மேலும் சில பக்கங்கள்

தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

மாசி மகத்தை மனதில் நினைப்போம் !















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்……அவுஸ்திரேலியா 





நதி நீராடுதல் நலனே நல்கும்
அதனை முன்னோர் அவசிய மாக்கினார்
ஒவ்வொரு தினமும் உன்னத மென்று
உள்ள மெண்ணி இணைத்தார் வாழ்வில்

உள்ளத் தூய்மை உடலிற் றூய்மை
தெள்ளத் தெளிவுடன் தேர்ந்தார் முன்னோர்
நீரால் உடலில் தூய்மை நிறையும்
நேர்மையால் உளத்தில் தூய்மை நிலைக்கும்

உடலில் தூய்மை உளத்தில் தூய்மை
தருவதே சமயத்தின் நோக்கே ஆகும்
இரண்டுந் தூய்மை எய்திடும் நிலையில்
இறையின் நினைப்பு இதயத்தி லமரும் 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு பொழுதும் உன்னத மாகும்
உன்னதக் கருவை உட்கரு வாக்கி
உயர்பரம் பொருளை உணர்ந்திடச் செய்தார்

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்! பயணம் - 6….. சங்கர சுப்பிரமணியன்.

கவிதை:


வாழ்வும் தமிழ் நீயே
என் உயிரும் தமிழே
உன்னை விட மாட்டேன்
என் உயிர்போகும் வரையில்

வாழ்வும் தமிழ் நீயே
உயிரும் தமிழ் நீயே
உன்னை விட மாட்டேன்
என் உயிர்போகும் வரையில்

அழித்தாலும் அழியாத
அருந்தமிழே - உன்னை
இழிந்தோரையும் ஏற்றிவிடும்
எழுந்தமிழே

அழித்தாலும் அழியாத
அருந்தமிழே - உன்னை
இழிந்தோரையும் ஏற்றிவிடும்
எழுந்தமிழே

உன் பெருமை ஊரே அறியும்
உலகெல்லாம் என்றோ அறியும்
இன்னும் உன் பெருமை அறியா
எவரும் உளரோ நான் அறியேனே

வாழ்வும் தமிழ் நீயே
உயிரும் தமிழ் நீயே
உன்னை விட மாட்டேன்
என் உயிர்போகும் வரையில்

எழும் ஞாயிறு போலே நீயும்
எழுவதும் உண்மை - பாரில்
வழுவாது அறம் சொல்வதுவே
உந்தன் தன்மை

அவற்றுள் இடறுதல் மெய்யெனில் இதிலும் இடறுதல் மெய்யாம்!


…..சங்கர சுப்பிரமணியன்.


இலக்கியங்களில் இடறுதலும் இடைச்செருகலும் உண்டென்பதை யாராலும் மறுக்க இயலாது. எதையும் தராசுத் தட்டில் வைத்து சமமான எடையாக காணும்போது தராசின்முள் நடுவில் எங்கும் சாயாது நிற்க வேண்டும். அதுபோல் இலக்கியங்களிலும் அவை எவ்வகையான இலக்கியங்களாக இருப்பினும் உண்மையை காணும்போது நடுநிலையில் நிற்கும் குறிக்கோள் வேண்டும்

இடறுதல் நடந்திருப்பதை உறுதி செய்ய இரண்டு இலக்கியங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று இராமாயணம் மற்றொன்று திருக்குறள். மூல நூலான வான்மீகி எழுதிய இராமாயணத்தை தழுவி
கம்பரும் துளசிதாசரும் வழிநூலாக இராமாயணத்தை எழுதியுள்ளனர்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பலர் படி எடுத்துள்ளனர். அச்சு இயந்திரங்கள் வந்தபின் பலரால் அச்சிடப்பட்டுள்ளது. வழிநூலாக எழுதும்போது மூலநூலில் இருந்து இராமாயணம் விலகிச் செல்வதைப் போன்றே படி எடுக்கும்போது திருக்குறளும் அதன் நிலையிலிருந்து விலகிச் சென்றிருக்க வாய்ப்புள்ளது.

இப்போது விலகிச் சென்றிருப்பது இராமாயணத்திலும் திருக்குறளில் எங்ஙனம் என்றறிவோம். இராமாயணத்தில் சீதையின் சிறையெடுப்பில் வழிநூல்களில் விலகல் ஏற்பட்டுள்ளதென்றால் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் தொடங்கி படி எடுக்கும்போது பல குறட்பாக்களில் விலகல் நடந்துள்ளது.

வால்மீகி இராமாயணத்தில் இராவணன் சீதையை கையைப்பிடித்து இழுத்து சிறை எடுக்கிறான். கம்ப இராமாயணத்தில் சீதையைத் தொடாமல் இராவணன் பூமியிலிருந்து பெயர்த்தெடுத்து சீதையை சிறையெடுக்கிறான். துளசி இராமாயாணத்தில் சீதை நெருப்புடன் தஞ்சம் அடைய இராவணன் மாயையான சீதாவின் உருவை சிறை எடுக்கிறான். சீதா தீக்குளிக்கும்போது தீயில் மாய உரு மறைய உண்மையான சீதா வெளிப்படுகிறாள்.

பாட்டியின் கவலை பாட்டிக்கு! (ஒரு பக்க கதை)…..சங்கர சுப்பிரமணியன்.

நந்தகுமாரின் பாட்டி ஞானாம்பாளுக்கு வயது எழுபத்தைந்து இன்னும் ஒருவாரத்தில் வருகிறது. பாட்டியும் தாத்தாவும் மிகவும் மனதொத்த கணவன் மனைவியாக வாழ்ந்தார்களாம். ஆனால் தாத்தா என்னவோ இருபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாட்டியை தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.


தாத்தா விட்டுச் சென்றாலும் பாட்டி எப்படியோ இருபது ஆண்டுகளை ஓட்டிவிட்டாள். ஆனால் சமீபகாலமாக உலக வாழ்க்கையை வெறுத்துவிட்ட மாதிரி நடந்து கொண்டிருந்தாள். அடிக்கடி தாத்தாவிடம் போய்ச்சேர வேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தாள்.

அப்படி பேசிக்கொண்டிருந்த பாட்டியிடம்,

“பாட்டிக்கு ஏதாவது ஆசையிருக்கா?” என்றான் நந்தகுமார்.

“தாத்தாவும் நானும் சேர்ந்தமாதிரி புகைப்படமில்லை. அந்த காலத்தில் புகைப்படம் எடுக்கும் பழக்கமும் இல்லை. மேலே சென்றவர்களில் ஒருவராவது புகைப்படக்காரர் இல்லாமலா இருப்பார். அங்கு சென்றதும் பார்த்துக் கொள்ளலாம்.”

“இப்படி எல்லாம் வேறு உனக்கு ஆசை இருக்கா?”

“இரு, இரு உனக்கு தெரிந்த வயதான போட்டோகிராபர் இருந்தாரே. அவர் இருக்காரா?”

பாட்டி இப்படிக் கேட்டதும் நந்தகுமாருக்கு என்னவோபோல் ஆனது. இருக்காரு பாட்டி. அவர் மேலே போயிருந்தால் மேலே சென்றதும் தேடிப்பார்கலாம் என்று கேட்கிறாயா? அல்லது போகும்போது அவரையும் கூட்டிப் போகலாம் என்று எண்ணமா என்று கேட்டதும் பாட்டி அந்த வயதிலும் முகவாய்க் கட்டையை தோள்பட்டையில் இடித்தபடி வெடுக்கென்று எழுந்து சென்றாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

மனத்தின் இயல்பு மற்றும் அதன் பாதிப்பு

 

மனம் இயல்பாகவே முற்றிலும் தூய்மையானது. அது கெட்டதாக மாறுவது தீய நட்பின் தாக்கத்தினாலே ஆகும்.

உதாரணமாக, மல்லிகைப்பூக்களை ஒரு செய்தித்தாளில் மடித்தால், அந்த செய்தித்தாள் மல்லிகையின் மணத்தை எடுத்துக்கொள்ளும். அதேபோல், அதில் பகோடா போன்ற உணவுகளை மடித்தால், அது பகோடாவின் மணத்தை வீசும். செய்தித்தாளுக்கே தனிப்பட்ட மணம் எதுவும் இல்லை. அதில் எதை மடிக்கிறோமோ, அதன் மணத்தையே அது ஏற்றுக்கொள்ளும்.

அதேபோல, மனமும் தனித்தன்மையில் நல்லதோ கெட்டதோ அல்ல. அது எந்தச் சூழலோடு இணைகிறதோ, எந்தச் செயல்களில் ஈடுபடுகிறதோ, எந்த எண்ணங்களோடு பழகுகிறதோ, அதற்கேற்ப அதன் இயல்பு மாறுகிறது.

மனம் உயர்ந்த பாதையைப் பின்பற்றினால், அது நன்மைமிகு மனமாக வளரும். புனிதமான உணர்வுகள், நல்ல சிந்தனைகள், உயர்ந்த நடத்தை, நல்ல நட்பு, ஆன்மீகச் செயல்கள், ஒழுக்க மதிப்புகள் மற்றும் தர்மச் செயல்கள் ஆகியவற்றோடு மனம் தொடர்பு கொண்டால், அது உயர்ந்ததாய், நற்குணமுடையதாய் விளங்கும்.

மாறாக, தீய குணங்கள், கெட்ட எண்ணங்கள், தீய நட்பு மற்றும் தவறான நடத்தை ஆகியவற்றோடு மனம் தொடர்பு கொண்டால், அது மிகுந்த கெட்ட தன்மையை அடையும். உண்மையில், அது அசுரத்தனமாக மாறிவிடும்.

ஆக, மனத்தில் தன்னிச்சையாக நல்லதோ கெட்டதோ எதுவும் இல்லை. அது பெறும் தாக்கங்களினாலே நல்லதோ கெட்டதோ ஆகிறது. உங்கள் மனம் நல்லதாக இருக்க வேண்டுமெனில், நீங்கள் நல்லோரின் சங்கத்தைத் தேட வேண்டும்.

ஆத்மாவின் சாட்சி தன்மை மற்றும் மனித வாழ்வு

 

மனிதன் செய்யும் அனைத்து செயல்களும் சூரிய ஒளியினால் நடைபெறுகின்றன. ஆனால் அந்த செயல்களுக்கும் சூரியனுக்கும் நேரடியான தொடர்பு இல்லை. அதைப் போலவே, மனமும் புத்தியும் ஆத்மாவின் ஒளியினாலே செயல்படுகின்றன. ஆத்மாவின் ஒளி இல்லையெனில் மனமும் புத்தியும் இயங்க முடியாது. சூரியனைப் போல ஆத்மாவுக்கும் கடமைகளிலும் செயல்களிலும் பற்றுதல் எதுவும் இல்லை.

எப்படி மனிதன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகிறானோ, அதைப் போலவே ஆத்மாவிடமிருந்து சக்தியைப் பெறுகிறான். ஆத்மா ஒரு சாட்சி மட்டுமே. நல்வினை, தீவினை ஆகியவற்றின் பலன்கள் ஆத்மாவை பாதிக்காது.

நீர் ஓடிக்கொண்டிருக்கும்போது அதில் பிரதிபலிக்கும் நிலவின் உருவம் நகர்வது போலத் தோன்றும். ஆனால் நிலவு உண்மையில் நகர்வதில்லை. அதுபோலவே மனிதனின் துன்பம், துயரம், கவலை ஆகியவற்றிற்குக் காரணம் என்ன? அகங்காரமும் பற்றுதலும் தான் காரணம்.

பற்றுதல், மகிழ்ச்சி, துக்கம் ஆகிய அனைத்தும் மனத்திலேயே உருவாகின்றன. மனமும் புத்தியும் கருவிகள் ஆகும். இந்த கருவிகள் மூலமாகத்தான் நாம் அனைத்தையும் அனுபவிக்கிறோம். இக்கருவிகளே நம்முடைய பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. இந்த கருவிகளை நீக்கினால், நாம் ஆத்மாவின் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

மனம்: மிருகத்தன்மையும் மனிதத்தன்மையும்

 

மனத்தில் மிருகத்தன்மையும் மனிதத்தன்மையும் இரண்டும் உள்ளன. மிருகத்தன்மை மற்றும் மனிதத்தன்மை என்பவற்றின் அர்த்தத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனம் மனிதனின் ஆறு உள் பகைவர்களான காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் (ஆசை, கோபம், பேராசை, மயக்கம், அகங்காரம், பொறாமை) ஆகியவற்றால் ஆட்கொள்ளப்படும் போது, மனிதன் தனது மனிதத்தன்மையை மறந்து, மிருகத்தன்மையின் பாதையைத் தேர்ந்து, மிருக நிலைக்கு தாழ்ந்து விடுகிறான்.

மறுபுறம், மனம் மனிதத்தன்மையின் பாதையைப் பின்பற்றி, இறைவன் அருளிய மதி (சிந்தனை), கதி (விதி), ஸ்திதி (நிலை), சம்பத்தி (செல்வம்) ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தினால், மனிதன் தெய்வீக நிலைக்கு உயர்ந்து, தனது நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மிகுந்த நன்மை செய்யக் கூடியவனாகிறான்.

நல்லதற்கும் கெட்டதற்கும் மூல காரணம் மனமே. மனத்தில் உள்ள உயர்ந்த குணம் வேறு எங்கும் காண முடியாது. அதேபோல், மனத்தில் உள்ள தீய குணமும் வேறு எங்கும் காண முடியாது. மனம் எவ்வளவு நன்மையுடையதோ, அதே அளவு தீமையையும் கொண்டதாகும்.

பிரபஞ்ச சித்தத்தில் லயம்

 

ஒவ்வொருவரும் வெளிப்பாடாக உள்ள பரம்பொருள் பிரம்மத்தில் (பிரபஞ்ச சித்தத்தில்) லயமாகுவது என்பது முயற்சியால் புதிதாகப் பெறப்படும் சாதனை அல்ல. அது ஏற்கனவே உள்ள ஒரு உண்மையை திடீரென உணரும் விழிப்புணர்வே ஆகும். மனிதன் இயல்பாகவே பிரம்மமே; பிரிக்க முடியாத ஒன்றாய் அதனுடன் எப்போதும் ஒன்றியவனே.

கடலின் இயல்பின் வெளிப்பாடான உப்பு, பல நாடுகளில், பல காலங்களில், பல வடிவங்களிலும் பல சேர்மங்களிலும் காணப்படலாம். ஆனால் அதன் உண்மை தன்மை அதன் சுவையால் அறியப்படுகிறது. கடலிலிருந்து தோன்றிய உப்பு, அது சேரும் பொருள்களுக்கு—பால் ஆகட்டும், பானகம் ஆகட்டும், அல்லது சுவையற்றத் தெளிந்த நீராகட்டும்—கடலின் தன்மையை அளிக்கிறது.

அதேபோல், தனிப்பட்ட சித்தத்தின் சிறு தீப்பொறி தன்னைச் சுற்றி ஒரு கூடு பின்னி, ஒரு உருவத்தையும் பெயரையும் எடுத்திருந்தாலும், அது—அதாவது மனிதன்—தன் ஆத்ம ஸ்வரூபத்தை ஒருபோதும் இழக்க முடியாது.

எவ்வாறு கடல், “இந்த உப்பு படிகம் என்னுடையதே; நானே அதுவாக இருக்கிறேன்” என்று அறிவிக்கிறதோ, அதுபோலவே இறைவன் கீதையில் அறிவிக்கிறார்: “மமைவாம்ஶோ ஜீவலோகே ஜீவபூதஸ் ஸநாதன:” — “என் நித்திய அம்சமே இந்த ஜீவலோகத்தில் ஜீவனாகியுள்ளது.”

ஆகவேதான் வேதம் உயிர்களை “அமரத்துவத்தின் பிள்ளைகள்” என்றும் “அமர ஆனந்தத்தின் வாரிசுகள்” என்றும் அழைக்கிறது.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

23 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் கொடியேற்றம்

30 - 03 - 2026 Monசிட்னி முருகன்  திருக்கோயில் சப்பரத் திருவிழா

31 - 03 - 2026 Tueசிட்னி முருகன்  திருக்கோயில் தேர்த் திருவிழா

01 - 04 - 2026 Wedசிட்னி முருகன்  திருக்கோயில் தீர்த்தத் திருவிழா

ஆன்மிகப் பயிற்சியின் உண்மையான பலன்

 

ஒரு நிலத்தில் பயிரை அறுவடை செய்ய முன், முதலில் களைகளை அகற்ற வேண்டும்; பின்னர் நிலத்தை உழ வேண்டும்; விதைகளை விதைக்க வேண்டும்; தொடர்ந்து நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறான செயல்முறைகளின் பின்னரே அறுவடை சாத்தியமாகிறது. அதுபோலவே, மனிதனின் இதயம் எனும் நிலமும் முதலில் தீய எண்ணங்களும் தீய உணர்ச்சிகளும் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். அது அன்பால் நீரூட்டப்பட வேண்டும். ஆன்மிகப் பயிற்சிகளால் உழப்பட வேண்டும். அதன் பின்னரே தெய்வீக நாமத்தின் விதைகள் விதைக்கப்பட வேண்டும். இவ்வாறே செய்தால் மட்டுமே ஞானம் (தெய்வீக ஞானம்) எனும் அறுவடையை பெறுவதற்கான தகுதி கிடைக்கும்.

இன்றைய காலத்தில், ஆன்மிகப் பயிற்சிகள் போதனைகளை கேட்பதிலேயே முடங்கிக் கிடக்கின்றன; அவற்றைப் நடைமுறைப்படுத்துவதில் இல்லை. கேட்பது ஒரு நோயாகவே மாறியுள்ளது. வெறுமனே கேட்டவுடன், எல்லாவற்றையும் அறிந்தவர்கள் போல பெருமை பேசுகின்றனர். இந்த பைத்தியக்காரமான பெருமை, அவர்களின் அறியாமையை மேலும் ஆழமாக்குகிறது.

ஒருவர் கேட்டதை மீண்டும் மீண்டும் சிந்தித்து ஆராய வேண்டும். அந்த மனனத்தின் பின்னர், நிதித்யாசனம் செய்து, அதாவது கற்றுக் கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை உருவாகும்.

ஆனால் இன்று, மக்கள் உபந்யாசங்களை வெறுமனே கேட்பதிலேயே திருப்தி அடைகின்றனர். இது உண்மையான ஆன்மிக அனுபவத்திற்கோ, இறை உணர்விற்கோ வழிவகுக்காது.

காதல் படுத்தும் பாடு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

நட்சத்திர நடிகர்களை நாடாமல் புது நடிகர்களை கதாநாயகனாக அறிமுகப் படுத்தி படங்களை தயாரித்து வெற்றி கண்டவர் சிட்டாடல் ஸ்டுடியோஸ் அதிபர் ஜோசப் தாளியத் . 1966ம் வருடம் அவர் உருவாக்கிய படம் காதல் படுத்தும் பாடு. 


 ஆரம்பத்தில் ஜோசப் தாளியத் எடுத்த ஞான சௌந்தரி படம் டீ .ஆர் . மகாலிங்கம், டீ .ஆர் . ராஜகுமாரி நடிப்பில் வெளி வந்து பெரு வெற்றி கண்டது. தொடர்ந்து ஜெமினி, பத்மினி நடிப்பில் மல்லிகா படத்தையும் எடுத்த தாளியத் அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்த சி எல் ஆனந்தனை ஹீரோவாக்கி எடுத்த விஜயபுரி வீரன் பரபரப்பாக ஓடி ரசிகர்களின் ஆதரவை சுவீகரித்து கொண்டது. அதனை தொடர்ந்து ஜெய் சங்கரை தனது இரவும் பகலும் படத்தில் ஹீரோவாக அறிமுகப் படுத்தி தமிழ் திரைக்கு ஒரு வெற்றி நாயகனை அறிமுகப் படுத்திய பெருமையை பெற்றுக் கொண்டார் தாளியத். அதே வேகத்தில் விளக்கேற்றியவள் படத்தில் ஆதித்தனை கதாநாயகனாக அறிமுகப் படுத்தினார். 

இவ்வாறு படத்துக்கு படம் புது நடிகர்களை ஹீரோவாக

அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த தாளியத் காதல் படுத்தும் பாடுபடத்தின் மூலம் புது நடிகையை கதாநாயகியாக திரைக்கு கொண்டுவந்தார். அவர் தான் வாணிஸ்ரீ. துணை நடிகையாக நடிக்க வந்த அவருக்கு எதிர் பாராத விதமாக ஹீரோயின் ஆகும் அதிர்ஷ்டம் கிட்டியது. 


பொன்னம்பலம் நடத்தும் வாஷிங் மெஷின் நிறுனவனத்தில் அவரின் உறவினனான ராஜு வேலை செய்கிறான். அதே சமயம் அவரின் மகள் சுகுணாவையும் காதலிக்கிறான். சுகுணாவுக்கும் ராஜு மேல் காதல்தான். ஆனால் ராஜுவுடன் வேலை செய்யும் மாயாவும் ராஜூவை ஒரு தலைப் பட்சமாக காதலிக்கிறாள். இதற்கு இடையில் சுகுணாவின் மாமனான பாஸ்கர் எப்படியாவது சுகுணாவை மணக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்க கொண்டு திட்டம் தீட்டுகிறான். எல்லாம் காதல் படுத்தும் பாடு! இந்த நிலையில் மாயா திடீரென்று கொலை செய்யப் பட அப் பழி ராஜு மீது விழுகிறது. அதன் பின் ராஜு, சுகுணா ஒன்று சேர்ந்தார்களா, கொலைகாரன் பிடிபட்டானா என்பது மீதி படம் . 



