பலர் பரவசமடைய ஒரு கவிதை!



-சங்கர சுப்பிரமணியன்.




மருதமலை வாழ் முருகா வா வா
தருவதை அள்ளி எனக்கு தா தா
விரதமிருந்து காண நான் வரவா
நிரந்தரம் உன் நினைவு வேலவா

துள்ளிவரும் மயில்மேல் ஏறிவா
கொள்ளை இன்பம் தந்திட வா
தேவர் படைத்தளபதியே நீ வா
பாவம் போக்கி அருளிடவே வா

அன்னதான பிரபோடு பிறந்தாய்
தன்னலமற்றே நீயும் திகழ்ந்தாய்
கோபமாய் மலமீது ஏறி நின்றாய்
சாபமெலாம் அகற்ற நீ எழுந்தாய்

வேலெடுத்து வருகின்ற வேலனே
பாலெடுத்து வருகிறேன் பாலனே
நூலெடுத்து ஓதிடுவேன் நிமலனே
காலெடுத்து ஓடிடுவான் காலனே

எப்படி நான் உன்னை துதிப்பேன்
இப்படி ஒரு வேடமிட்டு நடிப்பேன்
செப்படி வித்தைகாட்ட மாட்டேன்
அப்படியே என்னுளுனை நடுவேன்!

No comments: