபகுதியில், மாகாண சபைக்கான தேர்தல் ஒன்று நடைபெறுவது இதுதான் முதல் முறை. தம்மை ஆளப்போறவர்களை தேர்தலின் மூலம் தெரிவு செய்வதற்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள முதலாவது வாய்ப்பு இது. நீண்டகாலப் போரால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி என்ற முறையில் அப்பகுதி மக்கள் சுயாதீனமாக தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஜனநாயகத்திலும் தேர்தலிலும் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. ஆனால், அவ்வாறான ஒரு நிலை வடபகுதியில் ஏற்படுத்தப்படவில்லை என்பதைத்தான் நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் உணர்த்துகின்றது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும் நெடுந்தீவுப் பகுதியில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முடியவில்லை. மற்றொரு தீவில் வைத்து கூட்டமைப்பினர் தாக்கப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். தீவுப் பகுதியில் சுதந்திரமாகச் சென்று பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனால்தான் வலியுறுத்தியிருந்தது.
நெடுந்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் கடந்த நான்கு நாட்களாக வட மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர்கள் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் தொடர்பில் எவ்வாறான விசா ரணைகள் நடத்தப்பட்டுள்ளன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தகவல் எதுவும் இல்லை. இது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலமாகவே தேர்தல் சுயாதீனமானதாக நடைபெறுகின்றது என்ற நம்பிக்கையை அரசாங்கத்தினால் ஏற்படுத்த முடியும். அதேவேளையில், தேர்தல் கண்காணிப்பாளர்கள் உரிய காலத்தில் வடபகுதியில் நிலைநிறுத்தப்படுவதன் மூலமாகவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதைத் தவிர்க்கக்கூடியதாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
- See
more at:
http://www.thinakkural.lk/article.php?editorial/gizxzdszfh65066a711a119a13077pazdw8a7a9f877b5f379bfe9ea24jcyf#sthash.rVXDKVgN.dpufவடமாகாண சபைக்கான தேர்தல் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இத்தேர்தல் எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதையிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருந்தது. போரால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி என்ற முறையில் மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் மாகாண சபையின் முக்கியத்துவம் உணரப்பட்டேயிருந்தது. மாகாண சபை தமிழர்களின் பிரச்சினைகளுக்கான இறுதித்தீர்வாக அமையாது என்பது உணரப்பட்டிருந்தாலும், இந்தத் தேர்தலை மக்கள் எதிர்பார்த்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. அதேவேளையில், இத்தேர்தலை உடனடியாக நடத்தாமல் பல்வேறு காரணங்களைக் கூறி பிற்போடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளின் பின்னணியிலுள்ள அரசியலும் வெளிப்படையானது தான். போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில்தான் இத்தேர்தல் நடத்தப்படுகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் நேர்மையானதாகவும், சுயாதீனமானதாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அதிகளவுக்குக் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையிலேயே நெடுந்தீவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:
Post a Comment