அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
சிட்னியில் இனிய தீபாவளி சந்திப்பு
சிட்னி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்திய இனிய தீபாவளி சந்திப்பு கடந்த சனிக்கிழமை நவம்பர் மாதம் 17ம் நாள் ஸ்ரீ துர்க்கை அம்மன் கலாச்சார மண்டபத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது. குத்து விளக்கு ஏற்றலுடன் துவங்கிய விழா பங்கேற்றோர் மனதை கவர்ந்த பரத நாட்டியம், இசை நிகழ்ச்சி, திரை இசை ஆடல் பாடல்கள், குறுநாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளுடன் தொடர்ந்தது. தமிழக இலக்கிய இணையர் இரா மோகன் மற்றும் நிர்மலா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட விழாவில் பேராசிரியரின் இனியவை நாற்பது என்று நூல் வெளியிடப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வாக பேராசிரியர் இரா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையா? அதிர்ஷ்டமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. திறமையே என்ற அணியில் முனைவர் நிர்மலா மோகன், முத்து ராமச்சந்திரின், குமாரசெல்வம் ஆகியோரும் அதிர்ஷ்டமே என்ற அணியில் அனகன் பாபு, சௌந்தரி கணேசன், பொன்ராஜ் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை திறம்பட எடுத்துரைத்தனர். நடுவர் தமது தீர்ப்பில் திறமைக்கு 51% அதிர்ஷ்டத்திர்க்கு 49% என்று தீர்பளித்தார். கலந்து கொண்டோர் காலம் கடந்ததையும் பொருட்படுத்தாமல் மன நிறைவுடன் கலைந்து சென்றனர்.
மலேசியா வாசுதேவன் - காலத்தின் தேவையாய் வந்து சேர்ந்த கலைஞன்!
.
"தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன் போலப் பாட யார் இருக்கிறார்?" என்று எனக்கு விபரந்தெரிந்த காலம் தொட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குத் தக்கதொரு பதிலாக வந்துசேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன். ஆனாலும் அவர் டி.எம்.எஸ். மாதிரியும் பாடவில்லை, வேறு யார்போலவும் பாடவில்லை. அவர் அவர்மாதிரித்தான் பாடினார்.
கே.ஜே.ஜேசுதாஸ் சாயலில்தான் ஜெயச்சந்திரன் குரல் இருக்கிறது என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை உன்னிப்பாகக் கவனிப்பாருக்கு கண்டசாலா நினைவுக்கு வரவே செய்வார். பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலும்கூட ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ரகம்தான். இப்படிச் சொல்வதால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவருக் கான தனித்துவமே இல்லை என்பதாகாது. ஆனால், இந்த யாரின் சாயலும் இல்லாமல், இந்த யாரையும்விட தனது கம்பீரமான தனித்த குரலைத் தமிழ் சினிமாவில் நெடுங்காலத்துக்குப் பதிவு செய்தவர் டி.எம்.எஸ். மட்டுமே. தமிழை மிகச்சரியாக உச்சரித்த அவரின் அந்தக் குரலைத்தான் சாதாரண ரசிகன் "ஆண்" குரல் என்று அங்கீகரித்தான். அந்த ஆண் குரலுக்குப் பின்னாளில் வெற்றிடம் ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சத்தைப்போக்க தமிழ் சினிமாவிற்குள் வந்துசேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன்.
இலங்கைச் செய்திகள்
‘இந்திய அதிகாரிகள் என்னிடம் இரண்டு முறை நேர்காணல் நடத்தினார்கள்’ என்கிறார் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்
கந்தரோடை அம்மன் ஆலயத்தில் மூன்று விக்கிரகங்கள் திருட்டு
யாழ். இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு அழைப்பு
நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது
யாழில் போலிச் சாமியாரின் கபட நாடகம்: நம்பியோருக்கு ஆறரை இலட்சம் ரூபா இழப்பு
பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயம்: ஸர்மிளா செய்யித்
நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்
தாய்மை -சிட்னி சொக்கன்-
நமக்கு குழந்தை
பிறந்துடுச்சு, அதுவும் ஆண்
குழந்தை. பாருங்க அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் என்று தூக்கத்தில் பிதற்றிக்
கொண்டிருந்தாள் தேவசேனா.
அருகில் படுத்திருந்த
அவள் கணவன் முருகன், அவளை
எழுப்பி, “என்னம்மா கனவா” என்று கேட்டான்.
அவளும், “வெறும் கனவு தானா, நான் கூட நமக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துடுச்சுன்னு நினைச்சுட்டேன்”
என்றாள்.
“இப்ப மணி நாலு.
விடியற்காலைல காண்கிற கனவு பலிச்சிடும்னு சொல்லுவாங்க. கவலைப்படாதே, சீக்கிரம் நமக்கு குழந்தை பிறக்கும்”
என்றான் முருகன்.
“நமக்கு கல்யாணம் ஆகி
ஆறு வருஷம் முடிஞ்சுடுச்சு,
ஒரு தடவை கூட எனக்கு நாள் தள்ளிப் போகலை. எனக்கு தெரிஞ்சு எத்தனை பேருக்கு
தெரியுமா கல்யாணம் ஆன அடுத்த மாசமே தள்ளிப் போயி, முத வருஷ
கல்யாண நாளையே, குழந்தையோடு கொண்டாடி இருக்காங்க. எனக்கு
மட்டும் ஏங்க இப்படி! அந்த ஆண்டவனுக்கு ஏங்க நம்ம மேல கருணையே இல்லை. நான் என்ன
காரு, பங்களாவா கேக்குறேன், ஒரு
குழந்தையை தானே கேக்குறேன்” என்று அவன் மார்பில் தலை சாய்த்து விசும்பினாள்
தேவசேனா.
வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 47 - நிலைக் கண்ணாடி
ஞானா: அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்.
அப்பா: சந்தேகமோ ஞானா? உனக்குச் சந்தேகம் வந்தால் எனக்குச் சங்கடம்தான்.
ஞானா: இப்ப பாருங்கோ அப்பாää ஆதியிலை திருக்குறளுக்கு பத்துப்பேர் உரை எழுதி யிருக்கினம் எண்டு சொல்லுகினம். இந்தப் பத்துப்பேரும் ஏனப்பா ஒரே கருத்தைச் சொல்லேல்லை.
அப்பா: ஞானா திருக்கறள் வந்து ஒரு நிலைக் கண்ணாடி மாதிரி. எவர் எவர் வந்து அதுக்கு முன்னாலை நிக்கிறாரோ அவருடைய தோற்றத்தை அப்பிடியே காட்டும். பலருடைய தோற்றமும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதானே.
சுந்தரி: அப்பாவும் மகளும் ஆரம்பிச்சிட்டியளே தர்க்கத்தை?
உலகச் செய்திகள்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
காஸாவை அடித்து நொறுக்கி அதை மீளக் கைப்பற்ற வேண்டும்: கிலாட் செரோன்
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்!
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய பெண் மருத்துவரின் மரணம்
தூக்கிலிடப்பட்டார் கசாப்!
இஸ்ரேல் உளவாளிகள் காஸாவில் படுகொலை!
