போடா போடி |
![]() |
லண்டனில் வாழும் நாயகன் சிம்பு
காதலிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் அலைகிறார். இறுதியாக
காதலிக்கலாம் என்ற முடிவு செய்து நாயகியான வரலட்சுமியை சந்திக்கிறார்.![]() இதற்கிடையே சிம்புவுக்கும், வரலட்சிக்கும் இடையே காதல் மலர்கிறது. சிம்புவுக்கு தன் காதலி நடனப் பள்ளிக்கு செல்வது, அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது, அவள் நண்பர்களுடன் சகஜமாக கட்டி அணைப்பது, முத்தமிடுவது போன்ற நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இதனால் இவர்களது காதலில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. இதனால் இருவரும் பிரிய முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள ஆழமான காதலால் பிரிய முடியாமல் தவிக்கிறார்கள். சிம்புவின் பிறந்த நாளன்று தனது வீட்டில் யாருமில்லை எனக் கூறி நாயகியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். அப்போது, சிம்புவுக்கு தெரியாமலேயே அவரது பிறந்தநாளை கொண்டாட நினைக்கும் அவரது சித்தப்பா கணேஷூம், அவரது மனைவியும் இவர்களை பார்த்துவிடுகிறார்கள். உடனே, இருவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ![]() பின்பு, தான் ஒருநாள் உன் பேச்சை கேட்கவேண்டும், மற்றொரு நாள் என் பேச்சை நீ கேட்கவேண்டும் என்ற நிபந்தனையோடு வரலட்சுமி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதற்கு சிம்புவும் சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. வரலட்சுமியை நடனப் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு சிம்புவுக்கு கணேஷ் யோசனை கூறுகிறார். அதன்படி, சிம்புவும் வரலட்சுமியும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப்பற்றி ஒன்றும் அறியாத வரலட்சுமி, ஒருகட்டத்தில் இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்கிறார். இதுகுறித்து சிம்புவுடன் சண்டைபோட, அப்போது எதிர்பாராத விதமாக இவர்களின் குழந்தை விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறது. இதனால் விரக்தியடைந்த வரலட்சுமி சிம்புவை பிரிந்து செல்கிறார். ![]() இப்படத்தில் சிம்பு இளமை துடிப்புடன், மிடுக்கான இளைஞனாக வலம் வருகிறார். தனது முந்தைய படங்களில் உள்ளது போல், பஞ்ச் வசனங்களும், பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மென்மையான நடிப்பில், ஆக்ரோஷமான வசனங்களை குடும்ப பாணியில் பேசியிருப்பது அழகு. அம்மாவின் அழகையும், அப்பாவின் கம்பீரத்தை சேர்த்துச் செய்த கலவையாக இருக்கும் வரலட்சுமியிடம் அறிமுகப்படத்திலேயே கலக்கி இருக்கிறார்… எனக்குக் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். ‘போடா போடி’ படம் ‘அலைபாயுதே’ பட பாணியில் ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. ஸ்வீட் நத்திங்ஸ்ல ஆரம்பிச்சு, டீன் ஏஜ் காதல், பொசஸிவ்னெஸ்னு நிறைய ட்ரீட் இருக்கு. ஒரே படத்தில் காதல், குழந்தை, பாசம்னு நடிக்க ஸ்கோப் இருந்த கதாபாத்திரம். இந்தப் படத்தில் நடிக்கலைன்னா தான் நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்!" என்று போடா போடியை காதலிக்கிறார்! இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தனக்கு கிடைப்பது உறுதி என்று நம்பவும் செய்கிறார்! வரலட்சுமி. ![]() தரண் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. ‘லவ் பண்லாமா? வேணமா?’, ‘ஐ ஆம் ஏ குத்து டான்ஸர்’ பாடல்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று ஆட வைக்கின்றன. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் டன்கன் டெல்போர்ட் ஒளிப்பதிவில் லண்டனின் அழகை மேலும் அழகாக காட்டியிருக்கிறார். படத்தின் இளமையான தோற்றத்துக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா என்றால் அது மிகையல்ல. நாகரீகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்களின் பாசமும், பண்பாடும் என்றுமே மாறாது என்பதை சொல்ல முன்வந்த இயக்குனருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். போடா போடி சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ரொமாண்டிக் தீபாவளியை பரிசளிக்கப் போகிறது! நடிகர்: சிம்பு. நடிகை: வரலட்சுமி. இயக்குனர்: விக்னேஷ் சிவன். இசை: தரண். ஒளிப்பதிவு: டங்கன் டெல்ஃபோர்டு. நன்றி விடுப்பு |
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
No comments:
Post a Comment