அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
சிட்னியில் சிலப்பதிகாரவிழா – 27/05/2023
ஆனந்தமோ ஆனந்தம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அஞ்சலிக்குறிப்பு இலக்கியவாதிகளும் இடதுசாரிகளும் நேசித்த பாக்கியம் பூபாலசிங்கம் மறைந்தார் முருகபூபதி
யாழ்ப்பாணத்தில் முன்னர் அடிக்கடி தீக்குளித்தாலும் ஃபீனிக்ஸ் பறவையைப்போன்று உயிர்த்தெழுந்த அறிவாலயம்தான் பூபாலசிங்கம் புத்தகசாலை.
அதன் நிறுவனர் அமரர் ஆர்.
ஆர். பூபாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள்
மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி , லண்டனிலிருக்கும் தொலைக்காட்சி – வானொலி ஊடகவியலாளரான
நண்பர் எஸ். கே. ராஜெனிடமிருந்து குறுச்செய்தியாக
வந்தது.
அச்செய்தியில் இடம்பெற்ற அன்னாரின் படத்தின் பின்னாலும் ஒரு
கதை இருக்கிறது. பூபாலசிங்கம் தம்பதியரின் புதல்வன் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு, எனது ஆழ்ந்த இரங்கலை கூறியபோது, அக்கதையை நினைவுபடுத்தி ஊர்ஜிதப்படுத்தினார்.
2003 ஆம் ஆண்டு எமது மூத்த எழுத்தாளர் வரதர் அவர்களுக்கு
சாகித்திய ரத்தினா விருது கிடைத்த சமயத்தில் அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வெள்ளவத்தையில்
ஶ்ரீதரசிங் வீட்டில் தேநீர் விருந்துபசாரத்துடன் நடந்தது. அந்நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது, பாக்கியம் அம்மாவை அழைத்து, அவரது கணவர் பூபாலசிங்கம்
அவர்களின் படத்துக்கு அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டேன்.
அந்தப்படத்தையே நான் ராஜெனின்
குறிப்பிலிருந்து பார்த்து, பாக்கியம் அம்மாவுக்கு மனதிற்குள் அஞ்சலி செலுத்தினேன்.
எமது தமிழ் சமூகத்தில்
பொதுவாழ்க்கையில் அதிலும் இடதுசாரி முகாமிலிருந்து இயங்கும் எந்தவொரு ஆண்மகனுக்கும்
வாய்க்கும் மனைவி சகிப்புத்தன்மையும் பொறுமையும் நிதானமும் மிக்கவராக இருக்கவேண்டும்.
வடபுலத்தில் நயினா தீவை
பூர்வீகமாகக்கொண்டிருந்தவர்கள் பூபாலசிங்கம் தம்பதியர். நயினை நாகபூஷணி அம்பாளை குலதெய்வமாக
போற்றியவர்கள். இவர்களின் குடும்பம் அந்த ஆலயத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும்,
குடும்பத்தலைவர் பூபாலசிங்கம், இடதுசாரி இயக்கத்திலும்
தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வந்திருப்பவர்.
தங்களுக்கெல்லாம் இலக்கிய
நூல்களை இலவசமாகத் தந்து படிக்கவைத்து எழுத்தாளராக்கிவிட்டவர்தான் புத்தகக் கடை பூபாலசிங்கம்
என்று மல்லிகை ஜீவா அடிக்கடி சொல்லி வந்திருப்பதுடன் தனது வாழ்க்கை சரித நூலிலும் பதிவுசெய்துள்ளார்.
நயினாதீவில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1922 ஆம் ஆண்டில் பிறந்திருக்கும் பூபாலசிங்கம், ஆரம்ப பாடசாலைப்படிப்பை தனது ஒன்பது வயதிலேயே நிறைவுசெய்துகொண்டு பின்னாளில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்விமான்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் உட்பட கலை, இலக்கியவாதிகளுக்கும் இடதுசாரித் தலைவர்களுக்கும் அறிவொளி தந்திருக்கிறார் என்பது ஆச்சரியமானது. இவர்கள் அனைவரும் பல வழிகளில் அவரது புத்தகசாலையினால் பயன்பெற்றவர்களே. சிறியோர் முதல் பெரியோர் வரையில் நன்கு அறிந்த புத்தக விற்பனை நிலையமாக அதனை வளர்த்தெடுக்க அவர் கொடுத்த விலை அதிகம்.
என் நினைவுகளில் யோகா பாலசந்திரன் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
.
யோகா பாலசந்திரன் இவ்வுலகை விட்டுப் போனார் என்ற செய்தி கேட்டு கலங்கியவர் பலர். அவர்களுள் நானும் ஒருத்தி. நீண்ட பெருமூச்சை விடலாம். ஆனால் இழப்பு இழப்புதான். ஏற்கும் மனம் வேண்டும்.
அவர் எனது முதல் ஆடல் நிகழ்ச்சி
சரஸ்வதி மண்டபத்தில் நடந்தபோது தினக்குரலில் அழகிய விமர்சனம் எழுதினார். பின் நான்
நாட்டிய நாடகங்களை மற்றவர்களில் இருந்து மாறுபட்ட வகையில் நடத்தியபோது எல்லாம் அவற்றை
இனம் கண்டு விமர்சனம் செய்து வந்தார். அவரை ஒருபோதும் பார்த்தது கிடையாது. விமர்சகர்கள்
எழுதுவது அவரவர் கருத்து. கலைஞர்களாகிய நாம் அவர்களைத் தேடிப் போய் சந்தித்தால்
அது உறவாகி விடும். ஆகவே அதை நான் தவிர்த்தே வந்தேன். இவரும் தவறாது எனது
ஆக்கங்களை உற்று நோக்கி தகுந்த விமர்சனம் செய்து வந்தார். அவர் என்னை ரூபவாஹினி
தொலைக்காட்சியிலும் நேர்முகம் கண்டார்.
எனக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்த
பொழுது தமிழ்க் கலாசார அமைச்சர் இராஜதுரை தமிழகப் பரிசைப் பெறும் முன் நான்
இலங்கையில் கௌரவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்து எழுத்தாளர் மணியன் தலைமையில்
இராமகிருஷ்ணா மண்டபத்தில் ஒழுங்கு செய்தார். அப்பொழுது என்னைப் பாராட்டிப்
பேசுவதற்கு யோகாவை அழைத்திருந்தார். என் ஆக்கங்களை உற்று நோக்கி விமர்சனம் செய்து
வந்த யோகா என்னைப் பற்றியும் எனது ஆக்கங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார். அப்பொழுது
தான் அவரை நேரில் கண்டேன். எனது உறவு தொடங்கியது. அவரை ஒரு நிமிர்ந்த நேரிய நோக்குள்ள,
யாருக்கும் அஞ்சாத ஒரு பெண்ணாக கண்டேன். நாம் பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாடி
மகிழ்ந்தோம். அவரது நூல் வெளியீட்டிலும் என்னைப் பேச வேண்டும் என கேட்டார். அவரது
சிந்தனைகளை, ஆளுமையை எடுத்துக்கூறி நூல் பற்றி பேசினேன். இது யோகா பற்றிப் பேச
எனக்குக் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமாகவே கருதி மகிழ்ந்தேன்.
இறுதியாக கொழும்பில் சந்தித்த போது
தான் மகன்களுடன் வாழப் போவதாகக் கூறினார். எம் நாட்டின், இனத்தின், மொழியின்,
கலாசாரத்தின் செழுமைக்கு உழைக்கும் பல கலைஞர்களை நாடு இழந்து வருவதை இருவருமாக
பேசிக் கவலைப்பட்டோம். எப்போதும் தனது வெளிநாட்டுப் பயணம் முடிந்து விமானம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மேல் பறக்கும் போதெல்லாம் ‘எனது தாய் நாட்டில்
மீண்டும் கால் வைக்கப் போகிறேன்’ என என் உள்ளம் மகிழும் என கூறிய யோகா இன்று ஒரு
பிற நாட்டிலே தனது இறுதி மூச்சை விட்டார். உலகெங்கும் தஞ்சம் புகுந்து வாழும்
தமிழ்க் கலைஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என யோகாவின் பல்முகம் கொண்ட வாழ்வில்
பழகிய அத்தனைப் பேரும் அஞ்சலி செலுத்துகிறோம், நேரிலே அவரைப் பார்த்து வழியனுப்ப இயலாத
பாவிகளாக.
யோகாவின் நினைவு என்றென்றும் எம்
போன்றவர்கள் மனதில் வாழும்.
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) – அங்கம் 66 பதினாறு ஆண்டுகளின் பின்னர் கனடாவுக்கு மீண்டும் ஒரு பயணம் ! ஜூன் 04 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ! முருகபூபதி
“ குளிர்காலம் என்பதனால் வீட்டினுள்ளே முடங்கியிருந்துவிட முடியுமா?
கோடை விடுமுறையை வெளிநாடுகளில் அனுபவித்திருக்கின்றோம். ஆனால், குளிர்கால விடுமுறை இல்லை. கோடைகாலத்தில் வியர்க்கும். இரத்தத்தில் சுரக்கும் கொழுப்பும் கரைய வாய்ப்புண்டு.
குளிர்காலம் அப்படியல்ல.
இயங்காமால் முடங்கினால் எத்தனை நோய்கள் சொந்த உறவாகப் பற்றிக்கொள்ளும் என்பதை டொக்டரிடம்
மருத்துவ சோதனைக்குச்சென்றால் தெரிந்துகொள்ளலாம்.
அதனால் குளிர்காலத்தில்தான் கை,கால்களை அசைத்து நன்கு
இயங்கவைத்து வேலை செய்யவேண்டும்.
வேலை. . . வேலை.
. வேலையே வாழ்க்கை என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் எழுதிய கதையொன்று ஞாபகத்திற்கு
வருகிறது.
குடும்பத்தின் தேவைக்காக இராப் பகலாக கஷ்டப்பட்டு உழைக்கும்
ஒரு பெண்ணை அவர் அக்கதையில் சித்திரித்திருந்தார். “
இவ்வாறு தொடங்கும் ஒரு தொடர் கட்டுரையை 2008
ஆம்
ஆண்டு கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழில் எழுதத் தொடங்கியிருந்தேன்.
அந்த பயண இலக்கியத் தொடருக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு
வட்டத்துக்கு வெளியே. 2007 ஆம்
ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் கனடாவுக்கு செல்வோமா..? என்று கேட்டார் மெல்பனில்
வதியும் இலக்கிய நண்பர் நடேசன்.
இவர் எனக்கு முதலில் தேர்ந்த இலக்கிய வாசகராகத்தான் அறிமுகமானார். பின்னாளில் இவர் இலக்கியப் பிரதிகளும், அரசியல்
பத்தி எழுத்துக்களும் எழுதினார். இற்றைவரையில் எழுதி வருகின்றார்.
நடேசன் பயணங்களை பெரிதும் விரும்புபவர். திரும்பி வந்து தனது பயண அனுபவங்களையும் எழுதுவார்.
2007 ஆம் ஆண்டு நாமிருவரும் கனடாவுக்கு புறப்படுகிறோம்
என அறிந்த சிட்னியிலிருந்த எமது மூத்த படைப்பாளி எஸ். பொ. “ உங்கள் இருவருக்கும் சிலைதான்
வைக்கவேண்டும். “ என்று நக்கலடித்தார்.
ஏன் என்று கேட்டேன்.
வென்ற்வேத்வில் மூத்தோர் சங்கம் மகளிர் தினம் - ரசிகபிரியா
மே
மாதம் 3-ஆம் திகதி வென்ற்வேத்வில் மூத்தோர் சங்கம் மகளிர் தினத்தை வெகு
விமரிசையாகக் கொண்டாடினார்கள். சங்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து, இறை வணக்கம்
என ஆரம்பமானது. சங்கத்தின் செயலாளர் எலிசபெத் ரொட்றிகோ யுநெஸ்கோ நிறுவனம் உலக
மகளிர் தினத்தை எதற்காக நடத்துகிறது என விளக்கிக் கூறினார். இன்றும் உலகின் பல
பாகங்களிலும் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படும் நிலையில் உள்ளனர் என்பதை
எடுத்துக்கூறி, தனது சிற்றுரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியை
நடத்தும் பொறுப்பை திருமதி. கனகமணி செல்லத்துரையிடம் கையளித்தார். மகளிர் தின
சிறப்புரை ஆற்ற நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அழைக்கப்பட்டிருந்தார். அவர்
‘மனித வரலாற்றில் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அடுத்து
சங்க உறுப்பினர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதல் நிகழ்வாக
எப்பொழுதுமே உடற்பயிற்சி நடாத்தும் சரோஜினி நலந்துவன் சினிமா பாடலின்
தாளத்திற்கேற்ப உடலைக் குலுக்கி வளைத்து அபிநயம் புரிந்து யாவரின் பாராட்டுகளையும்
பெற்றார்.
இது சத்தியம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்
தமிழ் திரையில் ஆரம்ப கால அம்மா நடிகை என்றால் அது பி.
கண்ணாம்பா தான். பிரபல வசனகர்த்தா இளங்கோவன் எழுதிய கனல் தெறிக்கும் வசனங்களை கண்ணகி படத்தில் பேசி நடித்து தமிழில் புகழ் பெற்றார் இவர். மனோகரா படத்தில் பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று சிவாஜியை ஆவேசம் கொள்ள வைப்பதாகட்டும் , தாய்க்கு பின் தாரத்தில் மகனின் கடமையை எம் ஜி ஆருக்கு உணர்த்துவதாகட்டும் அவரின் நடிப்பு தனித்துவம் மிக்கதாகவே மிளிர்ந்தது. ஏனைய
அம்மாக்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய போது அவற்றுடன் சேர்த்து கண்டிப்பையும் , கடுமையையும் படங்களில் காட்டியவர் இவர். அந்த கண்ணாம்பா பாட்டியாக நடித்த படம் இது சத்தியம். குமுதம் வார இதழில் ரா கி ரங்கராஜன் எழுதிய நாவலே அதே பேரில் படமானது.
முதல் சந்திப்பு - நடிகராக அறிமுகமாகி, இயக்குநராக மாறிய கலைவாணன் கண்ணதாசன் முருகபூபதி
கவியரசு கண்ணதாசனுக்கு பதினான்கு பிள்ளைகள். அவருக்கு மூன்று மனைவிகள் என்பது உலகறிந்த செய்தி.
தனது
ஆண் பிள்ளைகளுக்கு தான் நேசித்த ஆளுமைகளின் பெயர்களையே சூட்டினார்.
கண்மணி சுப்பு ( பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம் ) காந்தி,
கலைவாணன், அண்ணாதுரை.
இவர்கள்
மூவரையும் சந்தித்திருக்கின்றேன். கண்மணி சுப்புவும், கலைவாணனும், அண்ணாதுரையும் ,
விசாலினியும் சினிமாவுக்குள் பிரவேசித்தனர். காந்தி, சட்டம் பயின்றுவிட்டு, கண்ணதாசன் பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு
பதிப்பாளர் சங்கத்திலும் தலைவராக இருந்தார்.
1990 ஆம் ஆண்டு சென்னைக்குச்சென்றிருந்தபோது, பச்சையப்பன்
கல்லூரியில் எங்கள் ஊர் நண்பர் விக்னேஸ்வரன் உயர் வகுப்பில் படித்துக்கொண்டே கண்ணதாசன் பதிப்பகத்திலும் பகுதி நேரமாக பணியாற்றினார். அத்துடன் கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு உதவி இயக்குநராகவும் இருந்தார்.
கலைவாணனை
அவர் எனக்கு தனது பிறந்த தினத்தன்றுதான் அறிமுகப்படுத்தினார். மார்ச் மாதம் 24 ஆம் திகதி விக்னேஸ்வரனின் பிறந்த தினம். அவ்வேளையில் கலைவாணன்
கண்ணதாசன், வா அருகில் வா என்ற திகில் – மர்மங்கள் நிறைந்த திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
அந்தத்
திரைப்படத்திற்காக கோடம்பாக்கத்தில் ஒரு அலுவலகம்
இயங்கிக்கொண்டிருந்தது. அந்த அலுவலகத்தில்தான்
விக்னேஸ்வரன், கலைவாணனுக்கும் அந்த திரைப்படத்தில்
வேலை செய்துகொண்டிருந்த ஏனையோருக்கும் மதியபோசன விருந்து வழங்கினார்.
அச்சமயம்தான்
கலைவாணன் எனக்கு முதல் முதலில் அறிமுகமானார்.
அவர் நடிகராகவிருந்து இயக்குநரானவர். அவர் முதலில் நடிகை ஷோபாவுடன் அன்புள்ள
அத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
“ அந்தப்படத்தை நான் பார்த்திருக்கவில்லை “ என்றேன்.
“ நல்லது
. மிகவும் நல்லது “ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
காரணம்
கேட்டேன். “
“நடிப்பதில்
ஆர்வம் இல்லை. இயக்குநராகிவிட்டேன். ” என்றார்.
கலைவாணனிடம்
ஷோபாவின் தற்கொலை மரணம் பற்றிக்கேட்டேன்.
“ என்ன சொல்வது..? பாவம். அற்பாயுளில் அப்படி ஒரு முடிவை எடுத்துக்கொண்டார். இனி அதைப்பற்றி என்ன பேச இருக்கிறது . “ என்று சோகம் கப்பிய முகத்துடன் சொன்னார்.
ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையா கண்ணே…?! அவதானி
இலங்கையில் தற்போது சுமார் 30 அமைச்சர்கள் இருக்கிறார்கள் எனச்சொல்லப்படுகிறது.
இத்தனை அமைச்சர்கள் எமது சின்னஞ்சிறிய நாட்டிற்குத் தேவைதானா..?
இந்த நிலைமைதான் முன்னரும் இருந்தது. அத்துடன் மாகாண சபைகளும் இயங்கின. அங்கும் அமைச்சர்கள்
இருந்தனர். இறுதியில் அந்த மாகாண சபைகளும், அதிலிருந்த அமைச்சர்களும் என்ன செய்தார்கள்..?
எதனைச் சாதித்தார்கள்..? என்பதுதான் தெரியவில்லை.
இந்தப்பின்னணியில் இலங்கைக்கு பதினைந்து அமைச்சர்களே
போதும் என்று ஒரு ஆய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. வெரிடே ரிசேர்ச் என்ற இந்த அமைப்பு ஆசிய நாடுகளின் உள்விவகாரங்களை தொடர்ச்சியாக கண்காணித்து காலத்துக்கு காலம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுவருகிறது.
ஆனால், இதன் கருத்துக்களை இலங்கை அரசு மட்டுமல்ல இங்கிருக்கும்
அரசியல் கட்சிகளும் கண்டுகொள்வதில்லை.
கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சி தாவிய எம். பி.
க்களையும் பார்த்தோம். சிலரை திருப்திப்படுத்துவதற்காக
புதிதாக உருவாக்கிய அமைச்சுகளையும் கண்டோம்.
ஜே. ஆர். ஜெயவர்தனா,
தான் பதவியிலிருந்த காலத்தில் தமிழரசுக்
கட்சியிலிருந்து தாவிய மட்டக்களப்பின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த செல்லையா இராசதுரைக்காகவே
ஒரு அமைச்சினை உருவாக்கினார். அதன் பெயர் பிரதேச
அபிவிருத்தி, தமிழ் மொழி அமுலாக்கல் , இந்து கலாசார அமைச்சு.
அது என்ன இந்து மதத்திற்கு மாத்திரம் ஒரு அமைச்சு என்று பாராளுமன்றத்தில்
எதிர்க்கட்சியினர் கேட்டபோது, பௌத்த மதத்திற்கான அமைச்சினை தானும் அதிபர் ஜே.ஆரும். பார்த்துக் கொள்கின்றோம்
என்று பிரதமராகவிருந்த ரணசிங்க பிரேமதாச சமாதானம்
சொன்னார்.
பின்னாளில் புத்த சாசன அமைச்சு உருவாகியது. அதற்கென ஒரு அமைச்சரும் தெரிவானார்.
இந்தியப் பிரதமரை வரவேற்பதற்கு சிட்னியில் ஒன்றுதிரண்ட மக்கள்!
Friday, May 26, 2023 - 12:04pm
அவுஸ்திரேலியாவின் வளர்ச்சியில் இந்திய மக்களின் பங்களிப்பு அதிகமென பிரதமர் அந்தோனி அல்பானிஸ் பாராட்டு
அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானிசை சந்தித்தார். அதன் பின்னர் அவுஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன் பின்னர் சிட்னியில் இரு நாட்டு தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூகினியா சென்றார். பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்.
சிட்னியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடியுடன் ஏராளமானோர் வாகனங்களில் வலம் வந்தனர். சிறப்பு விமானம் மூலம் வானத்தில் ‘வெல்கம் மோடி' என்ற வாசகம் வரையப்பட்டது.
இலங்கைச் செய்திகள்
கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவைகள்!
இந்தியத் தூதுவருடன் கிழக்கு ஆளுநர் செந்தில் விரிவான கலந்துரையாடல்
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை ஜூலை 15 ஆரம்பம்
TNA தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு
கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவைகள்!
உலகச் செய்திகள்
வெளிநாடு செல்வதற்கு இம்ரான் கானுக்கு தடை
அமெரிக்க போர் கப்பலின் வருகைக்கு ரஷ்யா எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் புளோரிடா ஆளுநர்
ரஷ்யா மீது மேலும் ஊடுருவி தாக்க துணைப் படை குழுவினர் எச்சரிக்கை
உக்ரைனிய போரில் ரஷ்ய எல்லை தாண்டி தாக்குதல்
வெளிநாடு செல்வதற்கு இம்ரான் கானுக்கு தடை
வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநாக்ஷத்திரம்
வைகாசி விசாகம் – நம்மாழ்வார் திருநக்ஷத்திரம் ஜூன் 2, 2023 வெள்ளிக்கிழமை
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், விஷ்ணு பக்தி பற்றிய பல பாடல்களுக்கு நன்கு அறியப்பட்டவர். இவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் கலியுகம் தொடங்கிய 42வது நாளில் பிறந்தார். நம்மாழ்வார் வைஷ்ணவ குல பதி என்று போற்றப்படுகிறார் - வைணவ மடத்தின் தலைவர். நம்மாழ்வார் திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் (இந்த சம்சாரத்தில் 32 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது), அவர் புளிய மரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கியிருந்து, ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியே எப்போதும் யோகத்தில் (தியானத்தில்) இருந்தார். நம்மாழ்வார் 4 திவ்ய பிரபந்தங்களைப் பாடியுள்ளார். · திருவிருத்தம் (ரிக் வேத சாரம்) · திருவாசிரியம் (யஜுர் வேத சாரம்) · பெரிய திருவந்தாதி (அதர்வண வேத சாரம்) · திருவாய்மொழி (சாம வேத சாரம்) நம்மாழ்வாரின் பிரபந்தங்கள் 4 வேதங்களுக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளன. அவர் "வேதம் தமிழ் செய்த மாரன்" என்றும் அழைக்கப்படுகிறார் - சம்ஸ்கிருத வேதங்களின் சாரத்தை தனது தமிழ் பிரபந்தங்கள் மூலம் வழங்கியவர். ஆழ்வார்கள் பாடிய 4000 திவ்ய பிரபந்தங்களின் சாரமாக திருவாய்மொழி போற்றப்படுகிறது. SVT இல், ஜூன் 2, 23 அன்று அவரது புனிதரின் திருநட்சத்திரத்தைக் கொண்டாடுகிறோம். இதன் முன்னோட்டமாக, மே 30-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2-ஆம் தேதி காலை வரை தினமும் மாலையில் திவ்யப் பிரபந்தம் (திருவோய்மொழி -1102 வசனம்) பாடப்படும்.