"இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"
வன்னி ஹோப் அணி ஆஸ்திரேலியா & இலங்கை
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்ப08/09/2025 - 14/09/ 2025 தமிழ் 16 முரசு 22 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
வெகுஜன அமைப்புகளில் பலதரப்பட்ட குணவியல்பு
அனைவரையும் சமாளிக்கவும்
முடியாது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்
நான் 1973 இல் இணைவதற்கு முன்பே அது இரண்டு அணியாக பிரிந்துவிட்டது.
எஸ். பொ. நற்போக்கு என்று
தொடங்கினார்.
நான் இணைந்த காலப்பகுதியில் கே. டானியல், என். கே. ரகுநாதன், சாருமதி, புதுவை
இரத்தினதுரை, சில்லையூர் செல்வராசன் ஆகியோர் விலகிச் சென்றிருந்தார்கள்.
இச்சங்கத்தில் மாஸ்கோ சார்பு
எழுத்தாளர்களும் பீக்கிங் சார்பு எழுத்தாளர்களும் தொடர்ந்து இணைந்திருந்தனர்.
இதேவேளை பூரணி காலாண்டிதழை
வெளியிட்டவர்கள் அணியேதும் உருவாக்காமல் மார்க்ஸீய
சிந்தனை கொண்ட எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு, மு. தளையசிங்கத்தின் சிந்தனைக்கு நெருக்கமாக
இயங்கினார்கள்.
எனக்கு அனைவருடனும் எந்த
முரண்பாடுமற்ற நட்புறவு இருந்தது. அப்போது
நான் அங்கே புதிய இளம் தலைமுறை. அதனால் அனைவருக்கும் நான் செல்லப்பிள்ளை. அங்கிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களினதும் குணவியல்புகளை
நன்கு அறிந்து வைத்திருந்தேன். அவ்வாறு பெற்ற புத்திக்கொள்முதல் அனுபவத்துடன்தான் அவுஸ்திரேலியாவில்
கால் ஊன்றினேன்.
இங்கே இலங்கை மாணவர் கல்வி
நிதியம், தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் ஆகியனவற்றை உருவாக்குவதில்
முன்னின்று உழைத்திருந்தாலும், இங்கிருந்த ஏனைய தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளிலிருந்து
விலகியிருந்தேன். இடையில் மக்கள் குரல் கையெழுத்து
சஞ்சிகை, உதயம் இருமொழி மாத இதழ் ஆகியனவற்றின் ஆசிரியர் குழுவிலுமிருந்தேன்.
எனினும், எனது முழுக்கவனமும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில்தான்
குவிந்திருந்தது. இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின்
தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருப்பதனால் மீண்டும் அதுபற்றி
பதிவுசெய்யவேண்டிய அவசியமில்லை என கருதுகின்றேன்.
இதில் இணைக்கப்பட்டுள்ள
காணொளிகளின் வாயிலாக இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வரலாற்றை வாசகர்கள் ஓரளவு தெரிந்துகொள்ள
முடியும்.
சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே எழுத்தாளர்களின் முக்கிய கடமை எனக் கருதுபவன் நான். இந்த பால பாடத்தை வீரகேசரி நாளிதழ் எனக்கு கற்றுத் தந்திருந்தது.
அந்த பங்காளிச் சண்டையில் இறுதியில் துரியோதனன் தோற்றான்.
அதனால்தான் குந்திதேவிக்கு
மாத்திரமே தெரிந்த அந்தரங்க இரகசியத்தை, அவளிடமே அம்பலப்படுத்தி, கர்ணனுக்கு தூது அனுப்பி, அவனை தாயின் பாச வலையில் விழச்செய்து, இறுதியில்
குருஷேத்திர போர்க்களத்தில் கர்ணனை வீழ்த்தினார்
கிருஷ்ண பரமாத்மா. போரிடத் தயங்கிய அருச்சுனனுக்கு கீதோபதேசம் செய்து அவனுக்கு உருவேற்றினார்.
அந்தப்போரில் கௌரவர்களை
வீழ்த்துவதற்காக கிருஷ்ண பரமாத்மா மேற்கொண்ட ராஜதந்திரங்கள் அனைத்துக்கும், அவருக்கு
பாண்டவர் வம்சத்திடமிருந்த ராஜவிசுவாசம்தான் பிரதான காரணம்.
அத்துடன் பாண்டவர்களையும் கௌரவர்களையும் சோதிக்கவும் அவர்
தவறவில்லை. இதனால் மகாபாரத காவியத்தில் கிருஷ்ணர்
பிரதான பாத்திரமானார்.
சமகாலத்தில் இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த
13 ஆம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக அனைத்துக் கட்சிகளையும்
அழைத்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும்போது, எமக்கு மகாபாரதத்தில் வரும்
கிருஷ்ணர்தான் நினைவுக்கு வருகிறார்.
இலங்கையில் இருக்கின்ற
அனைத்துக் கட்சிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வில்லை என்பதையும், பாராளுமன்றத்தை
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் தலைவர்கள் சிலர்தான் இதில் பங்கேற்றுள்ளனர்
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அநுரா குமார திஸாநாயக்காவின் தலைமையில் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணியும், குமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்க்காங்கிரஸும் இடம்பெறாத சந்திப்பே இந்த சர்வகட்சி மாநாடு.
எம் ஜி ஆர் படம் என்றால்,படத்தில் பிரம்மச்சாரியாக வருவார்,கதாநாயகியே அவரை தேடி வந்து காதலிப்பார்,சற்று தயக்கத்துடனே காதலை ஏற்பார்,இடையில் காதலுக்கு இடையூறாக வரும் வில்லனை பந்தாடி விட்டு காதலியின் கரம் பற்றுவார் இவ்வாறே படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இவற்றுக்கு மாற்றாக அத்தி பூத்தாற் போல் அவர் நடிப்பில் ஒரு படம் வந்தது.அந்தப் படம் தான் நான் ஏன் பிறந்தேன்.
புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்
சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டுகள்
தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற ஆய்வு
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர படகுச் சேவை
புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு
மலேசிய நிலச்சரிவில் புதைந்து 13 பேர் பலி
புத்தாண்டில் உக்ரைனுக்கு எதிராக புதிய தரைவழித் தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம்
இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு துருப்புகளும் மீண்டும் பூசல்
கொங்கோ வெள்ளத்தினால் 120 இற்கும் அதிகமானோர் பலி
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு
24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்றுமதிக் கட்டுப்பாடு
அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 5 சிறுவர்களுடன் 10 பேர் பலி
மலேசிய நிலச்சரிவில் புதைந்து 13 பேர் பலி