மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
" தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். அதனால் தை எப்போதுவரும் , நல்ல வழி எப்ப டிப் பிறக்கும் என்னும் எதிர்பார்ப்பும் இருந்து கொண்டே இருக்கும்.
"தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேத்தி வச்சு ( வைத்து ) தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் "
என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங் கலை , உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல் லவா ? இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோ ரினதும் பேராவலும் ஆகும்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் "
" உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு "
"சேற்றில் கால் வைக்காவிட்டால்
சோற்றில் கைவைக்க முடியாது "
இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள். பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது ! புதுப்பானை வாங்குவது ! சர்க்கரையும் , தேனும், நெய்யும் , பருப்பும் , பாலும் தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும் , கரும்பும் சேர்ந்து விடும்! இவையெல்லாம் அனுபவித்து ஆனந்தம் அடைவதற்கு வருவதுதான் தைப் பொங்கலாகும்.




.jpeg)
.jpg)



.jpg)
.jpg)