இலங்கைச் செய்திகள்

 இந்தியா – இலங்கை இணைப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்கள் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு

இலங்கை - தென்கொரியா இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

சுரேஷ் சலே கைது: அரசியல் சதித்திட்டத்தின் பகிரங்க இரகசியம் - நிசாம் காரியப்பர் எம்.பி!

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



இந்தியா – இலங்கை இணைப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்கள் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு

26 Feb, 2026 | 03:54 PM

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவை இணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல முக்கிய மூலோபாய திட்டங்களை அறிவித்துள்ளது. 

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இத்திட்டங்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வு தென் ஆசியாவின் முன்னணி சுற்றுலா மற்றும் பயணக் கண்காட்சியான SATTE 2026 உடன் இணைந்து நடைபெற்றது.

இந்தியாவை இலங்கைக்கும் உலகிற்கும் மேலும் நெருக்கமாகக் கொண்டு வருவது நிறுவனத்தின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது. 

உலகச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: உச்ச தலைவர் அலி காமேனி உயிரிழந்தாரா?

எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு

பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்

கூகுள் டீப்‌மைண்ட், ஏஐ தொழில் மாற்றங்கள்: சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்கள் 



ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: உச்ச தலைவர் அலி காமேனி உயிரிழந்தாரா?

01 Mar, 2026 | 03:29 AM

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து அதிரடி வான்தாக்குதல் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் பல இராணுவ தளங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க போர் விமானங்கள் தெஹ்ரானுக்குள் நுழைந்து பல இடங்களில் குண்டுவீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வளாகம், தலைமையகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உளவுத்துறை கட்டிடங்கள் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலக்கியவெளியின் ராஜம் கிருஷ்ணன் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வு


 ஒருங்கிணைப்பு:  எம்.எம்.ஜெயசீலன்

நாள்:  சனிக்கிழமை 07-03-2026

நேரம்:

இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 8.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

வழி: ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245...

உரையாளர்கள்:

பேராசிரியர் இரா. காமராசு

பேராசிரியர் பா. இரவிக்குமார்

எம். அப்துல் றஸாக்

மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

https://www.ilakkiyaveli.com

சனி பெயர்ச்சி 2026

 SVTயில், சிவாசாரியார்கள் ஸ்ரீ சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடத்தி, அவர்களின் அருளை வேண்டிக் கொள்ள உள்ளனர். பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

சனி பெயர்ச்சி 2026 என்பது சனீஸ்வரர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் முக்கியமான ஜோதிட நிகழ்வாகும். சனி பகவான் கர்ம பலன்களை வழங்குபவர் எனக் கருதப்படுகிறார். அவர் ராசி மாற்றும் இந்த காலம், தனிநபர் வாழ்க்கையிலும், சமூக அளவிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

சனி பெயர்ச்சி காலத்தில், பக்தர்கள் சனீஸ்வரர் வழிபாடு, நவகிரக பூஜை, ஹோமம், அபிஷேகம் போன்ற ஆன்மிகச் செயல்களில் ஈடுபட்டு, அவரின் அருளையும் அனுக்ரஹத்தையும் பெற முயற்சிக்கின்றனர்.

இந்த பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியான பலன்களை அளிக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஆகையால், ஆன்மிக சிந்தனை, தன்னிலைப் பரிசோதனை, நல்ல செயல்களில் ஈடுபாடு ஆகியவை இக்காலத்தில் மிகுந்த பயனை தரும் என்று அறிஞர்கள் பரிந்துரைக்கின்றனர்.


சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் விழா! 09/03/2026

அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், விக்றோறிய மாநிலத்தில், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய, விக்றோரிய கல்விச் சான்றிதழ் ( VCE ) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டும் ஒரு விழாவைக் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகின்றது.
கடந்த வருடம் (2025) நடைபெற்ற அந்தப் பரீட்சையில் அவ்வாறு சாதனை நிகழ்த்திய மாணவர்களைப் பாராட்டும் விழா எதிவரும் 09.03.2026 - திங்கட்கிழமை, பி.ப.   5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  சாதனைபடைத்த மாணவர்கள் மட்டுமன்றி அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.  பல்சுவைக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ள இந்த விழாவுக்கு அனுமதி இலவசம். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், அன்புடன் அழைக்கிறது.
விழா நடைபெறும் இடம்:   Clayton Hall, 264, Clayton Road, Clayton  Vic  3168.

 

பக்குவம் பெற்றால் பரமனே தெரிவான் !

 






மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா


 


  நாணய மில்லா வாழ்வது முறையா
   நம்பிக்கை யில்லா நடப்பது சரியா
   ஏழ்மையை இழிவாய் கொள்வது தகுமா
   எண்ணியே பார்ப்பது கண்ணிய மாகும்

   அணைத்திட வருவார் அழிப்பது சரியா
   அல்லலைக் கொடுப்பதில் ஆனந்தம் வருமா 
   அடுத்தவர் அழுதிட வைப்பது முறையா
   அழுதிடும் கண்ணீர் அனைத்தையும் அழிக்கும்

    பசித்திடும் வயிறை வதைத்திட  வேண்டாம்
    பட்டினிப் பேயை ஓட்டிட வேண்டும்
    சுவைத்துமே சாப்பிட்டு சுகத்துடன் இருப்பார்
    பசித்திடு வயிற்றைப் பார்த்திடல் வேண்டும்

     இரக்கும் நிலையை இல்லா தொழிப்போம்
     ஏற்பார் இல்லா நிலையைக் காண்போம்
     உருக்கம் இரக்கம் உளத்தில் கொள்வோம்
     தருக்கம் தவிர்த்து தயைவுட  னிருப்போம்

இறைவன் படைப்பிலே அத்தனையும் புதுமையன்றோ?




இயற்றியவர்:---  பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்






எத்தனையோ இன்பமெலாம் இறைவாநீ படைத்தனையே

சித்தமெலாம் கிறங்கவைத்துத் திகைப்பினிலே ஆழ்த்துகிறாய்

சுத்தவெளி தனிலேயொளிச் சோதிப்பிளம் பாகிநின்ற

அத்தனேநீ அளித்திட்ட  அத்தனையும் புதுமையன்றோ?












ஆலமரக் கொப்பொன்றில் அலகாலே தும்பெடுத்துக்

கோலமிகு தூக்கணாங் குருவியெனுஞ் சிறுகுருவி

காலம்பார்த்து முட்டைகளைக் கச்சிதமாய்ப் பொரிக்கவைக்க

மேலடுக்குக் கூடுகட்டும் விந்தையென்ன விந்தையம்மா!

 















உவேசா உயிர் மூச்சு தமிழே !



































மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா




உத்தம தானபுரம் ஈன்றிட்ட முத்து
உவேசா என்றுமே தமிழுக்குச் சொத்து
தமிழ் அன்னை தவமைந்தன் அவரே
தமிழ் உலகில் வாழுகிறார் தமிழாய்

ஆங்கிலத்தை வட  மொழியைப்  பாரா
அன்னைத் தமிழ் அகமேந்தி நின்றார்
தூங்காமல் தமிழ் படித்துச் சுவைத்தார்
சுவைத் தனைத்தும் சொர்க்கமாய் கண்டார்

நல்ல தமிழ் ஆசானைக் கண்டார்
எல்லை இல்லா இன்பத்தை அடைந்தார்
கற்பவைகள் தேர்ந் தெடுத்துக் கற்றார்
கற்றபடி நடந்து அவரும் உயர்ந்தார்

நாம் படிக்கும் அத்தனையும் ஏடாய்
வீடெல்லாம் இருந்ததை நாம் அறியோம்
ஏடு தேடி ஊரெல்லாம் ஓடி
வீடிருக்கும் ஏடு கண்டு வியந்தார்

யார் யாரையும் சொல்லலாமோ?

-சங்கர சுப்பிரமணியன் .


யார் யார் யார் அவள் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? சலவைக்கல்லே முகமாக தங்கப்பாளம் இதழாக மயங்க வைத்தாளோ? என்றொரு பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?

ஆம் கேட்டிருப்பீர்கள். இது ஒரு திரைப்படப் பாடல். காதலன் காதலியைப் பார்த்து பாடுவது.

யார் யாரைப் பற்றிப் பாடினால் என்ன? நீ என்ன சொல்லவருகிறாய் என்று கடுப்பாகிய வத்தலக்குண்டு வரதன் போன்றோர் மனதில் என்னைத் திட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் போன்றோர் என்னைத் திட்டுவது இருக்கட்டும். அவர் என்னிடம் ஆதங்கப் பட்டதைத்தான் சொல்கிறேன். ஒருநாள் நாள் நான் என் அண்ணன் சொன்னார் என்பதற்காக பக்கத்தில் அலசூரு கடைவீதியை விட்டு செக்குமேட்டுக்கு சென்றிருந்தேன்.

