மேலும் சில பக்கங்கள்

##### பெண் ####

.
             
                                xxxxxx சௌந்தரி xxxxxx




பெண் என்பது அவளது பெயர்

அவள் ஒரு இனம்

அவளுக்கு பலகோடி முகம்

அவளது உடலும் உள்ளமும் தனித்தனியாக

தவணைமுறையில் தாக்கப்படும்

பிறக்கமுதல் சிசுக்கொலை

பிறர் இறக்கும்போது உடன்கட்டை

இடையில் கற்பழிப்புஇ வன்முறை

உள்ளச்சுமைகளின் ஓயாதவலி

இவை பட்டியலிட்டு மாளாது

மெல்ல மெல்ல தடைகள் தாண்டி

முட்டிமோதி ஓட்டை உடைத்து

வெளியேவந்து தடம் பதித்தால்

எழுதப்பட்ட சட்டங்கள் பாதுகாக்காது

எழுதப்படாத விதிகளால் ஆளப்பட்டாள்

தனிமைச் சிறைக்குள் அவஸ்தைப்பட்டாள்

ஆண்டாண்டு காலமாய்

தொடர்கின்ற பெண்ணின்கதையிது



ஊடகங்களின் குறியீடு பெண்

சாமி தொடங்கி சாமானியன் வரை

தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் பெண்

கல்லோ புல்லோ கட்டிக்கொண்டு

அழுகின்ற பேதை பெண்

ஆணும் பெண்ணும் வேறுபட்ட இனம்

இரு வேறுபாடு கொண்ட மனம்

பெண்மை என்பது வெறும் நளினமல்ல

அவளிடம் கம்பீரம் உண்டு

நேர்மையுண்டு வீரமுண்டு

ஆண்மை என்பது வெறும் ஆதிக்கமல்ல

அவனிடம் கோழையுண்டு

மூடருண்டு முரடனுண்டு

பெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்

பெண்களின் மொழி

உரிமைக்கான ஓர் குரல்

பெண்களின் கருத்து

கைதட்டலுக்கு மட்டுமல்ல

கண்களைத் திறப்பதற்கே!

7 comments:

  1. This is a beautiful poiem. It seems, she is a wel - experienced writer.

    Congratulations!

    Athi

    ReplyDelete
  2. //பெண் என்பது அவளது பெயர்
    அவள் ஒரு இனம்
    அவளுக்கு பலகோடி முகம்//
    Beautiful Poem, please write more
    Women may have many faces that is the power of women & you have realized in your poem.
    You also have to work between the rules of law and ethics. Great writing well done

    ReplyDelete
  3. பெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்....

    Is it true..? who said so..?

    ReplyDelete
  4. /பெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்....
    Is it true..? who said so..?/
    Any thoughtful mind could tell....is it not true?

    ReplyDelete
  5. //ஆணும் பெண்ணும் வேறுபட்ட இனம்
    இரு வேறுபாடு கொண்ட மனம்//
    Yes you are right, when men and women get together, there are, in effect, two worlds of his and hers. They have different values, different priorities, and different habits. And also as you said they play by different rules.

    It seems you have valued your experiences in your words. I like it.

    Varathakumar

    ReplyDelete
  6. தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் பெண்...!!! Yes it is true. She is no more than that.

    ReplyDelete