மேலும் சில பக்கங்கள்

தென் துருவ தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆர்பாட்டம்

                                                                                                          - நாதன் - 
• அவுஸ்திரேலியாவிற்கான ஸ்ரீ லங்கா தூதரின் நியமனத்தை எதிர்த்து தமிழர்கள் போராட்டம்


• போர் குற்றவாளி குற்றம் சாட்டப்படும் கடற்படை தளபதி இங்கு தேவை இல்லை என தலை நகர் கான்பெர்ராவில் ஆர்பாட்டம்

• அவுஸ்திரேலிய பிரசை பாலித கொஹோன மீதும் போர் குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை



அவுஸ்திரேலிய தமிழர்களால் தென் துருவ தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் (Australian Federation of Tamil Associations - AFTA ) தலைமையில் சிட்னி ஈழத் தமிழர் கழகமும் கான்பெர்ர தமிழ் சங்கமும் இணைந்து இந்த ஆர்பாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்தானர்.



கன்பராவில் அமைந்துள்ள பாராளுமன்றத்திற்கு முன்பாக இந்தத் ஆர்பாட்டம் பதாகைகள் கட்டமைப்புகள் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவிற்கான இலைங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி தமிழ் மக்கள் மீதான 2009 தாக்குதலிற்கு மின்னிலை வகுத்தவர் என்றும் இதன் மூலம் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணத்திற்கு இவரே காரணம் எனமும் தமிழ் மக்கள் தமது குற்றச்சாட்டை முன் வைத்தனர் . ஸ்ரீ லங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள் மீது கடற்படை படகுகள் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதனால் மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் குறுகிய அடைபட்ட பகுதியில் பல நூற்றுகணக்கான பொதுமக்கள் கொல்லப்படட்டது அனைவரும் அறிந்ததே.



15 ஆண்டுகளிற்கு முன்னால் இந்தோநிசியாவினால் நியமிக்கப்பட்ட தூதரை போர் குற்ற சாட்டுகளினால் ஆஸ்திரேலியா அரசு நிராகரித்ததை ஆர்பாட்டக்காரர்கள் குறிப்புட்டு காட்டினர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்ரீ லங்காவிற்கு அவர்கள் செல்ல முடியாது என பயமுருத்தப்பட்டபோதிலும் துணிவுடன் அவர்கள் கலந்து கொண்டனர். இதன் முக்கிய பிரதிபலிப்பாக ஆர்பாட்டத்தில் ஈடு பட்ட தமிழர்கள் இருந்த இடத்திற்கு ஆளும் கட்சியின் மூன்று முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து பேச்சு நிகழ்த்தினர். இப் பேச்சின் போது ஆஸ்திரேலியா அரசின் நிலைப்பாட்டை அவர்கள் விளக்கினர்.



ரீட் தொகுதி MP ஜான் மேர்பி தனது உரையில் தொடர்ந்து வரும் ஸ்ரீ லங்கா அரசுகள் தமிழர்களை நீதியான் முறையில் நடத்துவதில்லை என்பதை தான் அறிவேன் எனவும் தமிழர்களுக்கு நீதியான நிரந்தர தீர்வுக்கு தாம் தொடர்து ஆதரவு தருவேன் எனவும் தெரிவித்தார்.



பாராளுமன்ற உறுப்பினரான லோரி பெர்குசன் இலங்கை மீதான விவாதம் வேண்டி தனியார் பேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாக தெரிவித்தார். இலங்கையில் நடை பெற்ற அழிவுகள் பற்றி விசாரிக்க சர்வதேச சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா அரசால் நியமிக்கப்பட்ட நடந்த நிகழ்வுகள் மற்றும் மீள் நிவாரண ஆணைக்குழு போர் குற்றம் பற்றி விசாரிக்க அதிகாரம் அற்ற குழு என அவர் தெரிவித்தார். ஸ்ரீ லங்காவால் நியமிக்கபட்ட அட்மிரல் சமரசிங்கா போர் குற்றவாளியாக காணப்பட்டால் தாம் அவரது நியமனத்தை எதிர்ப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.



கிரீன்வே தொகுதி பாராழுமன்ற உறுப்பினரான மிஷேல் ரோலேன்ட் தனது தொகுதி அவுஸ்திரேலியாவில் அதிக தமிழ் மக்கள் வாழும் தொகுதி எனவும் தமிழ் மக்களால் தமது உடன்பிறப்புகளுக்கு என எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தாம் ஆதரிப்பேன் எனவும் தெரிவித்தார். மற்றைய பாராளுமன்ற உருப்பினரான லோரி பெர்குசன் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை பற்றிய விசேட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தாமும் ஆதரிப்பேன் என அவர் தெரிவித்தார்.



அங்கு கலந்து கொண்ட பசுமைக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அமண்டா பிரச்ணன் MP ஸ்ரீ லங்காவினால் நடத்தப்பட்ட போர் குற்றங்களை ஆராய இது சரியான தருணம் எனவும் அனைத்து மக்களும் இது குறித்து ஆஸ்திரேலியா அரசை வற்புறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.



இந்த எதிர்ப்பு அணியை புகைப்படம் மற்றும் வீடியோ படம் எடுக்க முனைந்த தூதரகத்தால் அனுப்பப்பட்டதாக கருதப்பட்ட மூன்று சிங்களவர்கள் தமிழர்களால் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.



மொத்தமாக தென் துருவ தமிழ் சங்கங்களால் முன்கூட்டியே விடுக்கப்பட்ட ஊடகவியலாளர் செய்திகள் காரணமாக இரண்டு வருடங்களின் பின் முதல் தடவையாக எடுக்கப்பட்ட கன்பெராவின் எதிர்ப்பு பேரணி சிறந்த பலனை அளித்தது.

13 comments:

  1. I will take my hats off to AFTA to bring Australian Parliaments to the protest rally.

    ReplyDelete
  2. Tamil Media and some people good with Rajapakse want to sabotage this procession and they are paid by Rajapakse bros.

    ReplyDelete
  3. Thirudaathae paappaa thirudaathae
    Thirudaathae paappaa thirudaathae
    Varumai nilaikku bayanthu vidaathae

    Thittam poattu thirudura koottam
    thirudikkoandae irukkuthu
    thittam poattu thirudura koottam
    thirudikkoandae irukkuthu
    athai sattam poattu thadukkura koottam
    thaduththuk koandae irukkuthu

    ReplyDelete
  4. பிறேமினிMarch 02, 2011 5:29 PM

    நீங்கள் சொன்ன கருத்து பண்பாக ஏற்றுகொள்ளத்தக்க வகையில் உள்ளது.

    நன்றி

    ReplyDelete
  5. கலைவாணிMarch 02, 2011 8:52 PM

    தீயவர் ( Ba?? Pi??ba) தலையை திருக மறந்தாய்
    சூடு சொரணை கொஞ்சமும் இல்லை

    ReplyDelete
  6. Who is he? Is it the 24 hours private owned tamil radio in Sydney, Australia? Owner is nut case?

    He likes the division in Tamil community and worry about his business.

    Money! Money! Money!!!!!!!!! voracious!!!!

    ReplyDelete
  7. குமார்March 04, 2011 9:28 AM

    தம்பிமாரே முதலில் எங்கட சமூகத்துக்குள்ளேயே களையா இருக்கிற அந்த பிறைவேற் வானொலிக்காரனைத் திருத்துங்கோ அல்லது துரத்துங்கோ பார்ப்பம், இவன் செய்யிற வேலை சிங்களவரே பெருமைப்படும் வகையில் எல்லோ இருக்குப் பாருங்கோ

    ReplyDelete
  8. தமிழச்சிMarch 04, 2011 1:25 PM

    Praba ? வாழ்வா ? சாவா?
    ஒரு கை பார்ப்போம்

    ReplyDelete
  9. can you please discuss about someone who can improve. I think you all are wasting time. Ignore him totally .