எகிப்தில் ரயிலுடன் மோதிய பஸ்: 50 சிறுவர்கள் பலி
தமிழ் சினிமா
போடா போடி |
![]() |
லண்டனில் வாழும் நாயகன் சிம்பு
காதலிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் அலைகிறார். இறுதியாக
காதலிக்கலாம் என்ற முடிவு செய்து நாயகியான வரலட்சுமியை சந்திக்கிறார்.![]() இதற்கிடையே சிம்புவுக்கும், வரலட்சிக்கும் இடையே காதல் மலர்கிறது. சிம்புவுக்கு தன் காதலி நடனப் பள்ளிக்கு செல்வது, அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது, அவள் நண்பர்களுடன் சகஜமாக கட்டி அணைப்பது, முத்தமிடுவது போன்ற நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இதனால் இவர்களது காதலில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. இதனால் இருவரும் பிரிய முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள ஆழமான காதலால் பிரிய முடியாமல் தவிக்கிறார்கள். சிம்புவின் பிறந்த நாளன்று தனது வீட்டில் யாருமில்லை எனக் கூறி நாயகியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். அப்போது, சிம்புவுக்கு தெரியாமலேயே அவரது பிறந்தநாளை கொண்டாட நினைக்கும் அவரது சித்தப்பா கணேஷூம், அவரது மனைவியும் இவர்களை பார்த்துவிடுகிறார்கள். உடனே, இருவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ![]() பின்பு, தான் ஒருநாள் உன் பேச்சை கேட்கவேண்டும், மற்றொரு நாள் என் பேச்சை நீ கேட்கவேண்டும் என்ற நிபந்தனையோடு வரலட்சுமி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதற்கு சிம்புவும் சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. வரலட்சுமியை நடனப் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு சிம்புவுக்கு கணேஷ் யோசனை கூறுகிறார். அதன்படி, சிம்புவும் வரலட்சுமியும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப்பற்றி ஒன்றும் அறியாத வரலட்சுமி, ஒருகட்டத்தில் இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்கிறார். இதுகுறித்து சிம்புவுடன் சண்டைபோட, அப்போது எதிர்பாராத விதமாக இவர்களின் குழந்தை விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறது. இதனால் விரக்தியடைந்த வரலட்சுமி சிம்புவை பிரிந்து செல்கிறார். ![]() இப்படத்தில் சிம்பு இளமை துடிப்புடன், மிடுக்கான இளைஞனாக வலம் வருகிறார். தனது முந்தைய படங்களில் உள்ளது போல், பஞ்ச் வசனங்களும், பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மென்மையான நடிப்பில், ஆக்ரோஷமான வசனங்களை குடும்ப பாணியில் பேசியிருப்பது அழகு. அம்மாவின் அழகையும், அப்பாவின் கம்பீரத்தை சேர்த்துச் செய்த கலவையாக இருக்கும் வரலட்சுமியிடம் அறிமுகப்படத்திலேயே கலக்கி இருக்கிறார்… எனக்குக் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். ‘போடா போடி’ படம் ‘அலைபாயுதே’ பட பாணியில் ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. ஸ்வீட் நத்திங்ஸ்ல ஆரம்பிச்சு, டீன் ஏஜ் காதல், பொசஸிவ்னெஸ்னு நிறைய ட்ரீட் இருக்கு. ஒரே படத்தில் காதல், குழந்தை, பாசம்னு நடிக்க ஸ்கோப் இருந்த கதாபாத்திரம். இந்தப் படத்தில் நடிக்கலைன்னா தான் நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்!" என்று போடா போடியை காதலிக்கிறார்! இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தனக்கு கிடைப்பது உறுதி என்று நம்பவும் செய்கிறார்! வரலட்சுமி. ![]() தரண் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. ‘லவ் பண்லாமா? வேணமா?’, ‘ஐ ஆம் ஏ குத்து டான்ஸர்’ பாடல்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று ஆட வைக்கின்றன. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் டன்கன் டெல்போர்ட் ஒளிப்பதிவில் லண்டனின் அழகை மேலும் அழகாக காட்டியிருக்கிறார். படத்தின் இளமையான தோற்றத்துக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா என்றால் அது மிகையல்ல. நாகரீகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்களின் பாசமும், பண்பாடும் என்றுமே மாறாது என்பதை சொல்ல முன்வந்த இயக்குனருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். போடா போடி சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ரொமாண்டிக் தீபாவளியை பரிசளிக்கப் போகிறது! நடிகர்: சிம்பு. நடிகை: வரலட்சுமி. இயக்குனர்: விக்னேஷ் சிவன். இசை: தரண். ஒளிப்பதிவு: டங்கன் டெல்ஃபோர்டு. நன்றி விடுப்பு |