மேலும் சில பக்கங்கள்

வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை


  லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தி யத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது,

சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 


எனினும் சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு கூறி வருகிறது. இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சரணடைய முற்பட்ட வேளையில் இலங்கைப் படையினரால் இவ்வாறே கொல்லப்பட்டனர்.

அதற்கான சாட்சியங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. எனினும் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். _

No comments:

Post a Comment