அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
சிட்னியில் ராஜா 2022 ❤️ 🎸🥁கானா பிரபா
அஞ்சலிக்குறிப்பு கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரனை இழந்தோம் ! முருகபூபதி
இலக்கியத் திறனாய்வாளராகவும் ஊடகவியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்த எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி தமது 86 ஆவது வயதில் கொழும்பில் மறைந்துவிட்டார்.
இவரது மறைவை ஈடுசெய்யப்பட
வேண்டிய இழப்பு என்றே நாம் கருதவேண்டும். அன்னாரின்
வாழ்வையும் பணிகளையும் கூர்ந்து அவதானித்தால், அவரது வகிபாகம், ஈழத்து இலக்கிய உலகிற்கு
குறிப்பாகவும் தமிழ் – ஆங்கில ஊடகத்துறையில் பொதுவாகவும் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியது
என்பது தெரியவரும்.
சுமார் ஆறு தசாப்த காலம் எழுத்தூழியம் புரிந்துவந்திருக்கும் கே.
எஸ். சிவகுமாரன், அந்திமகாலத்தில் உடல் நலம் குன்றியிருந்தவேளையிலும் முகநூல் வாயிலாக தொடர்ந்தும் பதிவுகளை வெளியிட்டு வந்தவர்.
மட்டக்களப்பில் 1936 ஆம்
ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்த
சிவகுமாரன், புலவர்மணி
பெரியதம்பிப்பிள்ளையின் மாணாக்கர். பாலுமகேந்திரா மட்டக்களப்பில்
வாழ்ந்த காலத்தில் சச்சிதானந்தன் என்பவருடன் இணைந்து
தேனருவி என்ற கலை இலக்கிய இதழை
வெளியிட்டபொழுது, அதில்
பல ஆக்கங்களை எழுதியிருக்கும் சிவகுமாரனின் ஒரு
நூலுக்கு பாலுமகேந்திரா
முன்னுரை எழுதியுள்ளார்.
சிவகுமாரனின்
அசையும் படிமங்கள் என்ற சினிமாத்துறை
நூலின் முகப்பில் இந்த பால்யகாலத் தோழர்கள்தான்
இணைந்து தோன்றுகின்றனர்.
மற்றவர்களின் படைப்புகளையும் அவர்தம் இலக்கியப் பணிகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமது பத்திகளில் அறிமுகப்படுத்திவந்த சிவகுமாரன்தான் தமிழில் பத்தி எழுத்து என்னும் பிரயோகத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல் பலருக்குத் தெரியாது.
தமிழ் வளர்ப்போம்! (முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை….) - --- மெல்போர்ன் அறவேந்தன்
சொந்தம் என இந்தத் தமிழினி
எந்தன் உயிர் வந்துப் பரவிட
பந்தம் அது எந்தத் தருணமும் தளராதே!
கற்றுத் தெளி வித்துத் தரணியில்
வெற்றிப் படி எட்டும் தமிழிதை
சற்றும் இனி விட்டுக் கொடுத்திட முடியாதே!
குற்றம் குறை பெற்றுப் பலமொழி
சுற்றிக் கொடி கட்டித் திரிகையில்
பற்றுப் பிடிப் பற்றுத் தமிழினி விழலாமோ?
வெட்டிப் பலி யிட்டுப் பிறகிவர்
கட்டுக் கதை சொல்லித் திரிகையில்
கெட்டுத் தமிழ் பட்டுக் கருகிட விடலாமோ?
அங்கம் உடல் விட்டுப் பிரிந்திட
தங்கம் விலை தந்துப் பயனிலை
பங்கம் அது இந்தத் தமிழினி பெறலாமோ?
சங்கம் பல கண்டப் பயிரிது
எங்கும் அது தங்கித் தழைத்திட
பொங்கிப் படை கொண்டுத் தமிழிதை வளர்ப்போமே!
ஈழத்த்தின் பெருமை மிகு ஆளுமைகளில் ஒருவரான கே.எஸ்.சிவகுமாரன் - கானா பிரபா

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 31 கதைகளிலிருந்து கல்வெட்டு வரையில் தொடரும் எழுத்தூழியம் ! முருகபூபதி
இலங்கையை விட்டு நான் வெளியேறி ஆறு ஆண்டுகளுக்குள் ( 1988 – 1993 ) முக்கியமான சில தலைவர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் கொல்லப்பட்டுவிட்டனர்.
1988 இல் விஜயகுமாரணதுங்க
1989 இல் அமிர்தலிங்கம் – யோகேஸ்வரன்.
1989 இல் ரோகண விஜேவீரா
1991 இல் ரஞ்சன்
விஜேரத்ன.
1991 இல் ராஜீவ்காந்தி
1993 இல் லலித் அத்துலத் முதலி
1993 இல் ரணசிங்க
பிரேமதாச
மக்கள் மட்டுமன்றி, மக்களின் தலைவர்கள்
எனக்கருதப்பட்டவர்களும் அரசியல் காரணங்களினால் கொல்லப்பட்ட காலம் அது. அவர்கள் பற்றிய பதிவுகளை இலங்கை மற்றும் புகலிட ஊடகங்களில் எழுதிக்கொண்டிருந்த அதே சமயம், நான் நெருங்கிப் பழகிய கலை, இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றியும் எழுதினேன்.
ஒருவகையில் கல்வெட்டு போன்று எழுதிவந்த அத்தகைய நினைவுப்பதிவுகள்
கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் மறைந்த எனது அருமை நண்பர் இலக்கியத் திறனாய்வாளர் கே.
எஸ். சிவகுமாரன் வரையிலும் தொடருகிறது.
Column –
Columnist என்று ஆங்கில ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த வார்த்தைகளை நண்பர்
சிவகுமாரன் பத்தி – பத்தி எழுத்தாளர்கள் என
அறிமுகப்படுத்தினார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுப் பதிவுகளை – நினைவுப்பதிகை என்று குறிப்பிட்டார்.
இவர்களிடம் கற்றதையும்
பெற்றதையும் எனது ஊடக வாழ்விலும் பயன்படுத்தினேன்.
வீரகேசரி வாரவெளியீட்டில்
இலக்கியப் பலகணியை எழுதுமாறு தூண்டியதுடன், தொடர்ந்தும் அதற்கு களம் தந்தவரான ( அமரர் ) பொன். ராஜகோபால் அவர்கள்தான் அத்தகைய
பதிவுகளுக்கு மூலகாரணம்.
மல்லிகை ஜீவா 1981 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகம் சென்று திரும்பியதையடுத்து, அவரைச்சந்தித்து ஒரு நேர்காணல் எழுதித்தருமாறு பணித்தவர்தான் பொன். ராஜகோபால். அதனை எனது சொந்தப்பெயரில் எழுதியதனால் , ஆசிரிய பீடத்திலிருந்த சிலரது கண்களை அது உறுத்திவிட்டது. வீரகேசரி ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து அதனை எழுதினாலும் , அந்த ஒரு பதிவுக்காக எனக்கு 15 ரூபா சன்மானம் கிடைப்பதற்கும் வழிகோலியவர் ராஜகோபால்.
தேயும்மதிசூடி (ஆறு எழுத்தடி கட்டளை வஞ்சித்துறை) - -- மெல்போர்ன் அறவேந்தன்
தேயும் மதிசூடி
பாயும் நதிதாங்கி
சாயும் கரம்வாழ்த்தி
மேயும் மானைத்தூக்கி
கறையுடை கண்டம்
உறைந்தாடும் நாகம்
குறைதீர்க்கும் பாதம்
இறையுமை பாகம்
நுதல் விழிமூடி
இதழ் சிரிப்பூட்டி
பதம் தூக்கியாட்டி
நித்தம் நடமாடி
மின்னார் விரிசடை
பொன்னார் திருமேனி
தன்னால் தமிழானான்
என்னா ருயிரானான்
இதோ எந்தன் தெய்வம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்
நூற்றுக்கணக்கான படங்களில் அப்பா வேடங்களில் நடித்து புகழ்
பெற்றவர் மேஜர் சுந்தரராஜன்.இவருடைய இளமை காலம் முழுதும் வயதான வேடங்களில் நடிப்பதிலேயே கழிந்தது.ஆனாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார்.அப்படி கதாநாயகனாக நடித்த படங்களில் ஒன்றுதான் இதோ எந்தன் தெய்வம்.
ஹீரோவாக நடித்தார் மேஜர்.ஆனால் கதாநாயகியுடன் டூயட் பாடும் வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை.அந்த வேலையை முத்துராமன் பார்த்துக்கொண்டார்.ஜோடி இன்றி தனி ஆவர்த்தனம் வாசிக்கும் வேலைதான் இவருக்கு கிடைத்தது.
தலைக்கேறும் போதையும் தாழ்ந்துபோகும் சமுதாயமும் ! ? அவதானி
மதுவெறி தலைக்கேறியவர்களைப் பார்த்து , கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு வருகிறார் என்றுதான் முன்னர் சொன்னார்கள்.
ஆனால், சமகாலத்தில் கெரோயின் முதலான போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு
வருபவர்களைப் பார்த்து புதிய வேதாந்தம்தான்
சொல்ல நேர்ந்துள்ளது.
கெரோயினுக்கு அடிமையானவர்களுக்கு கண், மண் மட்டுமல்ல, உடன்பிறந்த சகோதரிகளும் தெரிவதில்லையோ..? என்றுதான்
கேட்கத் தோன்றுகிறது. அண்மையில் வடக்கில் சுன்னாகம் பொலிஸ் பிரிவில், கெரொயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவரால், அன்னாரின் சகோதரி வன்புணர்வுக்கு ஆளாகி, அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார்.
பதறவைக்கும் இச்செய்தியை
இன்னும் சில மாதங்களில் நாம் கடந்து சென்றுவிடலாம். தினம் தினம் போதை வஸ்து கைப்பற்றப்பட்டது, அதன் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைதானார்கள் என்ற
செய்திதான் ஊடகங்களில் பரவலாக வெளியாகின்றன.
இது இவ்விதமிருக்க, சமகாலத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களின் புத்தகப் பைகளும் சோதனையிடப்படவேண்டும் என்ற செய்தி பொலிஸ் தரப்பிலிருந்து வெளியானது. அவ்வாறாயின் பாடசாலைகளிலும் போதைப்பொருள் விநியோகம் நடக்கிறது என்பதே பொருள்.
சுன்னாகத்தில் நடந்திருக்கும்
சம்பவம் சமுதாயத்திற்கு தலைகுனிவையே ஏற்படுத்தியிருக்கிறது. கெரோயின் போதை என்னவெல்லாம் செய்யத்தூண்டும் என்பதற்கு
அச்சம்பவம் முக்கிய சாட்சி.
பதின்மவயதிலிருந்த யுவதியை, சகோதரனே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியிருக்கின்றான். அந்தப்பெண் தற்கொலை செய்துவிட்டாள்.
சட்டம் இதற்கு எத்தகைய
தண்டனையை வழங்கப்போகிறது.
சில வருடங்களுக்கு முன்னர்
ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, போதை வஸ்து கடத்தல்கார்கள், விற்பனையாளர்களை
தூக்கிலே தொங்கவிடுவேன் என்றெல்லாம் சூளுரைத்தார். அவரது வாக்குறுதி செய்தியாகவே காற்றில் பறந்து சென்றது.
தற்போது அதிகாரத்திற்கு
வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, மரணதண்டனை உத்தரவுக்கு தான் கையொப்பம்
இடமாட்டேன் எனச்சொல்கிறார்.
இத்தகைய ஜனாதிபதியின் முன்னிலையில்தான்
மரண தண்டனைக் கைதியாகவிருந்த ஒருவர் இராஜாங்க
அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்கிறார்.
எங்கள் தேசம் எங்கே செல்கிறது…?
வடக்கில் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் 40 கிலோ பூசணிக்காயை, அது விளைந்த தோட்டத்திலிருந்து களவாடி, அருகிலிருக்கும் மூளாய் பிரதேசத்தில் விற்றவரை கைதுசெய்துள்ள பொலிஸார், இந்த போதை வஸ்து கும்பல்களை கைதுசெய்வதில் அசிரத்தை காண்பிப்பதாகத்தான் தெரிகிறது.
இணையவழி மூலமாக "பதினொராந் திருமுறை " வாசித்து பொருள் கூற கேட்கும் வாய்ப்பு
உ
சிவமயம்
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
இறைவனருளால் நமக்கு பதினொராந் திருமுறை முழுவதும் (1385 பாடல்கள்) இணையவழி மூலமாக வாசித்து பொருள் கூற கேட்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இந்நிகழ்வு நவராத்திரி விரத ஆரம்ப நாளான 26 - 09- 2022 அன்று தொடக்கம் ஏறத்தாழ ஒன்றரை மாத காலம் நாள்தோறும் சிட்னி / மெல்பர்ன் நேரம் காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை நடைபெற திருவருள் கூடியுள்ளது.
திரு செ. சத்தியமூர்த்தி அவர்கள் (சிட்னி) வாசித்து பொருள் கூறுவார்கள்.
இந்த படிப்பு தொடர் நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சிவனடியார்கள் தங்களது:-
(1) முழுப்பெயர், (2) கைபேசி இலக்கம், (3) மின்னஞ்சல் முகவரி என்பவற்றை 23/09/2022 க்கு முன்னர் அனுப்புங்கள்.
(2) மேற்கண்ட விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் விலாசங்கள்:- suthansivarajah@hotmail.com and sirugudi1892@gmail.com
(3) விபரங்களை அனுப்பும் சிவனடியார்கட்கு இணையவழித் தொடர் கூட்ட இணைப்பு, நுழைவு எண்கள் (ZOOM MEETING ID and PASSWORD) என்பன அனுப்பி வைக்கப்படும்.
பதினொராந் திருமுறை குறித்த விளக்கங்கட்கு "கற்பகம் பல்கலைக்கழகம் - பன்னிரு திருமுறை ஆய்வு மையம்" வெளியிட்டுள்ள நூல் உதவும்.
இந்நூல் கிடைக்கும் இணையத்தல முகவரி: http://panniruthirumurai.org/
இந்த நூலின் பதிப்பாசிரியர் கலாநிதி இராச. வசந்தகுமார் அவர்கள் எழுதிய பதிப்புரையிலிருந்து சிந்தனைக்கு சில பின்வருமாறு:-
இலங்கைச் செய்திகள்
சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்
வடக்கில் சிங்கப்பூர், மலேசிய ஒத்துழைப்புடன் அபிவிருத்தி
தாமரைக் கோபுரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு
சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்
- அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் அனுதாபம் தெரிவிப்பு
சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார்.
1936 ஒக்டோபர் 01ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு புளியந்தீவு, சிங்களவாடி பிரதேசத்தில் பிறந்த கைலாயர் செல்லநைனார் சிவகுமாரன், கொழும்பு நகரில் நீண்டகாலம் வாழ்ந்து வந்த நிலையில் இவர் நேற்றிரவு (15) இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
உலகச் செய்திகள்
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
மகாராணி சார்பில் உம்ரா யாத்திரை வந்தவர் கைது
உக்ரைன் போருக்குப் பின் புட்டின் - ஜின்பிங் சந்திப்பு
உலகில் நீண்ட காலம் ஆட்சி புரியும் மன்னராக புருணை சுல்தான் சாதனை
அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டுக்குச் சென்ற குடியேறிகள்
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை