மேலும் சில பக்கங்கள்

கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

 



 
     






















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா





எண்ணாய் இருப்பான் எழுத்தாய் இருப்பான்
கண்ணாய் இருப்பான் மணியாய் இருப்பான்
உண்ணும் உணவாய் பருகும் நீராய்
எல்லாம் ஆகி இருப்பான் கண்ணன்

கடலாய் இருப்பான் அலையாய் எழுவான்
முகிலாய் இருப்பான் மழையாய் பொழிவான்
வயலாய் இருப்பான் பயிராய் இருப்பான்
வளமாய்க் கண்ணன் நிறைந்தே இருப்பான்

ஆக்கும் சக்தியாய் அழிக்கும் சக்தியாய்
காக்கும் சக்தியாய் கண்ணன் இருப்பான்
நோக்கும் இடமெலாம் இருப்பான் கண்ணன்
வாக்கும் கண்ணனே வரமும் கண்ணனே 

தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் பல்முகபண்பாட்டு நிகழ்ச்சி 30/08/2025

 

தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் பல்முகபண்பாட்டு நிகழ்ச்சியை நீங்கள் அனைவரும் விருப்பமாக அனுபவித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  

முதலில்,  சங்கத் தலைவர் திரு. ஆருமுகம் பெருமையனார் மற்றும் திருமதி பெருமையனார், மற்றும் இணை அமைப்பான தமிழ் மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் (Tamil Senior Citizens' Benovolent Society) தலைவர் திரு. சபாரத்னம் கேதாரநாதன் மற்றும் திருமதி சிவகௌரி கேதாரநாதன் ஆகியோரும் பங்கேற்று, நமது தென்னாசிய பாரம்பரியத்தினமான விளக்கேற்றத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்த உதவிய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின்


Community Grants Hub அமைப்பின் Multicultural Grassroots Initiatives Funding Program வழியாக வழங்கிய பொருளாதார ஆதரவிற்கும்  நன்றி. 

பல்முகபண்பாட்டு நிகழ்ச்சியை உணர்வுபூர்வமாக உயிர்ப்புடன் கொண்டுவர உதவிய அனைத்து கலைஞர்கள்:

  • திருமதி வரலக்ஷ்மி ஸ்ரீதரன் மற்றும் அவருடைய இசைக் குழுவினருக்கு, சுருதி மற்றும் லயத்தில் அற்புதமான வீணை இசை.


  • நேபாள நண்பருடைய உணர்ச்சி பூர்வமான புல்லாங்குழல் இசை.

  • மூத்த உறுப்பினர் திரு. சிவசூரியர் அவருடைய கர்நாடக இசை பாணியில் மௌத் ஆர்கன்.

  • திருமதி அமேஷா மற்றும் அவருடைய அர்ப்பணிப்பு கொண்ட குழு, ஐந்து தன்மைகள் — நீர், மண், ஆகாயம், நெருப்பு, காற்று — ஆகியவற்றை பிரதிபலிக்கும்  choreographyக்கு இளம் கலைஞர்கள் மிகச் சிறப்பான பரதநாட்டியம்.

  • இலங்கை நடனக் குழு, கண்டிய நடனம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய இரண்டையும் இணைத்து அரங்கேற்றிய மறக்க முடியாத சிறப்புப் பெறும் நிகழ்வு.

சிறப்பு விருந்தினராக Reid தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் கௌரவ MP Sally Sito அவர்கள் கலந்து கொண்டது  மிகவும் பெருமைப்படுத்துகிறது. 

சிறப்பு ழகரமான சீராளர்!

 


-சங்கர சுப்பிரமணியன்.



கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொல்லழகு என்பதைப் போன்று தமிழிக்கு சிறப்பு ழகரம் அழகு. எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழிபோல் சிறப்பு ழகரம் போன்ற எழுத்து எம்மொழியிலும் இல்லை. அதன் எழுத்து வடிவமின்றி அதனை நாவைச் சுழற்றி உச்சரிக்கும் முறையும் இணைந்துதான் சிறப்பு ழகரம் என்ற தகுதியை அதற்கு வழங்கியுள்ளது.

