மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 


தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்
ஓயாமல் இருப்பாள் உழைப்பினை நல்குவாள்
சேயாய் இருப்பாள் சேவகி ஆகுவாள்
அவளே அவனியில் ஒளிவிளக் காவாள் 

மகளிர் என்றுமே மகத்துவம் ஆவர்
மாநில வரமாய் வாய்த்தவர் மகளிர்
மண்ணின் பொறுமை மகளிர் பொறுமை
எண்ணிடும் வேளை கண்ணே மகளிர்

வீட்டினை ஆழ்கிறார் நாட்டினை ஆழ்கிறார்
விஞ்ஞான உலகில் விந்தைகள் செய்கிறார்
கல்வியில் உயர்கிறார் கண்ணியம் காக்கிறார்
கலைகளின் உயர்வாய் மகளிர் திகழ்கிறார்