உலகச் செய்திகள்

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன- காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் - 17 பேர் காயம் ; 3 பேர் ஆபத்தான நிலையில்

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் - பிரிட்டிஸ் பிரதமர்

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு

 “ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால் விடுகின்றது" ; "டிரம்ப் அச்சத்தில் ஐரோப்பா”- தலைப்பு செய்தியில் ஐரோப்பிய நாளிதழ்கள்




அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன- காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு 

Published By: Rajeeban

17 Feb, 2025 | 12:46 PM
image

அமெரிக்கா வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில்  காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் ,அமெரிக்கா காசாவை அபிவிருத்தி செய்யும் டொனால்ட் டிரம்பின்திட்டத்தினை பாலஸ்தீனியர்களும் அமெரிக்காவின் சகாக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள போதிலும் வேறு விதமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது உகந்த திட்டம் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என தெரிவிக்கப்படுவதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

காசா குறித்து நானும் டிரம்பும் பொதுவான மூலோபாயமொன்றை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு,அமெரிக்க ஜனாதிபதியின் திட்டமே சரியானது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீங்கள் விரும்பிய எதனையும் செய்யுங்கள் என பிபியிடம் ( பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம்) தெரிவித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

என்னுடன் கலந்தாலோசித்துவிட்டு இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் இந்த வகை குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதற்கு தடை விதித்திருந்தார்.

வலிமை மூலம்சமாதானம் என கருதுவதால் இந்த குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதாக  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எம்கே84-907 கிலோ குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 



கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் - 17 பேர் காயம் ; 3 பேர் ஆபத்தான நிலையில் 

Published By: Digital Desk 3

18 Feb, 2025 | 08:57 AM
image

கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம்  ஒன்று தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.

மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம் கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   நன்றி வீரகேசரி 




உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் - பிரிட்டிஸ் பிரதமர்

Published By: Rajeeban

17 Feb, 2025 | 10:38 AM
image

உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.

சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய ஜனாதிபதி எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை  ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்ள பத்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

இது பிரிட்டிஸ் படையினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதை நான் ஆழமாக உணர்கின்றேன் எனினும் உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உதவுவது என்பது எங்கள் கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவது,எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவது என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 




வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு

Published By: Digital Desk 2

18 Feb, 2025 | 09:32 AM
image

இரண்டாவது உலக தமிழர் மாநாடு தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்ட வியட்நாம் நாட்டில் உள்ள டனாங் (Da Nang) நகரில் எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு தமிழர் நடுவம், வியட்நாம் தமிழ் சங்கம், தமிழ் சாம்பர் ஒஃப் காமர்ஸ் ஆகிய தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் 'வியட்நாம் உலக தமிழர் மாநாடு 2025' நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், இலங்கை பிரதமரின் தனிச் செயலர் சிறி பகவான் வினிதா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றுகிறார்கள்.

மேலும் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

இரண்டாம் உலக தமிழர் மாநாடு குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவரான திருத்தணிகாசலம் கூறுகையில்,

''இரண்டாம் நூற்றாண்டிலேயே கடல் வணிகத்தில் சோழ, பல்லவ, பாண்டிய பேரரசர்கள் ஏற்றுமதியாளர்களாக இருந்துள்ளனர். பண்டைய பட்டுப்பாதை எனப்படும் கடல் வணிக பாதை என்பது சீனா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, மாமல்லபுரம்,  நாகப்பட்டினம், தொண்டி வழியாக இலங்கையை தொட்டு, அரபு நாடுகள் வழியாக ஐரோப்பாவுக்கு கடல் வணிகம் நடைபெற்றுள்ளது.

வியட்நாமில் உள்ள டனாங் கடற்கரை நகரத்திற்கு அருகில் மைசன் எனும் இடத்தில் சைவ மற்றும் வைணவ கோயில்கள் இருக்கின்றன.

முக லிங்கம் என்பது உலகத்திலேயே சிறப்பு வாய்ந்த லிங்கம் ஆகும்.  இந்த லிங்கத்தில் சிவனின் முகம் இருக்கும். இத்தகைய முக லிங்கம் வியட்நாமின் மைசன் நகரத்தில் இருக்கிறது. இங்கு சிவன் கோயில், முருகன் கோயில் உள்ளன. அத்துடன் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மீசை இருப்பதும் தனித்துவமானது. இதை போன்ற முக லிங்கம் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் உள்ள பரமக்குடி எனுமிடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி வியட்நாம் நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நான்காம் நூற்றாண்டில் சாம்பா பேரரசு சாம் எனும் புதிய மொழியை தமிழிலிருந்து தோற்றுவித்தது. பண்டைய சாம் மொழியில் தான் கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் பழைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மேலும் சாம் மொழியும் தமிழ் எழுத்துக்கள் போலவே க, ஞ, ச, ன, ய , ர, ல, வ, ழ, ள என முடிகிறது.

டனாங் நகரில் சாம்பா அருங்காட்சியகம் உள்ளது. அங்கே சிவன், பார்வதி, முருகன், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் சிலைகள் உள்ளன.

இவ்வாறு தமிழர்களுடன் நெருக்கமான வரலாற்றுத் தொடர்புகளையும் பண்பாட்டு தொடர்புகளையும் கொண்டிருக்கும் வியட்நாமில் உள்ள டனாங் நகரில் தான் உலக தமிழர் மாநாடு பெப்ரவரி 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

உலக தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், தமிழர்கள், தமிழ் மொழி ஆய்வாளர்கள், வணிகர்கள் என பலரும் பங்குபற்றுகிறார்கள்.

மேலும், இந்த மாநாட்டில் இரண்டாவது நாளில் உலக தமிழர்களின் வணிகம் சார்பான மாநாடும் நடைபெறுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களுக்குள் வணிக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும், உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்'' என்றார்.

இதனிடையே பன்னாட்டு தமிழர் நடுவம் சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டின் கம்போடியா நாட்டில் உள்ள சியாம்ரீப் எனும் நகரில் முதலாவது உலக தமிழர் மாநாடு நடைபெற்றமை என்பதும், இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கு பற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

நன்றி வீரகேசரி 



 “ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால் விடுகின்றது" ; "டிரம்ப் அச்சத்தில் ஐரோப்பா”- தலைப்பு செய்தியில் ஐரோப்பிய நாளிதழ்கள்

18 Feb, 2025 | 12:25 PM
image

ஐரோப்பிய செய்தித்தாள்கள் உக்ரைன் தொடர்பில் பாரிசில் இடம்பெற்ற ஐரோப்பிய தலைவர்களின் அவசர சந்திப்பிற்கு  முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுள்ளதுடன், டிரம்ப் புட்டின் அச்சிற்கு ஐரோப்பா சவால் விடுவதாக தெரிவித்துள்ளன.

உக்ரைன் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு இடமளிக்காததை தொடர்ந்து பாரிசில் இடம்பெற்ற ஐரோப்பிய தலைவர்களின் அவசர சந்திப்பிற்கு ஐரோப்பிய நாள் இதழ்கள் முக்கியத்துவம் வழங்கியுள்ளன.

உக்ரைன் தொடர்பில் இன்று சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகள் சந்திப்பதற்கு முன்னர் நேற்று ஐரோப்பிய தலைவர்களின் அவசர சந்திப்பு இடம்பெற்றது.

எனினும் ஐரோப்பிய தலைவர்களின் சந்திப்பு எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது. உக்ரைனிற்கு ஐரோப்பிய அமைதிப்படையை அனுப்பும் விடயத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

'டிரம்ப் அதிர்ச்சியில் ஐரோப்பா" என ஜேர்மனியின் ஹன்டெல்ஸ்பிளட் தெரிவித்துள்ளது.அமெரிக்காவையும் ரஸ்யாவையும் கையாள்வதற்கான பொதுவான மூலோபாயத்தை கண்டுபிடிப்பதற்கு ஐரோப்பியர்கள் முயற்சி செய்தாலும், முக்கிய கேள்விகள் குறித்து கருத்துடன்பாடு இல்லை என அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

உக்ரைனிற்கு அமைதிப்படையை அனுப்;புவது குறித்து பேச்சுவார்த்தைகள் என தலைப்பிட்டுள்ள Süddeutsche Zeitungஇத்தகைய விவாதம் எரிச்சலூட்டுவது,முன்கூட்டியே இடம்பெறுவது என ஜேர்மன் சான்சிலர் தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளது.

பிரான்சின்Le Monde l ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால் விடுக்கின்றது என தெரிவித்துள்ளதுடன் ,ஜெலென்ஸ்கியின் பெரும்தனிமை என்ற செய்தியையும் வெளியி;ட்டுள்ளதுடன் அமெரிக்காவின் சதிப்புரட்சி எப்படி உக்ரைன் ஜனாதிபதியை பலவீனப்படுத்தியுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் - ஐரோப்பா மீண்டும் போராடுகின்றது என செய்தி வெளியிட்டுள்ள லிபரேசன்,சவுதிஅரேபியாவில் இன்று இடம்பெறவுள்ள அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய தலைவர்களிற்கு இடமளிக்கப்படவில்லை , இதன் காரணமாக உக்ரைனிற்கான தங்கள் சொந்த திட்டத்தை உருவாக்குவதற்காக ஐரோப்பிய தலைவர்கள் ; பாரிசில் சந்தித்தனர் என  தெரிவித்துள்ளது.

ஸ்டார்மெர்: எதிர்காலத்தில் உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களை தடுப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவு அவசியம் பிரிட்டனின்  கார்டியன் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஸ் பிரதமரின் கருத்தே இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் சந்திப்பில் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்கவேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி உக்ரைனிற்கான அமைதி திட்டத்தை நிராகரித்துள்ளது என  டெய்லி டெலிகிராவ் தெரிவித்துள்ளது.'

ஸ்டார்ம் தாக்குதல் என தலைப்பிட்டுள்ள மெட்ரோ ரஸ்யாவை முறியடிப்பதற்கான வரலாற்றில் ஒரு தடவை சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையில் பிரிட்டிஸ் பிரதமர் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

பலத்தின் சோதனை என தெரிவித்துள்ள டெய்லிமிரர் டிரம்ப் பிரி;ட்டிஸ் பிரதமரின் படங்களை முன்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நன்றி வீரகேசரி 



No comments: