சிவாஜி ஏராளமான படங்களில் சீரியஸ் வேடங்களில்
நடித்திருக்கிறார். சில படங்களில் கோமாளியாகவும் நடித்திருக்கிறார். ஆனால் சீரியஸாகவும் , கோமாளியாகவும் அவர் நடித்த படம்தான் மன்னவன் வந்தானடி . ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தப் படத்துக்கு இது பொன் விழா ஆண்டு!
மன்னவன் வந்தானடி படத்தில் ஆரம்ப காட்சிகளில் ஜிகினா ஆடை அணிந்து குதிரை மீது ஏறி சிவாஜி வருகிறார். வித விதமான மொழிகளில் பேசுகிறார். நாட்டை திருத்தப் போகிறேன் என்று பாடுகிறார் . தேடி வரும் காதலை மறுக்காமல் எற்கிறார் . தன்னுடன் இணையும் இனொரு கோமாளியையும் உதவியாளராக ஏற்கிறார் . ஆனால் திடீர் என்று காணாமல் போய் விடுகிறார். அதன் பிறகு கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார். அதில் இருந்து மீதிப் படம் தொடர்கிறது.
கோமாளியாக வந்து ஆடிப் பாடி சிரிக்க வைக்கும் சிவாஜி பின்னர்
செல்வந்தராக வரும் போது பார்வையாலேயே மிரள வைக்கிறார். நம்பியாரையும் ஆட்டி படைக்கிறார். சாதாரண கதைக்கு கூட தன் நடிப்பால் மெருகூட்ட முடியும் என்பதை நிரூபிக்கிறார் சிவாஜி.
செல்வந்தராக வரும் போது பார்வையாலேயே மிரள வைக்கிறார். நம்பியாரையும் ஆட்டி படைக்கிறார். சாதாரண கதைக்கு கூட தன் நடிப்பால் மெருகூட்ட முடியும் என்பதை நிரூபிக்கிறார் சிவாஜி.
படத்தில் இரண்டு வித பாத்திரத்தில் சிவாஜி வந்த போதும் படம் முழுதும் வந்து மிரட்டுபவர் எம் . என் .நம்பியார். அப்பப்பா பயங்கர வில்லன் . உயிரோடு ஆளை பிடித்து புலிக் கூண்டில் தள்ளி புலிக்கு இரையாகும் கிராதகன் . இவரை பழி வாங்கவே சிவாஜி இரண்டு அவதாரங்களை எடுக்கிறார். கோமாளி சிவாஜி நடிப்பு நல்ல தமாஷ் . அவரோடு சேர்ந்த நாகேசும் சிரிக்க வைக்கிறார் .
மஞ்சுளா கோமாளியை காதலிக்கும் போது சிரிக்கிறார். சீரியஸ் சிவாஜியை மணந்து கண் கலங்குகிறார். ஜெயசுதா , பிரேம் ஆனந்த் ஜோடி டூயட் பாடாத ஜோடி. சிவாஜி படம் என்றால் சுகுமாரி நிச்சயம் இருப்பார் என்பது இப் படத்திலும் தொடர்கிறது. இவர்களுடன் வீரராகவன், எஸ் என் லட்சுமி , கள்ளபார்ட் நடராஜன், கோகுல்னாத், கே. விஜயன், , ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தில் வாலி இயற்றிய காதல் ராஜ்யம் எனது அந்த காவல் ராஜ்யம் உனது பாடல் இன்றும் ஒலிக்கிறது. அதே போல் கண்ணதாசனின் சொர்க்கத்தில் கட்டப்பட்ட இந்த தொட்டில் பாடல் உருக்கமாக மனதைத் தொட்டது. மெல்லிசை மன்னரின் இசை பேஷ்!
படத்தை பி .என் . சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார் . சிவாஜியின் படங்களுக்கு மட்டும் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றும் வெங்கடேஷ் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்திருந்தார்.
படத்தின் கதை வசனத்தை பாலமுருகன் எழுதினார். பி . மாதவன்
இயக்கினார். 1975ம் ஆண்டு சிவாஜி, பாலமுருகன். மாதவன் இணைந்து மூன்று படங்களை திரைக்கு கொண்டி வந்தார்கள். இதுவும் ஒரு ரெகார்ட் தான்.
இயக்கினார். 1975ம் ஆண்டு சிவாஜி, பாலமுருகன். மாதவன் இணைந்து மூன்று படங்களை திரைக்கு கொண்டி வந்தார்கள். இதுவும் ஒரு ரெகார்ட் தான்.
படத்தை சங்கரன். ஆறுமுகம் சகோதரர்கள் தயாரித்தார்கள். எம் ஜி ஆரின் தெய்வத் தாய், புதிய பூமி , சிவாஜியின் எங்க மாமா, ஞான ஒளி படங்களை தயாரித்த இவர்கள் சிவாஜியின் நடிப்பில் இந்த படத்தையும் எடுத்தார்கள் . அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த கடைசிப் படம் மன்னவன் வந்தானடி !






No comments:
Post a Comment