.
மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் 35ம் ஆண்டின் கலை விழா-2025 St Memorial Hall இல் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை பள்ளியின் அதிபர் திரு. தேவராசா சதீஸ்கரன், மற்றும் நிர்வாகத் தலைவர் திரு. ரோசாந் ரூபன் அருளப்பு அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முதலில் சம்பிரதாய நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றலினை பள்ளியின் அதிபர், திரு.தேவராசா சதீஸ்கரன் அவர்தம் பாரியார் திருமதி.கஜந்தி சதீஸ்கரன் அவர்களும், நிர்வாகத் தலைவர் திரு.ரோசாந் ரூபன் அருளப்பு அவர்தம் பாரியார் திருமதி.ரேணுகா ரோசாந் ரூபன் அவர்களும் அவர்களும், ஆசிரியர் திருமதி. பாமரதி மகேஸ்வரமூர்த்தி, பிரதம விருந்தினரான பள்ளியின் முன்னாள் செயலாளரும் பொருளாளருமான திரு.நோயல் ரொபின்சன், அவர்தம் பாரியார் திருமதி .லெனிட் ரொபின்சன், மற்றும் சிறப்பு விருந்தினர்களான சட்டத்துறை நிபுணரும், Western Sydney பல்கலைக்கழகத்தில் கல்வியாளருமான திருமதி. துர்க்கா ஓவன், councillor for Cumberland city council திரு .சுஜன் செல்வேந்திரன், ஈஸ்ட்வுட் பள்ளியின் முதல்வர் திரு. பிரபாகர் தியாகராஜா ஆகியோர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, அவுதிரேலியா கீதம் ஆகியன இசைக்கப்பட்டது.
அடுத்து நாம் வாழும் நாட்டின்
பூர்வீக மக்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு தொடர்ந்து தாயக விடுதலைப் போரில்
வீரச்சாவடைந்த மாவீரர்களையும்,
போராட்டத்தின்பால், உயிர்நீத்த பொதுமக்களையும்,
நாட்டுப்பற்றாளர்களையும்
மாமனிதர்களையும் தமிழர் நிலம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஈகைச்சாவடைந்த அனைத்து தமிழ் உறவுகளையும் நினைவு
கூர்ந்து 1
நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளியின் 9ம், 10ம், 11ம்
வகுப்பு மாணவர்களால் வரவேற்பு நடனமும். நிர்வாக உறுப்பினர் திருமதி.அனுசா பிரஜீவ்
அவர்களால் வரவேற்புரையும் வழங்கப்பட்டது.



.jpg)
.png)

.png)



.jpg)
.jpeg)
.jpg)