செக்குமேட்டில் எள்ளெண்ணெய் ரொம்பவும் சுத்தமாக இருக்கும். தவிர கடைக்காரர் எனது அண்ணனின் நெருங்கிய நண்பர். பால்கார வீதியில் இருந்தாலும் செக்குமேடுவரை தம்பியை அனுப்பி தமது கடையில் எண்ணெய் வாங்கிவரச் சொல்லியிருக்கிறாரே என்று பெருமையாக சொல்வார் கடைக்காரர். அத்தோடு ஒரு துண்டு எள்ளுப் புண்ணாக்கும் தருவார்? எள்ளுப் புண்ணாக்கு சாப்பிட்டிருக்கிறீர்களா?

எள்ளுப் புண்ணாக்கு சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். மற்றவர்களுக்கு போடாப் போடா புண்ணாக்கு போடாதே தப்புக் கணக்கு என்று சொல்லத்தான் தெரியும். அப்படித்தான் தப்புக் கணக்குப்போட்டு எதிரே வந்த வத்தலக்குண்டு வரதன் ,

“என்னப்பா சந்துரு பக்தர்கள் பாதயாத்திரை போவதுபோல எண்ணைய் வாங்க இந்த யாத்திரையா?என்று கேட்டார்.

“என்ன சார் பண்றது. இங்க எண்ணெய் புயூரா இருக்கும்” என்றேன்.

“எப்பா இரு. நீ பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் தானே? நீங்கள்ளாம் எப்படித் தமிழை வளர்க்கப் போறீங்க?”

“ஏன் சார்? நான் என்னவாவது தப்பு பண்ணிட்டேனா?”

“அது சரி. செய்யுற தப்பே தெரியலையா? நீயே தமிங்கலம் பேசுகிறாயே”

“என்ன சார் சொல்றீங்க? புரியல”

நல்லதுதான் தன் முதுகில் இருப்பது எப்படித் தெரியும்? இங்க எண்ணெய் பியூரா இருக்கும் என்றாயே? நான்கு சொற்களில் ஒரு சொல் ஆங்கிலமா? அது என்ன பியூரா இருக்கும்? சுத்தமா இருக்கும் என்றால் என்ன குடி முழுகிப போய்விடுமா அல்லது நாக்குதான் சுளுக்கிக் கொள்ளுமா என்றார். என் தவறை உணர்ந்தேன்.

வேண்டுமென்று பேசல அண்ணா, நான் மட்டுமல்ல இங்கு பல மொழி பேசுபவர்களும் இப்படிக் கலந்து பேசத்தான் செய்கிறார்கள் என்றேன். அப்படியா யார் யாரெல்லாம் சொல்கிறார்கள் சொல் பார்ப்போம் என்று மல்லுக்கு நிற்கவே தெளிவு படுத்தினேன். அண்ணே, தெலுங்குகாரர் “இக்கட ஆயில் பாகா உந்தி என்கிறார். கன்னடக்கார் “இல்லி ஆயில் சென்னாகித” என்கிறார். மலையாளி “இவிட வல்லியதொரு ஓயிலானும்” என்கிறார்.

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்! பயணம் - 5



….. சங்கர சுப்பிரமணியன்.





வானத்திலே தோன்றினான்
வாழ்க்கையிலே உதவினான்
இயற்கையில் இறைவனாகி
என்றுமே மாறாதிருப்பான்

வானத்திலே தோன்றினான்
வாழ்க்கையிலே உதவினான்
இயற்கையில் இறைவனாகி
என்றுமே மாறாதிருப்பான்

வானத்திலே தோன்றினான்

வானில் தோன்றியே ஆதவன்
பரப்புகின்றான்
ஒளிர்கின்ற கதிர்களை

வானில் தோன்றியே ஆதவன்
பரப்புகின்றான்
ஒளிர்கின்ற கதிர்களை

மழை பெய்திடவே செய்கிறான்
தன் கதிர்களால்

மழை பெய்திடவே செய்கிறான்
தன் கதிர்களால்

பயிர் வளர்ந்து நன்றாய் செழித்திடவே
உதவியும் செய்து