அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்ப08/09/2025 - 14/09/ 2025 தமிழ் 16 முரசு 22 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!
தமிழாய் இசையாய் மலர்ந்த கீதை
கொண்டாடி வருகின்றது. அதனொரு செயல்பாடு பகவத் கீதை முழுவதையும் தமிழ்ப் படுத்துவது. சுவாமி மித்ரானந்தா அவர்களின் வழிகாட்டுதலின்படி பகவத் கீதை ஏழுபேர் கொண்ட குழுவினரால் சிறப்பாக தமிழ்ப்படுத்தப்பட்டது. பதினெட்டு அத்தியாயமும் தமிழ்ப் படுத்தப்பட்டு , இசைஞானி இளையராஜா அவர்களால்
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்கீதை கங்கைகொண்ட சோழபுரத்தில் 27. 8 . 25 அன்று வெளியிடப்பட்டது.
மக்களின் மேலான புரிதலுக்கு ஒரு சான்று:
எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் தழைத்தோங்குமோ அப்போதெல்
இந்த மாபெரும் பணியில் எழுவரில் ஒருவராய் நானும் இணைந்திருந்தது எனக்கு பெருமகிழ்வையும் நிறைவையும் தருகிறது.
பா. மா. சாயிலட்சுமி
சின்மயா இயக்கம்
'மிஸ்டர் கிளீனின்' கைது வரலாற்றுத் தடம்
24 Aug, 2025 | 10:31 AM
ஆர்.ராம்
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. அரசியல் சாணக்கியங்கள் நிறைந்த அவருக்கு 'மிஸ்டர் கிளீன்' என்ற பெயருமுண்டு. இலஞ்ச, ஊழல், மோசடிகள் உள்ளிட்ட கறைகளை அவரது கரங்கள் கொண்டிருக்காமையால் கிடைத்த பெரும் கௌரவம்.
அத்தகைய ஒருவர் மீது, அண்மைய காலத்தில் அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரணில் அழைக்கப்பட்டார்.
அவ்வாறு வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட நிலையில் 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானவர் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, பிற்பகல் 1.15 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணை பிரிவின் மூன்றாம் இலக்க பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளின் ஹேரத்தினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் பிற்பகல் 3 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணைக் கோரிக்கைக்கான வாதப்பிரதிவாங்கள் முன்வைக்கப்பட்டன.
ஈற்றில் பிணை அனுமதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக 6.15 இலிருந்து 9.50 வரையில் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவை 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவையடுத்து ரணிலுக்கு கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே மருத்துவர்களின் ஆலோசனையில் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ரணிலின் கைதும் தடுத்துவைப்பும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் அழிக்கமுடியாத தடத்தை ஏற்படுத்தியுள்ளது. 1815இல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
மீதியை மனத்திரையில் காண்க!
மனத்தினை விரிவாக்கி வைத்திடுவாய் – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சிப் பா (சிந்தடி).
சிந்தடி:
எல்லோர்க்குமே
இடங்கொடுத்திடும் இயற்கையதுவும்
பொல்லாதயிம்
மாந்தனுமதைப் போற்றவேண்டுமே!
இல்லாதவர்
நிலைகண்டவன் இரங்கவேண்டுமே,
எல்லோர்க்குமே
உதவிநல்கிட இசையவேண்டுமே!
உள்ளவாழ்வுதான்
சிலகாலமே, உவந்துநீயுமே
உள்ளமதிலே
கனிவுபொங்கிட உதவிநல்கிடு!
மெல்லயாவரும்
உலகமதிலே மேன்மைபெற்றுதான்
வல்லமையுடன்
ஏற்றம்பெற வாழ்ந்திடுவமே!
தனிச்சொல்: அதற்கு
சுரிதகம்:
மனத்தை
விரித்திடு, மாண்பைப் பெருக்கிடு,
கனவைப்
போன்ற காட்சியும்
நனவாய்
மாறிடும் நல்லவை பெருகுமே!
சொந்தங்கள் வாழ்க - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தமிழில் வெளிவரும் சிறந்த இலக்கிய மாத இதழ் கலைமகள்.
நூற்றாண்டை நோக்கி நடை போடும் கலைமகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறுகதை காணிநிலம். பூவை எஸ் . ஆறுமுகம் எழுதிய இந்த கதை 1975ம் வருடம் சொந்தங்கள் வாழ்க என்ற பேரில் படமாக வெளியானது.
ஆலயத் தலைவராக செல்வாக்குடன் விளங்குகிறார் கோயில் தர்மகர்த்தா. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மனைவியை இழந்த தர்மகர்த்தா மறுமணம் செய்யாமல் தன் ஒரே பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார். அவரின் மகளான பூங்கொடி பிடிவாதம் மிக்கவள். ஊர் மக்கள் தன் தந்தைக்குத் தான் முதல் மரியாதையை செய்ய வேண்டும் என்று எல்லா இடத்திலும் வற்புறுத்துகிறாள். நாகலிங்கத்தின் மகன் குமாரோ தன் தந்தைக்குத்தான் முதல் மரியாதையை என்று வலியுறுத்துகிறான். பெரியவர்கள் இருவரும் இதில் ஆர்வம் காட்டாத போதும் பிள்கைகளின் தொல்லை பெரும் பாடாக மாறுகிறது. பூங்கொடியின் வற்புறுத்தலால் தேர்தலில் நாகலிங்கத்தை எதிர்த்து தர்மகர்த்தா போட்டியிடுகிறார். ஆனால் அரசியல்வாதியான நாகலிங்கம் சூழ்ச்சி செய்து தர்மகர்த்தா மீது திருட்டு பட்டமும், தாசி தாசன் என்ற பழியையும் சுமத்தி அவரை தேர்தலில் இருந்து ஒதுங்க செய்கிறார். இதற்கு பழி வாங்கும் முகமாக குமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பூங்கொடி பஞ்சாயத்தில் குற்றம் சாட்டுகிறாள். இதன் காரணமாக குமார், பூங்கொடி திருமணம் நடக்கிறது. ஆனால் இருவரும் தாம்பத்திய உறவின்றி விலகியே இருக்கிறார்கள். இவர்கள் இணைந்தார்களா என்பதே மீதிக் கதை.
இலங்கைச் செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலை பார்வையிட சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!
மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள்
சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்
யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
Published By: Digital Desk 3
22 Aug, 2025 | 02:19 PM
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
உலகச் செய்திகள்
சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 29 பேர் படுகாயம்
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம்
பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை நீடிப்பு
கராச்சியும் வெள்ளத்தில் மூழ்கியது; 10 பேர் பலி
சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !
Published By: Priyatharshan
19 Aug, 2025 | 07:18 AM
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 52 “நூல்களைப் பேசுவோம்”
நாள்: சனிக்கிழமை 30-08-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
நூல்களைப் பேசுவோம்:
தாமரைச்செல்வியின் “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” சிறுகதைத்தொகுப்பு
உரை: இரா. பிரேமா
பா.இரகுவரனின் “காத்தவராயன் வழிபாடு காத்தவராயன் நாடகம்” ஆய்வு நூல்
உரை: சு.குணேஸ்வரன்
ப.சண்முகத்தின் “தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள்” ஆய்வு நூல்
உரை: எம்.எம்.ஜெயசீலன்
ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம்