மேலும் சில பக்கங்கள்

கவிதையஞ்சலி

அவுஸ்திரேலிய தமிழ்ச் சைவ அமைப்புகள் இணைந்து அமரர் விஸ்வலிங்கம் ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஏற்படுத்திய பிரார்த்தனைக் கூட்டத்திலே வாசிக்கப்பெற்ற கவிதையஞ்சலி

இயற்றியவர்: 'சிவஞானச் சுடர்'  பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் (வாழ்நாட் சாதனையார்)













அமரர் விஸ்வலிங்கம்


மெள்ளத்தான் மூடியதோ? விரைந்துன் உயிரும்

விமலன்றாள் பற்றியதோ? சாந்தி! சாந்தி!!

வெண்சிரிப்புன் உள்ளத்தின் தூய்மை காட்டும்!

விரித்தணைக்கும் கைகளோ கேண்மை செப்பும்!


வண்ணவிதழ் உதிர்க்குஞ்சொல் அன்பைச் சிந்தும்!

வந்தமைந்த சிந்தைசிவத் தியானம் செய்யும்!

கண்ணனைய சைவத்திற்(கு) உன்பங் களிப்பும்

கனடாவில் சைவமன்றம் நிறுவிய பாங்கும்

எண்ணரிய உன்சேவை ஏற்றம் இயம்பும்!

இறைநிலையை அடைந்தனையே தெய்வந் தானே!

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 90 எனது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் வரிசையில் தோழர் மஃரூப் நூர் முகம்மட் ! முருகபூபதி


கடந்த 89 ஆவது அங்கத்தில் எனது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவரும் மெல்பனில் வதியும் இளம் சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான திருமதி நிவேதனா அச்சுதன் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

இந்த வாரம் மேலும் ஒருசிலர் பற்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இலக்கிய ஆர்வலரும் மொழிபெயர்ப்பாளருமான தோழர் மஃரூப் நூர் முகம்மட் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர்தான்  எனக்கு அறிமுகமானார்.

மேற்கு அவுஸ்திரேலியாவில் வதியும் பொருளியல் துறை பேராசிரியர்


, எமது இனிய நண்பர் அமீர் அலி அவர்கள் மெல்பனுக்கு நாம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு வருகை தந்து,  இங்கே மருத்துவராக பணியாற்றும் திருமதி வஜ்னா ரஃபீக் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார்.

வஜ்னா, எங்கள்  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கம் வகித்திருந்த எழுத்தாளரும் கவிஞருமான ஆசிரியர் மருதூர்க்கனியின் புதல்வி. மருதூர்க்கனி, அஷ்ரஃபின் முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்தவர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இவர் பற்றி ஏற்கனவே விரிவான பதிவு எழுதியிருக்கின்றேன்.

வஜ்னாவின் கணவர் இப்ரகிம் ரஃபீக் அவர்களும் எனது அருமை நண்பர். இவர் அமைச்சர் அஷ்ரஃப் , கப்பல் போக்குவரத்து, துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காலப்பகுதியில், அதன் அதிகார சபையின் பிரதித்தலைவராக இருந்தவர். சிறந்த சமூகப்பணியாளர்.

ரஃபீக் – வஜ்னா தம்பதியர் வீட்டில், அமீர் அலி அவர்களை பார்க்கச்சென்றவிடத்தில்தான் மஃரூப் நூர் முகம்மட் மற்றும் வானொலி ஊடகவியலாளர் – அறிவிப்பாளர் சகீம் மத்தாயஸ் ஆகியோரும் எனக்கு அறிமுகமாகி, எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்தனர்.

 “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்  என்று எனது பதிவுகளில் அடிக்கடி எழுதி வந்திருக்கின்றேன்.

இலங்கைத்  தலைநகரில் பிறந்திருக்கும் மஃரூப் நூர் முகம்மட், ஆங்கில மொழி மூலம் ஒரு தனியார்  ஆரம்பப் பாடசாலையில் கற்றவர்.  பின்னர் மருதானை சாகிறா கல்லூரியில் உயர்தரம் வரையில் பயின்றார். 

இளமைப்பராயத்தில் இவரால் சரளமாக தமிழ் பேசமுடியாத சூழலில், இவரது அண்ணன் விரும்பிப்படிக்கும் தமிழகத்தின் பிரபல சினிமா இதழில் வரும் திரையுலக நட்சத்திரங்களின் வண்ணப் படங்களைப்பார்ப்பதற்காக கேட்பாராம்.

நூல் நயவுரை – – முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் சினிமா பிரியர்களுக்கு பல செய்திகளை கூறும் நூல் சகுந்தலா கணநாதன்


எழுத்தாளர் முருகபூபதி, வாராவாரம்  அவுஸ்திரேலியா அக்கினிகுஞ்சு,  தமிழ் முரசு, கனடா பதிவுகள் இணைய இதழ்கள் உட்பட இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் இதழ்களில்  எழுதிக்கொண்டே இருப்பார். இவ்வாறு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் இவருக்கு ஒரு வருடத்தில் சுமார் இருநூறு திரைப்படங்கள் பார்ப்பதற்கு எவ்வாறு  நேரம் கிடைக்கிறது  என்று நான் ஆச்சரியப்படுவேன்.

ஆனால், அது ஆச்சரியமல்ல, உண்மைதான் என்பதை ஆதாரமாகக்


கூறுகிறது, முருகபூபதி எழுதி, யாழ்ப்பாணம் ஜீவநதி பதிப்பகத்தினால் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியாகியிருக்கும் சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல்.

இலக்கிய நண்பரும் ஓவியருமான  கிறிஸ்டி நல்லரெத்தினம் முன்னர் கூறியதுபோன்று,   “ இந்திய  சினிமாவில் சத்தியஜித்ரே போன்ற சில இயக்குனர்கள் இந்திய  திரைக்களத்தை மேம்படுத்தினார்கள். இதற்கு மாறாக இந்திய தமிழ் சினிமா,  பாட்டு,  நடனம்,  கேளிக்கை, சண்டை என்று நேரத்தை வீணடிக்கிறது   என்றே சொல்லத்தோன்றுகிறது.

 

முருகபூபதி, திரை இயக்குனர் முள்ளும் மலரும் மகேந்திரன் பற்றி பல விடயங்களை  எழுதியுள்ளார்.  இப்பதிவில். முக்கியமாக  மற்ற இயக்குனர்கள் கைவிட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய செய்தி.

மேலும்  முள்ளும் மலரும் மகேந்திரன், எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல்களை திரைப்படமாக்கிய அனுபவசாலி என்கிறார்  முருகபூபதி.

பாரதி சொல்லும் ரௌத்திரம் பழகு என்றவாறு வாழ்ந்து காட்டிய ஜெயகாந்தனிடம் அமைதியும், நிதானமும், அசாத்தியமான துணிச்சலும் குடியிருந்தன  என்பதை அவர் பற்றிய முருகபூபதியின் பதிவிலிருந்து  வாசகர் அறிய முடிகிறது.

நடிகர் நாகேஷ் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்த ஜெயகாந்தன்,    நாகேஷின் நடிப்பு தமிழ் பட உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று புகழ்கிறார். "நல்ல வேளையாக   டைரக்டர்களின் ஆளுகை தன் மீது கவிழ்ந்து, அமிழ்த்தி விடாதவாறு பாதுகாத்துக்கொள்ளும்,    அதே சமயத்தில் ஒரு நடிகனுடைய எல்லையை மீறி நடந்து கொள்ளாதவர்,   தன் பாத்திரத்தை தன் கற்பனையால் டைரக்டரோ தயாரிப்பாளரோ எதிர்பாராத முறையில் மிகவும் சிறப்பாக அமைத்துக்  கொள்கிற ஒரு புதுமையான கலைஞர்தான் நாகேஷ்   என்கிறார் ஜெயகாந்தன்.

காரைநகரை உலகறியச் செய்த பேரறிஞர்!

 


அமரர் தி.விசுவலிங்கம்

  ----------------------------------------- சாவித்திரி வைத்தீசுவரக்குருக்கள்

 -------------------------------------------இராணி வைத்தீசுவரக்குருக்கள் 

புலம்பெயர் தேசம் சென்று சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய அறிஞர்கள் வரிசையில் கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தாபகராக - காப்பாளராக - தலைவராகத் திகழ்ந்த திரு. தி.விசுவலிங்கம் ஐயா அவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். விசுவலிங்கம் ஐயா அவர்களது மறைவு சைவத் தமிழ்உலகுக்குப் பேரிழப்பு எனின் அது மிகையாகாது. சைவசமயநூல்களைப் பதிப்பித்தும் அன்புநெறி என்ற மாத இதழைத்தொடர்ச்சியாக வெளியிட்டும் அமரர் ஆற்றிய சமயத் தொண்டு தனித்துவமானது.

கனடா சைவசித்தாந்த  மன்ற  வெளியீடுகளாக வெளிவந்த  நூல்கள்  மற்றும் அன்புநெறி மாத இதழ்கள் ஊடாகப் புலம்பெயர் சூழலில் மட்டுமன்றி ஈழத்திலும் தமிழ் மக்களிடையே சைவசமய  தத்துவங்களையும் திருமுறைப் பெருமையையும் நிலைநிறுத்தக் காரணமானவர் தனது உடல் பொருள் ஆவி    அனைத்தையும் சைவ  சமயத்துக்கு அர்ப்பணித்தவர் விசுவலிங்கம் ஐயா அவர்கள். எமது தந்தை கலாநிதி சிவத்திரு. க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்தம் சிறப்புக்களையும் தன்னலமற்ற சைவத் தமிழ்ப்பணியையும்2001ஆம் வெளியிட்ட வைத்தீசுவரர் மலர் வாயிலாக உலகறியச்செய்தவர் விசுவலிங்கம் ஐயா அவர்களே. இவ்வாறு ஒரு மலர் வெளிவர இருப்பது எமது தந்தைக்கு அப்போது தெரியாது. ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்த அறிஞர்களிடம் கட்டுரைகளையும் பாடல்களையும் திரட்டி தந்தையின் 85 ஆவது வயதில் சைவ சித்தாந்த மன்றத்தின் சிறப்பு வெளியீடாக வைத்தீசுவரர் மலரை வெளிட்ட பெருமைக்கும் நன்றிக்கும் உரிய பெருந்தகை அமரர் விசுவலிங்கம் ஐயா அவர்கள்.

தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தூண்களில் ஒருவரான தேர்ந்த வாசகர் வசந்தி தயாபரன் ! முருகபூபதி

 “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்  “ என்று எனது


பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன்.

இலக்கியப்படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள்.

சிலர் தமது குடும்பத்தின் பின்னணியிலிருந்தும், வேறும் சிலர்,  சமூக உறவுகளினாலும் வெளியுலகத் தொடர்புகளினாலும்  எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட்டு,  உருவாகியிருக்கிறார்கள்.

அவ்வாறு கலை, இலக்கிய, கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.

எங்கள் நீர்கொழும்பூரின் இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில்


நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக பணியாற்றிய  ‘ பூரணி ‘ ‘ மகாலிங்கம், சிவராசா, கந்தசாமி, அநு. வை. நாகராஜன்,                     வ. ராசையா ஆகியோரின் நட்புறவு கிடைத்தது.

இவர்கள் எங்கள் ஊரில் நடந்த குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர்.  இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு  அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா.

இந்நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.

வ. ராசையா மாஸ்டரின் தலைமையில் கொழும்பில் நடந்த இலக்கிய கூட்டங்களிலும் உரையாற்றினேன்.  இந்தத் தொடர்புகளினால்,  அவரது புதல்வி வசந்தி எனக்கு அறிமுகமானார்.

ராசையா மாஸ்டர் வீட்டில் நடக்கும் சந்திப்புகளின்போது, எமக்கு சிற்றுண்டி , தேநீர் தந்து உபசரிக்கும், வசந்தியும் தாயார்  பூரணம் அவர்களும் அந்தக் கலந்துரையாடல்களில் பார்வையாளர்களாக இருப்பார்கள்.  வசந்தி அப்போது மாணவியாக இருந்திருக்கவேண்டும்.

எழுத்தாளர்களின் கருத்துக்களை கூர்ந்து அவதானிப்பார்.  வசந்தியின் பெற்றோர்கள், கலை, இலக்கிய, இசைத்துறை ஆர்வலர்களாக இருந்தமையால், வசந்தியையும் இந்தத் துறைகள் தொற்றிக்கொண்டன.

வசந்தி, மற்றுமொரு இலக்கியவாதி திருமதி மனோன்மணி சண்முகதாஸின் சகோதரர்  தயாபரனை காதல் திருமணம் செய்த பின்னர், இலக்கிய ஈடுபாட்டிலும், எழுத்துத்துறையிலும்  தீவிரமானார்.

மூன்று புத்திரர்களுக்கு தாயான பின்னரும்கூட  வசந்தி, தனது இலக்கியச் செயற்பாடுகளை தங்கு தடையின்றி தொடருகின்றார்.

கொழும்பில் இயங்கிய தமிழ்க்கதைஞர் வட்டம், ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.  மாதாந்தம் இலங்கைப்  பத்திரிகைகளில், இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறந்த சிறுகதைகளைத்  தேர்வுசெய்து,  பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வந்தது.

இந்த அமைப்பில் வசந்தியும் ஒரு தூணாகவே நிற்பவர்.

மாணவப்பராயத்தில் வானொலி நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்று, இசை, நடனத் துறைகளிலும் ஈடுபட்டவர்.   கணவர் தயாபரனின் சகோதரி மனோன்மணி, பேராசிரியர் அ. சண்முகதாஸின் அன்புத் துணைவியார்.

இத்தகைய பின்புலங்கள் அனைத்தும், வசந்தியையும் தேர்ந்த வாசகராகவும், எழுத்தாளராகவும் இலக்கியச்செயற்பாட்டாளராகவும் உருவாக்கியது.

மதுரை காமராசர்  பல்கலைக்கழகத்தில்  ( இளங்கலைமாணி தமிழ் சிறப்பு ) பயின்ற வசந்தி, கணக்கியல், வங்கியியல் கற்கை நெறிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.  தற்போது மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

 அவுஸ்திரேலியா மெல்பேனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க்


கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17/12/23) கொண்டாடப்பட்டது.

 

ஒவ்வொரு வகுப்புகளிலும் பல பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதுடன்விக்டோரியா மாநிலத்தால் நடாத்தப்படும் VCE தமிழ் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் விருதும்அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவி ஸ்ருத்திகா உருத்திரகுமாருக்கு $500 பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

 

மேலும்பரிசளிப்பு விழாவின் இறுதியில்அவுஸ்திரேலியா மண்ணில் தமிழ் சமூகத்தின் கலைகலாச்சாரசமய வளர்ச்சிக்கும்தமிழ் தேசியத்திற்கும்தமிழ்க்கல்விஊடகத்துறையின் வளர்ச்சிக்கும்தாயக உதவித்திட்டங்களுக்கும் அயராது உழைத்த திரு. சாண்டி சந்திரசேகரம்  அவர்களுக்கு நரே-வொரென் தமிழ்ப் பாடசாலை சமூகத்தினால்  சாதனைத் தமிழன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.   இவ்விருதினை மாண்புமிகு  ஹோல்ட் பாராளுமன்ற உறுப்பினர்  கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) அவர்களினால்சாண்டி சந்திரசேகரம் அவர்களுக்கு  வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 

வேட்டைக்காரன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


எம் ஜி ஆர் நடிப்பில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அன்றி, ஆண்டிற்கு இரண்டு படங்கள் என்ற ரீதியில் படங்களை தயாரித்து சாதனை புரிந்தவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர். அந்த வகையில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1964ல் அவர் தயாரித்து வெளியிட்ட படம்தான் வேட்டைக்காரன். அந்த ஆண்டின் தைப் பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வந்தது.


தேவர் படம் என்றாலே செட் மெனுவைப் போல எம் ஜி ஆர்,

சரோஜாதேவி, எம் ஆர் ராதா, அசோகன், ஆகியோர் இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அது தகர்க்கப்பட்டது. சரோஜாதேவியின் கால்ஷீட் கிடைப்பதில் தேவருக்கும், சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக , இனிமேல் சரோஜாதேவியை போட்டு படம் எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்து விட்டு திரும்பி வந்த தேவரின் கவனம் சாவித்ரியின் பக்கம் திரும்பியது. அதனைத் தொடர்ந்து படத்தின் கதாநாயகியாக சாவித்ரி ஒப்பந்தமானார். எம் ஜி ஆரும் எந்தவித ஆட்சேபணையையும் தெரிவிக்கவில்லை.

கதாநாயகியை மாற்றிய கையேடு ஒரு மாறுதலுக்காக வழக்கமாக தன் படங்களுக்கு இசையமைக்கும் கே வி மகாதேவனையும் மாற்ற எண்ணினார் தேவர். இது தொடர்பாக எம் எஸ் விஸ்வநாதனை நேரில் சந்தித்து பேசினார் தேவர். விஸ்வநாதனும் சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் விஸ்வநாதனின் தாயாரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒருகாலத்தில் விஸ்வநாதன் சிரம திசையில் இருந்த போது அவருக்கு சரியான பாதையை வகுத்து கொடுத்தவர் மகாதேவன். அந்த மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் நிறுவனத்துக்கு நீ இசையமைத்து அவருக்கு தீங்கு செய்வதா என்ற தாயின் கண்டனம் விஸ்வநாதனை வேட்டைக்காரன் படத்துக்கு இசையமைக்காமல் தடுத்து விட்டது. அது மட்டுமன்றி அதன் பின் எந்த காலத்திலும் தேவர் படங்களுக்கு விஸ்வநாதன் இசையமைக்கவில்லை!

இவ்வாறு இரண்டு தாயார்களின் தலையீட்டுக்கு மத்தியில் வேட்டைக்காரன் துரித கதியில் தயாரானது. ஆங்கிலத்தில் வெளிவரும் கவ்பாய் படங்களின் பாதிப்பில் இப்படத்தை உருவாக்கினார் தேவர். முதல் தடவையாக எம் ஜி ஆருக்கு கவ்பாய் பாணியில் இறுக்கிய சட்டை, பேண்ட், பெல்ட் எல்லாம் அணிவித்து தலையில் தொப்பியும் மாட்டி புதிய கெட்டப்பில் அவரை படத்தில் காட்சிப்படுத்தினார் தேவர்.

ஐனாதிபதியின் வடக்கிற்கான விஜயம் பிசு பிசுக்குமா!!!

 January 5, 2024

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐனாதிபதி நான்கு நாள் விஜயமாக வடக்கிற்கு வந்துள்ளார்,

யாழ் மாவட்டத்தில் தங்கியுள்ள ரணில் வடக்கின் ஏனைய மாவட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்.

கெலியில் வந்திறங்கியவுடன் கடற்தொழில் அமைச்சர் மாத்திரம் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்த அனுமதித்தனர் ரணிலின் பாதுகாப்பு பிரிவினர், வடக்கு ஆளுநர் வெற்றிலையை நீட்டிய போது பாதுகாப்பு தரப்பினர் பறுத்தெடுத்தனர் அதுமட்டுமல்லாது ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் திருமதி மகேஸ்வரனின் பிரதிநிதிகளும் ஐனாதிபதியை வரவேற்ற சென்றிருந்தனர் ஆனால் அவர்கள் கெலி கொப்ரருக்கு அருகில் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை,

2010 ம் ஆண்டு காலத்தில் ரணில் விக்கிரம சிங்கா எதிர்கட்சித் தலைவராக இருந்த போது மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சி நிலவியது

இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா

யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி யாழ். விஜயம்

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தருக்கு சிலை

யாழ்.மாநகரசபையின் பவளவிழா

ஜனாதிபதி முன்னிலையில் பாடல் பாடிய கில்மிஷா


ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா

- நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

January 5, 2024 12:07 pm 

யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் பயணமாக நேற்று (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.

உலகச் செய்திகள்

ஜோ பைடன் மீதான அதிருப்தி அதிகரிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ‘பகிரங்க விசாரணை’

பிராந்திய பதற்றத்திற்கு மத்தியில் மீண்டும் இஸ்ரேலுக்கு விரைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

ஜனாதிபதி தேர்தல்: தடை உத்தரவை இரத்து செய்ய கோரும் ட்ரம்ப்

லெபனானில் ஹமாஸ் பிரதித் தலைவர் அல் அரூரி படுகொலை

இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து வடக்கு காசாவை நோக்கித் திரும்பும் பலஸ்தீனர்கள்




ஜோ பைடன் மீதான அதிருப்தி அதிகரிப்பு

January 5, 2024 12:18 pm 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காசா மோதலை கையாளும் முறைக்கு அதிருப்தி வெளியிட்டு அமெரிக்க கல்வித் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். இந்தப் போருக்கு எதிராக அமெரிக்க நிர்வாகத்தில் அதிகரித்து வரும் அதிருப்தியின் தொடர்ச்சியாகவே இந்தப் பதவி விலகல் அமைந்துள்ளது.

வன்னி ஹோப் - கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலை கதிரவெளி வாகரை மட்டக்களப்பு புதுப்பிக்கப்பட வேண்டும் - ஜனவரி 2024

 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"

மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளி கிராமம், பின்தங்கிய வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குள் அமைந்துள்ள மட்/கதிரவெளி விக்னேஸ்வர கனிஷ்ட பாடசாலையின் தாயகமாகும். 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி சேவை அளிக்கும் கிராமம், வளர்ச்சியடையாததாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் தினக்கூலி மற்றும் சிறு-குறு மீனவர்கள். கடந்த கால மோதல்களால் பாதிக்கப்பட்ட உள்ளூர் சமூகம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். உடல் மற்றும் பணியாளர் பற்றாக்குறையுடன் பள்ளியே இயங்கி வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளி கட்டடம் கட்டியபோதும், கதவு, ஜன்னல்கள் இல்லாமல், முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வகுப்பறைகளுக்குள் குரங்குகள், காகங்கள் நுழைவதால் இடையூறு ஏற்பட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தை கட்டி முடிக்க நிதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. எனவே, அலுமினிய ஜன்னல்கள் பொருத்தவும், வர்ணம் பூசவும், வெள்ளை பலகைகளை நிறுவவும் வன்னி ஹோப் நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ இந்த நிலைமைகளை மேம்படுத்த உதவுமாறு வன்னி ஹோப் அழைக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்புக்கு (புதுப்பிக்க) எதிர்பார்க்கப்படும் செலவு A$1800/US$1300/CAD$1700/GBP950

மேல்முறையீட்டின் வீடியோ இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் (SVT) - ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி - 11/01/2024

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia




ஸ்ரீ மாருதி (காற்றின் மகன்), அசுரர்களுக்கு (ராட்சசர்கள்) பயமுறுத்தும் இடமெல்லாம், ஸ்ரீராமரின் புகழ் பாடப்படும் இடமெல்லாம், கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு, தலைக்கு மேல் கைகூப்பியபடியே இருக்கிறார். அவருக்கு நமது வணக்கத்தை (நமஸ்காரங்கள்) சமர்ப்பிக்கிறோம்.


பகவான் ஸ்ரீ ஹனுமான், பகவான் ஸ்ரீ ராமரின் தீவிர பக்தர், கடவுள் மீதான அவரது தளராத பக்திக்காக வணங்கப்படுகிறார். ஹனுமன் ஜெயந்தி அல்லது ஹனுமத் ஜெயந்தி இந்து கலாச்சாரத்தில் பரவலாக போற்றப்படும் வானர கடவுளான ஸ்ரீ ஹனுமான் பிறந்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

ஹனுமான் பக்தி, மந்திர சக்திகள், வலிமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடையாளமாக வணங்கப்படுகிறார்.


தீய சக்திகளை வென்று மனதிற்கு அமைதியை அளிக்கும் ஆற்றல் கொண்ட ஹனுமான் சாலிசாவை ஜபிக்கப்படுகிறது.


நிகழ்வுகளின் நேரம்:


11.1.2024 - வியாழன் - காலை 10.00 மணி: ஸ்ரீ அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை.

ஐம்பது வருடத்திற்கு முன் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் ஒரு கண்ணேட்டம். - தேவகி கருணாகரன்

 .

ம்பது வருடத்திற்கு முன் ஈழத்தில் தயாரிக்கப்பட்டகுத்துவிளக்கு’  திரைப்படத்தின்ரு கண்ணேட்டம். 


தேவகி கருணாகரன் 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் திரைப்படம் தயாரிக்கும் முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது. அங்கே தமிழ் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு அது ஒரு முக்கிய துறையாக வளராவிட்டாலும் அப்படி ஒரு துறையை உருவாக்க கனவோடு உழைத்தவர்களின் கதை ஒரு சோக வரலாறு. 

 தமிழ் ஈழப் போருக்கு முந்திய காலகட்டத்தி;ல் திரைப்படத்துறை கலையில் ஆர்வம் கொண்ட சில கலைஞ்சர்கள் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்த போதும் அவை எதிர்பார்த்த பலனை தரவில்லை. அந்தப் படங்கள் சரியாகப் பேணப்படாததாலும் இனக்ககலவரங்களால், எரிவுண்டு போனதாலும், அழிந்துபோன நிலையால் அவற்றிற்கான சாட்சியங்களும் மறைந்து போய்விட்டன.   

அப்படித் தப்பியிருக்கும் ஒரே ஒரு திரைப்படம், கட்டிடக் கலைஞர் வீ எஸ் துரைராஜாவினால் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்குத் திரைப்படமாகும்1972ம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம் இலங்கையின் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.   

இந்தத் திரைப்படத்தின் விசேடம் என்ன வென்றால் படத்தின் பேச்சு முறை முழுக்க முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தின் கலைஞ்சர்கள், தொழில்நுற்ப விற்னர்கள் அனைவரும் ஈழத்தை சேர்ந்தவர்கள இந்தப் படம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நுறு நாட்கள் ஓடி நுறாவது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. 

டபிள்யூ எஸ் மகேந்திரன் படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு காலம் சென்ற ஈழத்து ரெத்தினம் பாடல்களை எழுத, ஆர் முத்துசாமி இசை அமைத்துள்ளார் 

 ஆதியில் இலங்கை முழுவதையும் ஈழம் என்று அழைக்கப்பட்டது. அப்போது தமிழ் ஈழம், சிங்கள ஈழம் என இரண்டு தேசங்கள் இருந்தன. இந்த இரண்டு தேசங்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்தனசுிங்களம் சிங்கள ஈழத்திலும், தமிழ் தமிழிழத்திலும் பேசப்பட்டன. இவ்வுண்மையை குத்து விளக்கு படத்தின் ஆரம்ப பாடல் விளக்குகிறது  

பாட்ட ஈழத்திருநாடே என்னருமைத்தாயகமே  

வாழும் இனங்களிங்கு பேசும் மொழியிரண்டு  

செங்தமிழும், சிங்களமும் செல்வியுன் இருவிழயாம் 


இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிப்பரப்புவதை அடிக்கடி கேட்டோம் மகிழ்ந்தோம். ஆனால் 1980 இன் நடுப்பகுதியிலிருந்து, பாடலின் ஈழம் என்ற சொல்லின் நிமித்தம் இந்தப்பாடலுக்கு தடை போடப் பட்டது.  

இப் பாடலை கேளுங்கள். நிச்சயமாக ரசிப்பீர்கள்.  மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போலிருக்கும். 

இப்பாடலை பாடியவர் எம்குணசீலனாதன்