மேலும் சில பக்கங்கள்

வாழும் இலக்கியங்கள்.



நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலைசீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன்அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்புஎன்பான்.

'கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்' என எங்கள் ஆணவத்தை எண்ணெய் போட்டுத் தடவிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகருவோம்.

கண்ணகி என்ற வார்த்தைக்கு அர்த்தம், சிலப்பதிகாரத்தைக்


கேள்விப்படாத ஒருவனுக்கு மட்டுமல்ல, அரிச்சுவடி எழுதாதவனுக்கும் புரியும். அந்த அளவுக்குப் படித்தவர்கள் தொடக்கம் பாமரர்கள் வரை கண்ணகி என்றால், கற்பு, நெருப்பு, துணிவு, கோபம் என்றவாறான விம்பத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு கலை வடிவங்களில் நின்று நிலவிவரும் சிலப்பதிகாரத்தின் கதைமூலம்  தமிழ் மக்களின் மூளையை பதிவுசெய்துவந்திருக்கிறது.

அந்தச் சிலப்பதிகாரத்தை, அழகான நாடகக்கதையாக்கி மெல்பேனில் மேடையேற்றிய,  பாரதி பள்ளி மாணவர்களுக்கு நன்றிகள். மேடை ஏற்றத்திலிருந்து, நிர்வாகம், பாடல்கள் என மாவை நித்தியானந்தனின் உழைப்பையும் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

சிலப்பதிகாரத்தை முறையாக வாசிக்காத போதிலும் நானும் நீங்களும்  அறிந்த கதையது. கண்ணகி-கோவலன் - மாதவி ன் மூன்று பாத்திரங்கள் நமது இலக்கிய வெளியில் மட்டுமல்ல, சமூக, குடும்ப வெளியிலும் இன்றும் நடமாடுபவர்கள். இதனாலேயே சில இலக்கியங்களை எக்காலத்திற்கும் இசைவாகச் சாகாவரம் பெற்றவை என்கிறோம்.

இதை எப்படி விளக்கலாம் ?

மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

 


  








மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....... அவுஸ்திரேலியா



மார்கழி சென்றிட தைவந்து நிற்கும்
மங்கலம் பொங்கிட பொங்கலும் மலரும்
ஆதவன் ஆதாரம் ஆகியே இருப்பதால்
அனைவரும் போற்றி பொங்கியே மகிழ்வர்

பொங்கலை அடுத்துப் பூசம் மலரும்
கந்தக் கடவுள் சிந்தையில் நிறைவார்
ஆதவன் ஒளியே அரன்மைந்தன் ஒளியே
ஒளியே உயர்வாய் ஆகியே நிற்கும்

ஆதியும் அந்தமும் காணா ஒளியாய்
பேரொளி ஒன்று தோன்றியே நின்றது
அடிமுடி காணென அசரீரி ஒலித்தது
அயனும் மாலும் ஓடினார் தேடினார் 

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய யாதுமாகி ( பாகம் -02 ) மின்னூல் மெய்நிகரில் வெளியீடு !

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி


எழுதியிருக்கும் யாதுமாகி ( 02 ஆம்  பாகம் ) மின்னூல்  எதிர்வரும் மார்ச் மாதம் அமேசன் கிண்டிலில் வெளியாகிறது.

இதன் வெளியீட்டு அரங்கு மார்ச் மாதம் நடுப்பகுதியில் மெய்நிகரில் இடம்பெறும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாதுமாகி – முதலாம்  பாகத்தின்  மின்னூலை வெளியிட்டிருக்கும் முருகபூபதி, இந்த ஆண்டு மீண்டும், அதன் இரண்டாம் பாகத்தினை வெளியிடுகிறார்.

முதல் பாகத்தில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றனர்.  குறிப்பிட்ட நூலை தற்போதும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் யாதுமாகி                     ( இரண்டாம் பாகத்தில் )


( அமரர்கள்  )  யோகா பாலச்சந்திரன்,  மகேஸ்வரி சொக்கநாதர் , பாக்கியம் பூபாலசிங்கம்,  கமலி ஞானசுந்தரன்,  பராசக்தி சுந்தரலிங்கம் , கலாலக்ஷ்மி தேவராஜா, சங்கீத கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன்,   மற்றும் ,

  புஸ்பராணி தங்கராஜா, கலையரசி சின்னையா,   ஞானலக்‌ஷ்மி ஞானசேகரன்,   ஆனந்தராணி பாலேந்திரா,  மெல்பன் மணி ,   யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ,   சந்திரகௌரி சிவபாலன்,  ரேணுகா தனஸ்கந்தா ,  சாந்தி சிவக்குமார் ,   விஜயலக்ஷ்மி இராமச்சந்திரன் ,   நவஜோதி யோகரட்ணம்,  பூங்கோதை – கலா ஶ்ரீரஞ்சன்,   கவிஞி  அனார்,   தேவகி கருணாகரன் ,   சூரியகுமாரி ஶ்ரீதரன் பஞ்சநாதன் ,   தேவகௌரி  சுரேந்திரன் ,   சியாமளா யோகேஸ்வரன் ,   வசந்தி தயாபரன் ,   உஷா ஜவகார் ,   பத்மா இளங்கோவன்,    ராணி சீதரன் ,   சுபாஷினி சிகதரன் ,    சிவநேஸ் ரஞ்சிதா ஆகியோரின் கலை, இலக்கிய, கல்வி, சமூக தன்னார்வத் தொண்டுப்பணிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

யாதுமாகி ( இரண்டாம் பாகத்தின் ) முகப்பு ஓவியத்தை மெல்பனிலிருந்து ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம், மற்றும் அக்கினிக்குஞ்சு யாழ். பாஸ்கர்  ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம்,  புனைவு சாராத பத்தி எழுத்துக்கள் , திறனாய்வு முதலான துறைகளில் எழுதிவந்திருக்கும்  எழுத்தாளர் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் யாதுமாகி ( இரண்டாம் பாகம் )

இலங்கையில் பாரதி, வாழும் வரலாறு மல்லிகை ஜீவா,  பாரதி தரிசனம் , The Mystique of Kelani River (ஆங்கில மொழிபெயர்ப்பு )   ஆகிய முருகபூபதியின் இதர நூல்களையும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

                                            ----0----

 

 

 

 

 

காருகுறிச்சியைத் தேடி நூல் நயப்பு - கானா பிரபா

 காருகுறிச்சியைத் தேடி

எழுத்தாக்கம் : லலிதாராம்
நூல் நயப்பு : கானா பிரபா

















இந்த நூலைப் பிரித்து வாசிக்கத் தொடங்கியதுமே தாயகத்தில் நம் இணுவில் கிராமத்தில் நிற்பது போலவொரு பிரமை எழுந்தது.
ஏனெனில் நமக்கெல்லாம் கோயில்கள் தோறும் எழும் மணியோசையும், நாகசுர மற்றும் தவில் வித்துவான்கள் அவ்வாத்தியங்களினூடு எழுப்பும் சாதகமும் தான் கிண்ணென்று காதில் தட்டியெழுப்பும்.
லலிதாராம் தீவிர இசை ரசிகராக மட்டுமன்றி, அடியார்க்கும் அடியேன் என்ற நோக்கில் இயங்குபவர்.
ஈராயிரத்தின் ஆரம்பத்தில் வலைப்பதிவு யுகம் எழுந்த போது இணையத்தில் கட்டுரைகள், நேர்காணல்கள், ஆவணங்கள் வழி இசையுலக ஆளுமைகளை ஆவணப்படுத்தி வருவது அவரின் ஒரு முகம் என்றால்,
2013 இல் பரிவாதினி அறக்கட்டளையை உருவாக்கி, வெளித்தெரியாத அரிய பல கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து வருகிறார். அந்த அறக்கட்டளையின் இன்னொரு பரிமாணமே நாகசுர, தவில் வாத்தியக் கலைஞர்களுக்கும் முக்கிய இடம் கொடுத்து அவர்களைத் தனித்துவமான கெளரவமும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது.
காருகுறிச்சி அருணாசலம் அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டில், அவர் பெயரில் தென்னிந்தியாவின் பல ஊர்களில் வசதியற்ற, நாகசுரம் கற்றுவரும் மாணவர்கள் 100 பேருக்கு நிதி திரட்டியது பரிவாதினியின் முக்கியமான பங்களிப்பாகச் சொல்லி வைக்க வேண்டியது.

இன்புற்றிங்கே வாழ்ந்திடுவோம்!


சங்கர சுப்பிரமணியன்-


புதியதோர் உலகம் செய்வோம்
நாமெல்லாம் ஒன்றென நிலைகாண
சாதியில்லா தமிழினம் காண்போம்

இணையற்ற உலகு படைப்போம்
இங்கு மதமெனும் மதம்பிடியாத
சகோதரத்துவம் இனி காண்போம்

கற்க கசடற கற்க என்று மட்டுமே
இங்கே இனி இல்லாமல் அதையே
எல்லோரும் கற்க வகை செய்வோம்

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறையை அங்குளான் இங்குளானென
எண்ணாமல் ஏழையின் சிரிப்பில்
அவனுள்ளானென நிலை செய்து
பசிக்கும் குழந்தைக்கு பால்வார்த்து
பயனடையச் செய்து மகிழ்வோம்

BBC ஆனந்தி அக்கா 🙏


“ஈழத்தமிழச்சி என்று நான் துணிந்து சொல்வேன்”


ஆனந்தி அக்கா ஒரு சமயம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியபோது,

சிங்கள அரசோடு ஒத்தோடு வாழும் தமிழ் அரசியல்வாதி கிண்டலடித்தார்

இப்படி,

“அவர் அதை லண்டனில் இருந்து தானே சொல்கிறார்”

என்று.

ஆனால் நாம் எங்கு வாழ்ந்தாலும், ஊடகத் துறையில் இயங்கினாலும் நம் இன, மொழி உணர்வோடு இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஆனந்தி அக்கா.

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை இருமுறை பேட்டி காணும் பேறு பெற்றவர்.


அதனால் தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஈழத்தை விட்டுப் பிரிந்திருந்த போதும் கடல் கடந்து தமிழக, ஈழ உறவுகளுக்கு “ஆனந்தி அக்கா” என்ற அடையாளத்தோடே  லண்டன் பிபிசி தமிழோசை காலத்தில் வாழ்ந்தவர், அதன் பின்னர் கூட அந்த அடையாளப் பெயரோடே இயங்கியவர்.

1970 களில் பகுதி லண்டன் பிபிசியின் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானர். இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம்

இலங்கை யாழ்குடா நாட்டின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, தன் பணியில் மிகவும் ஊக்குவித்த முன்னாள் தமிழ்ப் பிரிவுத் தலைவர் சங்கரை மிக நன்றியோடு நினைவு கூறுகிறார். என்று லண்டன் பிபிசி மே 2005 இல் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தது.

ஆசைமுகம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில் நடித்து ஏராளமானப் படங்கள்


வெளிவந்துள்ளன. ஆனால் அவர் மூன்று வேடங்களில் நடித்தப் படம் ஒன்றும் இருக்கிறது. அதுதான் ஆசைமுகம். எம் ஜி ஆரின் ஆசைமுகம் என்று சொல்லும் வண்ணம் படத்துக்கு இந்தப் பெயரை வைத்தவர் வசனகர்த்தா அரூர்தாஸ் . இந்த ஆசைமுகத்தில் எம் ஜி ஆர் மூன்று முகங்களை காட்டி நடித்திருந்தார்.

 

பெரிய நிறுவனங்களான தேவர் பிலிம்ஸ், விஜயா காம்பைன்ஸ் , ஏவி எம், போன்ற பேனர்களில் படங்களில் நடிக்கும் சமயம் அவ்வப்போது சிறிய, புதிய தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடித்துக் கொடுப்பது எம் ஜி ஆருக்கு வாடிக்கை. அந்த விதத்தில் புதிய தயாரிப்பாளரான பி .எல் . மோகன்ராம் தயாரித்த இந்த படத்திலும் நடிக்க எம் ஜி ஆர் ஒப்புக்கொண்டார். தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயினாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் எம் ஆர் சந்தானலஷ்மி. எம் கே தியாகராஜ பகவதருடன் இவர் அமராவதியாக நடித்த அம்பிகாபதி படம் பெரும் வெற்றி கண்டது. இவரின் மகளை திருமணம் செய்திருந்த மோகன்ராம் , இயக்குனர் பி. புல்லையா , ஏ காசிலிங்கம் இருவரிடமும் உதவி டைரக்டராக பணிபுரிந்து விட்டு சொந்தப் படம் எடுக்கும் ஆசையில் எம் ஜி ஆரை அணுகினார். ஏற்கனவே எம் ஜி ஆருக்கு பரிச்சியமானவர் என்பதால் எம் ஜி ஆரும் இசைந்தார்.

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய கீதத்தை இசைத்தல்

 Published By: Digital Desk 2

17 Feb, 2025 | 02:25 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

லங்கையின் தேசியகீதத்தை தமிழில் இசைப்பதன் வரலாற்றை  கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையின் முதல் பாகம் சுருக்கமாக விளக்கியது. இரண்டாவதும் இறுதியுமான இந்த பாகம்  தமிழில் தேசியகீதத்தை இசைப்பதில் பல வருடங்களாக காணக்கூடியதாக இருந்த பின்னடைவையும் முன்னேற்றத்தையும் பற்றி ஆராய்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று தமிழ் தேசியகீதப் பிரச்சினை ஒரு வகையில் இலங்கை நெருக்கடி தீவிரமடைந்ததை அடையாளபூர்வமாக குறித்துக் காட்டுவதாகவும் அமைந்தது.

இனநெருக்கடி தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நிலைவரங்கள் எல்லாம் முற்றுமுழுதாக மாற்றமடைந்து சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் மெதுமெதுவாக பிரிந்து சென்றன. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் அனேகமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு முக்கிய பாடசாலையிலும்  மாணவர்களுக்கு சிங்களம் படிப்பிக்க  சிங்கள ஆசிரியர்கள் (அவர்களில் பலர் பௌத்த பிக்குமார்) இருந்தனர். அது தன்னியல்பாகவே நடைபெற்றது. தமிழைப் புறந்தள்ளி உத்தியோகபூர்வ தொழியாக சிங்களம் மாத்திரம் திணிக்கப்பட்ட பிறகு அந்த நடைமுறை இல்லாமல் போய்விட்டது.

அதைப் போன்றே தமிழ்ப் பகுதிகளில் பாடசாலைகளில் தமிழில் தேசியகீதம் இசைப்பதும் வழக்கத்தில் இல்லாமல் போனது. தெற்கில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளிலும் இது ஓரளவுக்கு பிரதிபலித்தது. ஆனால், நாட்டின் பல பாகங்களில் தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் பலவற்றில் தமிழில் தேசியகீதம் இசைக்கும் நடைமுறை தொடர்ந்தது.

இலங்கைச் செய்திகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்! 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

வரவு - செலவுத் திட்ட உரையில் மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை மகிழ்ச்சி - ராதாகிருஷ்ணன்

கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவர வேண்டும் - சாணக்கியன்

தமிழகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் !  


யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்!  

20 Feb, 2025 | 04:21 PM
image

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார்.

உலகச் செய்திகள்

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன- காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் - 17 பேர் காயம் ; 3 பேர் ஆபத்தான நிலையில்

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் - பிரிட்டிஸ் பிரதமர்

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு

 “ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால் விடுகின்றது" ; "டிரம்ப் அச்சத்தில் ஐரோப்பா”- தலைப்பு செய்தியில் ஐரோப்பிய நாளிதழ்கள்




அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன- காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு 

Published By: Rajeeban

17 Feb, 2025 | 12:46 PM
image

அமெரிக்கா வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில்  காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

சிட்னி துர்கா கோவிலில் மகா சிவராத்திரி 26/02/2025

 மகா சிவராத்திரி என்பது சிவபெருமானை கௌரவிக்கும் ஒரு


வருடாந்திர கொண்டாட்டமாகும். இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனை செய்வது இந்த விழாவின் ஒரு பகுதியாகும், இது ஒருவரின் வாழ்க்கையிலும் உலகிலும் "இருளையும் அறியாமையையும் வெல்வதாக" சிவனால் அடையாளப்படுத்தப்படுகிறது.


சிட்னி துர்கா கோவிலில், இரவு முழுவதும் 4 கால பூஜைகளை ஏற்பாடு செய்துள்ளோம். பக்தர்கள் நாள் முழுவதும் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, திருமுறை பாராயணம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.


முதல் கால பூஜைமாலை 7:30 - இரவு 8:30


இரண்டாம் கால பூஜை :  இரவு 10:00 மணி - 11:00 மணி


3வது காலபூஜை: அதிகாலை 12:00 மணி - அதிகாலை 1:00 மணி


4வது காலபூஜை: காலை 3:00 மணி - காலை -  4 மணி