மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
பேணியுடல் காக்கும் பெருவழியில் நடப்போம் ! " உலக நிரிழிவு தினத்தினை முன்னிட்டு இவ்வேண்டுதல் கவிதை "
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
காடும் கடலும் (THE JUNGLE AND THE SEA) - நாடகம் குறித்த பார்வை
Counting & Cracking - போர் தீண்டிய ஈழத்துச் சமூகத்தின் குரல்
http://www.madathuvaasal.com/
அந்தப் படைப்பு கொடுத்த நம்பிக்கையில், சக்தி சக்திதரன் அரங்கேற்றும் “காடும் கடலும்" அரங்கியலுக்காக முன்னோட்ட நிகழ்வுக்கே (Preview session) செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டது. அந்த வகையில் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி Belvoir St Theatre இல் நிகழ்ந்த முதல் நாள் அரங்கில் கலந்து கொண்டேன். தமிழ்ச் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்ட சூழலில் 99.9 வீதமான வெள்ளையின சமூகத்தினர் புடை சூழ மீண்டுமொரு இலங்கை இனப்பிரச்சனையை மூலாதாரமாகக் கொண்ட படைப்பைப் பார்க்கும் ஆவல் அந்த நிமிடம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. வட்டக்களரி அமைப்பில் எந்த விதமான சோடனைகளும் அற்ற ஒரு திறந்த தரை மட்டும் முன்னால் இருக்க, அதைச் சூழ அரங்க அமைப்பு இருந்தது. இரண்டாவது வரிசையில் மிக அண்மித்ததாக ஒரு இடத்தையும் எடுத்ததால் இன்னும் வசதியாகிப் போய் விட்டது.
தன்னுடைய கடந்த படைப்பில் 1956, 1977, 1983 மற்றும் 2004 ஆகிய காலப்பகுதிகளை வைத்து மூன்று தலைமுறைத் தமிழரின் வாழ்வியலும் அவர்கள் சந்திக்கும் அரசியல் நெருக்கடிகளையும் காட்டியிருந்தாலும் இலங்கையில் வாழும் சக இனங்கள் இரண்டுமே இந்த இனப் பிரச்சனையால் எவ்விதம் அல்லற்படுகின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டியிருந்த கதாசிரியருமான சக்திதரன் தன்னோடு முன்னர் இணைந்த இயக்குநர் Eamon Flack உடன் மீண்டும் இணைந்து “காடும் கடலும்” படைப்பை வழங்கியிருக்கிறார்.
முதல் சந்திப்பு மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன் முருகபூபதி
யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதிவருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன்.
அவரை நான் முதல் முதலில்
அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன்.
நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை
எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு.
அவ்வாறுதான் கிளிநொச்சியில்
வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான சிவராசா கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார்.
இவர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட
நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளானவர். கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் - ஊடகவியலாளர் - பதிப்பாளர் - இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர்.
கலை , இலக்கிய நண்பர்களின் விசுவாசத்திற்குமுரியவர். எனக்கு அவர் மிகவும் நெருக்கமானதற்கு இக்காரணங்களே போதும்
கருணாகரன் இலக்கியத்தின் ஊடாக எனக்கு அறிமுகமானது 2008
இல்தான்.
முல்லை அமுதன் தொகுத்து வெளியிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பில், மறைந்த செம்பியன் செல்வனைப் பற்றி கருணாகரன் எழுதியிருந்த
கட்டுரை வித்தியாசமானது. வழக்கமான நினைவுப் பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு
புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்தமான
அக்கட்டுரையை எழுதிய கருணாகரன் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று ஒரு நாள் லண்டனுக்கு தொலைபேசி தொடர்பெடுத்து முல்லை அமுதனிடம்
விசாரித்தேன்.
கருணாகரன் வன்னியிலிருப்பதாக தகவல் கிடைத்தது. 2009
இல் நான் வதியும் மெல்பனில் நடந்த எழுத்தாளர் விழாவில்
இலக்கியப்பூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அறிமுகப்படுத்தினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன், தமிழகம் திரும்பியதும் எழுதிய புல்வெளிதேசம்
நூலிலும் இந்தத் தகவலை பதிவுசெய்திருந்தார்.
2009 மே மாதம் வன்னியுத்தம் பேரவலத்துடன் முடிவுக்கு வந்தவுடன் கருணாகரன் என்னவானார்..? என்ற கவலையுடன் ஆழ்ந்து யோசித்தேன். ஜெயமோகனுடன் தொடர்புகொண்டு கருணாகரனைப்பற்றி அறிவதற்கு தொலைபேசி இலக்கம் பெற்றேன். அச்சமயம் வவுனியாவில் நின்ற அவரை ஒருவாறு தொலைபேசியில் பிடித்துவிட்டேன்.
லெ.முருகபூபதியின் “கதைத் தொகுப்பின் கதை” புலம்பெயர் வாழ்வியல் அனுபவத்தோடு ஈழ அரசியலையும் பேசும் கதைகள் வாசிப்பு அனுபவப் பகிர்வு
இன்றைய ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு நடமாடும் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவர் எழுத்தாளர் லெ.முருகபூபதி.
இலக்கியப் பயணத்தில்…….. சில நேரங்களில் சில மனிதர்கள் ! இரண்டு மாத காலத்துள் அடுத்தடுத்து நிகழ்வுகள் முருகபூபதி
சில மாதங்களுக்கு முன்னர், வெளிநாடொன்றிலிருந்து ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னைத் தொடர்புகொண்டு, அடுத்த ஆண்டு தாம் வெளியிடவிருக்கும் ஆண்டுமலருக்கு ஆக்கம் அனுப்பிவைக்குமாறு கேட்டார்.
அவரது வேண்டுகோளை தட்டமுடியாது. “ எத்தகைய ஆக்கம் தேவை..? “ எனக்கேட்டேன்.
“ கலை, இலக்கிய, ஊடகத்துறை, மற்றும் இதழியல் சார்ந்து
இயங்கிய பலர், இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்,
புகலிட தேசங்களிலும் கொவிட் பெருந்தொற்று பரவத்தொடங்கிய பின்னர் அடுத்தடுத்து மறைந்துவிட்டனர். அவர்களைப் பற்றிய தொகுப்பாக ஒரு கட்டுரையை எழுதி
அனுப்புங்கள். “ என்றார்.
“ அவர் சொல்லவந்த பலரையும் பற்றி முடிந்தவரையில்
அஞ்சலிக்குறிப்பு கட்டுரைகளை ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். மீண்டும், ‘ கல்வெட்டு ‘ எழுதப்போகிறீர்களா..? “ எனக்கேட்ட எனது மனைவி மாலதி தாயகம் புறப்பட்டு சென்றுவிட்டாள்.
புறப்படும்போது, “ கொவிட்
பெருந்தொற்று முற்றாக மறையவில்லை. உடல் நலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். “ என்றும் அக்கறையோடு சொல்லிவிட்டே விடைபெற்றாள்.
எனது மனைவியின் பயணம் எனக்குக்
கிடைத்த
நீண்ட விடுமுறைதான் என்று எனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி பெருமிதப்பட்டேன்.
“ அவ… இல்லாமல்
எப்படி சமாளிக்கப்போகிறீர்கள். சமையல் சாப்பாடு….
“ என்று என் மீது அக்கறையுள்ள ஒரு இலக்கியவாதி
தொலை தூரத்திலிருந்து பரிவோடு கேட்டார்.
“ முப்பத்தியைந்து ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்கின்றேன். எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். ஒரு மணி நேரத்தில்
பத்துப்பேருக்கு சுவையான உணவு சமைத்து பரிமாறவும் தெரியும் “ என்று பெருமை பேசினேன்.
மெல்பனிலிருந்து சுமார்
250 கிலோ மீற்றர் தொலைவிலிருக்கும் ஒரு புறநகரத்தில் நான் தற்போது வசிப்பதனால், மெல்பனில் வதியும் எனது பிள்ளைகள், “ அப்பா தனியே இருக்கவேண்டாம். வந்து தங்களுடன் நில்லுங்கள் “ என அழைத்தனர்.
அவர்களது அக்கறைக்கு – எனக்கிருக்கும் உடல் உபாதைகளும் நான் உள்ளெடுக்கும் மருந்து மாத்திரைகளும்தான் காரணம். போதாக்குறைக்கு இக்காலத்தில் வீடுகளில் தனியே இருப்பது ஆபத்து என்றும் சொன்னார்கள்.
ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’ கே.எஸ்.சுதாகர்
பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன்.
அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில்
கடந்த ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி, ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’
என்னும் நூல் வெளியீட்டுவிழாக் கண்டது. அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. சிவா விஷ்ணு
ஆலய `பீக்கொக்’ மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்விற்கு, ஸ்ரீமதி பாலம் லக்ஷ்மண ஐயர் அவர்கள்
தலைமை தாங்கினார்.
பழந்தமிழ் இலக்கியத்தில் மிகவும் பரிச்சயம் கொண்ட ஸ்ரீமதி பாலம்
லக்ஷ்மண ஐயர் அவர்கள், 96 வயதைக் கடந்தும் மிகவும் அபார ஞாபகசக்தியுடன் துடிப்பாக தனது அறிமுகவுரையை நிகழ்த்தினார். பண்பாட்டுப்பெட்டகத்தில் அமைந்திருக்கும் காரைக்கால் அம்மையார் பற்றிய கட்டுரையை முன்னிறுத்தும் வகையில், கம்போடியா நாட்டில் அமைந்திருக்கும் பண்டீஸ்ரீ கோயில் கோபுரத்தில் பேயுருவில் காட்சி தரும் காரைக்கால் அம்மையாரின் சிலை பற்றிய தகவலை தனது ஞாபகசக்தியிலிருந்து மீட்டெடுத்தார். தமிழ் மொழியைப் பற்றியும் இந்துசமயத்தைப் பற்றியும் எந்தவித அறிதலுமில்லாத சுற்றுலா வழிகாட்டி ஒருவர் காரைக்கால் அம்மையார் பற்றி விலாவாரியாகச் சொன்னதை எமக்குச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்தார். `பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்’ என்ற காரைக்கால் அம்மையாரின் பெரியபுராணப் பாடலை இசைத்து எம்மை எல்லாம் மெய் மறக்கச் செய்தார்.
தொடர்ந்து திருமதி கலாதேவி பாலசண்முகன் அவர்கள் பண்பாட்டுப்பெட்டகம் பற்றி நூல்நயப்புரை செய்தார். அவர் தனக்கும் நூலில் உள்ள காரைக்கால் அம்மையார் பற்றிய கட்டுரை மிகவும் பிடித்துப் போனதாகக் கூறினார். மேலும் தொகுப்பில் கட்டுரைகள் - ஆன்மீகம், ஆளுமை, சமூகம் என்றவிதமாக அமைந்திருந்த போதிலும், ஆளுமை முதலிலும் தொடர்ந்து ஆன்மீகம், சமூகம் என்றவிதமாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற தனது கருத்தைக் கூறினார். நூல் நயப்புரையின் பின்னர் திரு ஜெயராமசர்மா அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
ராமன் தேடிய சீதை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்
1971ம் ஆண்டு ஜெயலலிதாவின் நடிப்பில் அவர் சிவாஜியுடன் ஜோடி
சேர்ந்து நடித்த பாதுகாப்பு படம் ஏ பீம்சிங் டைரக்ட்ஷனில் வெளிவந்தது.இந்தப் படத்தில் ஜெயலலிதா வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.வாழ வழியின்றி தத்தளிக்கும் பெண்ணாக ஒரு படகில் ஏறும் அவர் படகிற்கு சொந்தக்காரர்களான தந்தைக்கும்,இரண்டு தனயங்ககுக்கும் தான் யார் என்பது பற்றி முரண்பாடான தகவல்களை வழங்குவார்.ஆனால் அவர் யார் என்பது இறுதியிலேயே தெரிய வரும்.
தேடிய சீதை படம் திரைக்கு வந்தது.எம் ஜி ஆருடன் இப் படத்தில் அவர் நடித்திருந்தார்.இதில் மூன்று விதமான வேடங்களில் வரும் அவர் கதாநாயகனுக்கு தான் யார் என்பதை மூன்று விதமாக சொல்லுவார்.ஆனால் கடைசியிலே அவர் யார் என்ற உண்மை வெளியாகும்.இவ்வாறு ஓராண்டு இடைவெளியில் சிவாஜி,எம் ஜி ஆர் என்று இருவருடனும் ஒரே சாயலைக் கொண்ட கதையில் நடித்திருந்தார் ஜெயலலிதா.
மக்கள் மனங்களில் வாரியார் என்றுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
நிகழ் சிகள் செய்த படியேதான் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். ஆனா ல் இறைவனின் ஆணை வேறாக இருந்ததால் பாதை மாறியது. பய ணமும் மாறியது.சைவமும் தமிழும் கைபிடித்து நின்றது. கலியுகத் தெய்வம் கந்தப் பெருமான் தன்னுடைய கடைக்கண் பார்வையில் வைத்திருக்கும் நிலையும் உருவாகியது.இப்படி யெல்லாம் யாருக்கு நேர்ந்தது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா ! வேறு யாரு மல்ல ..... பேச்சாலும் , எழுத்தாலும், கதைகளா லும், இசையாலும் , எம் மையெல்லாம் தன்பக்கம் ஈர்த்து நின்ற வாரியார் சுவாமிகளே !
சாதாரண மாகவே பார்க்கிறோம். அந்தப் பெயருடன் சுவாமிகள் என்பதையும் சேர்த்து அழைத்து விட்டு அத்துடன் நின்று விடுகிறோம். ஆனால் அந்தப் பெயரின் அர்த்தத்தை நாங்கள் எவருமே எண்ணியே பார்ப்ப தில்லை. 'கிருபை ' என்
ஒன்றுபட்டால் அரசியல் தீர்வு ! ஒன்றுபடாவிட்டால் ஆணவத் தீர்வு ! ? அவதானி
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் தரப்பில் எத்தனை அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து தோன்றின…? எத்தனை கட்சிகள் காணாமல் போயின…? எத்தனை கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து பின்னர் முரண்பட்டன..? முதலான கேள்விகளுக்கு விடை காணவேண்டுமானால், இலங்கை அரசியல் கட்சிகளின் தோற்றமும் - வளர்ச்சியும் - அழிவும் என்ற நீண்ட பதிவையே எழுதமுடியும்.
சிலவேளை அத்தகைய பதிவுகள், இலங்கை அரசியலை
கற்கவிரும்பும் வரலாற்று மாணவர்களுக்கு ஆய்வுகள் எழுதுவதற்கு உதவக்கூடும்.
ஆனால், அக்கட்சிகள் தேர்தலில்
நிற்கும்போது வழங்கும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏதும் நன்மை கிடைக்குமா..?
என்றால், இல்லை என்ற பதில்தான் நிச்சயம் !
அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்
கட்சி 1944 ஆம் ஆண்டு தோன்றியது. இலங்கை தமிழரசுக்கட்சி 1949 ஆம் ஆண்டில் உருவானது. அதாவது முன்னையதிலிருந்து
பிரிந்து வந்த அணி உருவாக்கிய கட்சி.
ஐக்கிய தேசியக்கட்சி 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1951 ஆம் ஆண்டு உருவானது. அதாவது முன்னையதிலிருந்து பிரிந்து வந்த அணி உருவாக்கிய
கட்சி.
இவற்றை தோற்றுவித்த தலைவர்கள்
தற்போது இல்லை. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள் பலவும் இலங்கையில் தோன்றின.
பிளவுபட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
தேய்ந்தும் போனது. அதற்கு சீன – ருஷ்ய சித்தாந்த முரண்பாடுகள் பிரதான காரணமாகத் திகழ்ந்தன.
ஆனால், முன்னைய வலதுசாரி சிங்கள கட்சிகளும் தமிழ்க்கட்சிகளும்
பிளவுபடுவதற்கும் , பிரிந்து தனித்தனி வழிசெல்வதற்கும் எந்தவொரு சித்தாந்தமும் காரணமாக
இருக்கவில்லை.
முழுக்க முழுக்க ஆணவமும்
தன்முனைப்பு அகங்காரமும்தான் காரணம்.
ஜனநாயக வழிமுறைகளில் பிரிந்து
நின்று, கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த தமிழ்க்கட்சிகளை
ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2001 ஆம் ஆண்டு ஒன்றிணைத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்.
எனினும், ஆனந்தசங்கரியின் தலைமையில் இயங்கிய தமிழர் விடுதலைக்
கூட்டணி அந்த கூட்டமைப்பில் உள்வாங்கப்படவில்லை.
அவர் தனிவழி சென்றார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் இயக்கம் மௌனிக்கப்பட்டபோது, லண்டன் பி. பி. சி. வானொலிக்கு பேட்டி வழங்கிய தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அய்யா, “ விவேகமற்றவர்களின் முடிவு “ என்று வாக்குமூலம் அளித்தார்.
அதன்பின்னர் இந்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் விவேகமான ( ?
) செயற்பாடுகளையும் உள்குத்து போராட்டங்களையும்
பார்த்து வருகின்றோம்.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாகத் தரக்கூடிய திட்டம் தொடர்பாக ரெலோ கட்சி வழங்கிய கடிதம் இதர கூட்டமைப்புக் கட்சிகளிடையே வாதப்பிரதிவாதங்களை எழுப்பியிருந்தது. தற்போது குறிப்பிட்ட மோடிக்கு அனுப்பிய கடிதம் பற்றி பேசுவார் எவருமிலர்.
சிட்னியில் இலக்கிய சந்திப்பும் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும்
Saturday, November 12, 2022 - 12:08pm
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சிட்னி இலக்கிய சந்திப்பு 2022 தூங்காபி கொமினிற்றி மண்டபத்தில் (Toongabbie Community Centre) கடந்த 05-11-2022 சனிக்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது.
இச்சந்திப்பின் முதல் நிகழ்வாக மலையக இலக்கிய ஆளுமை தெளிவத்தை ஜோசப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கலாநிதி. திருமதி. சந்திரிக்கா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த சிட்னி இலக்கிய சந்திப்பில் வரவேற்புரையை திருமதி கனகா கணேஷ் ஆற்றினார்.
இதன் பின் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கத்தின் ‘வரலாற்றுச் சுவடுகள்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. 22 வருடங்களாக தமிழையும் இலக்கியத்தையும் இரண்டு கண்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டு வருகின்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வரலாற்றுச் சாட்சியமாக இந்த ஆவணப்படம் உறுதிப்படுத்தியது.
இந்த சிட்னி இலக்கிய சந்திப்பில் ஐந்து நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வும், அறிமுக விழாவாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைச் செய்திகள்
இரா. சம்பந்தனுக்கு இ.தொ.கா. நேரில் சென்று வாழ்த்து
தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் விடுவிப்பு
வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு!
மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் மீட்கப்பட்டவர்கள் 76 பேர் தமிழர்
தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயக பொன்' விருது
இரா. சம்பந்தனுக்கு இ.தொ.கா. நேரில் சென்று வாழ்த்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா, பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இரா. சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும்,இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது.
உலகச் செய்திகள்
பதற்றத்திற்கு இடையே ஷி-ஜோ பைடன் சந்திப்பு
மன்னரின் மீது முட்டை வீசிய இளைஞர் கைது
பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் முன்னேற்றம்
வடகொரிய அச்சுறுத்தல்: ஜப்பான் போர் ஒத்திகை
அமெரிக்க தேர்தலில் கடும் போட்டி
தலிபான்களை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
கார்பன் மாசு இந்த ஆண்டில் வரலாறு காணாத அதிகரிப்பு
பதற்றத்திற்கு இடையே ஷி-ஜோ பைடன் சந்திப்பு
கடந்த ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்னை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். வரும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்திப்பில் தாய்வான் விவகாரம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 24 “மொழிபெயர்ப்பெனும் மொழி விளையாட்டு”
நாள்: சனிக்கிழமை 26-11-2022
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
சிறப்புப் பேச்சாளர்கள்:
“தமிழில் பிரஞ்சு மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள்- ஒரு பார்வை” –சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
“மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப்பிரச்சனைகள்” – க.பஞ்சாங்கம்
“தமிழில் மொழிபெயர்ப்புகளின் காலம்” – ச.சத்தியதேவன்
“தமிழில் மொழிபெயர்ப்புகள்” - இராம.குருநாதன்
ஒருங்கிணைப்பு: பா.இரவிக்குமார்
மேலதிக விபரங்களுக்கு: - அகில் 001416-822-6316