மேலும் சில பக்கங்கள்

யாருக்கும் நான் பயமில்லை:நடிகை காஜல்

.

பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். ஆனாலும் 'பழனி' படத்தின் மூலமாகத்தான் பிரபல்யமடைந்தார். இப்பொழுது நடிகர் கார்த்தியுடன் 'நான் மகான் இல்லை' படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்துவருகிறார்.


அண்மைக்காலமாக அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கித்தவிக்கின்ற கார்த்திக்கு மீண்டும் ஒரு கிசுகிசு தொற்றிக்கொண்டுள்ளது. நான் மகான் படத்தில் மிகவும் நெருக்கமாக நடிக்கும் காஜலுடன் அவருக்கு காதல் என்று கதை பரவியிருக்கிறது. இதுபற்றி காஜலிடம் கேட்டபோது…

எனக்கு எதுபற்றியும் பயம் கிடையாது. நான் யாருக்கும் பயப்பிடவும் மாட்டேன். அப்படியிருக்கும்போது இந்த கிசுகிசுக்களைக் கண்டு நான் எதற்குப் பயப்பிடவேண்டும். என்னைப்பற்றி என் பெற்றோருக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் என்னை முழுமையாக நம்புகிறார்கள். ஆகையினால் இதெல்லாம் சகஜமாகிவிடும்.

ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் பற்றி கவலைப்பட்டதுண்டு. அதுவே இப்பொழுது பழகிவிட்டது. எனக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. அதேபோல் என்னோடு சேர்ந்து கிசுகிசுக்கப்படுகிறவருக்கும் கவலையில்லை என்னும்போது எதைப்பற்றியும் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று தெளிவாகவே பதிலளிக்கிறார் காஜல் அகர்வால்.

No comments:

Post a Comment