    ReplyDelete
  10. quote]c.paskaran said...
    வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன். நான் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் எந்தக் கூட்டல் குறைப்பும் இல்லாமல் சொல்லிக்கொண்டு செல்கின்றேன் இது எனது பயணத்தின் பதிவு மட்டும்தான்.
    பத்திரிகையில் எது வருவது எதை தவிர்ப்பது என்பது ஆசிரியர் குழுவின் முடிவுதான். இது எந்தப்பக்கமும் சாயாது என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும் என நினைக்கிறேன்.[/quote]


    தமிழ் முரசு ,சாயாத முரசு என்று சொன்னார்கள் ஆனால் சாய்யிர முரசு என்பது புரிந்துவிட்டது....எப்ப ஒரு வனோலிசம்பந்தப்பட்ட செய்தி வருகிறதோ உடனே பலர்(ஒருவர் பல பெயரில் வருகிறாரோ தெரியவில்லை)பின்னூட்டம் விடுகிறார்கள் அந்த வானோலிக்கு எதிராக...இதை தமிழ்முரசு கண்டும் காணாத மாதிரி இருக்கிறது காரணம் ......????????????????????

    இணைய ஊடகம் வேறு
    வானொலி(ஒலி)ஊடகம் வேறு என்பதை டமிழ்முரசு உணர வேண்டும்...இணைய உடகவியாளர் அந்த வானோலியில் அறிவிப்பாளர் என்பதற்காக மட்டும் தனது இணையத்தை பாவிப்பார் எனின் அவர் ........சாய்ந்த ஊடகவியாளர்தான்...

    ReplyDelete
  11. [quote]March 4, 2011 9:28 AM
    தமிழச்சி said...
    Praba ? வாழ்வா ? சாவா?
    ஒரு கை பார்ப்போம் [/quote]
    நீங்கள் செய்யும் வானொலி புரொகிராமில் இந்த வானொலிகாரனை திட்டுங்கள் அதை விடுத்து சும்மா இணையத்தில வந்து திட்ட வேண்டாம் எங்களிடமும் இரு வானொலியும் இருக்கு இரு வானொலி காரரின் தப்புத்தாளங்களும் எங்களுக்கு நல்லாய் விளங்கும்....

    அந்த வானொலிக்காரன் உங்களை வானொலியில்தான் திட்டுகிறார் ஆகவே தயவு செய்து துணிவிருந்தால் நீங்களும் அப்படியே செய்யுங்கள் அதைவிடுத்து சும்மா இணையத்தில் திட்ட வேண்டாம்.....

    ReplyDelete
  12. Can you please discuss about someone who can improve. I think you all are wasting time. Ignore him totally .

    ReplyDelete
  13. குமார்March 06, 2011 8:32 PM

    கிறுக்கன்

    நான் இங்கு இந்த வானொலிக்காரன் சமூகத்தைக் குழப்பும் வேலைகளைக் கண்ட வெக்கியாராத்தில் தான் எழுதினேன். இதையெல்லாம் அந்த வானொலிக்காரனிடம் பேசமுடியுமா என்ன? அவரின் அடிப்பொடிகள் என்னைப் பொடி பொடி ஆக்கி இருப்பார்களே? ஊடகம் என்றால் வானொலி என்றால் என்ன இணையம் என்றால் என்ன ஒன்று தான். மற்றப்படி மேலே சொன்ன மற்ற ஆட்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தமிழ்முரசு என் ஆதங்கத்தைப் பகிர உதவியதற்கு நன்றி. தமிழ்முரசு ஆசிரியர் குழுவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை போதுமா விளக்கம்?

    ReplyDelete