அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
இன்பத்தைச் சித்திரையாள் எப்படியும் கொடுப்பாள் !
பிறக்கப் போகின்ற குரோதி புதுவருடம் மக்களுக்கு தரப்போகின்ற பலன்கள்
March 27, 2024 6:00 am
குரோதி வருடத்தில் எல்லா உலகிலும் மக்கள் எப்பொழுதும் கோபம் போலி எண்ணத்தில் சிந்திப்பவர்களாகவும் அற்ப குணமுடையவர்களாகவும் விளங்குவர். நெல்விளைச்சல் மத்திமமாகவும் வருட மழை வீழ்ச்சி அரைவாசியே மழை பொழியுமாம். மேலும் குரோதி வருஷ ஜாதகத்தின்படி முன்மழை மிகுதி பின்மழை சமம், உணவுப்பொருள் விருத்தி, கமத்தொழில் விருத்தி, கைத்தொழில் விருத்தி, அரச சேவை நிறைவு, கல்வி விருத்தி, சமய முன்னேற்றம், பொருட்கள் விலையேற்றம் உண்டாகலாம்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம்:
மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும் .
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம்:
குரோதி தமிழ் வருஷ பிறப்பு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 31ம் நாள் (13/04/2024) சனிக்கிழமை இரவு 9.04 மணியளவில் குரோதி வருடம் ஆரம்பமாகின்றது. மேலும் அன்றைய தினம் திருக்கணிதத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 மணி முதல் நள்ளிரவு 1.04 வரை விஷு புண்ணிய காலமாக திருக்கணிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ மதிப்பீடு – நடேசன்
எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது.
உண்ணாவிரதம், அகிம்சை வழி, கடையடைப்பு என இங்கும்
தமிழர், சிங்களவர் என இரு இனத்தவரும் அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், இலங்கைக்கு வராதபோதிலும் பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மற்றைய இருவரிலும் பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.
கௌதம புத்தரை இலங்கை,
கடந்த 75 வருடங்களாகத் தேர்தல் அரசியல் சரக்காக மாற்றியதுடன், இனக்கலவரம் , போர் என மூலப்பொருளாகப்
பாவித்து பெரும்பான்மையான சிங்கள அரசியல்வாதிகள், அவரது கீர்த்தியை அபகீர்த்தியுடைய
வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
அதேபோன்று தமிழ்
அரசியல்வாதிகள் காந்தியின் கொள்கைகளை தங்களது சுயநலவாத அரசியலுக்குப் பாவித்தார்கள்.
போதாக்குறைக்கு ஆயுதத்தில்
நம்பிக்கை வைத்திருந்த விடுதலைப்புலிகளின்
தலைவர்சென்னையில் உண்ணாவிரதமுமிருந்தார். அவரது
தளபதியான திலீபன் இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இவற்றை மன்னிக்க முடியும். ஆனால், வன்னியில் அவர்களின்
சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவருக்கு காந்தி என்ற
பெயரை வைத்திருந்தார்கள்.
இப்படியான எந்த அலங்கோலப்படுத்தலுக்கும் உட்படாது இன்னமும்
இலங்கையில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்கள்
புலம்பெயர்ந்த நாடுகளிலும் கம்பீரமாக பாரதி விழா , பாரதி பாடசாலை எனப் பல வழிகளில்
கொண்டாடப்படுவது, எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணிய
பாரதி என்ற கவிஞன் மட்டுமே. அதுவே இங்கு முக்கியமானது.
பாரதிக்கு பல முகங்கள்.
ஒவ்வொரு முகங்களைப் பிடித்தவர்கள் கொண்டாடுவார்கள். தேச விடுதலைக்கான மகா கவியாக
இந்தியர்கள் கொண்டாடும்போது, இந்தியரல்லாத
தமிழர்கள் பாரதியின் இலக்கியப் படைப்புகளைக் கொண்டாடுகிறார்கள்.
போர் வீரன் தூரத்தில் எதிரியைக் கண்டால் அம்பையும், ஓரளவு சமீபத்தில் கண்டால் ஈட்டியையும், அருகில் வந்தால் வாளையும் எடுப்பான் . எதிரியோடு உடல் பிணைந்து பொருதும்போது குத்துவாளை உருவுவான். இவைகள் எல்லாவற்றிலும் திறமை கொண்டவனே சிறந்த வீரனாக முடியும். அதேபோல் எனது கணிப்பின்படி தமிழில், கவிதை, தாலாட்டு, சிந்து, குழந்தைப்பாட்டு, காவியம் என எல்லாவகையான சந்தங்கள் கொண்ட இலக்கிய நடையை எழுதியதுடன் உரைநடையில் சிறுகதை , கட்டுரை என்பன எழுதியதால் நவீனத் தமிழின் உரை நடையையும் உருவாக்கியவர் பாரதியே என்பார்கள்.
வன்னி ஹோப்பில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆண்டு
வன்னி ஹோப்பில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆண்டை நாங்கள் திருப்பும்போது, 2023 வரையிலான எங்கள் பயணத்தின் சிறப்பம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த ஆண்டு சமூகம், ஒத்துழைப்பு மற்றும் கருணை ஆகியவற்றின் சக்திக்கு ஒரு சான்றாக இருந்தது. இலங்கை முழுவதும் முன்னேற்றம் அல்லது முன்னேற்றம்.
எங்கள் 2023 ஆண்டு செய்திமடல். இந்த ஆவணம் நாங்கள் ஒன்றாக அடைந்த திட்டங்கள், சாதனைகள் மற்றும் நிதி மைல்கற்கள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. டிஜிட்டல் பிளவைக் குறைக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு விழா முதல் சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்கும் முன்முயற்சிகள் வரை, இலங்கையில் உள்ள அனைவருக்கும் நிலையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் எங்கள் முயற்சிகள் உள்ளன.
உல்லாசப் பயணம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
உல்லாசப் பயணம் போவதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால் போகும் பயணத்தில் எதிர்பாராத திருப்பங்கள் , சம்பவங்கள் ஏற்பட்டால் சில சமயம் அது கொண்டாட்டம் சில சமயம் அது திண்டாட்டம் . இப் படத்தின் கதாநாயகனுக்கு அதுதான் நடக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு ஜாலியான பேரை சூட்டி எடுத்த படத்தின் ஹீரோ இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். அப்படி என்றால் கதாநாயகி விஜயகுமாரிதானே!
கட்டுப்பாட்டுடன் வீட்டுப் பிள்ளையாக வளர்க்கிறாள் . அப்படி வளர்பவனுக்கு உல்லாசப் பயணம் போக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது . வேறு வழியின்றி அத்தை அனுமதிக்க பயணம் தொடங்குகிறது. அப் பயணத்தில் செல்வத்துக்கு ஒரு காதலி கிடைக்கிறாள், வில்லன் குறுக்கிடுகிறான், ஒரு மர்ம மனிதன் தொடர்கிறான் இவற்றுக்கு மத்தியில் அவனது உல்லாசப் பயணம் நிறைவேறியதா என்பதே கதை.
கம்போடிய அரசின் வாழ்நாள் சாதனை விருது பெற்ற கலாநிதி பாரதி இளமுருகனார்
அங்கோர் தமிழ்ச் சங்கமும் கம்போடிய அரசின் பண்பாடு மற்றும் நுண்கலை அமைச்சும் இணைந்து ஒழுங்குசெய்த உலகத் தமிழ்க் கவிஞர்கள் மகாநாடு கம்போடியாவிலே கோலாகலமாகக் கொண்டாடப்பெற்றது. இந்த மகாநாட்டிலேதான் தமிழ்க்; கவிஞர்களுக்கான கவிதைப் போட்டியும் நடந்தேறியது.. அந்த விழாவிலேதான் பாரதி அவர்களுக்கு கம்போடிய அரசினால்; இந்தப் பெறுமதிமிக்க விருது வழங்கப்பெற்றது. அயல் நாடொன்று இவரின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டிக் கௌரவம் அளிக்கின்றது என்றால் இவர் ஆற்றிய சேவைகளின் உயர்வுபாராட்டுவதற்கு உரியதல்லவா?
15000 திற்கும் அதிகமான பாடல்களை இயற்றித் தமிழுக்கு அணி சேர்த்தவர் நவாலி ஊரிலே திருத்தக வாழ்ந்த சோமசுந்தரப் புலவர் ஆவார். வன்னியசேகர முதலியார் பரம்பரையிலே அரச வழித்தோன்றலாகப் பிறந்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைபெற்று விளங்கி, ‘தங்கத் தாத்தா’ என்று அறிஞர்களால் அன்புடன் அழைக்கப்பெற்று வந்த புலவரின் மூத்த புதல்வனே கவிசிந்தாமணி புலவர்மணி இளமுருகனார் அவர்கள். இளமுருகனார் அவர்களின் மூத்த புதல்வனாகிய கலாநிதி சோமசுந்தர பாரதி சிறு வயதிலிருந்தே தமிழிலும் சைவத்திலும் மிகுந்த பற்றுடையவராகவும் சமூக சேவை செய்வதில்; விருப்பங் கொண்டவராகவும் விளங்கினார். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார்.
தவத்திரு யோகர் சுவாமிகளின் பூரண ஆசீர்வாதம்
எட்டு வயது நிரம்பிய பாரதியை அவரின் தந்தை( கொழும்புத்துறை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலே தலைமைத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்திலே) ஒருநாள் தவத்திரு யோகர் சுவாமிகளிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பாரதியைத் தனது மடியிலே தூக்கி வைத்து ஒரு வாழைப்பழத்தை உரித்து இவருக்குச் சுவாமிகள் முற்றாக ஊட்டினார். இவருடைய தந்தை சுவாமியிடம் :”இவன் என்ன செய்யப்போகிறானோ தெரியவில்லை சுவாமீ . குழப்படி அதிகம் என்று சொல்ல சுவாமி உடனே, ‘அவன் பல்லைப் பிடுங்குவான் போ’ என்று அருள்வாக்காகச் சொல்லிச் சிரித்தhர்.. அப்பொழுது அவர் சும்மா பகிடிக்குச் சொல்கிறார் என்று நினைத்து நாளடைவில் அவர் சொன்னதை பாரதியின் குடும்பத்தவர்கள் மறந்தே விட்டார்கள். சிவனானச் சித்தரின் வாக்குப் பொய்யாகுமோ?.
இலங்கைச் செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: தாயகம் திரும்பிய தமிழ் அரசியல் கைதிகள்
இவ்வருட முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு
SLFP வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமல்ல
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு யாழ். பலாலி விமான நிலையத்தை குத்தகைக்கு விட அரசு தீர்மானம்
போராட்டத்தின் போது வெளிநாட்டவர் எவரும்... நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை இலட்சக்கணக்கான நாட்டு மக்களே அச்சுறுத்தல் விடுத்தனர்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: தாயகம் திரும்பிய தமிழ் அரசியல் கைதிகள்
- 33 ஆண்டுகளுக்குப் பின் பூர்வீக வாழ்விடங்களுக்கு வருகை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான முருகன், றொபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும், தமது மூத்த சட்டத்தரணி புகழேந்தி அவர்களது வழித்துணையுடன் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் (03) யாழ்ப்பாணத்திலுள்ள தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்தடைந்துள்ளனர்.
உலகச் செய்திகள்
தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு
இம்ரான் கானின் சிறை தண்டனை இடைநிறுத்தம்
இஸ்ரேலில் உஷார் நிலை
இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற காசா மருத்துவமனையில் பேரழிவு
தாய்வானில் சக்திவாய்ந்த பூகம்பத்தில் 9 பேர் பலி
தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு
காசா வந்த உதவிக் கப்பல் திரும்பிச் சென்றது
தொண்டுப் பணியாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து காசாவுக்கு கடல் வழியாக உதவிகளை எடுத்துச் சென்ற கப்பல் மீண்டும் சைப்ரஸுக்கே திரும்பியுள்ளது. ஏழு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தனது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அளவில் கண்டனம் வலுத்த நிலையில் இஸ்ரேல் மன்னிப்புக் கேட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு தினம் - ஏப்ரல் 14, 2024 ஞாயிற்றுக்கிழமை
தமிழ் புத்தாண்டு தினம்
விசு புண்யாகலம் &
1008 சங்காபிஷேகம்
ஸ்ரீ வரசித்தி விநாயகர்
ஏப்ரல் 14, 2024 ஞாயிற்றுக்கிழமை
திட்டம்:
ஏப்ரல் 13, 2024 சனிக்கிழமை
மாலை 4.00 முதல் 7.00 வரை. : ஸ்ரீ தேவதா அனுக்யா, யஜமான சங்கல்பம், 1008 சங்கு ஸ்தாபனம், ஆவாஹனம், முதல் கால ஹோமம், பூர்ணாஹுதியைத் தொடர்ந்து மகா தீபாராதனை சங்கல்பம், 1வது கால யாக சால பூஜை.
ஏப்ரல் 14, 2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 08.00 - சங்கல்பம், 2ம் கால யாக சால பூஜை, மூல மந்திர திரிசதி ஹோமம், பூனாஹுதி, தீபாராதனை.
காலை 9.00 மணி ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு விசேஷ அபிஷேகம் & தீபாராதனை.
10.00 AM - 1008 சங்கு அபிஷேகம், அலங்காரம் & ஷோடஸ்பச்சர மகா தீபாராதனை.
மதியம் 12.00 - வீதி உற்சவம்
சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஏப்ரல் 09 செவ்வாய் முதல் ஏப்ரல் 17 புதன்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாட்கள் திருவிழா (வசந்த நவராத்திரி)
சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஏப்ரல் 09 செவ்வாய் முதல் ஏப்ரல் 17 புதன்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாட்கள் திருவிழாவிற்கு (வசந்த நவராத்திரி) பக்தர்கள் துர்கா தேவியின் அருளையும் அருளையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
ஏப்ரல் 14, 2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சி விநாயகர் ஹோமத்துடன் தொடங்குகிறது.
மஹா சண்டி ஹோமம் மிகவும் சக்திவாய்ந்த சடங்கு மற்றும் சிட்னியில் உள்ள துர்கா கோவிலில் பெரிய அளவில் நடக்கிறது.
இந்த புனித சடங்கில் பயன்படுத்தப்படும் நவ துர்கா செப்பு யந்திரங்கள் விழா முடிந்ததும் கிடைக்கும். இந்த நவ துர்கா நிற செப்பு யந்திரம் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் கடினமான பிரச்சனைகளை நீக்கும்.
அன்புடன்,
கோவில் நிர்வாக குழு
சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம்
21 ரோஸ் கிரசண்ட், ரீஜண்ட்ஸ் பார்க், NSW -2143 Ph: (02) 9644 6682 , 04502 09724