தமிழ் என்று எழுதும்போது சிறப்ப ழகரத்தை எழுதினாலும் அதன் மேல் புள்ளி வைக்காது போனால் அது பொருளற்றே நிற்கும். தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால் தமிழை வாழ்வதற்கு ஏற்ற பணியாகத் தேர்வு செய்தவர் வாழும் பணியாகவும் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அவர் வேறு யாருமல்ல உலகத் தமிழர் யாவரும் அறிந்த பல நூல்களுக்குச் சொந்தக்காரரான அன்பரும் நண்பருமான எழுத்தாளர் திரு.  லெட்சுமணன் முருகபூபதி அவர்கள்தான். ஒரு ஆறு என்றால் அது சீராக ஓடிக்கொண்டிராது. அகன்றும் குறுகியும் வேகமாகவும் மெதுவாகவும் சுழல்கள் நிறைந்தும் சுழல்கள் அற்றும் ஓடிக் கொண்டிருப்பதுதான் ஆறு.

கிட்டத்தட்ட நட்பு அவ்வாறே. விருப்பு வெறுப்புக்கள் இருக்கும். கருத்து முரண்பாடுகள் இருக்கும் குற்றம் குறைகள் இருக்கும். வாழ்வில் மேடு பள்ளங்கள் இருப்பது போல் நட்பிலும் இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும்.

வைர நெஞ்சம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய படங்களுக்கு வசீகரிக்கும்


பெயர்களையே வைப்பதுண்டு. அந்த வரிசையில் 1972ன் ஆண்டு படத்தை வெளியிடுவேன் என்ற வைர நெஞ்சம் கொண்டு அவர் உருவாக்கிய படத்துக்கு வைத்த பெயர் தான் ஹீரோ 72. 


சிவாஜியை ஹீரோவாகப் போட்டு தயாரான இந்தப் படம் ஸ்ரீதரின் திரை வாழ்வில் மறக்க முடியாத வடுவாக நெஞ்சத்தில் நிலைத்தது. காரணம் துரித தயாரிப்பாக உருவாகி வெளிவரும் என்று எதிர்பார்த்த படம் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்து இழுபட்டு இறுதியில் படத்தின் பெயரும் மாற்றப் பட்ட பின்னரே திரைக்கு வந்தது. 

தமிழ், ஹிந்தி என்று இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் படம்

தயாரானது. ஹிந்தியில் ஜித்தேன்திரா, ஹேமமாலினி, அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்க , தமிழில் சிவாஜி, முத்துராமன் , பத்மப்ரியா ஆகியோர் வேடம் ஏற்றனர். தமிழிலும் ஹேமாமாலினி நடிப்பதாக இருந்தும் பின்னர் அது நடக்காமல் , ஹேமாவின் முக சாயலை கொண்ட புது முகம் பத்மபிரியா ஹீரோயினாக நடித்தார். இவர்களுடன் பாலாஜி, சி ஐ டி சகுந்தலா , தூலிபாலா ஆகியோரும் நடித்தனர். 

ரசிகர்களின் ரசனை மாறி விட்டது , ஆக்சன் படங்களைதான் விரும்புகிறார்கள் என்ற அபிப்பிராயத்தில் ஓர் அடிதடி படத்தை சிவாஜியின் நடிப்பில் உருவாக்க முனைந்தார் ஸ்ரீதர். ஏற்கனவே ஹிந்தியில் எடுத்த தர்த்தி , அவளுக்கென்று ஓர் மனம் , அலைகள் படங்களின் தோல்வியால் பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டிருந்த ஸ்ரீதர் இந்தப் படத்தின் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீளலாம் என்ற நம்பிக்கையில் இப் படத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கிடைத்த சிவாஜியின் கால்ஷீட் நாளடைவில் கிடைக்காமல் போகவே படம் இழுபடத் தொடங்கியது. 1973ல் ஹிந்திப் படம் தயாராகி வெளியான நிலையில் தமிழ் படம் பாதி தான் முடிந்திருந்தது. 

விரிசலும் உறவும்

 

31 Aug, 2025 | 02:43 PM

லோகன் பரமசாமி

பூகோள அரசியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இறக்குமதி வரி நெருக்கடிகள் பெரும் பொருளாதார நெருக்குதல்களை உருவாக்கி இருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க - இந்திய உறவில் ஏற்பட்ட தளம்பல் நிலை சீன-  இந்திய உறவை சுமூகமாக்கும் நிலைக்குத் தள்ளி உள்ளது.  

இந்திய - சீன உறவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசல்கள் புதிய சமாதான புரிந்துணர்வு நோக்கி நகர்ந்து வருகிறன்றன. அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, புது டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் புதிய திருப்பு முனையை உருவாக்கி உள்ளது.  புதிய வர்த்தக உடன் படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன ,  சீன, இந்திய நகரங்கள் மத்தியில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவும் ஏற்பாடாகி உள்ளது. 

மேலும், ஊடகவியலாளர்களுக்கான பயண அனுமதி வழங்கல், கலாசார பரிமாற்றம், வியாபார வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற  பல புதிய உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான  செயற்பாடுகள் ஆரம்பிக்க ஏற்பாடாகி உள்ளது .  அத்துடன், இன்று சீனா செல்லும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ  ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.

அமெரிக்காவின் உற்ற நண்பனாக கடந்த காலங்களில் இந்தியா  கணிக்க பட்டது. குறிப்பாக, சீனாவின் பிராந்திய விஸ்தரிப்பிற்கு எதிரான ஒரு பதில் பலம் தரக்கூடிய கூடிய ஒரு ஆசிய வல்லரசாக அமெரிக்காவினால் இந்தியா நகர்த்தப்பட்டு வந்தது.  இதற்கு ஏதுவாக ‘நாற்கர நாடுகள் கூட்டு’ என்ற ‘குவாட்’ அமைப்பில் இந்தியா சேர்த்து கொள்ளப்பட்டதற்கு சீன எதிர்ப்பில் இந்தியா துனை நிற்கும் என்ற எண்ணப்பாடே காரணமாக இருந்தது. 

ஆனால், இந்த நிலை இன்று பெரும் மாற்றம் காணும் நிலையை எட்டி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  இந்தியப் பொருட்கள் மீதான தீர்வை வரியை 50 சத வீதமாக அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்கா மீது இந்தியா  அதிருப்தி வெளியிட்டது. 50 சதவீத வரி விதிப்பிற்கு அமெரிக்காவால் தரப்பட்ட காரணங்களாக  ரஷ்யாவிடம் இருந்து ஆயுத தளபாடங்களை பெருமளவில் இந்தியா கொள்வனவு செய்வதையும், ரஷ்ய மசகு எண்ணையை இந்தியா அதிகளவில் கொள்வனவ செய்வதையும் அமெரிக்கா குறிப்பிட்டது. 

இலங்கைச் செய்திகள்

 வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

கிளிநொச்சியில் மனித புதைகுழிகள், இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

வவுனியாவில் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது "நீதியின் ஓலம்"

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு




வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

29 Aug, 2025 | 02:05 PM

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுவருகின்றன. 

அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் வெள்ளிக்கிழமை (29) கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 

உலகச் செய்திகள்

 யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

காசா வைத்தியசாலை மீதான தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு : தவறுதலான விபத்து என நெதன்யாகு கவலை !

ஜம்மு காஷ்மீரில் மண்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

 “சிறுவர்கள் மயானமாக” மாறிவிட்ட காசா! ; பாலஸ்தீனம் போரை நிறுத்துவதற்காகவும் குரல் கொடுங்கள்! - மெலனியா ட்ரம்புக்கு துருக்கியின் முதல் பெண்மணி கடிதம்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி  


யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 3

27 Aug, 2025 | 12:36 PM

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.