![]() |
By
M.D.Lucias 13/08/2012 |

உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட்டின் சாதனை, அமெரிக்க நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸின் பதக்க சாதனை மற்றும் ஓய்வு, பல்வேறு உலக சாதனைகள் மற்றும் ஒலிம்பிக் சாதனைகளுடன் முடிவுக்கு வந்தது 30-வது ஒலிம்பிக் போட்டி.
தொடக்க நிகழ்ச்சியைப் போலவே, நிறைவு விழாவும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை உள்ளிட்டவற்றுடன் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
பயங்கரவாதிகள் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நவீன ஒலிம்பிக்கை 3 முறை நடத்திய ஒரே நகரம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையைப் பெற்றுள்ளது லண்டன் நகரம்.



உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீ., 200 மீ., 100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்து வரலாறு படைத்தார். மகளிர் 100 மீ. தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி உலக சாதனையைப் பதிவு செய்தது.
ஒலிம்பிக் மகளிர் நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் 17 வயது வீராங்கனை மிஸ்ஸி ஃபிராங்க்ளின் 4 தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் உலக ரசிகர்களுக்கு பரிட்சயமானார். முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிரிட்டனின் நிகோலா ஆடம்ஸ் தங்கம் வென்றார்.அரேபியா, கத்தார், புருணை ஆகிய நாடுகள் முதல்முறையாக வீராங்கனைகளை போட்டிக்கு அனுப்பின. இரு கால்களையும் இழந்தவரான தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் 400 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்று பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். 400 மீ. ஓட்டத்தில் அரையிறுதி வரை முன்னேறினார். 400 மீ. தொடர் ஓட்டத்தில் பிஸ்டோரியஸ் அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது. சாதனைகளுடன் நிறைவடைந்தது லண்டன் ஒலிம்பிக் திருவிழா

அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ், இந்த ஒலிம்பிக்கில் 4 தங்கம் உள்பட மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். இந்த ஒலிம்பிக்கில் அவர் 3-வது பதக்கத்தை வென்றபோது ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்றவரான சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிசாவின் சாதனையை முறியடித்தார். மூன்று ஒலிம்பிக் போட்டியையும் சேர்த்து 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்று புதிய சாதனை படைத்த பெல்ப்ஸ் இந்த ஒலிம்பிக்கோடு ஓய்வு பெற்றார்.
உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீ., 200 மீ., 100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்து வரலாறு படைத்தார். மகளிர் 100 மீ. தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி உலக சாதனையைப் பதிவு செய்தது.

அரேபியா, கத்தார், புருணை ஆகிய நாடுகள் முதல்முறையாக வீராங்கனைகளை போட்டிக்கு அனுப்பின. இரு கால்களையும் இழந்தவரான தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் 400 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்று பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். 400 மீ. ஓட்டத்தில் அரையிறுதி வரை முன்னேறினார். 400 மீ. தொடர் ஓட்டத்தில் பிஸ்டோரியஸ் அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது.

பதக்கப் பட்டியலில் முதல் 10 நாள்கள் வரை சீனாவே முதலிடத்தில் இருந்தது. ஆனால் தட கள போட்டிகளில் வழக்கம்போல் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தவே, சீனா 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் 53 பிரிவுகளில் 83 பேர் பங்கேற்றனர். இதில் துப்பாக்கி சுடுதலில் ககன் நரங் வெண்கலமும், விஜய் குமார் வெள்ளியும் வென்றனர். பாட்மிண்டன் சாய்னாவும், குத்துச்சண்டையில் மேரி கோமும் வெண்கலம் வென்றனர். மல்யுத்தத்தில் யோகேஷ்வர் தத் வெண்கலமும், சுஷில் குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மொத்தத்தில் இந்தியா 6 பதக்கங்களை வென்றதால் லண்டன் ஒலிம்பிக் இந்தியாவுக்கு மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது.

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ளது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment