கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னி கிளையினர் வழங்கிய பண்ணும் பரதமும் பல்சுவைக் கலை நிகழ்வு சனிக்கிழமை 11.09.2010 அன்று Bankstown Town Hall லில் மண்டபம் நிறைந்த நிகழ்வாக இனிதே நடந்தேறியது
நிகழ்ச்சியின் ஆரம்பமாக Ganalayam - Instrumental Galaxy
இடம் பெற்றது.
திரு ரட்ணசபாபதி சுதந்திரராஜின் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தார்கள். பங்குபற்றிய அனைவரும் போட்டி போட்டு இசை வேள்வியே நடாத்தினார்கள்.Hats off
பெண் Kadri Gopalnath த்தை கண்முன் கொண்டு வந்தார்கள். நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் குறிப்பிட்டது போல். Abarna Suthanthiraraj க்கு Double Hats Off
இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தனரின் உரை இடம் பெற்றது. சற்று நீண்டுவிட்டது. காணும் நிறுத்துங்கள் என்று குரல் கொடுக்கும் அளவுக்கு இருந்தது. எதிர் வரும் காலத்தில் அமைப்பாளர்கள் கவனத்தில் கொள்வது நன்று
இடைவேளைக்கு பின்னர் Mrs Anusha Tharmaraja வின் மாணவர்கள் வழங்கிய பால நாகம்மை நாட்டிய நாடகம். மிகவும் நன்றாக வழங்கினார்கள் - மிகவும் கடிண உழைப்புக்கு பின்னர் கிடைத்த பலன் - எனது அறிவுக்கு சற்று நீண்டு விட்டது போல் தோன்றியது.
இதுதான் காரணமோ என்னவோ நாட்டிய நாடகம் முடிந்ததும் கூட்டத்தில் அரைவாசி வெளியேறிவிட்டது
எதிர் வரும் காலத்தில் ரசிகர்கள் இதனை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை இருப்பது கலைஞர்களுக்கு மகிழ்வைத் தரும் என நான் நம்புகின்றேன்
செயலாளர் திரு சேயோன் நிலைமையை புரிந்தவர் போல் நன்றியுரையை மிகவும் சுருக்கமாக முடித்தார்.
இதன் பின்னர் சப்தஸ்வராவின் நெறியாள்கையில் இன்னிசை நிகழ்வு இடம் பெற்றது. பாடிய அனைவரும் சிறப்பாக பாடினார்கள்
நிறைவாக Very Big Hats Off to கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னி கிளையினர்க்கு
தொடரட்டும் உங்கள் பணி
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு ரசிகன்
காமூ
between the programme quick change over.
ReplyDelete[quote]இதுதான் காரணமோ என்னவோ நாட்டிய நாடகம் முடிந்ததும் கூட்டத்தில் அரைவாசி வெளியேறிவிட்டது[/quote]
ReplyDeleteகாரணம்......ம்.....ம்ம்ம்......
சங்கீத, நடன மற்றும் வயலின் ஆசிரியர்களின் மாணவர்களை மேடையில் ஏற்றினால்தான் கொஞ்சம்மாவது பணம் சேர்க்க கூடியதாக இருக்கும் ... 75 பிள்ளைகளை மேடை ஏற்றினால் நிச்சமாக ஒவ்வோரு பிள்ளையின் பெற்றோர்களும் நிகழ்ச்சிக்கு வருவார்கள் .பிள்ளைகளின் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் பெற்றோர்கள் மண்டபத்த விட்டு போய்விடுவார்கள்....
கலையை ரசிப்பதை விட பிள்ளை ஒரு நிமிசம் மேடையில் வருவதை ரசிப்பதில்தான் எங்களுக்கு சந்தோசமுங்கோ.....
பிள்ளைகள் மேடையை விட்டு வெளியேறினவுடன் நாங்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிடுவமல்ல.....
Very good review.Hats off for genuine comment.
ReplyDeleteகிறுக்கன் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நம்மவர் கலையை ரசிப்பதை விட தங்கள் பிள்ளைகளை மேடையில் பார்ப்பதைத்தான் விரும்புகின்றார்கள். நானும் அநேகமான நிகழ்ச்சிகளில் இதனை அவதானித்து வருகின்றேன். உங்கள் கருத்துக்களை மிகவும் அழகான முறையில் பதிவு செய்யும் நீங்கள் ஏன் முரசில் ஒரு சில கட்டுரைகளையோ, கவிதைகளையோ எழுதக்கூடாது? தயவு செய்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளை எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்த்து காத்திருப்போம்.
ReplyDeleteஇதனை எழுதிய காமு அவர்களுக்கு நன்றிகள். இதனைப் படிக்கும் நம் மக்கள் இனியாவது சற்று யோசித்து நடப்பார்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. உங்களுக்கும் எழுத்தாற்றல் இருக்கின்றது. அதனால் நீங்கள் செல்லும் ஒவ்வொரு நிகழ்ச்சியை பற்றியும் புட்டு புட்டு வைக்கலாமே......
நன்றி
மாலா
Any one know why Bala (Saptswara) on the stage !!!!
ReplyDeleteSpecially with very casual dress !!!!!
[quote] உங்கள் கருத்துக்களை மிகவும் அழகான முறையில் பதிவு செய்யும் நீங்கள் ஏன் முரசில் ஒரு சில கட்டுரைகளையோ, கவிதைகளையோ எழுதக்கூடாது? தயவு செய்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளை எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்த்து காத்திருப்போம். [/quote]
ReplyDeleteநன்றிகள் மாலா....முயற்சி செய்கிறேன் ....பின்னூட்டம் எழுதியே புகழ் உச்சிக்கு போகலாம் என்று நினைக்கிறேன்,கதை கட்டுரை எல்லாம் பெரிசா எழுத வராது.....அதுக்கு எல்லாம் ஒரு ஞானம் வேணும்....
பின்னூட்டல் சக்கரவர்த்தி,பின்னூட்டல் திலகம்,பின்னூட்டல் அல்டிமோ,புரட்சி பின்னூட்டல் நாயகன்.இப்படி எதாவது பட்டம் எடுக்கலாம் என்று ஒரு நினைப்பு
ஜயா கிறுக்கன் அவர்களே உங்கள் விருப்பத்தை நான் மதிக்கிறேன் ஆனால் பின்னூட்ட சக்கரவர்த்தி என்ற பெயரை மட்டும் கேட்காதீர்கள். அது எனக்கு சொந்தமானது. இல்லை என்று நீங்கள் கேட்டால் நான் அமரிக்காவென்ன ஜ நா வரையும் செல்வேன் என் உடலில் ஒரு துளி இரத்தம் இருக்கும்வரை போராடுவேன ஹஹஹஹஹ நான் என்ன அரசியல் வாதிமாரி பேசிறன் போல
ReplyDelete